Sunday, July 04, 2010

410. FIFA 2010 -- அந்த இரண்டு இரவுகள் ........

*

தமிழ் ஸ்போர்ட்ஸ் ந்யூஸ் என்ற தளத்தில் இன்று காலை நானிட்ட பதிவு:

ரெண்டு ராத்திரியில என்னென்னமோ நடந்து போச்சே.
ப்ரேசில் – நெதர்லாண்ட் போட்டி. முதல் பாதியில் ப்ரேசில் ஆட்டம் விறு விறுப்பாய்தான் இருந்தது. ஒரு கோலும் போட்டது. இரண்டாம் பகுதியில் நெதர்லாண்ட் முழு வேகத்தில் இறங்கி இரு கோல் போட்டு ப்ரேசிலுக்கு ‘பை’ காண்பிச்சாச்சு.நெதர்லேன்ட் வீரர்கள் தங்களுக்குள்ளேயே பந்தை போட்டு ஆடும் ஆட்டம் நடந்தது. ப்ரேசிலின் வழக்கமான ‘சித்து விளையாட்டுகள்’ ஏதும் அதிகமில்லை. சோகமாச்சு...!

 அடுத்து அன்று இரவே உருகுவே-கானா. என்னங்க ஆச்சு.? ஒண்ணுமே புரியலை. முதல் கோல் கானா. அடுத்து உருகுவே கோல் போட்டு சமன் செய்ய கடைசியில் எக்ஸ்ட்ரா டைமில் கானா அடித்த பந்தை கையால் தடுத்ததால் கானாவுக்கு ஒரு பெனல்டி சான்ஸ் வந்தது. அடித்தது கானாவின் நல்ல விளையாட்டுக்காரர் ஜியான்.  நிச்சயமாக கோல் அடிப்பார்; கானா வெற்றி பெறும் என்ற நிலையில் பந்து மேல் போஸ்ட்டில் பட்டு வெளியே போனது. அடப் போங்கடான்னு ஆகிப் போச்சு. அந்த கோல் விழுந்திருந்தால் கானா அரையிறுதிக்கு - ஒரு ஆப்ரிக்க நாடு அரையிறுதிக்கு - வந்த புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கும். போச்சு ... சரி பெரிய வீரர்களுக்கு இப்படி ஆவது உண்டேன்னு நினச்சுக்கிட்டு உட்கார்ந்து பார்த்தால் .. முடிவில் பெனால்ட்டி ஷூட் அவுட்.

 மென்சான்னு ஒரு கானா வீரர். அவர்தான் கானாவின் கேப்டன். பந்து அடிக்கும்போது அவர் முகத்தை க்ளோஸ் அப்பில் காண்பித்தார்கள். வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தார். எதுக்கு அப்படி சிரித்திருக்கணும்? அவ்வளவு சுய நம்பிக்கைன்னு நினைச்சேன். ஆனால் மனுஷன் பந்தை எல்லோரையும் போல் ஓடிவந்து அடிக்கவில்லை. நின்ற இடத்தில் நின்ற படியே பந்தை அடிப்பதற்குப் பதில் உருட்டினார்.பந்தை மென்ஷா வேகம் கொண்டு அடிக்கவில்லை.கம்பத்தை நோக்கி உருட்டி விட்டார். He did not kick the ball; just rolled it to the goal keeper!!! கோல் கீப்பர் எந்தக் கஷ்டமும் இல்லாமல் பந்தை எளிதாகப் பிடித்தார். கானா .. அவுட்!


மேற்காணும் படத்தில் 3 :13 வது வினாடியில் பெனல்ட்டி அடிக்கப் போகும் முகத்தில் என்ன சிரிப்பு??!!


 நேற்று மாலை. ஜெர்மனி – அர்ஜெண்டினா. கொடுத்து வாங்குறதில ஜெர்மனி ரொம்ப நல்லா ஆடியது. மூன்றாவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினா முதல் கோல் வாங்கியது. அதுக்குப் பிறகு அது அர்ஜெண்டினாவிற்குப் பழகியிருச்சி போலும். தொடர்ந்து. வாங்கிக்கொண்டிருக்க ஆரம்பித்தது. மொத்தம் 4 கோல். அத யார் எப்பப்ப எப்படி அடிச்சாங்கன்னு சொல்லி, அதெல்லாம் எதற்கு?  ஆக மொத்தத்தில் அர்ஜெண்டினா அவுட். மரடோனா கையில் என்னத்தையோ வச்சிக்கிட்டு காத்திருந்தார். ஏதும் அதிர்ஷ்ட ‘சரக்கு’ போலும். அதுவும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. ஆட்ட வீரர்களும் கையும் கொடுக்கவில்லை; காலும் கொடுக்கவில்லை.

 இரவு பராகுவே – ஸ்பெயின். ஸ்பெயின் பற்றி நிறைய பேர் ஆஹா .. ஓஹோன்னு சொல்லியாச்சி. ஆனா ஆட்டத்தில பராகுவே சும்மா சொல்லப்படாது. நல்லாவே ஈடு கொடுத்தாங்க.  ஸ்பெயின் ஆளை கையப் பிடிச்சி இழுத்து தள்ளுனார்னு ஸ்பெயினுக்கு சாதகமா ஒரு பெனல்ட்டி ஷாட். அடி பின்னப் போறாங்கன்னு நினச்சா, அது கோல் ஆகலை. சொதப்பலா அடிச்சிட்டாங்க. சரி.. என்னாகுதுன்னு பார்த்தா .. அடுத்த ஓரிரு நிமிடத்தில் ஸ்பெயின் கோல் கிட்ட தகராறு. அடுத்த பெனல்ட்டி. பந்தை அடிச்சி கோல் விழுந்திச்சு. ஆனால் நடுவர் பந்தை பெனல்ட்டி அடிக்கிறதுக்கு முன்னேயே ஸ்பெயின் வீரர்கள் களத்துக்குள் கோட்டைத் தாண்டி வந்து விட்டார்கள் என்று சொல்லி அதை மறுக்க, அடுத்த பெனல்ட்டி பழிக்குப் பழி அப்டின்றது மாதிரி இப்போ ஸ்பெயின் கோல் கீப்பர் பந்தைப் பிடித்து விட்டார்.

 அதன்பின்னும் இதே ஜவ்வு நிலை. இருவருமே பந்தை மாறி மாறி இரு கோல்களுக்கும் நடுவில் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். நேரம் இரவு 2 மணி. தங்ஸுக்கு இப்படி முழிச்சிக்கிடந்தா என்னாகும்னு கவலை. சவுண்டு கொடுத்தாங்க. சரி .. இன்னும் எக்ஸ்ட்ரா டைம் கொடுத்தா என்ன பண்றதுன்னு நினச்சப்போ கடைசி நேரத்தில் ஸ்பெயின் ஒரு கோல் போட்டு அரையிறுதி ஆட்டத்திற்குச் சென்றது.

நாலு ஆட்டத்தில இந்த ஆட்டம்தான் ரொம்ப நல்லா இருந்தது.


இன்னும் மூணு ராத்திரி முழிக்கணும்னு நினச்சிக்கிட்டு படுக்கப் போனேன்



3 comments:

பலூன்காரன் said...

அந்த பராகுவே வீரர் கையால் தடுக்கும் போதே பந்து கோல் போஸ்டிற்குள் சென்று விட்டது. அநியாமாக கானாவை வெளியே தள்ளிவிட்டார்கள்.

பலூன்காரன் said...

நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன். படித்து விட்டு கருத்துகள் கூறினால் நன்று

http://baloonkadai.blogspot.com/2010/07/blog-post.html

மதுரை சரவணன் said...

//மூன்றாவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினா முதல் கோல் வாங்கியது. அதுக்குப் பிறகு அது அர்ஜெண்டினாவிற்குப் பழகியிருச்சி போலும். தொடர்ந்து. வாங்கிக்கொண்டிருக்க ஆரம்பித்தது.//

இவ்வரிகள் விளையாட்டை பார்த்தவர்களுக்கு தான் புரியும். அருமை. வாழ்த்துக்கள்

Post a Comment