Monday, April 25, 2005

2. நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...

நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...


1. நாராயண் கார்த்திகேயனுக்கே ஃபார்முலா1 பந்தயத்தில் starting problem இருக்குதாம். பச்சை விளக்கு விழுந்ததும் புறப்படுவதில் பிரச்சனை. அவர் நம்ம ஊரில் அதிகமாக கார் ஓட்டியதில்லை போலும்! இங்கேயே நல்லா ஓட்டிப் பழகியிருந்தால் இந்த பிரச்சனை இருக்காது !

சாதாரணமாகவே நம்ம ஆட்கள் ஆரஞ்சு நிறம் இருக்கும்போதே, பச்சை விழுவதற்கு முன்பே பாய்ந்து புறப்பட்டு விடுகிறார்கள். அதுவும் போலீசுக்காரரே போகச்சொல்லி விடுகிறார். பச்சை விளக்குக்குக் காத்திருந்தால் நம்மை எல்லோருமே ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இது ரொம்ப சின்ன விஷயமாக எனக்குப் படவில்லை. போலீசுக்காரரே விதியை மீற அனுமதி அளிப்பதால், விதிகளே மீறப்பட வேண்டியவைகள்தான் என்ற நிலைப்பாடே மக்கள் மனதில் ஊறி விடாதா? இந்த சின்ன அத்து மீறல்கள் சட்டங்களை மதிக்கத் தேவையில்லை என்ற மன நிலையை எல்லோருக்கும் பொதுவாக தந்து விடுமே. அப்படி இருந்தும் இப்படியே நடக்கிறதே.
அது ஏங்க...?
2. 'உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாம இருக்கணும்' - இது நம்ம ஓர் பழமொழி. ஆனால் நம்ம ஊர்ல இதை கடைப்பிடிப்பவர்கள் யார்? படித்தவர்களும் சரி, பாமரர்களும் சரி, சிறுசு பெருசு என்ற எந்த பாகுபாடுமின்றி நாம் எல்லோருமே ஒட்டு மொத்தமாக இதில் ஒற்றுமையாக இருக்கிறோம்.

தானியங்கு கதவைத் திறந்தால் பின்னால் வருபவர்களுக்காகக் காத்திருந்து கதவைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும், சாலையைக் கடக்க வேண்டுமாயின் எதிர் வரும் வண்டிகள் பிரேக் போடவேண்டிய நிலையைத் தரக்கூடாது என்றும் வெளிநாட்டில் (அட, அமெரிக்காதான்) சிறு குழந்தைக்கும் சொல்லித்தந்து விட்டார்களே.

நம்மில் எத்தனை பேர் நம் இருசக்கர வண்டிகளை நிறுத்தும்போது அது மற்றவர்க்குத் தொல்லை தராது நிறுத்தவேண்டும் என்று ஒரு நிமிடமாவது யோசித்து செயல்படுகிறோம்? ரொம்ப கம்மிதானே.
அது ஏங்க...?
3. பெரியவங்க இறந்துபோனால் we have to celebrate their lives அப்டின்னு சொல்லுவாங்க. கொட்டு, மேளம் even வெடி கூட போடுங்க; வேண்டாங்கலை.ஆனால் முழுதாய் சாலையைமறித்துக் கொண்டு - நான் சொல்றது பெரிய ஊர்களில், முக்கிய சாலைகளில் - எல்லோரையும் நடுங்க வைப்பது என்ன நாகரீகமோ தெரியவில்லை.
ஓரத்தில் நல்ல பிள்ளையாய் நின்றாலும் எந்த நேரத்தில் நமக்கு என்ன நடக்குமோ என்ற பயம். நம் மீது பூ விழுமோ, வேட்டு விழுமோ, ஆள் விழுமோ அடி விழுமோ இல்லை போனவரோடு நம்மையும் சேர்த்து அனுப்பபோகிறார்களோ என்ற நிலை.
யாரும் கேட்க முடியாத நிலை. ஆனால், அப்படி ஆடிப்போகும் கூட்டம் எல்லாம் முடிந்து வரும்போது 'ஆடும் வரை ஆட்டம்....' என்று ரொம்பவே philosophical-ஆக, நல்ல பிள்ளைகளாக திரும்புகிறார்கள். நனி நாகரீகம் என்று பேசுவதெல்லாம் என்ன வகைப் பிதற்றல்கள். இன்னும் கற்காலத்து மனிதர்களாகவே இருக்கிறோமே.

அது ஏங்க..?

தருமி இன்னும் கேட்பான்.....

9 comments:

நாடோடி said...

தருமி:

ஃபார்முலா 1 பந்தயம் கிட்டத்தட்ட ரம்மி விளையாட்டு மாதிரி தான். ரம்மி விளையாட்டுல சொல்லுவாங்க "கார்டு நல்லா வந்தா கழுதை கூட விளையாடும்னு". அதே மாதிரி தான் ஃபார்முலா 1 லுயேயும், "கார் நல்லா இருந்தா யார் வேனும்னா ஜெயிக்கலாம்".

புலம்பல்ஸ் said...

சென்னையைப் பொருத்தவரை, சிக்னல்களில் இப்பொழுது புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் கவுன்ட்டவுன் ஸிஸ்டம் நிலைமையை கொஞ்சம் தேற்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். (ஆனாலும் கவுன்ட்டவும் 7,6,5.. வரும்பொழுதே மக்கள் உரும ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது நகர ஆரம்பித்து விடுகிறார்கள்.)

அடிப்படையில், சிக்னல் என்பது நம் எல்லோரின் நல்லதிற்க்காகவும் நிறுவப்பட்டிருக்கிறது. அதை சாலையில் குறுக்குப் போக்குவரத்து இல்லாவிடினும் மதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் இல்லை. குறுக்குப் போக்குவரத்தில் அநேக வாகனங்கள் சென்று விட்டதா? சரி நாம் கிளம்ப வேண்டியது தான் என்று கிளம்பி விடுகிறார்கள். இது ஒரு தவறான பழக்கம். இதை போக்குவத்து போலீசும் கண்டு கொள்வதில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

உண்மையில், இந்த சிக்னல்களில், போலீஸ் தீவிரமாக இருக்க வேண்டுமென்று மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப் படுமேயானால், அரசாங்கம் நிறைய வருவாய் ஈட்ட முடியும் என்பது என்னுடைய கருத்து.

Mathan said...

தருமி:

நாம வெளிநாட்டுக்கு வந்ததும் போக்குவரத்து விதிகளை மதித்து கார் ஓடுறோம் பச்சை வரும் வரைக்கும் நிற்குறோம். இதே நாம ஊருக்கு விடுமுறையில் போனதும் சிவப்பு அல்லது மஞ்சளில் எடுத்துக்கிட்டு ஓடுறோம்.

சின்ன வயசிலிருந்தே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பழகிவிடுகின்றோம். அதுவே வளரவும் தொடர்கின்றது.மத்தவங்க யாருமே மதிக்காத போது நாம மட்டும் ஏன் மதிக்கணும் என்பது இன்னொரு காரணம். ஊரோடு ஒத்துவாழ்?

வெளிநாட்டில் சிறுவயதிலேயே சொல்லி கொடுக்கின்றார்கள். அனைவரும் அதை பின்பற்றுவதால் புதிதாக வருபவர்களும் அப்படியே செய்கின்றார்கள். போனசாக போலீசும் கடமையை சரியாக செய்யுறாங்க. நம்ம பொலீஸ் பத்தி சொல்ல தேவையில்லை அவங்களுக்கு கஞ்சா வைக்குறது, எதிர்கட்சி தலைவங்களை கைது பண்ணுறது, லஞ்சம் வாங்குறதுன்னு மிக முக்கிய் வேலை எல்லாம் இருக்கு :)

Mathan said...

//அதே மாதிரி தான் ஃபார்முலா 1 லுயேயும், "கார் நல்லா இருந்தா யார் வேனும்னா ஜெயிக்கலாம்"//

நாடோடி:

அப்படி சொல்ல முடியாது. ரம்மில கார்டு நல்லா வந்தாலும் பக்கத்துல உள்ளவன் ஜோடி சேர இன்னும் காடு போடணுமே?

Mathan said...

//இந்த சிக்னல்களில், போலீஸ் தீவிரமாக இருக்க வேண்டுமென்று மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப் படுமேயானால், அரசாங்கம் நிறைய வருவாய் ஈட்ட முடியும் என்பது என்னுடைய கருத்து//

ஹரி:

தீவிரமாக இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் சிக்னல்கள் வருவாய் ஈட்டும் இடமாக காஸ் மெசினாக இருக்க கூடாது.

புலம்பல்ஸ் said...

//ஆனால் சிக்னல்கள் வருவாய் ஈட்டும் இடமாக காஸ் மெசினாக இருக்க கூடாது.//

அதுல தவறொன்றும் இல்லையே? தவறு செய்யறவங்களத் தானே தண்டிக்கச் சொல்லுறேன்? இருக்குற சட்டத்த கறாரா அமல்ப்படுத்தினாலே போதும் நிறைய வருவாய் வரும். அதை வைத்து, சாலைகளை பராமறிக்கலாம். தேவையான இன்ன பிற இடங்களில் சிக்னல்கள் அமைக்கலாம். இன்னும் எவ்வளவோ.

இது ஒரு win-win-win situation. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தண்டித்தது ஒரு பக்கம்; சாலை விபத்துக்களை குறைப்பது ஒரு பக்கம்; அத்துடன் வருவாய்க்கு வருவாயும் ஆச்சு.

அமெரிக்காவுல ஏன் ட்ராபிக் போலீஸ் கண்கொத்திப் பாம்பா இருக்காங்கன்னு நினைக்கறீங்க?

Mathan said...

//அமெரிக்காவுல ஏன் ட்ராபிக் போலீஸ் கண்கொத்திப் பாம்பா இருக்காங்கன்னு நினைக்கறீங்க//

அது வருமானத்துக்கு தான்னு தெரியும். போலீசோட வேலை சாலை விதிகளை கண்காணிச்சு பாதுகாப்பான போக்குவரத்தை உருவாக்கிறதா இருக்கணுமே தவிர வருமானத்திற்காக இருக்க கூடாது. வருமானம் தேவை என்றால் வரி போட்டோ அல்லது சாலை கட்டணம் அறவிட்டோ சாலைகளை மேம்படுத்தலாம்.

பிரித்தானிய நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஸ்பீட் காமராவை காஸ் மெசினாக உபயோகிப்பதை கண்டித்திருக்கின்றார்கள்.

//போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தண்டித்தது ஒரு பக்கம்; சாலை விபத்துக்களை குறைப்பது ஒரு பக்கம்; அத்துடன் வருவாய்க்கு வருவாயும் ஆச்சு//

நோக்கம் பாதுகாப்பான போக்குவரத்தை உருவாக்குவதே தவிர தண்டிப்பதோ வருவாயோ அல்ல. அப்படி வருவாய் வேண்டுமானால் ஒளிந்திருந்து சாலை விதிகளை மீறுபவர்களை கண்டு பிடித்து தண்டம் விதிக்கலாம். ஸ்பீட் கமராக்களை மறைவான இடத்தில் வைக்கலாம். அப்படி செய்வதன் மூலம் வருவாய் கூடும் ஆனால் விபத்து குறையுமா? ஆக்சிடண்ட் காட் ஸ்பாட்களில் தெரியக்கூடிய வகையில் வேகதடை காமராக்களை நிறுவும் போது அதனை கவனித்து ஓட்டுனர்கள் வேகத்தை குறைக்கின்றார்கள் விபத்து குறைகின்றது. அது போதும் தானே நமக்கு

புலம்பல்ஸ் said...

மதன், என்ன ஸார் வருமானம், வருமானம்னு அதையே பிடிச்சிக்கிட்டீங்க? விதிய மீறினா பைன் கட்ட வேண்டியிருக்கும்னு மக்களுக்கு பயம் இருந்தா மீற மாட்டாங்க. சாலை விதிய மக்கள் மீறாம இருந்தா, விபத்துக்கள் குறையும். இது 1+1=2 கணக்கு தானே? இது அடிப்படை. இந்தியால முதல்ல இது நடக்கட்டும். கேமரா பத்தி அப்புறம் யோசிக்கலாம். என்ன சொல்றீங்க?

தருமி said...

ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, நம்ம traffic cops பெரிய ஞானிகள்தான்(stoics). எதையும் கண்டு கொள்வதேயில்லை. 5 செகண்டுகள் இருக்கும்போதே மக்கள் கிளம்பினாலும் நாம் நிற்கும்போதே இப்படியா என்று எந்தவித ego-ம் இல்லாமல், நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment