இப்போது மொழிபெயர்க்கும் நூலிலிருந்து சில இழைகள் .....
மும்பை சவேரியார் கல்லூரியில் பயிலும் பொழுது அருணின் கலையார்வம் வெளிச்சத்திற்கு வந்தது. அருண் தன் ஓவிய திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்தார். கல்லூரியில் இருந்த சமூக சேவை இயக்கத்தில் உறுப்பினராக இருந்து தொடர்ந்து தங்களது வளாகத்தில் ரத்ததான இயக்கத்தை முன்னெடுத்தார். யார் யார் ரத்த தானம் கொடுக்க வருகிறார்களோ அவர்களின் கேலிச்சித்திரங்களை வரைந்து அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவ்வப்போதே விரைவில் வரைந்ததால் அவர் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. அதுவும் ரத்த தானம் கொடுக்கும் பொழுது அன்பளிப்பாக கொடுத்தமையால் அவருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டப்பட்டது: “ ரத்தக் கார்ட்டூனிஸ்ட்”!