Sunday, July 11, 2010

414. FIFA 2010 --சிங்கை மணியும், ஜெர்மானிய ஆக்டோபஸும்

*

பத்திரிகையாளரும், TAMIL SPORTS NEWS.COM  என்ற பதிவின் உரிமையாளருமான திரு. குமரேசன் தனது பதிவில் இட்ட இடுகையினை இங்கே மீண்டும் இடுகிறேன்.

10th Jul 2010

மணி சொல்வது நடக்காது - பால்உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி தோல்வியை சரியாக கணித்துக் கூறி,பால் ஆக்டோபசும் மணி கிளியும் ரொம்ப பாப்புலாரா ஆயிட்டாங்க. பால் ஸ்பெயின்தான் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறது.சிங்கப்பூரை சேர்ந்த மணி கிளி நெதர்லாந்துதான் சாம்பியன் என்று அடித்து கூறியுள்ளது.இந்த வேளையில் பாலிடம் ஒரு பேட்டி கண்டால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை!


தமிழ்ஸ்போர்ட்ஸ்:முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் கணித்து கூறுவது அப்படியே பலிக்கிறதே இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பால்:இது வார்த்தையால் விவரிக்க முடியாது.முதலில் என்னை பாப்புலராக்கிய மீடியா மக்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.உலகின் எட்டாவது அதிசயம் போல் எனக்குள் ஒரு பீலீங்.
தமிழ்ஸ்போர்ட்ஸ்: ஜெர்மனி மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்களே...?

பால்: இந்த உலக கோப்பை இறுதி ஆட்டம் முடிந்ததும் ஜெர்மனியை விட்டு 'எஸ்கேப்' ஆகிடலாம்னு பார்க்கேன்.பேசாம ஸ்பெயின் போய் செட்டில் ஆயிடலாம்னு யோசிக்கிறேன்.ஸ்பெயின் பிரதமரும் என் மேல ரொம்ப பிரியமா இருக்காரு. அங்க போயி ரியல் மாட்ரிட்டா பார்சிலோனாவானு மீதி காலத்தையும் ஓட்டிரலாம்னு ஐடியா.

தமிழ்ஸ்போர்ட்ஸ்:இந்தியாவுக்கு வரலாமே இங்க உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமே?

பால்:ஏம்பா இங்கயே வறுக்குறேன் அறுக்குறேனு கிடக்கானுவ. இதுல அங்க வேற வரனுமா?அங்க ஏற்கனவே 'மேட்ச்பிக்சிங்' அது இதுனு இருக்கு. லலித் மோடி பத்திலாம் கேள்வி பட்டிருக்கேன்.ஒனக்கு ஒரு கும்பிடு ஒங்க இந்தியாவுக்கு ஒரு கும்பிடு...!
தமிழ்ஸ்போர்ட்ஸ்:உங்க போட்டியாளர் மணி நெதர்லாந்து வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறாரே?

பால்: சிங்கப்பூர்ல ரோட்டோரம் அஞ்சுக்கும் பத்துக்கும் ஜோசியம் சொல்றவன்லாம் எனக்கு போட்டியா? (ஆவேசப்படுறாரு)நான் காசுக்கு ஆசைப்பட்டுலாம் குறி சொல்றதுல.அட்டலான்டிக்ல எங்க குடும்பத்துக்குனு ஒரு பேரு இருக்கு சாமி! ஏதோ இந்த பசங்க தோக்குற அணி மீது பந்தயத்தை கட்டி கோடி கணக்குல தோக்றானுவலேனு இவனுவளுக்காகத்தான் குறி சொல்றேன்.என்னை பார்த்து அவனுக்கு பொறாமை. எனக்கு கிடைச்ச விளம்பரம் அவனுக்கு கிடைக்கலனு ஆதங்கம். அதான் நான் ஸ்பெயின்னா அவன் நெதர்லாந்துங்கறான்.அவன் ஒரு பறவைங்றதை மறந்துட்டு கண்டபடி உளறிக் கொட்டுறான்.ஒரு பறவைக்கூரிய அறிவுதான் அவனுக்கு இருக்கு. எனக்கு 8 கால்கள் இருக்கு, அவனை விட அறிவும் எனக்கு அதிகம்.எனக்கு தெரியும்! ஸ்பெயின்தான் ஜெயிக்கும்.இன்னைக்கு இரவு அவனுக்கு முடிவு கட்டப்படும்.

தமிழ்ஸ்போர்ட்ஸ்: நீங்கள் இங்கிலாந்தில் பிறந்தீர்கள்,ஜெர்மனியில் வாழ்கிறீர்கள் இப்போது ஸ்பெயினுக்கு... இதெல்லாம் ஏன்?

பால்: இவனுவ சரியில்லப்பா...! ஒரே சாப்பாடத்தான் தினமும் தருவானுவ.இன்னமும் 6 மாசம்தான் நானே இருப்பேன். அதுக்குள்ள வெட்டுவேன் குத்துவேனு சொன்னா என்ன அர்த்தம்? இங்கிலாந்து பயலுவல பத்தி கேட்கவே வேண்டாம். அங்க இருந்துட்டு இங்கிலாந்து தோக்கும்னு சொல்லியிருந்தா அப்பவே கசாப்புதான்.இருக்குற கொஞ்ச நாளாவது இந்த பதர்களை விட்டுட்டு ஸ்பெயின் போய் நிம்மதியா கழிக்கலாம்னு ஒரு ஆசை.

தமிழ்ஸ்போர்ட்ஸ்: இந்திய கால்பந்து பற்றி ஏதாவது கணித்து கூற முடியுமா?

பால்: கவலைப்படாதப்பா! பிரமாதமான வளர்ச்சி எதிர்காலத்துல இருக்கு.முதல்ல நல்ல ஸ்டேடியங்களை கட்டுங்க.சிறுவர்களை பள்ளிப்பருவத்தில் இருந்தே,கால்பந்து விளையாட பழக்குங்க.உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குங்க.இந்த அரசியல்வாதிகளை கால்பந்து பக்கம் அண்ட விடாதீங்க.முதல்ல அந்த பிரபுல் படேல்ட்ட இருந்து தலைவர் பதவியை பிடுங்கி கால்பந்து மேல உண்மையான பற்று இருக்குறவங்ககிட்ட கொடுங்க.அது ஏன் உங்க நாட்டுல மட்டும் இந்த அரசியல்வாதிகள் கையில் விளையாட்டு இருக்குது?(பால் கேட்ட கேள்விக்கு நம்மட்ட பதில் இல்லை)

தமிழ்ஸ்போர்ட்ஸ்: ரொம்ப நன்றிங்க...!அப்போ நாங்க வரட்டுமாங்க...!

பால்: அடுத்து ஸ்கை ஸ்போர்ட்ஸ்காரங்களோட ஒரு அப்பாயினட்மென்ட் இருக்கு. அப்போ நானும் வாரேன்...! அடுத்து ஸ்பெயினில் சந்திப்போம்...!12 comments:

Thekkikattan|தெகா said...

:)) பால் - இந்தியா பற்றிய கேள்விக்கு சொன்ன பதிலு பெருமூச்சைத்தான் கொண்டு வருது. ரொம்பக் கஷ்டம் போங்க.

பள்ளி விட்டவுடன் பி. ட்டி வாத்தியாருகிட்ட திட்டு வாங்கியாவது உதை பந்தை வாங்கி மாலை வேளைகளில் மணிக்க கணக்காக உருட்டிக் கொண்டு திரிந்தது ஏனோ மனதில் வந்து போகிறது.

தருமி said...

அதெல்லாம் "அந்தக் காலம்" தெக்ஸ்!

Anonymous said...

அடக்கடவுளே. நீங்க ஏற்கனவே இதே பேர்ல இருக்கீங்களா? மன்னிச்சுக்குங்க அண்ணாச்சி. தப்பு நடந்துபோச்சி. பேர மாத்திடுறேன். நீங்களே இதே (சொந்த புத்தி இல்லாதவன் ....) அர்த்தம் வர்ற மாதிரி எதாவது கேரக்டர் பேரு இருந்தா கொஞ்சம் பரிந்துரைக்க முடியுமா? தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அடக்கடவுளே. நீங்க ஏற்கனவே இதே பேர்ல இருக்கீங்களா? மன்னிச்சுக்குங்க அண்ணாச்சி. தப்பு நடந்துபோச்சி. பேர மாத்திடுறேன். நீங்களே இதே (சொந்த புத்தி இல்லாதவன் ....) அர்த்தம் வர்ற மாதிரி எதாவது கேரக்டர் பேரு இருந்தா கொஞ்சம் பரிந்துரைக்க முடியுமா? தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

தருமி said...

அடக் கடவுளே .. இதுதான் பிரபல பதிவராக சீக்கிரமாக ஆகிடணும்; இல்லேன்னா நாம் இப்படி ஒரு பேர்ல இருக்கிறது யாருக்கும் தெரியாமலேயே போய்டும்; இல்ல?

நீங்க கேட்டதாலே ஒண்ணு சொல்லட்டுமா? நான் பொற்காசுப் புலவரா இருக்க, நீங்க ஏன் அந்த பெரிய புலவரா ஆயிரக்கூடாது? ஒரு ப்ரோமோஷன்! (சிவாஜி பண்ற புலவர் பெயர் எனக்குத் தெரியலையே!)

வேற பெயரு ..நீங்க யோசிச்சிர மாட்டீங்களா என்ன?

மன்னிக்கணும் ..தொல்லைக்கு.

தருமி said...

தருமிக்கு தருமி ...

அந்த ராசாவும் சொந்த புத்தியில்லாமதான அங்க இங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாரு ... அவரு பெயரு ...?

Anonymous said...

தலைவா, பேர மாத்திட்டேன்.

தருமி said...

இந்தப் பெயரை நினைச்சேன். ஆனால் நீங்க ஜூனியரான்னு தெரியாததாலே (!!) சொல்லலை.

எப்படியோ, உங்க பெயருக்குச் சேதாரம் வராதபடி நடந்துக்க முயல்கிறேன்.

Anonymous said...

ஒங்களுக்கு நான் ஜூனியரோ ஜூனியர். மனசுல இப்புடி ஒரு எண்ணம் இருக்கா.

வால்பையன் said...

// ஏன் உங்க நாட்டுல மட்டும் இந்த அரசியல்வாதிகள் கையில் விளையாட்டு இருக்குது?//

காசு எங்கே இருக்கோ, அங்கே அரசியல்வாதியும் இருப்பான்!

Thekkikattan|தெகா said...

சீனியருக்கு ஒரு ஜுனியரா அது சரி... ஆமா பெரிய தருமி நம்ம வீட்டுப் பக்கமெல்லாம் வாரீயளா ஒரு பதிவு போட்டுருந்தேனே உங்க வீட்டில இருந்து ‘பால்’ சொன்ன ஒரு சில விசயங்களை சுட்டுக்கிட்டு போயி என்னோட வீட்டில ஒரு பதிவு போட்டுருந்தேனே பார்க்க - உலக உதை பந்தாட்டமும் இந்தியாவும் : FIFA Final 2010

கையேடு said...

கால்பந்தாட்டம் பற்றி தொடர்ந்து எழுத முடியாத சூழல், ஆனால் எப்படியோ முக்கியமான ஆட்டங்களைப் பார்த்துவிட்டேன்.

இந்தியா பற்றிய குறிப்புகள் பழசை அசை போட வைத்தது. நேரம் கிடைக்கும் போது கால்பந்தாட்டம் பற்றிய சுவையான நினைவுகளை பதிந்துவைக்க வேண்டும்.

Post a Comment