Wednesday, October 27, 2010

450. அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... 2

*
முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை

*


*

மொழியாக்கம் செய்யப்பட்ட அன்னையின் கடிதம் ஒன்று கீழேயுள்ளது.
நூலிலுள்ள இதன் ஆங்கில வாசகம் தமிழாக்கப்பட்ட பகுதிக்குக் கீழேயுள்ளது.

*

Father Picachy-க்கு அன்னை எழுதிய ஒரு கடிதத்தில் அவரது மன இருளின் முழுமையான நீண்ட விளக்கத்தைத் தருகிறார்:



என்னைச் சுற்றிலும் இருள் ...

எனதருமை ஆண்டவனே, என்னை ஏன் கைவிட்டு விட்டீர்? நான் உமது அன்பின் குழந்தை ... ஆனால் இப்போது மிகவும் வெறுக்கத்தக்கவளானேன் ... வேண்டாமென நீர் தூக்கி எறிந்தவள் ... விரும்பப்படாதவள் ... நான் அழைக்கிறேன் ... ஏங்குகிறேன் ... விரும்புகிறேன் … ஆனால் எனக்கோ யாரிடமிருந்தும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை ... யார் மீது நான் சாய்வது?.... யாருமில்லை ...… தன்னந்தனியே நிற்கிறேன். வெருட்டும் இருட்டு .... நான் மட்டும் தனியே ... தேவையற்றவளாக, கைவிடப்பட்டவளாக. தனிமைப் படுத்தப்பட்ட என் இதயத்தின் முழு தாகமும் அன்பிற்காக ஏங்கி நிற்கிறது. என் நம்பிக்கைகள் எல்லாம் என்னாயிற்று? இதயத்தின் ஆழத்திலும் கூட எல்லாமே இருள் சூழ்ந்த வெற்றிடமாக ... என் கடவுளே ... பொறுக்க முடியாத வேதனை. இந்த வலி எங்கும் எப்போதும் ... எனது தெய்வ நம்பிக்கைகளை நான் இழந்து விட்டேன் ... மனத்தில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளாக்கி வெளியில் கொட்ட முடியாதவளாக இருக்கிறேன் ... மனத்தில் சூழும் எண்ணங்கள் எனக்கு சொல்ல முடியாத வேதனையைத் தருகின்றன. எத்தனை எத்தனை பதிலில்லா கேள்விகள் என் மனத்துக்குள் ... அவைகளை வெளியில் சொல்லவும் வழியில்லை ... கேட்டால் அவைகள் எல்லாமே தேவதூஷணமாகவே இருக்கும் ... கடவுள் என்று ஒன்றிருந்தால் ... தயவு செய்து என்னை மன்னித்து விடு, … இறுதியில் ஏசுவோடு எல்லாமே நல்லவிதமாக, மோட்சத்தில் முடியும் என்று நம்புகிறேன் … என் நினைவுகளை மோட்சத்தை நோக்கி நான் எழுப்பினால் முழுமையான எதிர்நிலைக்கருத்துக்கள் என்னை நோக்கி பாய்கின்றன; என் ஆத்மாவைக் காயப்படுத்துகின்றன ... அன்பு ... இந்த வார்த்தை ... எனக்குள் எதையும் கொண்டு வரவில்லை ... கடவுள் என் மேல் அன்பு கொண்டுள்ளார் என்று சொல்கிறார்கள் ... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் இருட்டும், வெற்றிடமும் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி என மனதிற்குள் வேறு எதுவும் என்னைத் தொட அனுமதிப்பதைல்லை.(187)

(இப்பகுதி The Good Man Jesus And The Scoundrel Christ-ன் முதல் இடுகையில்  ஜீசஸ் கடவுளிடம் பேசுவதாக வரும் பகுதியை மிகவும் ஒத்து வருகிறது. அவ்வரிகளை இங்கே அடைப்பானுக்குள் தருகிறேன்: 
(ஜெத்சமேனி தோட்டத்தில் ஜீசஸ் தன் சீடர்களோடு சென்று அங்கே தனியாக "கடவுளிடம்" பேசுகிறார் - அவருக்கு கடவுளிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கவேயில்லை. அவர், "நான் பேசுவது எதையும் நீர் கேட்கவில்லை.  என் வாழ்நாள் முழுவதும் நான் உம்மோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனக்கு மெளனமே பதிலாகக் கிடைத்துள்ளது. கடவுளே, நீ எங்கே இருக்கிறாய்? அதோ வானத்தில் தெரியும் அந்த நட்சத்திரங்களுக்கு நடுவே நீ இருக்கிறாயா? அங்கே உட்கார்ந்து கொண்டு மற்றொரு புதிய உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறாயா?  நீ படைத்த இந்த உலகம் உனக்கு சலித்து விட்டதா?  என்னைத் தத்தளிக்க விட்டுவிட்டு நீ எங்கோ போய் விட்டாய்."

தொடர்ந்து ஜீசஸ் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை. "திருச்சங்கீதத்தில் (Psalms) "முட்டாள் தன் இதயத்துக்குள் சொல்லிக்கொள்கிறான் - கடவுள் இல்லையென்று." இந்த முட்டாளை எனக்குப் பிடிக்கிறது. ... எங்களையெல்லாம் ஏனிப்படி நடத்துகிறாய்? நல்ல தண்ணீரைப் படைத்து விட்டு அதனோடு களிமண்ணையும் சேர்த்து அதனை தன் குழந்தைகளுக்கு கடவுள் கொடுப்பானா?)

The paper she refers to her, written as a prayer and sent to Father Picachy, is one of the most detailed and longest descriptions of her experience of darkness:


In the darkness ...

Lord, my God, who am I that You should forsake me> The child of your love -- and now become as the most hated one -- the one You have thrown away as unwanted -- unloved, I call, I cling, I want -- and there is no One to answer -- on One on Whom I can cling -- no, No One, -- Alone.the darkness is to dark -- and I am alone. -- Unwanted, forsaken. -- The lonliness of the heart that wants love is unbearable. -- Where is my faith? -- even deep down, right in, there is nothing but emptiness & darkness. -- My God -- how painful is this unknown pain. It pains without ceasing. -- I have no faith. -- I dare not utter the words & thoughts that crowd in my heart -- & make me suffer untold agony. So many unanswered questions live within me. -- I am afraid to uncover them -- because of the blasphemy -- If there be God, -- please forgive me, -- Trust that all will end in Heaven -- with Jesus.-- When I try to raise my thoughts to Heaven – there is such convicting emptiness that those very thoughts return like sharp knives & hurt my very soul. – Love – the word – it brings nothing. – I am told God loves me – and yet the reality of darkness & coldness & emptiness is so great that nothing touches my soul.(187)

*
நான் கடவுளை மறுக்கக்கூடாதென்பதற்காக, எனக்காக ஜெபியுங்கள். என் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத்தில் வடிக்க ஆவலோடிருந்தும் அதற்கான பொருத்தமான வார்த்தைகள் கிடைக்கவில்லை. (190)

1959-ம் ஆண்டு  பாவமன்னிப்பிற்காக ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ...

என் ஆன்மாவிற்குள்   நடந்த ஓர் இழப்பிற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் ... கடவுள் கடவுளாக இல்லாமல் இருப்பதற்காக ...கடவுள் என்ற ஒன்று இல்லாமல் போனதற்காக (ஏசுவே, என் தேவதூஷணத்திற்காக என்னை மன்னித்துவிடுங்கள் ... பாவமன்னிப்பிற்காக எல்லாவற்றையும் எழுத ஆசை. )

கடவுள் என்ற ஒன்றில்லாவிட்டால் அங்கே ஆன்மாவும் கிடையாது. ஆன்மா என்ற ஒன்றில்லாவிட்டால், ஏசுவே, நீரும் அங்கில்லை ... மோட்சம் ... மோட்சத்தைப் பற்றிய எந்த நினைவும் மனதில் தோன்றவேயில்லை ... ஏனெனில், எங்கும் எதிலும் விருப்பமில்லை.

நான் இப்போதெல்லாம் ஜெபம் செய்வதேயில்லை. சபையின் குழு ஜெபத்தை என் உதடுகள் தானாகவே உச்சரிக்கின்றன. ஆனால் ஒற்றுமைக்கான அந்த ஜெபம் இப்போதில்லை. நான் ஜெபமே செய்வதில்லை. என் ஆன்மா உன்னோடு இல்லை. ஆனாலும் நான் தெருக்களில் சுற்றி வ்ரும்போது உம்மோடு மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவு அருகாமையில் அப்போது அந்தப் பேச்சு அமைகிறது. ஆனாலும் அதுவும் ஒன்றுமில்லாததாக, உம்மிடமிருந்து என்னை மிகவும் விலக்கி வைப்பதாக உள்ளது. (193)

என் ஆன்மாவில் கடவுளுக்கான   இடம் காலியாக உள்ளது. என்னில் கடவுள் இல்லை. மோட்சம், ஆன்மா ... இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகளே. என் வாழ்க்கையே ஒரு மறுப்பானதாக மாறிவிட்டது. நான் ஆன்மாக்களை காப்பாற்றுகிறேன் ... எதற்கு ... அவை எங்கே போகும்? என் ஆன்மாவே, நீ  எங்கே? 

கடவுளுக்காக ஏங்குகின்றேன். அவரிடம் என் அன்பைச் செலுத்துகிறேன். அவர் மீது  நான் கொண்டுள்ள அன்பிற்காக வாழ விரும்புகிறேன். ஆனால் வலிதான் மிச்சமாக நிற்கிறது. ஏக்கமும் அன்பில்லா வரட்டுத்தனமும்தான் மிஞ்சி நிற்கின்றன. (210)

நான் எப்போதாவது கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதையானால் ... அதிலும் நான் ஒரு இருள் நிறைந்தவளாகவே இருப்பேன். மோட்சத்திலும் இல்லாதிருப்பேன்; உலகத்தின் இருட்டில் உள்ளவர்களுக்குத் தீபம் ஏற்றுபவளாக இருப்பேன். (230)


மனது எவ்வளவு காலியாக, வேதனை நிறைந்ததாக இருக்கிறது.  நன்மை, திருப்பலி ... ஆன்ம வாழ்க்கையின் எல்லா தேவ திரவிய அனுமானங்களும் இல்லாமல் மனது ஏன் இப்படி வெறுமையாக உள்ளது?(232)

எனக்கு அடிக்கடி ஓர் ஐயம் - கடவுளுக்கு என்னிடத்திலிருந்து என்னதான் கிடைக்கிறது ... என்னிடமோ நம்பிக்கையில்லை; அன்பில்லை; எந்த ஒரு உணர்வும் இல்லையே.

என்னைப் பார்த்து விட்டு, என் நம்பிக்கையைப் பார்த்து விட்டு மக்கள் பலர் கடவுளிடம் நெருக்கமானதாகச் சொல்கிறார்கள். இது மக்களை  ஏமாற்றுவது போல் இல்லையா? ஒவ்வொரு முறையும் நான் உரக்க 'என்னிடம் (கடவுள்) நம்பிக்கை இல்லை' என்ற உண்மையைச் சொல்ல நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. என் உதடுகளோ மூடிக்குவிந்து விடுகின்றன. நானோ இன்னும் கடவுளையும் மற்றவர்களையும் பார்த்து புன்னகைக்கிறேன். (238)

..... இன்னும் வரும்












6 comments:

Thekkikattan|தெகா said...

தருமி, இதென்ன இன்னொரு டாவின்சி கோட் - ஆ; இன்னும் எழுதுங்க! படிச்சு தெரிஞ்சிக்கிறோம்...

சீனு said...

//நான் கடவுளை மறுக்கக்கூடாதென்பதற்காக, எனக்காக ஜெபியுங்கள்.//

Mutually Exclusive?

சீனு said...

//ஒவ்வொரு முறையும் நான் உரக்க 'என்னிடம் (கடவுள்) நம்பிக்கை இல்லை' என்ற உண்மையைச் சொல்ல நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. என் உதடுகளோ மூடிக்குவிந்து விடுகின்றன. நானோ இன்னும் கடவுளையும் மற்றவர்களையும் பார்த்து புன்னகைக்கிறேன்.//

கடவுள் மேல் நம்பிக்கை போவது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். தவிர்க்க முடியாதது என்றும் நினைக்கிறேன். மேலும், கடைசி வரை அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதிருந்தபட்சதில், தெரசா கட்டாயம் ஒரு சுழ்நிலை கைதியாகிவிட்டிருப்பார். அவர் கட்டமைத்த 'அரசாங்கம்' அவரை வெளியே விட மறுக்கும்.

கபீஷ் said...

// கடவுள் என்று ஒன்றிருந்தால் ... தயவு செய்து என்னை மன்னித்து விடு, // :-)

அடுத்த பகுதிக்காக வெயிட்டீஸ். மதர் தெரஸா மேல் அன்பு வைத்திருக்கும் அனைவரும் அவர் நல்ல/பெரிய கிறிஸ்தவர்ங்கறதுக்காக இல்ல நீங்க சொன்னது மாதிரி. அவரோட ஆதரவற்றோர் மீதான மனிதனேயத்துக்காக. நல்ல கிறிஸ்தவராக இருந்ததினால் அவருக்கு சேவை மனப்பான்மை வந்திருக்கலாம் மதத்துக்காக சேவை செய்ய வந்து அப்புறம் கொஞ்சம் குழம்பி இருக்கலாம்.

TBR. JOSPEH said...

இத்தகைய மனத்தடுமாற்றங்கள் அன்னை திரேசாவுக்கு மட்டுமல்ல பல புனிதர்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் (போப்பாண்டவர் உட்பட) ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நிச்சயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு, மறுப்பதற்கில்லை. அதற்காக அவர்கள் இறைவனை மறுதலித்தவர்களாகிவிடுவதில்லை. அவர் மீதுள்ள நம்பிக்ககயை இழந்துவிடவில்லல. தங்களுடைய பலஹீனமான விசுவாசத்தை உறுதிபடுத்த மேலும் முயன்று அதில் வெற்றிகொண்டவர்கள். தய்வுசெய்து அதை உங்களுடைய விசுவாசமின்மைக்கு ஒரு சான்றாக எடுத்துரைக்க முயலாதீர்கள்.

Praveenkumar said...

மிகவும் பயனுள்ள பதிவுகள் ஐயா. தொடரட்டும் தங்கள் சேவை..!!

Post a Comment