Thursday, August 17, 2006

171. அனானிகளுக்கு மட்டும்...

இடப் பங்கீடு பற்றி விரிவாக எழுத வேண்டிய ஒரு நிலை திசைகளில் எழுத அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிறகே அதனைப் பற்றிய ஒரு முழுக் கண்ணோட்டம் எனக்குக் கிடைத்தது. கிடைத்த சேதிகளும் நடந்து வந்த, வருகின்ற விஷயங்களைப் பார்க்கும் போதுதான் ஒரு மிரட்சியே ஏற்பட்டது,

இடப்பங்கீட்டின் தேவை,
இதுவரை நடந்தேறிய நல்லதும் அல்லதும்,
இனி நடக்கவேண்டியவைகள்,
அதற்குள்ள முட்டுக்கட்டைகள்,
முட்டுக்கட்டை போடுபவர்களின் திறமை,
அவர்களின் மனப்பாங்கு,
எல்லாவற்றையும் விடவும்
UPSC தேர்வுகளில் நடக்கும் பித்தலாட்டங்கள்


இவைகள் எல்லாம என்னை உண்மையிலேயே மிகவும் பாதித்தன. அந்தப் பாதிப்பை நம் பதிவர்களோடவாவது பகிர்ந்து கொள்ள நினைத்து அக் கட்டுரையை என் பதிவுகளில் தொடர்ந்து இட்டேன். பலரின் கவனம் கவர வேண்டுவதற்காகவே அக்கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்தும் இட்டேன்.

ஆயினும் நான் எதிர்பார்த்தது போல் இந்த விஷயம் அதிகம் பேரைப் போய்ச்சேர்ந்ததாகவோ, படித்தவர்களைப் பாதித்ததாகவோ தெரியவில்லை.அதற்குக் காரணமும் தெரியவில்லை. வழக்கமாக என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாவது எட்டிப் பார்த்துவிட்டுப் பின்னூட்டம் வெகு சிலராவது போடுவதுண்டு. I would not touch it even with a ten foot pole என்பது மாதிரி யாரும் எட்டிகூடப் பார்க்கவில்லை.

ஒவ்வொரு semester இறுதியிலும் மாணவர்களிடமிருந்து ஒரு feedback வாங்குவதுண்டு - நான் வகுப்பு எடுத்த ‘அழகை’ப்பற்றி தெரிந்து கொள்வதற்காக. அந்த feedback எழுதும் போது மாணவர்கள் தங்கள் பெயரை எழுதக்கூடாது என்பது ஒரு விதி. அதைப் போலவே இப்போது ஒரு feedback எனக்கு வேண்டும். ஆகவே வழக்கமான என் விதியைத் தளர்த்தி உங்களிடமிருந்து முறையான, என் மாணவர்கள் இதுவரை தந்தது போன்ற முதிர்வான, பாரபட்சமற்ற, forthright கருத்துக்களை அனானியாக வந்தே தெரிவிக்க அழைக்கிறேன்.

எனக்குள் உள்ள கேள்விகள்:

1. ஏன் இந்தப் பதிவுகள் மற்ற என் பதிவுகளுக்குப் பெறும் கவனிப்பைக் கூட பெறவில்லை?

2. கட்டுரை உங்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

3. ‘நடப்பது நடந்தே தீரும்’, தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’, - என்பது போன்ற fatalist idea-வின் படி செல்லும் மனப்பாங்கு காரணமாக இருக்குமோ?

4. ‘இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியுமே’ என்பதா?

5. இதில் ஆச்சரியப்படவோ, வருத்தப்படவோ ஏதுமில்லையே என்பதா?

அனானிகளாக வந்து பதிலளிக்க அழைக்கிறேன்.

34 comments:

தருமி said...

Partha Says:
August 14th, 2006 at 11:06 pm e
Hi Dharumi,
I didn’t read your posts on this issue for many reasons

1) I live in the US and your posts dont show up in the front page in thamizmanam by the time we get to read from the site
2) By the time i looked at the posts, it was like part 4 or 5 and i’m not a big fan of reading multi-part posts and i never bothered to go back and read your previous posts
3) I believe the post i read was really long. the issue with long posts is we lose interest half way through and skip reading the rest and lose interest on the whole issue. the post i read was not riveting to keep me focused on the rest of the post and besides, i was reading a post from somewhere in the middle of your chain of posts
4) I generally skip posts about religion (good or bad), castes, caste issues, etc. cuz most of these posts are riddled with finger-pointings, animosities, hatred, etc.
Another reason why i dont read these posts is cuz i believe we need to co-exist in peace and talking about the past atrocities is in no way gonna help us get there.
5) the title (saathigal irukuthadi pappa) of your posts were misleading. It sounded like they were posts about caste issues than caste reservation issues.

PS: No, i’m not from the so-called upper-castes. I wanted to type this in tamil, but it would take a good one hour of my time to type it in tamil which is hard to spare on a busy monday like today

தருமி said...

தருமி Says:
August 15th, 2006 at 12:01 am e
Patha,
long time; noஓஓஓஓஓஓ see

தருமி said...

Partha Says:
August 16th, 2006 at 6:47 pm e
Hi Dharumi,

I’m the one, who commented in your previous post (link to /. discussion) - and I am different from the partha commented in this post!

Just to clarify that there are two parthas

தருமி said...

தருமி Says:
August 16th, 2006 at 9:51 pm e
welcome to Partha II

Anonymous said...

நீங்கள் அனானியாக வரச்சொன்னதால் அவ்வாறே..

1. ஏதோ இடபங்கீடு என்பது பிராமனர்களுக்கு எதிரானதாகவும் முட்டாள்கள் மட்டும் இடபங்கீட்டை நம்பி இருப்பது போன்றும் பலர் நினைக்கின்றனர். அதனால் பல பேர் இந்த விசயத்தை கண்டுகொள்வதில்லை.

2. உங்கள் பதிவுகளில் நீளம் சில சமயம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் ரவிசிரினிவாஸ் போன்றோருக்காக நீங்கள் பல உ.ம், சுட்டிகளை தர வேண்டியுள்ளது.. இது நீங்கள் சொல்ல வரும் கருத்தை திசை திருப்பிவிடுகிறது.

3.இடப்பங்கீடு பதிவு தவிர சில ஜாலியான (முன்பு போல்) பதிவுகள் தறுவதில்லை. அதனால் வாசகர்கள் குறைந்துவிட்டனர்.

4. திராவிட வலை தளம் வந்தவுடன் அதில் உள்ள பல நல்ல பதிவர்களை கட்டம் கட்டும் பணி ஒரு மறைமுக செயலாகவே இங்கு நடக்கிறது.

5. பின்னூடங்களை மட்டுறுத்தல் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்.

Anonymous said...

dear d,
i'm the one used to comment in your earlier reservation articles as kvd. I should say your articles were a piece of work, carried compelling reasons for reservation. I'm not sure how many read it, but I know I did and liked it.
i would say, for two pieces work your blog will stay over the time:
1. articles on religion/god.
2. articles on reservation.

personaly those are two pieces I admire. Don't give up any future works of similar kind. you know good stuff don't grab audience, but no matter what, the good stuff is good stuff - across the time.

Thx,
Kvd.

சிறில் அலெக்ஸ் said...

என் பதில்கள்

1. ஏன் இந்தப் பதிவுகள் மற்ற என் பதிவுகளுக்குப் பெறும் கவனிப்பைக் கூட பெறவில்லை?

== இப்பல்லாம் எதிர்வினைப் பதிவுகளுக்கும், நகைச்சுவைப் பதிவுகளுக்கும் அதிக வரவேர்ப்பு இருக்குது... உங்க இட ஒதுக்கீடு பற்றிய பதிவு தகவல் களஞ்சியமா, ஒரு செய்தித் தாளின் தலையங்கம் போல இருந்துச்சு. நான் படித்தேன். இட ஒதூக்கீட்டைப் பற்றிய மேலோட்டமான சிந்தனைகளே எனக்கு இருக்கிறதால் no comments..

2. கட்டுரை உங்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?
== சில தகவல்கள் நிச்சயம் சிந்திக்க வைத்தது

நாம் நல்ல பதிவு என நினைக்கும் பல பதிவுகளும் கண்டுகொள்ளப் படாமலேயே போகின்றன. பலர் ப்படிக்கிறார்கள் ஆனா பின்னூட்டம் விடுவதில்லை.

இதுதான் என் அனுபவம்..

கெடா கதை எழுதி பல மாசம் ஆன பிறகு ஒரே ஒரு பின்னூட்டம் வந்தது... அதே கதையை போட்டிக்கு சேர்க்கச்சொல்லி 'எண்ணாம் எனது' தன் பதிவில் போடுகிறார் ஆனா அவர் ஒரு பின்னூட்டம்கூட கெடாவுக்குப் போடவில்லை..

அவர் அதை ரசித்திருக்கிறார் ஆனா பின்னூட்டமிடவில்லை.. பலரும் இருக்கலாம்.

:))

Word Verificationஐ எடுத்துவிட்டுப் பாருங்க கொஞ்சம் முன்னேற்றம் தெரியலாம்.

Anonymous said...

Sir, Did you get my comment in the name "kvd" here.

Thx.

தருமி said...

அனானி1,
//உங்கள் பதிவுகளில் நீளம் சில சமயம் அதிகமாக உள்ளது.//
அதற்காகவே தனித்தனித் தலைப்புகளில் பிரித்துப் போட்டிருந்தேன்.
பரவாயில்லை விடுங்க

தருமி said...

thank you kvd.

தருமி said...

cyril,
i have taken off word verification.
நன்றி.

Anonymous said...

தருமி சார்,

நான் அனானியா வராத போதே பல பேர் நான் அனானியா வந்து பின்னூட்டம் போடறேன்னு நம்புறாங்க. நீங்க வேற அனானியா வந்து சொல்லுங்கன்னு சொல்லிட்டீங்க. அதனால வேற வழியில்லாம அனானியாவே வந்து சொல்றேன். ஆனா நான் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருச்சுன்னா தயங்காம என் பேரச் சொல்லலாம். :-)

வழக்கமா உங்க எல்லா பதிவுகளையும் தமிழ்மணத்த நான் பாக்கற சமயத்துல தெரிஞ்சா உள்ள வந்து பாத்துருவேன். உங்க பழைய பதிவுகளை எல்லாம் கூட மெதுவா ஒவ்வொன்னா பாத்திருக்கேன். ஆனால் பல நேரங்கள்ல உங்க கருத்துக்கும் என் கருத்துக்கும் ரொம்ப தூரம் இருக்கிறதால மேலாப்புல படிச்சுட்டுப் போறதோட சரி. அதான். நீங்க மின்னஞ்சல் போட்டுச் சொன்ன பிறகும் உள்ள வந்து பாத்துட்டுப் பேசாம போயிட்டேன். இது உங்களோட பல பதிவுக்கும் வழக்கமா செய்றது தான். அப்படியே ஏதாவது பின்னூட்டம் போட்டாலும் 'நல்லா இருக்கு' அப்படிங்கற மாதிரி பின்னூட்டம் தான் போட்டிருக்கேன். :-)

நான் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்னாலும் இடப்பங்கீடு (பாத்தீங்களா நீங்க இடஒதுக்கீடு தப்பான சொல்ன்னு சொன்னதைப் படிச்சிருக்கேன்) பத்தி அவ்வளவா ஒரு நல்ல அபிப்ராயம் இல்லை எனக்கு. அதுக்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலையாக இருக்கலாம். அதனால ரொம்ப புள்ளிவிவரங்களோட ஒரு பதிவு இருந்ததுன்னா மேலோட்டமா பாத்துட்டுப் போயிட்டே இருந்துட்டேன். இப்பக் கூட பாருங்க. குழலி ஒரு பதிவு போட்டிருக்கார் - அட்டவணை எல்லாம் போட்டு. படிச்சுப் பாத்தேன். என்ன சொல்றார்ன்னு புரியுது. ஆனா எல்லாம் அசம்ப்சன்லேயே போட்டுருக்காரோன்னு ஒரு எண்ணம். ஏதாவது நான் சொன்னா நம்ம முதுகுல டின் கட்டிடுவாங்களோன்னு ஒரு பயம். அதான் ஒன்னும் சொல்லாம வந்துட்டேன். அந்த மாதிரி நிறைய பேரு உங்கப் பதிவைப் படிச்சிருக்கலாம். ஆனா ஒன்னும் சொல்லாமப் போயிட்டாங்க.

எனக்குத் தெரியும் நீங்களும் என் பதிவுகளை எல்லாம் முடிஞ்ச அளவு படிக்கிறீங்கன்னு. ஆனா ரொம்ப அதிகம் பின்னூட்டம் போட்டதில்லை. ஏன் அப்படின்னும் தெரியும். நான் சொல்ற கருத்துகள் எல்லாம் உங்க கருத்துகளுக்கு வெகு தூரத்துல இருக்கறதாலன்னு. :-)

குழலி / Kuzhali said...

தருமி அய்யா, வலைப்பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெகுசன ஊடகமாக மாற ஆரம்பித்துள்ளது, அது வெகுசன ஊடகமாக மாறும் போது தற்போதுள்ள வெகுசன ஊடகங்கள்

எப்படியோ அது மாதிரியே மாறுகின்றது....

நானும் இதுப்பற்றி யோசித்திருக்கின்றேன்... குறிப்பாக சாதி பற்றிய பதிவுகளை நான் படிப்பதில்லை மதம் பற்றிய பதிவுகளை நான் படிப்பதில்லை சே.. சே... என்னப்பா இப்படி சண்டை

போட்டுக்கிறாங்க என்பது போன்று சமத்துவபுர ஜென்டில்மேன்கள் அதிகமாகிவிட்டனர் இவர்களால் இது மாதிரியான சமூகப்பிரச்சினைகள் பற்றிய பதிவுகள் மையஓட்டத்திலிருந்து

வில(க்)கி விடுகின்றனர்,

தற்போதைய வலைப்பதிவு நிலைமையை பார்த்தீர்களென்றால் அது அச்சு அசல் அப்படியே வெகுசன ஊடகத்தின் அத்தனை அம்சங்களோடு உருவாகி வருவது தெரிகின்றது, வெகுசன

ஊடகங்களில் இல்லாமல் சிறுபத்திரிக்கை என்ற சிறிய வட்டத்தில் சுருக்கிக்கொண்ட அல்லது சுருக்க வைக்கப்பட்ட கருத்துகள் வலைப்பதிவுகளில் வர ஆரம்பித்தது, ஆனால்

வலைப்பதிவுகள் அதிகரிக்க அதிகரிக்க இந்த மாற்று பார்வை பதிவுகள் சண்டை பதிவுகளாக பாவிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

மேலும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலினால் வெளியிட தாமதமாகின்றது, வலைப்பதிவுகளில் முன்பு வலது சாரிகள் அவர்களினால் சாதிக்க முடியாததை இந்த போலி மற்றும் ஆபாச

பின்னூட்டங்களார்கள் அவர்களுக்கு சாதித்து கொடுத்துவிட்டனர், அதாவது வெகுசன ஊடகங்களில் வெளிவராத மாற்றுப்பார்வை கருத்துகள் வலைப்பதிவுகள் வந்ததும் அது தொடர்பான

விவாதங்களையும் முடக்கி போட முனைந்த வலது சாரிகளின் முயற்சி பலிக்காத போது நல்ல வாய்ப்பாக வந்து சேர்ந்தார்கள் போலிகள், இதனால் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு

தள்ளப்படும் நிலமை, அதனால் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டு வெளியாகி அது தமிழ்மணத்தில் நிற்கும் நேரமும் குறைவாக இருக்கின்றது.

இடஒதுக்கீட்டு பதிவுகளில் இடஒதுக்கீட்டு நியாயங்களை அதன்ஆதரவாளர்கள் படித்து விவாதித்து தெரிந்து கொள்ளவேண்டுமென்பதில்லை, இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கும்

அப்படியே விலக்கி விட்டு சென்று விடுவார்கள், நடுநிலையாளர்கள் அய்யய்ய சீ.. என்னது இது இன்னொரு சாதிப்பதிவு என்று ஓடிவிடுவார்கள்....முன்பு வலைப்பதிவுகளில் இந்த நிலை

இல்லை, ஆனால் இப்போது உள்ளது, சரியாக பார்த்தால் இதே நிலை தான் வெகுசன ஊடக்த்திலும் நடந்துவருகின்றது.

தூர்தர்சன் என்ற ஒற்றை சானல் இருந்த போது தொடர்ந்தும் ஆரவத்தோடும் ஒளியும் ஒலியும் பார்த்தது இன்று கேபிள் தனியார் தொலைக்காட்சிகளில் நித்தம் நித்தம் பாடல்கள்

ஒளிபரப்பட்டுவிடுவதால் ஒலியும் ஒளியுமிற்கு வரவேற்பிருப்பதில்லை, அது போல புத்தகங்களை படிப்பது போல யாரும் வலைப்பதிவுகளை ஆழ்ந்து நிதானமாக முழுவதுமாக

படிப்பதில்லை, அதனால் நீளமான, தகவல்கள், புள்ளிவிபரங்கள் இருக்கும் பதிவுகளை ஆராய்ந்து படிப்பவர்கள் குறைவு அதனால் நீளம் சற்று அதிகமாக இருக்கும் பதிவுகள் சொல்ல

வந்தது முழுவதும் படிப்பவர்களுக்கு சென்று சேர்வதில்லை.

அடுத்ததாக பதிவர்களின் மீது விழுந்துள்ள முத்திரை, இவர்கள் இப்படித்தான் என்று குத்தப்பட்ட முத்திரையினால் பொது வாசகர்களும் ஒதுங்கி செல்கின்றனர்.

Anonymous said...

ஞாயமான வருத்தம்தான்...

இப்படிப்பட்ட ஒரு சென்சிடிவ் விஷயத்தில் "ஆதரவாளர்கள் " கூட சபாஷ் ...பலே என்று சொல்லிவிட்டுப் போகாதது சோகம்தான் :)


ஆனால் ஒன்று....இப்படி ஆதங்கப்பட்டு feed back-எல்லாம் கேட்டிருக்கிறீர்களே என்று மெனக்கெட்டு அந்தப் பதிவை போய் படித்தேன்....அதில் பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன்...ஆனால் வாசகர்களின் சரியான நிராகரிப்பை அது உடைத்து விடும் என்பதால் அங்கு பின்னூட்டம் இடாமல் இங்கு ...

உங்கள் கட்டுரையில்...நீங்கள் சரியென்று நினைப்பதனை...நீ...ள , நீ...ளமாக எழுதியிருக்கிறீர்கள்...

கட்டுரை என்பது நடு நிலையில் நின்று அலசுவது...அப்படி இருப்பின் இரு சாரரும் கருத்து சொல்ல , விவாதிக்க ஒரு களமமைக்கும்...

உங்களது கட்டுரை உங்கள் உள்மனது தீர்மானங்களை வலியுருத்துவதாக உள்ளதே தவிர நடுநிலையானதல்ல...

எனவே ஆதரவாளர்களும் ....எதிர்பாளர்களும் இது தெரிந்த விசயம்தானே ( இவர் கருத்தும் கூட) என ஒட்டு மொத்தமாய் நிராகரித்திருக்கலாம்....

நடு நிலைமையாய் எழுதுங்கள்... கண்டிப்பாக விவாதகளம் சூடுபிடிக்கும்...better luck next time.

விளக்கம் வேண்டுமெனில் தரத் தயார்...
ஆனால் ஆசிரியருக்கு தெரியாததா :))

Anonymous said...

test

தருமி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அனானிகளுக்கு மட்டும்னு போட்டா பத்தாது.

அனானிகள் கடை விரிகிறமாதிரி மேட்டர் போடனும்.

G.Ragavan said...

தருமி சார், இப்பல்லேம் அடிச்சிக்கிறதுதான் பாப்புலரா இருக்கு. பன்றி, நாய், நரின்னு பேசுறதுதான் ஸ்பெஷாலிட்டி. அரசியல்வாதிங்கள்ள இருந்து வலைப்பூ வரைக்கும்.

நேத்துப் பாருங்க சென்னையில 1ம் தேதி சந்திப்புன்னு ஒரு பதிவு....அதுல பின்னூட்டங்கள் பல....தனிநபர்க் காழ்ப்புணர்ச்சிதான். ஒருவருடைய கருத்தை எதிர்ப்பது வேறு என்பதையும் அந்த நபரை எதிர்ப்பது என்பதையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத அளவிற்குக் கனியிருப்பக் காய்க் கவர்தல் நடக்கிறது. ம்ம்ம்ம்...நீங்க கண்டுக்காம எழுதுங்க. அவ்வளவுதான்.

தருமி said...

அனானி 1,
ஆனா நான் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருச்சுன்னா தயங்காம என் பேரச் சொல்லலாம். :-) //
பேரு எதுக்கு? ஊரு சொல்றேன சரியான்னு சொல்லுங்க.. நாம் ரெண்டு பேரும் ஒரே ஊருதானே?

தருமி said...

குழலி,
உங்கள் கருத்துக்கள் மிகச்சரியென்றே நினைக்கிறேன்.

தருமி said...

அனானி2,
//கட்டுரை என்பது நடு நிலையில் நின்று அலசுவது...

எல்லா கட்டுரைகளும் அப்படி நடுநிலையோடு நின்று அலசவேண்டிய கட்டாயமில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்வது ஒரு வேளை பத்திரிகை தர்மமாக இருக்கலாம். பொதுவான கருத்தொன்றை வைத்து விவாதகளம் அமைத்துக் கொடுப்பது ஒரு பத்திரிகைக்கு ஒருவேளை தேவையாயிருக்கலாம். ஆனால் பதிவுகளில் பதிவர்களின் எண்ணங்களே பிரதி பலிக்கும். அது சரிதான் என்றே நினைக்கிறேன்.

we have a conviction personally and we have to stand by that, i suppose.

தருமி said...

நன்றி ராகவன்.

தருமி said...

சந்திர சேகரன்,
//இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை படிக்கும்போது ஆச்சர்யத்தை விட ஐயம் அதிகமாக எழுகிறது..//

ஐயமே வேண்டாம். தொன்று தொட்டு நடந்து வரும் விஷயம்தானே. தீக்கோழிகளாக நாம் மண்ணுக்குள் தலை மறைத்து வாழ்கிறோம்; அவ்வளவே.

Anonymous said...

sir. your writings are really xtra long. pls. cut lenth. but very useful. dont stop. write more.

ceylon boy

Anonymous said...

//பேரு எதுக்கு? ஊரு சொல்றேன சரியான்னு சொல்லுங்க.. நாம் ரெண்டு பேரும் ஒரே ஊருதானே?
//

Correct. :-)))

Anonymous said...

""""""""ஆனால் பதிவுகளில் பதிவர்களின் எண்ணங்களே பிரதி பலிக்கும். அது சரிதான் என்றே நினைக்கிறேன்.

we have a conviction personally and we have to stand by that, i suppose.
"""""""""""""
சரியாக சொன்னீர்கள்...உங்கள் கன்விக்ஷன் இந்தவிஷயத்தில் மற்றவர்களுக்கு புரிந்திருப்பதால்தான் பின்னூட்டங்கள் வரவில்லை(உங்கள் கட்டுரைக் கேள்விக்கு பதிலாக) என்று குறிப்பிட்டேன்.....பின்வருமாறு....

"""""""எனவே ஆதரவாளர்களும் .... எதிர்பாளர்களும் இது தெரிந்த விசயம்தானே ( இவர் கருத்தும் கூட) என ஒட்டு மொத்தமாய் நிராகரித்திருக்கலாம்....

நடு நிலைமையாய் எழுதுங்கள்... கண்டிப்பாக விவாதகளம் சூடுபிடிக்கும்...better luck next time"""""""

அனானி....2

நாமக்கல் சிபி said...

குழலி சொன்ன கருத்துக்களை நான் அப்படியே மறு மொழிகிறேன்.

பதிவுகளில் தீவிர சாதிச் சண்டைகள் நடந்த காரணத்தால் இதுபோன்ற பதிவுகளும் அதே கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். நான் அப்படித்தான் இதுபோன்ற பதிவுகளை படிக்காமல் தவிர்த்துவிடுகிறேன்.

மனதளவில் ஏற்படும் சலிப்புதான் காரணம். வீட்டுக் கவலைகள், வேலைப்பளு இவற்றிற்கு நடுவில்ல் கொஞ்ச நேரம் ஏதாவது பொழுதைப் போக்கலாம் என்று வந்தால் இங்கும் அடிதடியா என்று நினைக்கத்தானே செய்வார்கள்!

Anonymous said...

In general people look out for saucy stuff - specifically saucy stuff that can be slurped away in ten seconds - so it is no wonder your posts on reservation did not get lot of feedbacks. But, it will definitely be archived as a perspective from the other side of the fence. The neutrality hullaballoos some anonymous commenters raised against you is plain BS. The same kind of people will shamelessly slap the label of a dhimmi to anybody who wants to stand in a neutral ground and talk against religious fundamentalism, talk in favor or religious minorities - but when they get uncomfortable about their existence, they will be willing to scrape your brain off with their wriggly logic and their pseudo craving for a neutrality appetite! It is simple and plain - morbid hypocrisy at its best.

I have read your posts on this issue - I do not think you have done an unilateral assault on anybody - you only laid out the facts, and it is for the reader to decide. Do not worry about the number of people who read your article - write what you feel is correct, and if people think that reservation is bullshit, they can write their opinions, and they can be criticized or supported for their perspectives, too.

Nothing is holy or taboo - so keep writing.

Anonymous said...

என்னை பொறுத்தவரை காரணங்கள்..

தமிழ்மணத்தில் வெகுநேரம் உங்கள் பதிவுகள் நிற்பதில்லை...

நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என ஏற்கனவே தெரியும் என்பதால்...

ஏற்கனவே ஒரு அனானி சொன்னது 100% உண்மை...

//
உங்கள் கட்டுரையில்...நீங்கள் சரியென்று நினைப்பதனை...நீ...ள , நீ...ளமாக எழுதியிருக்கிறீர்கள்...

கட்டுரை என்பது நடு நிலையில் நின்று அலசுவது...அப்படி இருப்பின் இரு சாரரும் கருத்து சொல்ல , விவாதிக்க ஒரு களமமைக்கும்...

உங்களது கட்டுரை உங்கள் உள்மனது தீர்மானங்களை வலியுருத்துவதாக உள்ளதே தவிர நடுநிலையானதல்ல... //

kirukan said...

Dear Dharumi,
I usually read your blog. But I missed that series. But I have seen that title many times in Thamizhmanam. I missed that series, just bcoz of the title.

I dont read posts discussing religion and caste. That may be the reason, I just skipped it.

kirukan

துளசி கோபால் said...

இந்த இட ஒதுக்கீடு பற்றி எனக்கு அவ்வளவா ஒண்ணும் தெரியலை. அதனாலெ படிச்சதோடு சரி.
பின்னூட்டம் எண்ணிக்கையை வச்சு பதிவு நல்லதா இல்லையான்னு நியாயப்படுத்த முடியாது.

நீங்க எழுதறதை எழுதுங்க. சேரவேண்டியவர்களுக்கு அதுபோய்ச் சேரும்.

தருமி said...

அனானி 2, சிலோன்பாய், சிபி,
அனைவ்வருக்கும் நன்றி.
அந்த ஆங்கில அனானி, நன்றி - அதனுடன் உங்கள் ஆங்கிலத்திற்குப் பாராட்டு.

தருமி said...

கிறுக்கன்,
"I dont read posts discussing religion and caste.//
அப்டின்னா, என் பதிவுகளில் 80% உங்கள் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்னு சொல்லுங்க. :)

தருமி said...

நீங்க எழுதறதை எழுதுங்க. சேரவேண்டியவர்களுக்கு அதுபோய்ச் சேரும்.//
பதிவர்கள் எல்லோருக்குமான ஒரு 'கீதா உபதேசம்'.

நன்றி, துளசி.

Post a Comment