Monday, October 25, 2010

449. THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ... 3

*


முதல் பதிவு: 1


இரண்டாம் பதிவு: 2


மூன்றாம் பதிவு: 3*

முதலில் இப்படியும் சில எண்ணங்கள் .....


***  SATANIC VERSES நாவலை உலகத்தில் முதன் முதலாக தடை செய்தது நமது அரசு என்று வாசித்தேன். அதுவும் இஸ்லாமியரின் எதிர்ப்புக்கு முன்பே அவ்வாறு நம் அரசு செய்ததாக அறிந்து உள்ளமெல்லாம் புளகாங்கிதமடைந்தேன். மைனாரிட்டி மக்கள் மீதுதான் நம் அரசுக்கு என்னே ஒரு 'இது' !

ஆனால் இப்படிப்பட்ட அரசு ஏன் இந்த நூலை இன்னும் விட்டு வச்சிருக்குன்னு தெரியவில்லை. இந்த நூலை இங்கு, இந்தியாவில்தான் வாங்கினேன். எப்படி இந்த நூல் எளிதாக எல்லோருக்கும் கிடைக்கும்படி விற்பனையில் உள்ளது.மைனாரிட்டி மேல் ஒரு அனுசரணையும் கிடையாதா?!

***  டாவின்ஸி கோட் படம் வந்ததும் சில கிறித்துவர்கள் உடனே கூக்குரல் எழுப்பினார்கள். நம் நாட்டில் சில இடங்களில் இந்த படம் தடை செய்யப்பட்டது. மீண்டும் மைனாரிட்டி மேல் கரிசனைதான்.

***  இந்த நூலை எதிர்த்து நம் ஊர் கிறித்துவ மக்கள் ஏன் இன்னும் 'சத்தம்' போடவில்லை?

***  அட, கிறித்துவர்கள்தான் சத்தம் போடவில்லை. இஸ்லாமியர் நம்பிக்கையின்படி ஈசா ஒரு நபிதானே. அவர்களும் இன்னும் சத்தம் போடவேயில்லைன்னும் ஒரு ஆச்சரியம்.
--------------------------

***  ஏற்கெனவே இறை  நம்பிக்கைகளோடு இருந்த அந்த காலத்திலேயே Irving Wallace என்பவர் எழுதிய Seven Minutes என்றொரு புதினத்தை வாசித்தேன். அந்த புதினத்தில் பழைய ஏற்பாட்டை மிகவும் தாக்கி எழுதிய பகுதிகள் நிறைய உண்டு. Old testament is a sort of porno என்ற விவாதம் இருக்கும். கதையாக அதை வாசித்தேன்; வாசித்து முடித்ததும் எந்த வித மனப்பாதிப்பும் இன்றி அடுத்த நூலைக் கையில் எடுத்தேன்.  என் இறை நம்பிக்கைக்கு அந்த நூல் எந்தவித மாற்றத்தையோ, இழுக்கையோ தரவில்லை. என் கடவுள் இதையெல்லாம் விட பெரியவர் என்ற எண்ணமே என் மனத்தில் இருந்திருக்குமென நினைக்கிறேன். என் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு; உனக்கில்லையென்றால் அது உன் "தலைவிதி". எனக்கு அதில் எந்த வித அவமானமோ, அங்கலாய்ப்போ இல்லை என்ற எண்ணம்தான் இருந்திருக்கும். எண்ணத்தில் இருக்கும் தீவிரவாதங்கள் பல சமயங்களில் தங்கள் மதங்களுக்கு இழுக்கைத்தான் தேடித் தருகின்றன என்றுதான்  எண்ணியிருப்பேன் ....

------------------------------


இந்த நூல் வெளியிட்டதும்  சில எதிர்ப்புகளும் ஆசிரியருக்கு எதிராக வந்ததாம். ஆனால் ஒன்றும் பெரிய அளவில் இல்லை. உலகெங்கும் எந்த போராட்டமும் வரவில்லை. பத்வா எதுவும் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை கிறித்துவர்களுக்கு தங்கள் நம்பிக்கைகளுக்கு இந்த நூலின் தலைப்பும் அடக்கமும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையோ என்னவோ. அதோடு தங்கள் கடவுள் இதுபோன்ற நூல்களால் தரம் இறங்கிப் போக மாட்டார்கள் என்ற நினைப்பால் இதை பெரிது படுத்தாமல் புறந்தள்ளியிருக்கலாம்.  வேறு மத நூல்களுக்கு எதிராகப் போர்க்கொடிகள் தூக்குதல் போலல்லாது, இந்த நூலுக்கு எதிர்வினைகள் இல்லாதது  பழைய ஒரு கிறித்துவனாக எனக்குப் பெருமையே. என் நம்பிக்கை என்னைச் சார்ந்தது; நீ சொல்வதெல்லாம் என்னைப் புண்படுத்தாது; என் கடவுளின் பெருமையை உன்னால் சிதைக்க முடியாது என்ற அந்த கொள்கை எனக்குச் சிறப்பாகத் தோன்றுகிறது.


*
முதல் பதிவு: 1
இரண்டாம் பதிவு: 2
மூன்றாம் பதிவு: 3


4 comments:

Atheist said...

சார், பதிவுலகமே ராஜனின் ஆத்திக திருமணத்தால அல்லோல பட்டுகிட்டு இருக்கு. இந்த சமயத்துல இதையெல்லாம் படிப்பாங்களான்னு தெரில...ராஜன் கல்யாணத்த பத்தி ஒரு பதிவு போடுங்க...பட்டைய கிளப்பும்..

வால்பையன் said...

//ராஜன் கல்யாணத்த பத்தி ஒரு பதிவு போடுங்க...பட்டைய கிளப்பும்//

இங்க என்ன வியாபாரமா பண்ணிகிட்டு இருக்காங்க!?

கபீஷ் said...

// மைனாரிட்டி மக்கள் மீதுதான் நம் அரசுக்கு என்னே ஒரு 'இது' !//

ஹிஹி :)

மதுரை சரவணன் said...

//பழைய ஒரு கிறித்துவனாக எனக்குப் பெருமையே. என் நம்பிக்கை என்னைச் சார்ந்தது; நீ சொல்வதெல்லாம் என்னைப் புண்படுத்தாது; என் கடவுளின் பெருமையை உன்னால் சிதைக்க முடியாது என்ற அந்த கொள்கை எனக்குச் சிறப்பாகத் தோன்றுகிறது.//


நல்ல முடிவு... வாழ்த்துக்கள்.

Post a Comment