Friday, October 16, 2020

1124. எம் ஜி ஆர் , ரஜினி ரசிகர்கள் மேல் அப்படி என்ன கோபமோ? 

 

*

 


"குணா" விமர்சனப் புகழ் ஜார்ஜ் சாருக்கு எம் ஜி ஆர் , ரஜினி ரசிகர்கள் மேல் அப்படி என்ன கோபமோ?

தப்பா எடுத்துக்கல்லன்னா வரலாறை சொல்லுங்க கேப்போம்...😊😊😊  

இப்படி ஒரு கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டுட்டார் தேவ் அவர்கள். பதில் சொல்லியாகணுமே… முயற்சி பண்றேன்.

 

                                           ஸ்டைலா இப்படி வாயை வச்சிருக்காரே ...

                                                                    அழகு / நடிப்பு ... இல்லீங்களா?

 எம்சிமார் சுத்தமா நடிக்கத் தெரியாது. நடிகனாக இருந்ததால் அரசியலில் கூட்டம் சேர்ந்தது; அரசியலில் இருந்ததால் நடிகனாகப் புகழ் வந்தது. (பெற்றால் தான் பிள்ளையான்னு ஒரே ஒரு படம் நடிச்சிருப்பார்.)ஆனா… டாப் நடிகர். எரியாதா? 

அடுத்து ரசினி… மொதல்ல ஒண்ணிரண்டு படம் நடிச்சாரு. அதுக்கு மேல அவரால முடியலையா .. இல்ல .. உங்களுக்கெல்லாம் சிகரெட்டைத் தூக்கிப் போட்டாதான் பிடிச்சுதான்னு தெரியலை. ஆனா டாப் நடிகர். எரியாதா?

ரசினி - ஒரே ஒரு.. வேணாம் … ரெண்டு படம் சொல்றேன். எசமான்னு ஒரு படம். மனைவி 9 மாசம் ஆச்சுன்னு தலையணையைக் கட்டி வச்சு, சும்மானாச்சுக்கும் சொல்றாங்க. நம்ம தலைக்கு அது கூட தெரியாதாம்! மென்பொருள் ஆளா அமெரிக்கா போய் softwareல காசு சேர்த்து வந்து இங்க அள்ளி அள்ளிக் கொட்டுறாராம். ஆனால் கல்யாணம் ஆகாத சின்னப்  பையலாகவே பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கார். இந்த ரெண்டு படத்தையும் வேற எந்த நடிகரை வைத்து எடுத்திருந்தாலும் இயக்குநர்களைக் கல்லை விட்டு எறிஞ்சிருப்பாங்க. கொஞ்சூண்டாவது லாஜிக் வேணாமா? ஆனா அது உங்க தல படமா… நீங்க விசிலடிக்கிறீங்க. எரியாதா? அதுவும் ஒங்க ஆளு படத்தில தான் லாஜிக் அப்டிங்கிறது சுத்தமா வழிச்சிப் போட்டாலும் வராது. பாட்சா படம் பார்த்து… வெற்றிப் படமாம். இவர் இன்னும் காதலர்… அந்தப் பக்கம் ரகுவரன் கிழடு.  ஆனால் விசில் … எரியாதா?

காமெடி கொஞ்சம் வரும். ஆனால் வடிவேலு நடிச்சும் அவரது காமெடியில் கட்டக் கடைசி இடத்தில் இருப்பது ஒங்க தல படம் தான். ரொம்ப ரொம்ப கண்றாவி. கண்றாவி என்பதை விட ‘அசிங்கமா’ இருக்கும் - சந்திரமுகி

மனோரமாவை மன்னிச்சது பெரிய மனசு. ரொம்ப appreciate  பண்ணினேன்.(பழைய கதை… உங்களுக்கெல்லாம் அது தெரியுமா?) 

அடுத்து விசய். மேல சொன்ன ரெண்டு பேர்மேல் உள்ள எரிச்சல் அந்த அளவு இந்த ஆளிடம் கிடையாது. ஆனா ஒரே மாதிரி, கொஞ்சம் கூட நடிக்காம (ஒரே ஒரு படம் - துள்ளாத மனம் துள்ளும் தவிர) கூட்டமான கூட்டம் சேர்க்கிறாரு. எதுக்குன்னு தெரியலை. எரியாதா? 

அதென்னமோ போங்க … நம்ம ஊர்ல இரண்டாவது இடத்தில இருக்கிற ஆளுக முதலிடத்திலிருக்கும் ஆளுகளை விட நல்லா பேரு வாங்குறாங்க. ஏங்க இப்படி இருக்கீங்க?  சிவாஜியை விட எம்சிஆருக்கு மருவாதை இருக்கிறதப் பார்த்தா எரியாதா? கமலை விட ரசினிக்கு மரியாதை. எரியாதா? (வி.சே.யை விட சி.கா.வுக்கு பெரிய கூட்டமில்லை. ஒருவேளை காலம் மாறுகிறதோ?)

அதென்னங்க நம்ம ஊரு மக்கள் இப்படி இருக்கீங்க. இன்னும் அந்த ஆளை இளம் ஹீரோவாக தலைமேல் தூக்கி வைத்து எப்படிக் கொண்டாட முடிகிறது. ஒரு சந்தேகமுங்க. எம்சிஆரை பெண்கள் ரொம்ப ரசிப்பாங்க. ‘என்ன கலரு’ அப்டிம்பாங்க. அடுத்து உண்மையோ பொய்யோ நல்ல மனுசன்னு அடுத்தவங்க காசில பெயர் வாங்கிட்டாரு. வள்ளல்னு பேரு. ஜானகி திருமணத்தைக்(!?) கூட மக்கள் கண்டுகொள்ளவில்லை. ஜெ கூட இருந்ததைக் கூட (!!??)யாரும் கண்டுக்கவே இல்லை. ஆனா ஒங்க தலை ஆரம்ப காலத்தில் ரொம்ப அடாவடித்தனம் .. அது இதுன்னு இருந்தார். ஆனால் மக்கள் யாரும் கண்டுக்கவே இல்லை. ஆச்சரியமாகவும் இருந்தது; அதிர்ச்சியாகவும் இருந்தது. 

ஆனால் உங்களை மாதிரி ஆட்கள் தான் முதலில் மாறணும்னு நினைக்கிறேன். நடிச்சா கை தட்டுங்க.. விசிலடிங்க. இப்போ எனக்கு வி.சே. பிடிக்கும்.  ஆனால் அதுக்காக அவர் நடிக்கிற எல்லா படத்துக்கும் நிச்சயமா விசிலடிக்கிறது கிடையாதுங்க. சில ஆட்களைப் பிடிக்கலாம். ஆனால் வெறியாகி இருக்கிறதைப் பார்த்தா … எரியுது! என்ன பண்றது? வயசானாலும் மாற மாட்டேங்குறீங்களே… இப்போ சிவாஜி படம் எல்லாத்தையும் பார்க்க முடிவதில்லை. காலமும் மாறி விட்டது. நடிப்பின் வகைமுறைகளும் மாறிப் போச்சு. நானும் மாறி விட்டேன். 

ஆனா ஒண்ணுங்க… என்ன சொன்னாலும் நீங்களும் மாறப்போவதுமில்லை. நானும் மாறப் போவதில்லை. எங்க வீட்லயும் ஒருத்தரு உண்டு...உங்கள் மாதிரி. அதை விட என் பேத்திகள் தமிழ் சீரியல் பார்ப்பதில்லை; சினிமாவும் செல்வதில்லை. ஆனால் விஜய் டான்செல்லாம் ரொம்ப பிடிக்குது. எனக்கு அப்படி ஒரு ஆச்சரியம்.

CHARISMA என்பார்கள். அது தானோ இதெல்லாம்??

 

இதையும் வாசியுங்கள்:

https://dharumi.blogspot.com/2006/04/156.html   ஏப்.2006

https://dharumi.blogspot.com/2005/11/106-8mgr.html   நவ 2005

 

 

 

 

 

*

 

 

http://signatures.mylivesignature.com/54488/92/EC8E1548066E8691FE8C4E82AB8A105B.png

 


No comments:

Post a Comment