Wednesday, September 05, 2018

999. பிக் பாஸும் ... அம்பேத்கரும்





*


 தவறாம பிக் பாஸ் பார்க்கிறோமா ... அதோடு நிறுத்திக்கணும் போலும். அதில் ஏதாவது சந்தேகம் வந்து வெளியே கேட்டால் பிலு பிலுன்னு சில மக்கள் வந்து மொத்திருவாங்க போலும். அதிலும் அம்பேத்கர் பற்றிய நூலையெல்லாம் மொழியாக்கம் செய்ற ஆளு இப்படி எழுதலாமா என்று வேறு ஒரு குற்றச்சாட்டு.

 நடந்தது என்னன்னா ... மொத்தம் பதினாறு பேர் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏறத்தாழ பிராமண சாதியிலிருந்து மட்டும் ஐந்தோ அல்லது அதற்கும் மேலோ உள்ளார்கள். ஒரு சின்ன கேள்வின்னு ஒண்ணு கேட்டேன். 3% மட்டும் உள்ள ஆட்களுக்கு 30 விழுக்காட்டிற்கும் மேல் இருந்தால் 97% உள்ள ஆட்களுக்குக் கோபம் வரக்கூடாதா .. கேள்வி கேட்கக்கூடாதா? என்பது என் கேள்வி.

 நீங்கள் எப்போதும் இப்படி ஆட்களை எண்ணிக்கொண்டிருப்பீர்களா? உங்கள் சாதியென்ன என்று அதற்குப் பதிலாக ஒரு கேள்வி. பதிலாக நான் அந்த 97%ல் ஒருவன் என்று தான் சொல்ல வேண்டும்.

 பதில் சொல்லலாமா வேண்டாமாவென நினைத்திருந்தேன். அதற்குள் அம்பேத்கர் நூலே துணைக்கு வந்தது.

அவரைப் பற்றி எழுதிய நூலில் உள்ள ஒரு பகுதி கேள்வி கேட்டவர்களுக்கான பதிலாக அது அமைந்து விடுமென நினைக்கின்றேன்: தலித்துகள் சுதந்திர போராட்டத்தின் போது சுதந்திரத்திற்கு எதிராகவே இருந்தார்கள். 1928ல் வந்த சைமன் ஆணையத்திடம் பலவேறு மக்கள் தங்கள் கருத்து, கோரிக்கைகளை வைத்தனர். அவர்களில் பம்பாயின் இந்திய தாழ்த்தப்பட்ட அமைப்பிலிருந்து, “உயர் சாதி இந்துக்கள் அரசியல் பணிகளில் தொடர்ந்து இடம் பெற்று, அதிகாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். இன்னும் அது மேலும் மேலும் அதிகரிக்கும் போது, எங்களுக்குச் சிறிதளவே கிடைத்து வரும் ஒரு சில நன்மைகளும் மெல்ல மெல்லக் குறைந்து விடும். எந்த சாதி இந்துவும் நல்லதொரு நிலைக்கு வந்த பின் நிச்சயமாக ஒரு தாழ்த்தப்பட்டவர் சமூகத்திலோ பொருளாதாரத்திலோ மேம்பட்டு வருவதை அனுமதிக்க மாட்டார்” என்று கூறினர்.

இன்னொரு செய்தி:
கவாய் என்ற சீர்திருத்தவாதி அதே சைமன் ஆணையத்திடம் சொன்னது: ”வெளி நாட்டுக்காரர்களாகிய நீங்கள் எங்களிடம் நல்ல முறையில் பழகுகின்றீர்கள். இதை எங்கள் நாட்டவரிடம், அதாவது எங்கள் “சகோதரர்களிடம்” நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவே முடியாது”.


காலம் இன்னும் மாறவில்லை.



 *

No comments:

Post a Comment