Tuesday, January 15, 2019

1024. பற்றியெரியும் பஸ்தர் -- இந்நூலிலிருந்து சில பகுதிகள் ... 7






*


சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமா? எடுப்பதாயிருந்தால் எப்போது, எங்கே எடுப்பது போன்றகேள்விகள் எழுந்தன.


                                                                      ******


இந்த 2007ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இருந்த இரு அலுவலகங்கள் எனக்கு மிகவும் பழகிப் போக ஆரம்பித்தன. ஒன்று, மத்திய டில்லியில் அமைந்துள்ள நித்யா ராமகிருஷ்ணனின் அலுவலகம்; அபிஷேக் தேசாய் தன் வீட்டின் கீழ்த்தளத்தில் வைத்திருந்த அலுவலகம். இரண்டாவது, நித்யாவின் அலுவலகம்

 ...  எல்லா வழக்கறிஞர்களும் இந்த வழக்கில் பணம் பெறாமல் சேவையாக பல ஆண்டுகள், வயது வேற்றுமை ஏதும் பார்க்காது, ஜூனியர் சீனியர் என்ற வேற்றுமையையும் பாராது உழைத்து வருகின்றனர். பணம் வரும் வழக்குகளைக்கூடத் தள்ளி வைத்துவிட்டு பல இரவுகள் நெடுநேரம் விழித்திருந்து புதுப்புது குறிப்புகள் எடுத்து அடுத்தடுத்த உறுதிப் பத்திரங்களைத் தயாரிப்பார்கள்

அவர்களது ஆழமான அர்ப்பணிப்பு என்னைப் பரவசப்படுத்தும், ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தும். அவர்கள் யாருக்கும் பஸ்தாரோடு எவ்விதத் தொடர்புமில்லை. வழக்கமாகச் சொல்லப்படும் சமூக ஆர்வலர்கள் இல்லை அவர்கள். அப்படியிருந்தும் இத்தனைப் பிடிப்போடு உழைத்தனர். தெரியாத இடம்; பார்த்திராத மக்கள். ஆனாலும், சட்ட வல்லுனர்களாகவும், அதற்கும் மேலாக நாட்டின் குடிமக்களாகவும் அவர்கள் கடமையாற்றினார்கள்.


ஆழமே தெரியாத விஷயம் ஒன்று உண்டு. நீதிமன்றங்களில் பட்டியல் பற்றியது அது. வழக்குகள் எப்போது வரும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் இணையப் பக்கங்களில் பார்க்கலாம். ஆனால், இணையத்தில் வருவது ஒரு நாள் இருக்கும். அடுத்த நாள் இல்லாமல் போய்விடும்.

எதிர்ப் பக்கத்தில், சத்தீஸ்கர் அரசின் திட்டம் வேறுவிதமாக இருந்தது. அவர்கள் இந்த வழக்கை முழுமையாக அரசியலாக்க முயன்றனர். சட்டக் கோட்பாடுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை. அவர்களின் முக்கிய முனைப்பே வழக்கின் விண்ணப்பதாரர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் - வெளியே தெரியும் மாவோயிஸ்ட் முகங்கள் - என்று நிரூபிப்பதுதான்.

டில்லி பல்கலையின் டாடா சமூகவியல் கல்வியமைப்பு மாணவர்களும், ஹைதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டக் கல்லூரி மாணவர்களும் இந்தப் பொது விசாரணை நடப்பதற்கு உதவியாக, பொது மக்களிடம் செய்திசொல்லி ஒன்றுசேர்க்க உதவினர்.

2011 மார்ச் மத்திய பகுதிவரை நாங்கள் வழக்கு விசாரணைக்கு அங்குமிங்கும் ஓடிக் கொண்டேயிருந்தோம்.

நான் நீதிமன்றம் செல்லும் முன்பே நீதியரசர் ரெட்டி தன் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியிருந்தார். ஓடி வந்ததில் உண்டான மூச்சிரைச்சலால் வார்த்தைகள் சரியாக என் காதில் விழவில்லை. ஆனால், ‘கொடூரம்... கொடூரம்என்ற வார்த்தைகள் மட்டும் என் காதில் மாறி மாறி விழுந்தன. சரியாகத்தான் கேட்கிறேனா என்ற ஐயம் எழுந்தது. வந்து நின்ற வேகத்திலும் அவசரத்திலும் ஓர் ஆண் வழக்கறிஞரின் மடியில் கிட்டத்தட்ட உட்கார்ந்தே விட்டேன். என்ன நடந்தது என்பதே புரியவில்லை. குழப்பம் நீங்கவில்லை. தீர்ப்பு முழுவதுமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. குழப்பம் நீங்கவில்லை என்றாலும் வெளியில் வந்த வழக்கறிஞர்களை எனக்குத் தெரியும் என்பதால் ஒருவருக்கொருவர் அணைத்துக்கொண்டு, வெற்றியைக் கொண்டாடினோம்.


நீதியரசர்கள் ஏதாவது ஒரு விதத்தில் சமரசம் செய்துகொண்டுவிடுவார்களோ என்ற எனது அச்சத்திற்கு நேரெதிராக தீர்ப்பில் நியாயம் முழுமையாகக் கிடைத்து விட்டது. அரசியல் சாசனத்திற்கான தன் முழு ஆதரவையும் உறுதியாக தீர்ப்பு வெளிப்படுத்தியது.


ஆக மொத்தத்தில் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மிகவும் பலனடைந்தவர்கள் எஸ்பிஓக்களே. புதிய வேலை, நல்ல துப்பாக்கிகள், அதிகரித்த சம்பளம், முழு வேலைப் பாதுகாப்பு.




                                                                  *******
என் கதை இன்னும் தொடர்கிறது....


அது ஒரு பௌர்ணமி இரவு. நிலவின் வெளிச்சத்தில் மிதந்துவரும் மாடியா டோல் இசையில் நான் தறி கெட்டு ஆடிக் களிக்கிறேன். நானும் என் நண்பர்களும் ஒன்றுசேர்ந்து ஓர் இலுப்பை மரத்துக்கடியில் எதிர்காலத்து நன்மைகளை நினைத்து நம்பிக்கையுடன் ....



ஆடுவோம் ... கொண்டாடுவோம் ...











*

No comments:

Post a Comment