Monday, January 20, 2020

1080. ஒரு கிழவனின் புலம்பல் ... 3




*


என்னமோ தெரியவில்லை. இவர் யாருன்னும் தெரியலை. ஆனால் இவர் சொல்றதெல்லாம் அத்தனையும் என்னையும் சில காலமாக அச்சமுறுத்தும் விசயங்கள் தான்.

 சாகர்மாலா திட்டம், மீத்தேன், வாயுக் குழாய்கள் பதிப்பு, ஸ்டெர்லைட், இன்னும் பல துறைமுகங்கள், பெருவழிச் சாலைகள் (மதுரையில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பறக்கும் பாலம் யாருக்காக எதற்காக என்று யாருக்கும் இங்கே புரியவில்லை, ஒவ்வொரு ஆட்டோக்காரரும் சொல்லும் காரணங்களும் பலவாக உள்ளன. ஏதோ கிரிக்கெட் ஸ்டேடியம் செல்வதற்காகவே கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள்.) ... இவை எல்லாவற்றையும் விட நீட் தேர்வுகள், அதன் மூலம் நம் வரியிலிருந்து எழுந்த நம் மாநில மருத்துவ இடங்கள் யார் யாருக்கோ போய்க் கொண்டிருக்கின்றன. கல்வியைக் கையில் எடுத்துக் கொண்ட (ஆத்தா இந்திரா காந்தியையும் இப்போது நினைத்துக் கொள்ள வேண்டும்.) மத்திய அரசு ஆடும் ஆட்டம் அதிகமாக, அச்சமாக இருக்கிறது.

இவர் சொல்வது போல் தமிழ்நாட்டை ‘குறி வைத்து’ மத்திய அரசு பல விசயங்கள் செய்வதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது. ஓட்டு போடாவிட்டால் இப்படி கைகளை முறுக்குவார்களோ? தெரியவில்லையே. துணைவேந்தர் பதவிக்கு இவர் சொல்வது போல் ஒரு தமிழன் கிடைக்கவில்லையா? நம் தமிழக அரசு இன்னும் எவ்வளவு தான் குனிந்து கால்களைத் தேடிக்கொண்டிருக்குமோ, தெரியவில்லை.

 போகிற போக்கில் இப்போது ஏனைய மாநிலத்திலிருந்து குறைந்த ஊதியத்திற்கு வரும் பாவப்பட்ட இளைஞர்கள் போல் அடுத்த பத்தாண்டுகளில் நம் தமிழ் இளைஞர்கள் அது போன்ற வேலைக்குப் பீகாருக்குப் போக வேண்டியதிருக்குமோ என்ற பயம் எனக்கு. கிழவனின் புலம்பல் என்று இதையும் நம் இளைஞர் பட்டாளம் நினைக்கும் என்று தான் நினைக்கின்றேன்.

அத்தி பூத்தது போல் (காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை.) ஜல்லிக்கட்டுக்குத் திரண்ட கூட்டம் இன்னும் அதை விட மிக முக்கியமான விஷயங்களுக்கும் கூடாது போய்விடுமோ என்ற அச்சமும் உள்ளது. 

இளைஞர்களே .. உங்கள் எதிர்காலம் அச்சமாக உள்ளது.

விழிமின் ..

எழுமின்...






இவர் இயக்குநர்  கெளத்தமன்.


 *

No comments:

Post a Comment