Wednesday, August 30, 2006

173. ஹைக்கூ தெரியும்; சினிகூ...?

நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.

ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் - ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.

ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் "திரைக்கதை" கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷாட்: குளோசப் ஷாட் - ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் - zoom - ஒரு ஆணும் பெண்ணும் - ஆண் பெண்ணை நெருங்க...
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் - குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் - zoom - அப்பா,
அம்மா, குழந்தை - சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் - முத்தம் தரும் குழந்தை ஒன்று - zoom - இறந்த அப்பாவின்
உடல்.

இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.

6 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

A Picture is worth 1000 words என்று சொல்லுவார்கள் ஆகவே மூன்று ஷாட் என்பது 30000, 40000 வார்த்தைகளுக்கு சமம் என்று வைத்துக் கொள்ளலாம் ஆகவே இது போன்ற முயற்சிகள் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எல்லா படமும் 1000 வார்த்தைகளுக்கு சமம் என்று சொல்லி விட முடியாது. ஆகவே ஹைக்கூ யார் வேண்டுமானாலும் எழுதி விடுவது போல இதை செய்து விட முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் சில நாட்களில் நான் தவறு என்பதும் நிரூபணம் ஆகலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொன்ஸ்~~Poorna said...

Ad film - உக்கும் சினிக்கூவுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தருமி said...

தனி மெயிலில் வந்த ஒரு கேள்வி...: இதற்கும் இப்போது வரும் விளம்பரப் படங்களுக்கும் என்ன வேற்றுமை என்று.

நல்ல கேள்விதான். அதிலும் கதை சொல்லும் சில விளம்பரப் படங்கள் - சட்டென்று நினைவுக்கு வருவது, சில ஆண்டுகளுக்குமுன்பு வந்த motorola விளம்பரப் படம்தான் - மிக சேர்த்தியான chick கதையமைப்போடு வந்து அசத்துகின்றன.

Anonymous said...

Ad film can have any number of shots, computer graphic or optical image enhancements. But CINEKU consists of only 3 shots and NO computer graphics or optical effects

தருமி said...

குமரன் எண்ணம், பொன்ஸ்,
நன்றி

அனானி,
நீங்கள் சொல்லும் வித்தியாசங்கள் சரிதான். ஆனால் அமைப்பைப் பொறுத்தவரை ஒன்றுதான் இல்லையா?
முதல் ஷாட்: இந்த வீடு எங்களுக்கு வேண்டாம்; தரையெல்லாம் ஒரே கறையாக இருக்கு
2ம் ஷாட்: இந்த கிளீனர் பயன்படுத்திப் பாருங்களேன்.
3ம் ஷாட்: கிளீன் பண்ணிட்டோம்; பளிச்சின்னு இருக்கு; இப்ப இந்த வீட்டையே வாங்கிடப் போறோம்!

அட, அசின் முதல்ல வந்த hyagreevas கடைப் பட்டு விளம்பரம் ஓர் அழகான சினிகூ தானே.
கொஞ்சம் கவித்துவம் கூடிய விளம்பரப் படங்கள் பல சினிகூ வாக இருக்க முடியுமே!

Jazeela said...

நன்றி தருமி, தெரியாத விஷயத்தை தெரிந்துக் கொடுக்க தந்தமைக்கு.

Post a Comment