Friday, February 22, 2008

250. சுடச் சுட ஆ.வி.

ஞாநி ஆ.வி.யைவிட்டு வெளியேறி குமுதத்தில் எழுத ஆரம்பித்துள்ளது நம் வலைப்பூக்களிலிருந்து அறிந்து கொண்டேன். அவரை வாசிப்பதற்காகக்கூட பல்லாண்டுகளாகத் தொடாமல் இருந்த குமுதத்தை மீண்டும் தொடுவதாக இல்லை. என்னவோ அப்படி ஒரு வெறுப்பு; தமிழகத்தில் விற்பனையில் முதல் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதினாலும் (அது இப்படிப்பட்ட புத்தகமாகவா இருக்க வேண்டும் என்ற நினனப்பாலும்), கோவாலு என்று சிறுகதை வெளியிட்டதாலும், ஜோக்குகளுக்கு சுதாகர் சுதர்ஸன் என்றோவேறு பெயரிலோல் ஒருவர் வரையும் அகோரமான படங்களைப் பார்த்து வெறுத்ததாலும், ஒரு நடிகையின் (பெயர் நினைவிலிருக்கிறது; எதற்கு வேண்டாமே..) மிகக் கீழ்த்தரமான ரசனையில் எடுத்த படத்தை அட்டைப் படமாக போட்டதினாலும், அரசியலில் நிலைப்பாடு ஏதும் இல்லாததாலும் ... இப்படி பல காரணங்கள் குமுதத்தை என் வரையில் தீண்டாத புத்தகமாக நான் மாற்றிக் கொண்டதற்கு.


* * * *


ஆ.வி. இருப்பதில் கொஞ்சம் தேவலை என்ற நினைப்பு. ஆ.வி.ஜோக்குகள் பிடிக்கும். இப்போது கதை வாசிக்கும் ஆசையே வருவதில்லை - வயதோடு தொடர்பான விஷயமோ என்னவோ. விழுந்து விழுந்து வாசித்த காலம் போய், இப்போது கதை வாசிப்பு அநேகமாக நின்று போனதால் மற்றவைகளை மட்டும்தான் வாசித்து வருகிறேன். அதில் ஒன்று ஞாநியின் எழுத்து. இனி அது இல்லை.


* * * *


வலைப்பூக்களில், எரிந்த கட்சி எரியாத கட்சி என்பது போல் ஜெயமோகன் பக்கம் சிலரும், ஆ.வி.யின் பக்கமாகச் சிலரும் என பொரிந்து கொண்டிருக்க, ஆ.வி. தன் பங்குக்கு அந்தப் பக்கத்திற்கு மூன்று இந்தப் பக்கத்திற்கு மூன்று என்று 6 வாசகர்கள் கடிதங்களை வெளியிட்டுள்ளது.
தூற்றலுக்கும் போற்றலுக்கும் சரி பங்கு. பரவாயில்லைதான்.


* * * *


வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்னு தலைவர் முடிவெடுத்திருக்கிறாராம். நல்லது நடந்தா சரி.


* * * *


வலைப்பூ தொடர்பினால் நண்பரான ராஜா சந்திரசேகர் எடுத்த குறும்படம் பற்றி ஆ.வி.யின் வரவேற்பறையில் ஒரு சேதி. சமீபத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலத்திற்கு அஞ்சலியாக எடுத்த மூன்று நிமிடமே ஓடும் குறும்படம். இசைமொழி மட்டுமே கொண்டுள்ள, ஏற்கெனவே நான் பார்த்த அவரின் The Lines that pursue us - A short film about Artist Adimoolam என்ற அந்தப் படத்தைப் பார்க்கவும், "கோடுகளின் இசை" என்ற அதோடு இணைந்த கவிதையை வாசிக்கவும் அவரது வலைத்தளத்திற்குச் செல்லவும். படத்திற்கான இணைப்பு வலைத்தள முகப்பிலேயே உள்ளது.


* * * *

25 comments:

dondu(#11168674346665545885) said...

//கோவாலு என்று சிறுகதை வெளியிட்டதாலும்,//
கோவாலு என்ற குரங்கு பற்றிய கதைதானே? அடுத்தவாரம் வந்த ஆசிரியர் கடிதத்தில் "கோவாலு கதையை எழுதியவரையும் உம்மையும் அந்த கோவாலு கிட்டே பிடித்து கொடுத்தால் என்ன"? என்று வந்திருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட வருவேன்க்ர மாதிரி, ரொம்ப நாளா பதிவு போடாவிட்டாலும். போட்ட பதிவில் அசத்தி விட்டீர்கள்

//குமுதத்தை மீண்டும் தொடுவதாக இல்லை. என்னவோ அப்படி ஒரு வெறுப்பு;//

எனக்கும் இதை பிடிக்காது , சினிமாவை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் தராததால்.

//ஆ.வி. இருப்பதில் கொஞ்சம் தேவலை என்ற நினைப்பு.//

இருப்பதில் அல்ல, இருந்ததில் என்று திருத்தி கொள்ளுங்கள்.

//மறைந்த ஓவியர் ஆதிமூலத்திற்கு அஞ்சலியாக எடுத்த மூன்று நிமிடமே ஓடும் குறும்படம்.//

குறும்படம் பார்க்கவேண்டும் என்று எனக்கும் எனது நண்பர்களுக்கும் ரொம்ப நாளைய ஆசை, எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. கிடைக்க கொஞ்சம் உதவி செய்யவும்.

வால்பையன்

Thekkikattan|தெகா said...

குமுதம் வாங்கிப் படிக்காததிற்கு இவ்வளவு காரணங்கள் இருக்குதா? இருந்தாலும் ரொம்பத்தான் பொறுமை உங்களுக்கு, பின்னே எத்தனை விசயங்களை கவனித்து பிறகு ரிஜெக்ட் பண்ணியிருக்கீங்க :).

தருமி said...

ஆனாலும் டோண்டு உங்களுக்கு செம நினைவாற்றல்தான் ...
நம்ம 'மனச' தொட்ட கதையை இன்னும் இப்படி நினைவில் வச்சிருக்கீங்களே! ஒரு கால் நூற்றாண்டு இருக்குமா? அதற்குப் பிறகுதான் குமுதம் என்றாலே குமட்டிக்கொண்டு வந்தது.

தருமி said...

வால்,
உங்களைத்தான் ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்; வடக்கே போனால்
ஒரேயடியாக இப்படியா?

//குறும்படம் .... கிடைக்க கொஞ்சம் உதவி செய்யவும்//

பதிவில் லின்க் கொடுத்துள்ளேனே.

தருமி said...

தெக்ஸ், இன்னும் சில காரணங்கள் இருக்கு:
சாண்டில்யன் கதைகள் (கடல் புறாவிற்குப் பின்)
அரசு கேள்வி பதில்களும் 'அரசை'ச் சுற்றியுள்ள தேவையில்லாத 'மர்மங்களும்',

.......இன்னும் நிறைய...

இலவசக்கொத்தனார் said...

ஞானி, ஆவி, ஜெயமோஹன் அப்படின்னு நீங்களும் Current Affairs Post போட்டுட்டீங்க. நல்லது.

உள்ளேன் ஐயா!

பிகு: அது என்னங்க கதை அது? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லறது. என்னை மாதிரி சின்னப் பசங்களுக்குப் புரிய வேண்டாமா?

தருமி said...

கொத்ஸ்,
அந்தக் கதையெல்லாம் வேணாம். sexy-யா இருந்தா பரவாயில்லை. ஆனா அது ஒரு perverted story...கதைகூட மறந்து போச்சு; ஆனா அந்த bad taste still remains.
ஓவ்வ்வ்வ்வ்.....

siva gnanamji(#18100882083107547329) said...

ஒருமுறை கண்ணதாசன் சொன்னது
நினைவுக்கு வருது:
தமிழில் வார இத்ழ்களில் முதலிடம்
வகிப்பது குமுதம்;தினத்தாள்களில்
தினத்தந்தி.......

தருமி said...

சிவஞானம்ஜி,
தினத்தந்தி அவ்வளவு மோசம்னா சொல்றீங்க :(

செல்வம் said...

நல்ல பதிவு தருமி அவர்களே...

குமுதம் இணையதளத்திற்குச் சென்று ஞாநியின் கட்டுரையை மட்டும் படித்து விட்டு விண்டோவை மூடிவிடலாமே!!!!

:-))

இராம்/Raam said...

அப்பிடியென்னாதான் அந்த கதையிலே இருந்துச்சு????? பெருசு'க எல்லாருமே இப்பிடிதான் இருக்கீங்க!!! எங்க காலத்திலே அப்பிடி இப்பிடி'ன்னு அதை என்னான்னு கடைசி வரைக்கும் சொல்லுறதே இல்லே..... :D


எனிவே 250'க்கு வாழ்த்துக்கள்....... :)

சுரேகா.. said...

நல்லா சொல்லியிருக்கீங்க சார்!

ஆமா.!

அது என்ன 'கோவாலு 'கதை?

துளசி கோபால் said...

//வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்னு தலைவர் முடிவெடுத்திருக்கிறாராம். நல்லது நடந்தா சரி.//

கண்ணை முழிச்சுப்பார்த்தா....... கனவாம்:-)))))

அது இருக்கட்டும்.அது என்ன கோவாலு கதை?

ஆ.வி யோ இல்லை குமு(த்)தமோ
அட்டையைக் கிழிச்சுட்டா எல்லாமே ஒண்ணுன்னு என் நினைப்பு.

இனிமேல் வாசிப்பு வலைகளில்தான்னு முடிவு செஞ்சுக்கிட்டேன்.

சின்னப் பையன் said...

எனக்கு மட்டும் அந்த கோவாலு கதையை சொல்லுங்க... நான் உடனே குமுதத்தை reject செய்து விடுகிறேன்.

Aravindhan said...

ஞாநி குமுதம் பக்கம் வந்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தது.அவர் எழுத்துக்கள இனுமே OCla வலையிலே படிக்கலாம்ல. ஆனா அவர் என்னடான குமுதம் பக்கம் வந்ததுலேந்து சொந்த கதை சோக கதையா எழுதி மொக்கைய போடுறார்.

சினிமாக்கு முக்கியத்துவம் தர்றதா சொல்றீங்க.எல்லா பத்திரிகையும் இப்ப கிட்டதட்ட அதே நிலைமை தான்.கொஞ்சம் யோசிச்சி உங்க காலத்துல பத்திரிக்கை அட்டை படங்கள்ல என்ன என்ன வரும்னு சொல்லுங்க.இப்ப பாருங்க நடிகைங்க படம் மட்டும் தான் வருது.நடிகர்கள் படம் கூட வர்றது இல்ல. பாவம்.
எங்க காலேஜ்ல குமுதம் ஒரு matterku ரொம்ப famous.தமிழ் தெரியாதவன் கூட குமுதம் புக் இருந்த அத எடுத்து ஒரு விஷயத்த பாப்பான்.அது என்னனு கண்டுபுடிங்க பாப்போம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அந்த கோவாலு கதையை ஒரு 'கோடி' காட்டுங்களேன்...
அறிய சிறிது ஆர்வமாக இருக்கிறது.சொல்வதைப் பார்த்தால் 90'களுக்கு முன் பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும் !

தருமி said...

அரவிந்தன்,
என்ன அது... 6 வித்தியாசமா?!

தருமி said...

செல்வம்,
நன்றி

தருமி said...

துளசி,
சுரேகா,
இராம்,
ச்ச்சின்ன பையன்,
அறிவன்,

எல்லோருக்கும் நன்றி.
அந்தக் கதை...விடுங்க அதை.

Aravindhan said...

ஆறு வித்யாசமா?? அதில்லேல்லாம் யாருக்கும் ஆர்வம் கெடையாது .எல்லாம் நடு பக்கத்துல வர்ற கில்பான்சி தான்

வோட்டாண்டி said...

ஞானி காதலர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறிய உடனே அவர் மேல எனக்கு செம கடுப்பு வந்துடுச்சு.. இப்ப எல்லாம் அவர் எழுத்துகள் சரியில்லை (என்னை பொறுத்தவரை).. கோவாலு கதை வந்தப்ப குமுதம் வாங்கி படிச்சவங்கள விட.. உங்க bloga பாத்துட்டு அந்த கதைய எப்படியாவது கேட்டு தெரிஞ்சிக்கணும்னு ஆசை படுறாங்க பாருங்க .. அவங்க இருக்குற வரைக்கும் குமுதம் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் வார இதழ்.

வோட்டாண்டி said...

ஞானி காதலர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறிய உடனே அவர் மேல எனக்கு செம கடுப்பு வந்துடுச்சு.. இப்ப எல்லாம் அவர் எழுத்துகள் சரியில்லை (என்னை பொறுத்தவரை).. கோவாலு கதை வந்தப்ப குமுதம் வாங்கி படிச்சவங்கள விட.. உங்க bloga பாத்துட்டு அந்த கதைய எப்படியாவது கேட்டு தெரிஞ்சிக்கணும்னு ஆசை படுறாங்க பாருங்க .. அவங்க இருக்குற வரைக்கும் குமுதம் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் வார இதழ்.

ஓகை said...

நான் குமுதம் வாசிப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டது.

அந்த கோவலு கதை எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான கதை. பேசப்பட்ட கதை. மோசமாக பேசப்பட்ட கதை. இதைத் தவிரவும் படிக்கக் கூடாத ஜோக்ஸ், ஒரு நடிகையின் கதை என்றெல்லாம் மஞ்சள் பத்திரிக்கையை தோற்கடிக்கும் பகுதிகளை குமுதம் வெளியிட்டிருக்கிறது.

தருமி said...

//dondu(#11168674346665545885) :

தருமி சார் அனுமதித்தால் கதையை சொல்கிறேன்.//

கழுதய விடுங்க சார். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.

Post a Comment