Monday, May 06, 2019

1045. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...11 - யோசுவா & நீதித் தலைவர்கள்
*


யோசுவா 

மோசஸ் இஸ்ரயேல் மக்களின் முதல் தலைவர். அவர் இறந்த பிறகு  மோசஸ் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்த நூனின் மகனாகிய யோசுவா என்பவர் தலைவராகிறார்..   பல்வேறு பகுதிகளை வென்று இஸ்ரலேயேரின் பன்னிரு குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்தல் என்ற நிகழ்வுகளின் பட்டியல் இந்த அதிகாரம்..

தெளிவாக ஒன்று புரிகிறது - இந்நூலில் பேசப்படும் கடவுள் உள்ளும் புறமும் இஸ்ரயேலர் என்ற ஒரே ஒரு சாதியினரின் கடவுள். திரும்ப திரும்ப இக்கருத்து  மீண்டும் மீண்டும்இப்பகுதியிலும்  நிறுவப்படுகிறது.

கண்ணிருப்போரும், சிந்திப்போரும் இதனைத் தெளிவாக இதிலுள்ள வசனங்களிலிருதே புரிந்து  கொள்வார்கள். நான் இதைப் பற்றி கிறித்துவ மக்களிடம் ஊடாடிய போது  ‘விசுவாசிகள்’ இதை மறுப்பதும் இல்லை;எதிர் விளக்கமும் கொடுப்பதில்லை.

எனக்குள்ள ஆச்சரியம். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒரு சேர கடவுள் இஸ்ரயேலர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்த இனமாக வைத்திருப்பதை ஆணித்தரமாக திரும்பத் திரும்ப சொன்ன பின்னும் எப்படி இன்று கிறித்துவத்தை அனைத்து மக்களுக்கான மதமாக மாற்ற முடிந்தது?  எப்படி இன்னும் விசுவாசிகளுக்கு பிதாவும், மகனும் எல்லா மக்களுக்கான கடவுள் என்று நம்ப முடிகிறது?

***     ****    ***

1:3 -- ‘மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும்  இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன்.. 
( ”உங்களுக்கு’ என்பது யாருக்கு? இஸ்ரயேலருக்கு என்பது தானே பொருள்?!)

1:5 -- இம்மக்களின் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நாட்டை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்வாய்”.
தன் இனத்திற்கான வெகுமதி.

2:1  -- ..விலை மாதின் வீட்டுக்கு வந்து, இங்கு தங்கினர்.
காரணம் என்னவென தெரியவில்லை.

4:9 .... குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத்தார். அவை இங்கே இந்நாள் வரை உள்ளன.
இது போன்ற வரிகள்  வேறு சில இடங்களிலும் வருகிறன. ஏன்? 7:26 -- அவன் மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர். அது இந்நாள் வரை உள்ளது. இருக்கிறதா? 8:29  --  ... அதன் மீது பெரும் கற்குவியலை எழுப்பினர். அது இன்றுவரை உள்ளது. உள்ளதா? 9:27 ... அவர் அவர்களுக்குக் குறித்த இடத்தில் இன்றுவரை அவர்கள் உள்ளனர். உள்ளனரா?

4:24  --  ‘உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்; என்றார்.
ப.ஏ. கடவுளுக்கு அச்சமூட்டுவது தான் மிகவும் பிடித்த செயல் போலும்!

6  -- எரிகோவைக் காப்பற்றல் ... இப்படி ஒரு அத்தியாயம்.  எதற்காக அந்த நாட்டைப் படையெடுத்து, கைப்பற்றி, அனைத்தையும் அளித்தனர் என்பது புரியவில்லை.
6:19  --  எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்’.
ஆண்டவரின் கருவூலம் - அது என்ன? எங்கே உள்ளது?

6:21  --  ஆண், பெண், இளைஞர், முதியோர், ஆடு, மாடு, கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர்.
இரக்கமுள்ள கடவுள் ...!

7:8 ...   --  என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின் முன் புறமுதுகிட்டு  ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன செய்வேன்?
  இஸ்ரயேலருக்குத் தோல்வி என்பதெல்லாம் ஆண்டவனின் வெறும் திருவிளையாடல். அடுத்த போரில் வெற்றி தானே. முதல் போரில் எப்படியோ கடவுள் ‘கண்டு கொள்ளவில்லை’!

அடுத்து ஆயி நகரைக் கைப்பற்றல்
8:7,8  --  ....உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார். நீங்கள் நகரைக் கைப்பற்றியதும் அதை நெருப்பினால் எறியுங்கள். கடவுள் கூறியது போலவே செய்யுங்கள்.
இரக்கமுள்ள கடவுள் ...!

8:24,25  --  ...அனைவரையும் வாழ்முனையில் அழித்தனர். ... ஆண்களும் பெண்களுமாக அன்று இறந்தவர் பன்னிரண்டாயிரம் பேர். ஆண்கள் எல்லாருமே அன்று வீழ்ந்தனர்.
இரக்கமுள்ள கடவுள் ...!

10:41,42  --  யோசுவா காதே பர்னேயாவிலிருந்து காசாவரை கோசேன் நாடு முழுவதையும் திப்யோன் வரை தோற்கடித்தார். யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார். 
சரி ...கடவுள் இஸ்ரயேலரின் கடவுள். அதனால் யோசுவா எல்லாவற்றையும் வென்றார். அப்படியானால் “நமது” கடவுள் யார்?
ஆனால் அதிலும் ஆயி நகரில் முதலில் யோசுவா ஏன் தோற்றார்? “கடவுள்” விட்டுக் கொடுத்து விட்டாரோ? பதுங்கிப் பாய்ந்தாரோ?

23:12,13  --  வேற்றினத்தாருடன் சேர்ந்து கொண்டு அவர்களுடன் கலப்பு மணம் செய்து கொண்டால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவ்வேற்றினத்தவரைத் தொடர்து விரட்டிக் கொண்டிருக்க மாட்டார் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
அட ... இந்த சாமி கலப்பு மணத்திற்கு எதிரியா? நல்ல வேளை .. கிறித்துவ்ர்களுக்கு ப.ஏ. தெரியாதில்லையா? அதனால் அவர்களிடம் கலப்புத் திருமண எதிர்ப்பு ஏதும் இல்லை. பிழைத்துக் கொண்டோம்.நீதித் தலைவர்கள்கானான் நாடு கைப்பற்றப்படுகிறது. கடவுள் தான் தெரிந்து கொண்ட இஸ்ரயேலருக்குத் தொடர்ந்து நல்லது செய்து கொண்டிருக்கிறார். அதென்னவோ இஸ்ரயேலர்கள் இறைவனை மறந்து விட்டு அதன் பின் மறுபடி வந்தாலும் அவர்களை மட்டும் பாதுகாக்கிறார். 

பல தலைவர்கள், அவர்கள் பெற்ற வெற்றிகள் என்று பல கதைகள் விரிவடைகின்றன.

*

1:4  --  யூதா போரிடச் சென்ற போது ஆண்டவர் கானானியரையும் பெரிசியரையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் பெசக்கில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர். 
இரக்கமான கடவுள் ...

1:6  --  தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து,    அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர். 
இரக்கமான கடவுள் ...

இந்தப் பகுதி முழுமையுமே தொடர்ந்து நடந்த பல சண்டைகளின் தொகுப்பே. சண்டைகளில் இஸ்ரயேலருக்குப் பக்கத்துத் துணையே கடவுள் தான். 
ALWAYS ONE SIDED GOD...!

3:12  --  இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். 
இதே கருத்து அடுத்து வரும் இரு பாகங்களிலும் தொடர்ந்து வருகிறது.
4:1  --  ஏகூது இறந்தபின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.
6:1  --  இஸ்ரயே மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர்.
ரிப்பீட்டேய் ....!
இஸ்ரயேலர்கள் இப்படியெல்லாம் கடவுளைப் புறக்கணித்தாலும் அவர்களைத் தண்டிக்காமல் அரவணைத்துக் கொள்ளும் கடவுள் மற்ற இனத்தார் புறக்கணித்தால் மிகக் கடுமையாக நடப்பதேன்?

8:21  --  ...ஒட்டகத்தின் கழுத்தில் இருந்த இளம் பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.
அட .. இளம்பிறை .. இங்கும் இருக்கிறதே!

9:23  --  கடவுள் அபிமெலக்கிற்கும் செக்கேம் குடிமக்களுக்கும் இடையே கடும் பகையை மூட்ட ...
எல்லாம் வல்ல கடவுளின் “திருவிளையாடலோ” இது?

14ம் அதிகாரம் ... அது ஒரு பெரும் காதல் கதை. சிம்சோனும் திமினாவின் இளம் பெண்ணும். 
பயங்கர ட்விஸ்ட் உள்ள கதை அது ...

19 ம் அதிகாரம் .. இன்னொரு கதை .. கொஞ்சம் நீல வண்ணத்தில் உள்ள கதை. ஆனாலும் raped and murdered கதை வரும்போது மனதைக் கஷ்டப்படுத்துகிறது. ஆனாலும் பயங்கரமான  revenge எடுக்கப்படுகிறது.

20:30  --  ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரை கொன்றனர்.
இரக்கமான கடவுள் ....


****    ***    ****

*


No comments:

Post a Comment