Wednesday, May 15, 2024

1274. ஆவேசம்னு ஒரு படம் ...


ஏதோ ஒரு மலையாளப் படத்தில் பகத் பாசில் (அப்போது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது) ஒரு narcist-ஆக, தன் அழகைத் தானே ஆராதிக்கும் ஒரு பார்பராக வருவார். அதில் முதல் கட்டத்தில் அவர் தன்னையே ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொண்டு,  கண்ணாடியிலிருந்து விலகி ஓரிரு அடி எடுத்து வைத்து, பின் மீண்டும் கண்ணாடிக்குச் சென்று தன் மீசையை ஒதுக்கிக் கொள்வார். சில வினாடிகள் வந்த அந்த சீன் எனக்கு மிகவும் பிடித்தது. சரியான நடிப்பு அரக்கன்என்று அன்று நினைத்தேன்.

இது ஒரு பழைய கதை.

புதிய கதை என்னன்னா ... இன்று ஆவேசம்என்று ஒரு தர்த்தி படம் பார்த்தேன். சும்மானாச்சுக்கும்எடுத்த ஒரு படமாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் மதிப்பிற்குரிய இரு நண்பர்கள் இந்தப் படத்தை ஆஹா ... ஓஹோ என்று புகழ்ந்திருந்தனர். அதிலும் பெரிய எழுதாளராக ஆக வேண்டிய ஒருவர் -இன்று வரை வெறும் பதிவராக மட்டுமே இருக்கிறார் – பகத்தை ஒரு நடிப்பு ராட்சசன் என்றும் அழைத்துப் புகழ்ந்திருந்தார். அடி வயித்திலிருந்து ஏறத்தாழ ஒரு பத்து தடவை காட்டுத் தனமாக உச்சஸ்தாயில் கத்தினார் பகத். அதையெல்லாம் நடிப்பின் உச்சமான்னு எனக்குத் தெரியலை .. புரியலை ...

அதோடு எனக்கு ஒரு பெரிய சந்தேகம். இது ஒரு டான் படமா? அல்லது காமெடி படமா?   இன்னும் சந்தேகம் தீரவில்லை.

இன்னொரு சந்தேகமும் வந்தது, இந்த இரு பூமர் அங்கிள்களுக்கு மிகவும் பிடிக்கிற இந்தப் படம் pre-boomer தாத்தாவான எனக்குப் புரிபடவில்லையோன்னு ஒரு சந்தேகம்.

படமா இது? சோதித்து விட்டார்கள்.

மன்னித்துக் கொள்ளுங்கள். பூமர் அங்கிள்களே ..!

1 comment:

கண்மணி/kanmani said...

உள்ளேன் அய்யா.நலம்.நலமே விழைகிறேன்.தங்களுக்கும் மறுமொழிகள் வருவதில்லை போலும்.வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடி நேரமில்லாமல் கரை ஒதுங்கும் நேரம் எதேச்சையாக பிலாக் ஓபன் செய்து பார்த்தேன்.15 வருட இடைவெளீயில் எல்லோரும் காணாமல் போனோம்.தமிழ்மணம் இப்போது இல்லையா.எந்த திரட்டியில் உள்லீர்கள்.

Post a Comment