Saturday, December 03, 2022

1202. FIFA '22

ஒரு வழியாக முதல் ரவுண்டு முடிந்தது. நாக் அவுட் ஆரம்பித்தாகி விட்டது. ஏதோ ஒரு வழியாக பிடித்த சில ஆட்டங்களைத் தேர்ந்து பார்த்தாகி விட்டது. இனி எல்லாவற்றையும் பார்க்க ஆசை. தேறும் வரை பார்க்கணும்.

இதுவரை ஆடியவர்களில் இருவரை மிகவும் பிடித்து விட்டது. அதைப் பற்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது.







அதில் முதல்வர் ஜெர்மன் நாட்டு இளம் வீரன். 19 வயதுதான் ஆகிறது. மரடோனா ஆறு பேரிடம் பாலைக் “கடைந்து” போய் கோலடித்தார் என்பதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். அதுவும் ஏறக்குறைய பாதி கிரவுண்டில் ஆரம்பித்து கோலில் முடித்திருப்பார். ஆனால் இந்தச் சின்னப் பையன் கோவில் பெனல்டி ஏரியாவின் வலது பக்க மூலையில் இருந்து கோல்வரை தொடர்ந்து பல ஆட்டக்காரர்களின் கால்களை ஏமாற்றி பந்தை கோலுக்கு அருகில் கொண்டு வந்த ஆட்டத்தைப் பார்த்து அசந்து விட்டேன். யாரும் பெளல் செய்து காலை மிதிக்க உடாமல் தவ்வித் தவ்வி பந்தை அழகாகக் கடைந்து முன்னேறிய காட்சி அப்படியே மனதில் பதிந்து விட்டது. அழகான ஆட்டக்காரன். அடுத்த உலகக் கோப்பை ஆட்டத்திலும், அதற்கு முந்திய போட்டிகளிலும் நிச்சயமாக அசத்துவான். வாழி, பையா நீ!





அடுத்தது அர்ஜென்டினா குழுவில் wingerஆக ஒரு நெடிய உருவம் என்னை ஈர்த்தது. பெயர் டி மரியா. எனக்கு முன்பு பிடித்த பிரஞ்சு ஆட்டக்காரர்Thierry Henry-யை நினைவுக்குக் கொண்டு வந்தார். செம ஓட்டம். பார்த்த ஆட்டங்களில் மெஸ்ஸியை விட இவரையே எனக்குப் பிடித்தது.

No comments:

Post a Comment