Thursday, July 01, 2010

409. சிங்கப்பூர் - கவி மாலை



29.05.2010 மாலை

கடல் கடந்து போன நம் தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழி மேல் பெரும் ஆர்வமிருப்பது
29.05.2010 அன்று மாலையில் நடந்த ஒரு விழாவில் நன்கு புரிந்தது.  கவிமாலை என்ற பெயரில் ஒரு அமைப்பு உள்ளது. புதிய கவிஞர்கள் நித்தமும் புத்தம் புதிதாக அங்கே உதிக்கிறார்கள். கல்வி நிலை, சமூக நிலை என்ற பாகுபாடுமின்றி கவித்துவம் மட்டுமே ஒரு அளவு கோலாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குவதாகச் சொல்லப்பட்டது. இவ்வகை அமைப்புகளுக்கு அரசும் முழு ஊக்கமும், உதவிகளும் செய்து வருகின்றன. சிங்கையில் உள்ள (மலாய், சீனம், தமிழ் ) தாய்மொழிகளுக்கும், அவைகளின் வளர்ச்சிக்கும் அரசு  பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகின்றன.

அன்றைய தினம் நடந்தவைகள் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தை அளித்தன.
முந்திய கூட்டத்திலேயே கவிதைகளுக்கு ஒரு தலைப்பை அளித்து விட்டிருக்கின்றனர். கவிஞர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து வாயிலாக அமைப்புக்கு அனுப்பி விடுகின்றனர். அவர்களின் கவிதைகள் ஒரு நடுவரால் தீர்ப்பிடப்பட்டு பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் பரிசு அளிப்பதற்கு முன்னால், ஒவ்வொரு கவிஞரும் கவிமாலைக் கூட்டத்தில் வந்து தங்கள் கவிதைகளை வாசிக்கிறார்கள். அதன் முடிவில் பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.



எனது அடுத்த ஆச்சரியம் - கவிதை வாசிக்க வந்தவர்களில் பலர் பெண்கள். கவித்துவத்தில் 'பால்' வேற்றுமை எதற்கு என்று என்னதான் கூறிக்கொண்டிருந்தாலும் 'கவிஞைகள்' குறைவுதானே.
ஆனால் இங்கே கவிதை வாசித்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களுக்கு வயதும் ஒரு தடையில்லை. அன்று கவிதை வாசித்து அனைவரின் பாராட்டையும், இறுதியில் பரிசையும் பெற்றவர் வயதில் மூத்தவர். அன்றைய தலைப்பான "குற்றவாளிகள்' என்ற கட்டுரைக்கு அவரெழுதிய கவிதைக்குரிய பரிசை எங்களோடு அவ்விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்த ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் வழங்கினார்.

இன்னொரு அதிசயம். இந்த கவிமாலைக் கூட்டங்களில்தமிழ் மரபுக் கவிதை எழுதுவதற்கான "சுத்தமான" இலக்கணத்தைக் கூட்டத்தினருக்கு ஒரு சிங்கைத் தமிழர் தொடர்ந்து நடத்தி வருகிறார். நாங்கள் சென்ற போது எனக்குப் புரியாத சில தமிழ் இலக்கணப் பாடங்களை மாதிரிகளோடு பாடம் நடத்தினார்.--->


மருத்துவர் தேவன்மாயம் 28-ம் தேதியே இந்தியாவுக்குப் பயணப்பட்டதால் நானும், பிரபாகரும் இவ்விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தோம். பிரபாகர் ஏற்புரையாக, தன் வழக்கமான நகைச்சுவையுணர்வோடு பேசினார்.



நானும் பிரபாகரும் இன்னொரு நிகழ்வுக்கும் செல்ல வேண்டியிருந்தமையால் நானும் அவரும் கூட்டம் முடிவதற்கு
முன்பேயே நன்றி கூறி விடை பெற்றோம்.





<----  இப்படங்களைக் கொடுத்த சிங்கை நண்பர் VTR.ரமேஷ் 
அவர்களுக்கு மிக்க நன்றி

*







இன்னும் கொஞ்சம் படங்கள் இங்கே.

*
அடுத்த பதிவு -
இந்தோனேஷியா போனோமே ..
அதைப் பற்றி சொல்ல வேணாமா ..?







6 comments:

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

மதுரை சரவணன் said...

மதுரையில் நகைச்சுவை மன்றத்தை மனித தேனீ நடத்துகிறார். மீனாட்சி மிஷ்னில் பேராசிரியர் ஞான சம்பந்தம் நடத்துக்கிறார். ஆனால் , நீங்கள் சொல்லுவது போல் தமிழ் உணர்வுடன் , நடைப் பெற்றது இல்லை. ஏன் மதுரையில் நாம் மாதத்தில் ஒரு சனி அல்லது ஞாயிரை ஒதுக்கக் கூடாது. ..?முயன்று பார்ப்போம்... சிங்கப்பூர் அதற்குள் முடிந்து விட்டதா...அ.அ.அ...!


ரசிக்கும் படியாகவும் இருந்தது.
Thursday, July 01, 2010 9:56:00 AM
.

தருமி said...

//சிங்கப்பூர் அதற்குள் முடிந்து விட்டதா...அ.அ.அ...!//

இல்லை .. இனிதான் ஆரம்பம்! :)

ஊர்சுற்றி said...

நல்ல விசயம்!

ப.கந்தசாமி said...

சிங்கப்பூர் போய் வந்ததைப்பற்றி விரிவா ஒரு பதிவையும் காணோம்?

தருமி said...

//சிங்கப்பூர் போய் வந்ததைப்பற்றி //

இனிதான் ஆரம்பம்! :)

முதலில் அழைத்தோரைப் பற்றிய விவரங்கள். அதன்பின் நாட்டைப் பற்றி ..... சரிதானே?!

Post a Comment