Friday, January 04, 2019

1016. பற்றியெரியும் பஸ்தர் - நூல் வெளியீடு.





*

எனது ஐந்தாவது குழந்தை. 
( இரண்டு நானே பெற்றது; மூன்று நூல்கள் தத்தெடுத்தது.)



பற்றியெரியும் பஸ்தர் 

நந்தினி சுந்தர் 

தமிழில்: தருமி

முக்கியமான, சுவாரஸ்யமான புத்தகம். அனைவராலும் இது வாசிக்கப்படவேண்டும். பாதுகாப்புப் படையினரின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் ஆயுதப் புரட்சிக்குழுவினருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பழங்குடி மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்வை ஆராயும் நூல்.
- அமர்த்தியா சென்
செய்தித்தாள்கள், புலனாய்வு இதழ்கள், தொலைக்காட்சி செய்திகள் ஆகியவற்றின்மூலம் இதுவரை பஸ்தார் குறித்து நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை இந்தப் புத்தகம் சுக்கல் நூறாக உடைத்தெறியப்போகிறது. மாவோயிஸ்டுகள் குறித்தும் பாதுகாப்புப் படையினர் குறித்தும், இந்த இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் பழங்குடிகள் குறித்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரம் உங்களுக்கு இப்போது கிடைக்கப்போகிறது.
மாவோயிஸ்டுகள் வன்முறையை முன்னெடுக்கும் ஆயுதப் போராளிகள் என்றால் பழங்குடிகளில் பலர் அவர்களை ஆதரிப்பது ஏன்? பழங்குடிகளை மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து காப்பதே பாதுகாப்புப் படையினரின் நோக்கம் என்றால் பழங்குடிகள் அவர்கள் கரங்களில் சிக்கி சொல்லாணாத் துயரங்களை அனுபவிப்பது ஏன்?
நந்தினி சுந்தரின் இந்தப் புத்தகம் பஸ்தாரின் நிஜமான முகத்தை நமக்குக் காட்டுகிறது. அந்த முகம் அச்சுறுத்துவதாக மட்டுமின்றி அடிப்படை மானுட விழுமியங்கள்மீதே நம்பிக்கையிழக்கச் செய்வதாகவும் இருக்கிறது. எந்தத் தரப்பையும் எடுக்காமல் நடுநிலையோடு உண்மை பேசும் இந்நூல் நம் பார்வையை அகலப்படுத்துவதோடு சமகால அரசியலை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
==
கிழக்கு பதிப்பகம்
ப 504, ரூ.550













*


4 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள் சார். படிக்க ஆவலாக இருக்கிறேன்.

periyavijayakumar said...

விரைவில் படித்து விமர்சனம் எழுதுகிறேன்.

தருமி said...

periyavijayakumar ......I'm waiting sir........

தருமி said...

sri ... thank you. expecting your review also.

Post a Comment