Monday, May 25, 2009

313. மதுரை - பதிவர் சந்திப்பு

*

நானும் இன்னும் ஓரிரு பதிவர்களும் மதுரையில் ஒரு நல்ல பதிவர் கூட்டம் நடத்திடலாம்னு நினச்சோம். என்ன பண்றது ... கார்த்திகைப் பாண்டியன் அப்டின்னு ஒரு இளைஞர் வந்தாதான் அப்படியெல்லாம் நடத்த முடியும்னு இன்னைக்கித்தான் நிஜமாச்சு .. 16+2 பதிவர்கள் வந்து கலந்துக்கிட்டோமே ..


1. டக்ளஸ்

2.தேனீ-சுந்தர்

3. அன்பு- சிவகாசி

4. பாலகுமார்

5. இளைய கவி கணேஷ் குமார்

6. ஜாலி ஜம்பர்

7. சூப்பர் சுப்ரா

8. வால்பையன்

9. கார்த்திகைப் பாண்டியன்

10. ஸ்ரீதர்

11. சில் பீர்

12. டாக். தேவமாயம்

13. அருண்

14. முருகன்

15. சீனா

16. தருமி

17. ராஜா

18. கார்த்திக்ஜாலி ஜம்பர், கார்த்திகைப் பாண்டியன்வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர்அருண், தேனீ-சுந்தர், சில்-பீர்
கணேஷ் குமார்


ஸ்ரீதர், வால்பையன்டக்ளஸ்ஸ்ரீதர்


சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்
அன்பு, கார்த்திக்சில்-பீர்ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா
ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்
அருண், கார்த்திகை
ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை

மயங்கும் நேரம் ...


* 5 மணிக்குச் சந்திக்கலாமென நினைத்திருந்தால் 3.30 மணிக்கு சரியான மழை.

* தெரிந்தது போலவே அரை மணி கழித்து மழை முடிந்து போயிற்று.

* புறப்பட்டு, சரியாக 4.58க்கு பந்தய மைதானத்து வாசலுக்கு வந்து நின்றேன்.

* வாசலில் பழச்சாறு விற்பவரோடு 10 நிமிட உரையாடல்; அடுத்த 'கதை'க்கு கரு கிடைத்தது. ஆனால் யார் கதை எழுதுவது?

* 5.15க்கு ஒரு ஆட்டோ; உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள். அத்தனை சனம். அந்த ஒரு வண்டிக்குள். 7 உருப்படி இறங்கியதுகள்! இறங்கின ஆட்களுக்கும் அந்த பந்தய மைதானத்துக்கும் ஏதும் தொடர்பில்லை. இருந்தும் எல்லாரும் தாராளமாய் பந்தய மைதானத்துக்குள் நுழைந்தார்கள். யாரும் வேறு யாரையும் தேடவுமில்லை. என்னமோ கல்யாண வீட்டுக்கு வந்த மக்கள் மாதிரி போனார்கள். திடீரென நடுவில் ஒரே ஒரு தெரிந்த முகம். நம்ம வால்ஸ் தான். கூப்பிட்டால் மொத்தமாக படையெடுத்து வந்தார்கள். அறிமுகம் வாசலிலேயே முடித்துவிட்டு, உள்ளே படிகள் இருக்குமே அங்கே செல்ல ஆரம்பித்தோம்.

* படிகள் எல்லாமே நல்ல ஈரம். நின்று கொண்டே பல சேதிகள் பற்றிப் பேசினோம். எல்லோருக்குமே இப்படி ஒரு பதிவர் உலகமா என்று தோன்றியதோ என்னவோ .. அப்படி ஒரு கலகலப்பு.

* இன்னும் சிறிது நேரத்தில் மற்ற பதிவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

* அரட்டை ... அரட்டை ... காலை வாருதல் ..

* இருட்டும் நேரத்தில் வந்து சேர்ந்தார் தேவன் மாயம்.

* அதைவிடவும் பின்னால், வெளியூர் சென்றிருந்த சீனா வந்தார். அவரை "வரவேற்கும்" நிலையில் பந்தயத் திடலின் முன் வாசலுக்கு வந்து நின்று அவரோடும், எல்லோரும் நின்று கொண்டே பேசி முடித்துக் கிளம்பினோம்.

* படம் போடும்போது பதிவர் அன்புடன் நின்று ஒரு படம் எடுத்திருக்கலாமோவென்று தோன்றியது. ஏனெனில் 20 வயது என்பது கூட தோன்றாமல் நின்ற அவருடன் பதிவுலகப் "பெரியவன்" என்ற முறையில் ஒரு படம் எடுத்திருக்கலாமேவென்று தோன்றியது!

* பதிவுலக சந்திப்பு ஆரம்பிக்கும்போதே மும்பையிலிருந்து நையாண்டி நைனாவும், முடியும் நேரத்தில் ரம்யா அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி.

* அன்பு அவர்கள் சந்திப்பு பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்

* இரவுக் காட்சிகளோடு, தேவமாயம் ஒரு பதிவிட்டுள்ளார்.

பாலகுமாரின் பதிவு.


*

20 comments:

ஆ.சுதா said...

மயங்கும் நேரம் ...

உண்மையிலே இது மயங்கும் நேரம்தாங்க...
புகைப் படத்தொகுப்பு கலக்கல்,
பதிவர்களின் முகம் பார்த்ததில் மகிழ்ச்சி

இளைய கவி said...

அண்ணே கலக்கிட்டீங்க் படம் எல்லாம் ரொம்ப அருமை அண்ணே. நான் ஏன் உங்கள அண்ணேன்னு சொல்ரேன்னா ..... உங்களுக்கே தெரியும்

தருமி said...

ஆ.முத்துராமலிங்கம்,

நன்றி

தருமி said...

இளைய கவி,

//நான் ஏன் உங்கள அண்ணேன்னு சொல்ரேன்னா ..... உங்களுக்கே தெரியும்//

தெரியாதா என்ன? அப்படி நமக்குள்ள என்ன வித்தியாசம் .. சும்மா தருமின்னே கூப்பிடுங்களேன் ..

☀நான் ஆதவன்☀ said...

அட என்ன சார்.....நேத்து நைட்டு தான் மதுரைக்கு வந்தேன். மிஸ் பண்ணிட்டேனே!!

Thamira said...

இரண்டு பெரிய ஐயாக்களின் படங்களைப் போட மறந்துவிட்டீர்கள் தருமி ஐயா.!

அப்புறம் கார்த்திகைப்பாண்டியன் இளைஞராமே.. பெரிய காமெடி போங்க.. அப்போ அன்பும், கார்த்திக்கும் யாரு.?

அமெரிக்க மாப்பி சில்-பீர், உள்ளூர் மாப்பி வால்.. கலக்கியிருக்கீங்க பதிவர் சந்திப்பில்.. ஜமாய்.. என்ஜாய்.!

அத்திரி said...

அழகான படங்கள்............

Thamira said...

படங்கள் கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளன.. எடுத்தவருக்கு பாராட்டுகள்.!

பாலகுமார் said...

நல்லா இருந்துச்சு, தருமி ஐயா !!!

சாலிசம்பர் said...

சில்லென்று ஒரு பதிவர் சந்திப்பு.மதுரையில் இவ்வளவு பேர் கூடிய முதல் சந்திப்பு இதுவாகத்தான் இருக்கும்.நிறைய பேர் இருந்ததால் சிலருடன் அறிமுகப்படுத்திக்கொள்ள இயலாமல் போய்விட்டது.கள்குடித்தகுரங்குச்சேட்டைகளை நேரடியாகப்பார்க்கமுடிந்தது.

நையாண்டி நைனா said...

மிக மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் எல்லாமே அருமையா இருக்கு ஐயா.. ரொம்ப நன்றி..

//ஆதிமூலகிருஷ்ணன் said... அப்புறம் கார்த்திகைப்பாண்டியன் இளைஞராமே.. பெரிய காமெடி போங்க.. //

ஏன்ப்பா.. மண்டைல நாலு முடி இல்லன்னா நான் என்னய்யா பண்ண முடியும்? நம்புங்க.. நானும் யூத்துதான்..யூத்துதான்..

Raju said...

என்னாது கார்த்திகை பாண்டியன் இளைஞரா..?
சொல்லவே இல்ல..!

அப்பறம் போனில் அழைத்து வாழ்த்து கூறிய நர்சிம் அண்னனுக்கும் நன்றிகள் பல...!

Anbu said...

\\\படம் போடும்போது பதிவர் அன்புடன் நின்று ஒரு படம் எடுத்திருக்கலாமோவென்று தோன்றியது. ஏனெனில் 20 வயது என்பது கூட தோன்றாமல் நின்ற அவருடன் பதிவுலகப் "பெரியவன்" என்ற முறையில் ஒரு படம் எடுத்திருக்கலாமேவென்று தோன்றியது!\\

எனக்கும் உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை தான் ஐயா.அடுத்த சந்திப்பின் போது எடுத்துவிடலாம் ஐயா..

ஆ.ஞானசேகரன் said...

இனிதாக முடிந்த சந்திப்புக்கு பாராட்டுகள்..

சுந்தர் said...

நன்றி அய்யா

வால்பையன் said...

நாளைக்கு என் பதிவு சார்!

cheena (சீனா) said...

அன்பின் தருமி

அருமையான சந்தர்ப்பம் நழுவி விட்டது - அலுவலுக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினால் - பரவாய் இல்லை - கடைசி சில நிமிடங்களில் கலந்து கொண்டது மன மகிழ்ச்சியினை அளித்தது. விரைவினிலேயே அடுத்த சந்திப்பினை ஏற்பாடு செய்வோமே !

எங்கே கார்த்திகப் பாண்டியன் - பாராட்டுகளும் - அடுத்த சந்திப்பினை ஏற்பாடு செய்ய வேண்டுகோளும்

cheena (சீனா) said...

சொல்ல மறந்துட்டேனெ - அண்ணே - போட்டோ கிராபர் சூப்பரா படம் எடுத்துருக்கார் - பிஸியா - ஒரு படத்துலே மட்டும் வாலோட கொஞ்சிக்கிட்டு இருக்கார் போல

வோட்டாண்டி said...

isschool pasanga picnic foto maadhiri summa ilamai pongi vazhiyudungo!!!

Post a Comment