Wednesday, September 05, 2018

1000. பேத்தியும் நானும் ....


நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.  சரி. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்றைப் பார்த்து விட்டேன். நன்றாக வாசிப்பவர்கள் .. அதிலும் ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய வாசிப்பவர்கள் ... அதுவும் அவர்கள் பெண்களாக இருந்தால் ... அவர்கள் ஒரு தனி ரகம் தான். நிச்சயமாக பாரதி கண்ட பெண் போல் நிமிர்ந்த நடை .. நேர்கொண்ட பார்வை ... etc., ..etc. இருக்கும். தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள்; யாரும் வலிய தங்கள் கருத்தை அவர்கள் மீது திணிக்க முடியாது. . இது போல் பல விஷயங்கள் இருக்கும். அவைகளை  + என்றும் சொல்ல முடியாது; -- என்றும்  சொல்ல முடியாது. பொதுவாக சின்னப் பிள்ளைகள் தானே. (அப்படியும் நம்மை நினைக்க விட மாட்டார்கள்! முதிர்ந்தவர்கள் போன்றே நம்மிடம் காட்டிக் கொள்வார்கள்.)

பெரிய பேத்தியும் நிறைய்ய்ய்ய வாசிக்கிறாள். ஆனால் அவளுக்குப் பிடித்தவைகளை மட்டும். P.G. Wodehouse,  Sherlock Holmes வாங்கிக் கொடுத்தேன். பயனில்லை. எந்த குண்டு புத்தகமாக இருந்தாலும் ஆச்சரியப் படும்படி வெகு விரைவாக முடித்து விடுகிறாள். நிறைய எழுதுகிறாள். ஆனால் யார் கண்ணுக்கும் காட்டுவதில்லை. ஏதோ ஒரு குழுவாக இணையத்தில் நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்குள் விவாதிப்போம் என்கிறாள். ஒரு சில சின்னப் பகுதிகள் கண்ணில் பட்டன. நன்றாக இருந்தன. சிலவற்றை அவளுக்காக ஆரம்பித்த ப்ளாக்கில் போட்டு வந்தேன். நன்றாகப் படம் வரைகிறாள். மிக எளிதாக வரைகிறாள். வரைந்ததை ப்ளாக்கில் போட்டேன். அதற்காகவே மதுரை வரும்போது ஓரிரு படங்களோடு வருவாள். அல்லது நான் சென்னை செல்லும் போது 

படங்கள் தருவாள்இப்போதெல்லாம் நிறுத்தியாகி விட்டது. ப்ளாக் ... படம் ... என்றால் தானே ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போட்டுக் கொள்கிறேன் என்றாள். சொன்னாள் .. ஆனால் இது வரை ஏதும் செய்யவில்லை. அழுத்திக் கேட்கவா முடியும்!

சென்ற முறை சென்னை சென்றிருந்தேன். அவளது அறைக்குப் போனேன். பழைய சில படங்களோடு அவளது மர அலமாரிக் கதவுகளில் சில புதிய படங்கள் இருந்தன. It was sort of 'houseful'!
NOT EVERY GIRL WANTS TO BE A PRINCESS, 'COZ I'M A QUEEN.   .... சரி...  இந்த வயதில் தனிக்காட்டு ராஜா’ Lonely guy போன்ற நினைப்பு எனக்கு இருந்தது நினைவுக்கு வந்தது. சரி .. அது போல் இன்று இவளுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.அடுத்து ஒரு செல்ஃபியைப் படமாக வரைந்து வைத்திருந்தாள். head phone கூடவே வந்து விட்டது. அதில் அவளது தத்துவம் ஒன்றும் இணைந்திருந்தது. Karma is real and I believe it. நான் மத மறுப்பாளன் என்பதும், எனது முதல் நூல் பற்றியும் அவளுக்குத் தெரியும்


ஒரு சின்ன சந்தோஷம். அவளுக்கு பல பிறப்புகள் பற்றி நம்பிக்கை இல்லையாம். ஆனால் அவளுடையகர்மாமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது மாதிரியும், உன் வினை உன்னை உறுத்தி வந்து ஊட்டும் என்பது மாதிரியும் சொன்னாள். அதைப் போல் வகுப்பில் நடந்த ஒரு நிகழ்வையும் சுட்டிக் காட்டினாள். அவளது கர்மா அன்றன்றைக்கு உள்ளது போலிருந்தது.


மூன்றாம் வகுப்பு வரை அமெரிக்கக் கல்வி. இன்னும் அது அவள் மனதை விட்டு அகலவில்லை. அது அவ்வளவு பிடித்தது என்று ஆறு ஆண்டுகள் கழித்து இன்னும் நினைவில் வைத்திருக்கிறாள்..  who knows .. you can go for higher studies என்றேன். ம்ம்... என்றாள். நாமென்ன அதையெல்லாம் பார்க்கிறது வரை இருக்கவா போகிறோம். சும்மா சொல்லி உற்சாகப் படுத்தலாமேவென சொன்னேன்.

எனக்கு என் மேல் ஒரு சின்ன வருத்தம். என் potentials  என்னவென்று தெரியாமலேயே வாழ்ந்து முடிந்து விட்டதாக ஒரு நினைவு. அதுவும் இந்த எண்ணம் என் பணிக்காலத்தில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஆனால் .. இப்போது, ஓய்வு பெற்ற பிறகு மொழியாக்கம் செய்யக் கிடைத்த வாய்ப்பும், அதில் கிடைத்த கொஞ்சம் ‘நல்ல பெயரும்’ மட்டும் தான் என் வாழ்க்கையின் சாதனை என்ற நினைப்பு என்னை ஆசுவாசப் படுத்தியது. 

பேத்தியிடம் திறமைகள் - potentials - நிறைய இருக்கின்றன. அதை முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் நிறைய இருக்கிறது.
Let me wish her all the best .......

 இந்தச் சின்னத்தோடு வரைந்த படத்தின் பின்னணியில் பல ஆங்கிலச் சொற்கள்.. ஒன்றொன்றோடு தொடர்பில்லாதவை. ஆனால் எல்லாம் ஒரு வரிசையாக எழுதியிருந்தாள். என்னவென்று கேட்டேன். முதலில் ஒரு background வண்ணத்தில் கொடுத்திருக்கிறாள். அதில் திருப்தியில்லையாம். அதனால் வார்த்தைகளை background ஆக்கி விட்டாளாம். smart...!


3 comments:

G.M Balasubramaniam said...

நம்மைப் போல் நம்வாரிசுகளும் இருப்பது கடினம் அதுவும் இந்தக் காலத்தில்

வால்பையன் said...

சூப்பர் சார்

ராமலக்ஷ்மி said...

பேத்திக்கு எனது வாழ்த்துகளும்! கடைசிப் படத்தில் அருமையான உத்தியைக் கையாண்டிருக்கிறார்.

1000_வது பதிவுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள்:)!

Post a Comment