Tuesday, June 14, 2011

WHY I AM NOT A MUSLIM ... 10

*

இப்போதைய பதிவு  -  10

ஏனைய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9


*

Image and video hosting by TinyPic

*

CHAPTER 5
THE KORAN

தொடர்ச்சி ....THE DOCTRINES OF THE KORAN

பேய்கள் -ஷைத்தான்கள் - பலவகை. மொத்தம் ஐந்துவகையாம் அவை. (117)


ஓரிறைத் தத்துவம் சொல்லும் இஸ்லாமில் ... தன்னோடு இணை வைக்கக்கூடாது - என்று சொல்லும் அல்லா, களி மண்ணிலிருந்து தான் படைத்த மானிடனின் காலில் விழுந்து வணங்க நெருப்பிலிருந்து தான் படைத்த ஷைத்தானிடம் கட்டளையிடுகிறார். (கடவுள் தன் கட்டளையையே புறந்தள்ளி  ஏனிப்படி ஷைத்தானுக்குக் கட்டளையிடுகிறார்? )  ஷைத்தான் இதை மறுக்கிறது.(சுய மரியாதையுள்ள படைப்புதான் ஷைத்தான்!) இதனால்  கடவுள் அதை அழிப்பதாக முடிவெடுக்கிறார். (எப்போது?) உலகின் பல அழிவுகளுக்கு ஷைத்தானே காரணமாயுள்ளது. இருப்பினும் இன்னும் ஏன் அவை அழிக்கப்படவில்லை என்பது  புரியாத ஒன்று. (118)

கடவுள் என்னும் தத்துவத்தை குரான் எம்முறையிலும் நிறுவவில்லை.

குரானில் இருந்து நமக்குக் கிடைக்கும் முக்கிய கருத்து - சிலை வடிவங்களுக்கு வணக்கம் செலுத்துவது மிகவும் வெறுக்கப்படுகிறது. இஸ்லாமின் அகராதி - Dictionary of Islam - சொல்வது போல், எல்லா இஸ்லாமிய ஆசிரியர்களும் ஒட்டு மொத்தமாகச் சொல்வது --  எப்போதுமே சிலைகளை வணங்குபவர்களுக்கு  எவ்வித  மன்னிப்பும் கிடையாது. அவர்கள் முன்னே உள்ள இரு வாய்ப்புகள் - ஒன்று, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இரண்டாவதான மரணத்தைத் தழுவ வேண்டும். (119)

Schopenhauer என்பவர் கிறித்துவ,  இஸ்லாமியர் நடாத்திய கொடூரங்களைக் குறிப்பிடுகிறார்.  இருநூறு வருடங்கள் தொடர்ந்த சிலுவை யுத்தங்களின் ஒலித்த ஒரே ஓலம்: 'இதுவே கடவுளின் சட்டம்' .  சிலுவை யுத்தங்களைப் பற்றி அவர் மேலும் கூறுகிறார் : இந்தியாவில் ... முதலில் முகமதுவினரும், பின் கிறித்துவரும் மிகவும் கொடூரமாகவும், முரட்டுத்தனத்தோடும், மனித குலத்தின் புனிதமான முன்தோன்றிய மதத்தினரைக் கொடுமைப் படுத்தினர். (120)

THE MUSLIM CONCEPT OF GOD

அல்லாவின் முழு வல்லமை குரானில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. கடவுள் எண்ணியதே நடக்கும் என்பதுவும், மனிதனுக்குத் தனியாக மனது என்ற ஒன்று இருப்பதாகக் கூட எண்ண முடியாத அளவிற்கும் குரானின் கருத்துக்கள் உள்ளன. நல்லதோ கெட்டதோ எல்லாமே அல்லாவின் புத்தகத்தில் ஏற்கெனவே  விதி என்ற பேனாவில் என்றோ எழுதப்பட்டவைதான். (121) இதை உறுதிப்படுத்தும்  குரானின் சில வாசகங்கள்: 54.49;  3.139;  87.2;  8.17;  9.51;  13.30;  14.4;  18.101;  32.32;  45.26;  57.22.

Antony Flew - மனிதன் செய்யும் தவறுகளுக்கெல்லாம் கடவுள் தரும்  அழிவில்லாத தண்டனைகள் பற்றிப் பேசுகிறார்.  குரானில் சொல்லப்படும் த்ண்டனைகள் எல்லாமே காட்டுமிராண்டித்தனமான கொடூரம் நிறைந்ததாகவும், மிகவும் sadism நிறைந்ததாகவும் உள்ளன. குரானின் ஒவ்வொரு பக்கமுமே கடவுளிடம் மனிதன் கொள்ள வேண்டிய "அச்சத்தை"ப் ப்ற்றிப் பேசியுள்ளது. (குரான் மட்டுமல்ல, இஸ்லாம் மட்டுமல்ல, கிறித்துவத்திற்கும் Antony Flew சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும்பொருத்தமானவையே. பங்காளி மதங்கள் தானே .. அதனால் தான் அப்படி. 'இறையச்சமே ஞானத்தின் ஆரம்பம்'  என்கிறது விவிலியம்! நித்திய தவறுகளுக்கு அநித்திய தண்டனை என்பதுவும் கிறித்துவம் சொல்லும் கடவுளின் முறையற்ற தண்டனைகள். )

GOD'S WEAKNESSES

ஆசிரியரின் சில கேள்விகள்: ( நானும் இதே கேள்விகளை பலமுறை  கேட்டிருக்கிறேன் .. )

* கடவுள் எங்கும் இருக்கும், எல்லா வல்லமை படைத்தவராக இருந்தாலும், ஏன் அவர் இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறார்?
* ஏன் அவர் ஒரு கோபக்காரராக, பெருமை பிடித்தவராக, பொறாமை கொண்டவராக இருக்கிறார்?
* ஒரு நல்ல மனிதருக்கும் இருக்கக்கூடாத இந்த கோபம், பொறாமை, வீண் பெருமை கடவுளுக்கு எதற்கு?
* அவரோ எல்லா வல்லமையும் பொருந்தியவர்; ஆனாலும் இவர் ஏன் மனிதர்களின் உதவிகளை எதிர்நோக்குகிறார்?
* எல்லாம் இருக்கு அவரிடம்; பின் ஏன் பின்பற்ற அவருக்கு ஒரு மனித குலம்?
* இப்படியெல்லாம் வல்லமையான அல்லா ஏன் கலாச்சாரத்தில் மிகவும் தாழ்ந்திருந்த ஒரு குலத்தில் இருந்து யாரென்று தெரியாத ஒரு வியாபாரியைத் தனது கடைசி தூதுவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
* மிகவும் உயர்ந்த ஒரு கடவுளுக்கு தன்னால் படைக்கப்பட்ட மனிதனின் புகழ்ச்சிகளும், ஆராதனைகளும் எதற்குத் தேவை?
* ஐந்து முறை அவரைத் தொழ வேண்டும் என்பது என்ன தேவை?
* தன்னைத் தொழவேண்டும் என்பது ஒரு நல்ல மனிதனுக்கே முறையற்றது.  ஆனால் இங்கே ஒரு கடவுளுக்கு ஏன் இதெல்லாம் தேவையாக இருக்கிறது?
* கடவுளின் ஆணையாக, ஒரு 'பாவியை' தகிக்கும் நெருப்பில்  எரிய விட்டு விட்டு, இன்னொருவனை நாற்பது தெய்வீகக் கன்னிகளின் கூட்டத்தில் இன்பமாக இருக்க விடுவது என்ன ஆணையோ? (129)

AND MOHAMMAD IS HIS APOSTLE

The Age of Reason-ல் Thomas Paine-- யூதர்களுக்கு மோசஸ், கிறித்துவர்களுக்கு ஜீசஸ், துருக்கியருக்கு முகமது. இவர்கள் எல்லோருமே ஆளுக்கொரு நூலை வைத்துக் கொண்டு அவைகள் தங்களுக்குக் கடவுளிடமிருந்து கிடைத்த அறிவிப்புகள் என்கிறார்கள். தோரா மோசஸுக்கு; பைபிள் கிறித்துவிற்கு; குரான் வானதூதன் மூலம் முகமதுவிற்கு. ஆனால் ஒவ்வொரு குழுமமும் அடுத்தவர் நம்பிக்கைகளை முழுவதுமாக நம்புவதுமில்லை.

சுரா 53.2 - 18-ல் முகமது அல்லாவைப் பார்த்ததாகச் சொல்கிறார். மற்றைய இடங்களில் ஜிப்ரேலை மட்டும் பார்த்து வஹி பெறுகிறார். ஆனால் முகமதுவிற்கு எது கடவுள், எது ஜிப்ரேல் என்பது எப்படி தெரியும்? முகமதுவின் தவறான அனுமானமாக அது இருக்கலாமல்லவா?  கடவுளை நான்  பார்த்தேன் என்பவர்களை  மனநிலை சரியில்லாதவர்கள் என்றுதானே ன்று நாம் சொல்கிறோம்? முகமது என்பவர் சொன்னதும் இது போல் இருக்கலாமல்லவா?  மோசஸ் தன்னிடம் கடவுள் பத்துக் கட்டளைகள் கொடுத்துள்ளார் என்ற போது மற்ற யூதர்கள் அதை நம்பவில்லை. இப்போது முகமதுவிடம் வஹி கொடுத்த தேவதூதனைப் பார்க்காமல் எப்படி முகமது சொல்வதை நாம் நம்புவது? (130)

ABRAHAM, ISHMAEL, MOSES, NOAH, AND OTHER PROPHETS
ஆபிரஹாமும் இஸ்மயிலும் மெக்காவில் காபாவைக் கட்டியதாகச் சொல்வது இஸ்லாமியரின் கூற்று. ஆனால் இதற்கு எவ்வித சான்றும் கிடையாது. Snouk Hurgronje இந்தக் கூற்று முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டது; தான் எழுப்பும் புதிய மதத்திற்கு ஒரு அரேபியச் சாய்லைத் தரவே முகமது இப்புனைவைச் செய்துள்ளார்.(131)

NOAH AND THE FLOOD

நோவா கட்டிய கப்பலும் நடந்த ஊழிப் பெரு வெள்ளமும் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை. இதை இன்று - சில அடிப்படைவாதிகளைத் தவிர மற்ற - கிறித்துவர்கள் ஒரு 'கதை'யாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர் இக்கதையை இன்னும் முழுவதுமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இக்கதைக்கு எதிர்ப்பு கொடுத்தாலும் அதனால் ஏதும் பயனில்லை; இருப்பினும் தொடர்ந்து இந்த எதிர்ப்புகளைக் கொடுத்தலே நலம்.

சுரா 11.36 - 41 -ல் உலகத்து உயிரினங்களின் ஜோடிகளை தன் படகில் நோவா ஏற்றும்படி கட்டளை வந்தது. பூச்சி இனங்களில் மட்டும் ஒரு கோடி - 10 மில்லியன் - வகை உள்ளன. இவைகள் அனைத்தையும் நோவா தன் கப்பலில் ஏற்றினாரா? முதுகெலும்பிகள் மட்டுமே 45,000. ஜோடியாக என்றால் 90,000. திமிங்கிலத்திலிருந்து யானை எல்லாம் சேர்த்து ... எல்லாவற்றையும் ஒரு சேர எப்படி கப்பலுக்குள் வந்தன; ஒன்றாய் வாழ்ந்தன?  (எல்லாம் கடவுளின் அருள் !!) ஆஸ்த்ரேலியாவில் மட்டும் வாழும் கங்காரு எப்படி அங்கு வந்திருக்கும்? துருவக் கரடிகள் ... ? Robert Ingersoll  இதை விடவும் அதிகமான 'முட்டாள்தனங்கள்' எங்கும் இருக்குமா? என்கிறார். இதெல்லாம் கடவுளுக்கு ஒரு 'ஜுஜுபி' என்று சொல்லிவிடலாம். ஆனாலும் நோவாவைக் காப்பாற்ற கடவுள் வேறு ஒரு எளிதான வழி கண்டுபிடித்திருக்கலாமே !(133)

இதுபோன்ற ஒரு ஊழிவெள்ளம், உலகத்தையே மூழ்கியடித்த வெள்ளப்பெருக்கு வந்தமைக்கான சான்றுகள் ஏதுமில்லை. விவிலியத்தில் சொல்லப்படும் இந்த வெள்ளம் மெசோபட்டோமியாவில் உள்ள ஒரு பழங்கதையை ஒட்டி வந்த ஒரு புதுக்கதை.(134)

ADAM AND EVOLUTION, CREATION AND MODERN COSMOLOGY

பூமியைப் படைக்க இரு நாட்கள்; அதில் உள்ள மனிதத்தேவைகளைப் படைக்க நான்கு நாட்கள்; ஏழு வானங்களைப் படைக்க இரு நாட்கள் -- ஆக மொத்தம் 8 நாட்கள் என்று சுரா 41 கூறுகிறது. ஆனால் சுரா 50 மொத்தத்தில் படைப்புக்கு ஆறு நாட்கள் என்கிறது. இதைச் சமாளிக்க பல வகை கதைகள் சொல்லப்பட்டுகின்றன. 

சுரா 77.22 விந்திலிருந்து (an unworthy fluid??) மனிதன் பிறந்தான் என்கிறது. ஆனால், சுரா 21.30; 25.56; 24.44 - இவைகளில் எல்லா உயிரினங்களும் 'ஆதி முதல் நீரி'லிருந்து படைக்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது.(135)


13 comments:

saarvaakan said...

//களி மண்ணிலிருந்து தான் படைத்த மானிடனின் காலில் விழுந்து வணங்க நெருப்பிலிருந்து தான் படைத்த ஷைத்தானிடம் கட்டளையிடுகிறார்.//
அதற்கு அண்ணன் சைத்தான் கூறும் பதில்
_______________
"7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்."
________________________
இந்த ஸ்ஜ்தா என்னும் வார்த்தைக்கு சிரவணக்கம் என்று பொருள்.அதாவது தலி தாழ்த்தி வணங்குதல். இந்த அர்த்திலேயே பல் இடங்களில் குரானில் பயன்பாட்டில் உள்ளது. எ.கா
___________________
7:206. எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
_________________
ஆகா மாட்டிக் கொண்டார்கள் இறைவனால்லாத ஒருவருக்கு இறைவனே வணங்க சொல்வது இறையியல் கோட்பாட்டில் மிகப் பெரிய தவறல்லவா என்று எண்ணலாம்.
ஆபத் பாந்தவ்னாக இதற்கு விளக்கம் அளிக்கின்றார் திரு பி.ஜே

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/11-manitharukku-sajda-seyyalama/

குரான் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்றே கூறுகின்றது.திரு முகமதுவின் காலத்திற்கு பிறகே இவ்வார்த்தைக்கு இந்த அர்த்தம் வந்தது.அதற்கு பணிதல் என்று மட்டும் பொருள் கொள்க என்கிறார்.

முகம்துக்கு வழங்கப்பட்ட குரானில்தானே இந்த [7.12&206] வசங்கள் வருகின்ரன.முஒரே புத்தகத்தில்,ஒரே அத்தியாயத்தில் முந்தைய காலம் என்றால் வேறு அர்த்தம் கொள்வோம் என்பதை என்ன சொல்வது?
சரி மதவாதிகளுக்கு இதெல்லாம் சக்ஜம்தானே!!!!!!!!!!!

தமிழன் said...

@சார்வாகன்
அருமை , இதை வைத்தே து.. பிய்த்து வாங்கலாம்.

suvanappiriyan said...

என்ன....பதிவு 16லிருந்து 10க்கு வந்து விட்டது? இப்படியே ஒன்றாவது பதிவு வரை ரிவர்ஸில் போய் ஆத்திகத்தின் பக்கம் வந்து பெரியார்தாசனைப் போல் ஏகத்துவப் பிரசாரம் பண்ண ஆரம்பித்து விடுவீர்களோ! கர்த்தரின் ஆசீர்வாதத்தால் எதுவும் நடக்கலாம். :-(

இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்கவேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே பின்வருமாறு கூறுகிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).
(உபகாமம் 18:15)

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே உன்னைப் போல் ஒருதீ்ர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.
(உபாகமம் 18:17,18)

தருமி said...

சுவனப்பிரியன்
எழுதி தவறாகப் பதிவிடாமல் இருந்து விட்டேன் போலும். நேற்று பார்த்ததும் வெளியிட்டேன். இனி தேதியை மாற்றணும்.

எதற்கான பதில் என்றில்லாமல் எழுதியுள்ளீர்கள். இருப்பினும் நீங்கள் சொல்லியுள்ளதற்கான பதிலும் பதிவிலேயே உள்ளதே:

//ஆனால் ஒவ்வொரு குழுமமும் அடுத்தவர் நம்பிக்கைகளை முழுவதுமாக நம்புவதுமில்லை.//

தருமி said...

மற்றவைகளுக்கும் பதில் எதிர்பார்த்திருக்கிறேன்....

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்
உங்கள் மூத்த அண்ணன்களின்[யூதர்,கிறித்தவர்] மத புத்தகங்களும்[தோரா,பைபிள்] அரசியல் இலாபங்களுக்காக தொகுக்கப் பட்டவையே.ஆக்வே அப்புத்தகங்களின் சான்று தேவையில்லை என்றாலும் உங்களின் ஒரு சகோதரர்கள்[கிறித்தவர்கள்] இதை குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.முகமது பழையஏற்பாட்டு உபாகமத்தில் குறிப்ப்பிடப் பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள்.இது பதிவுக்கு தொடர்பில்லாத விஷயம் என்றாலும் இது குறித்து கிறித்த்வ தளங்கள் மறுப்பு வெளியிட்டு உள்ளார்கள்.இதற்கு மறுப்பு உங்கள் தளத்தில் விரும்பினால் எழுதலாம்.
http://tamilbibleqanda.blogspot.com/2010/11/61.html
http://tamilbibleqanda.blogspot.com/2010_10_01_archive.html
http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html
* * *

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்
உங்கள் மூத்த அண்ணன்களின்[யூதர்,கிறித்தவர்] மத புத்தகங்களும்[தோரா,பைபிள்] அரசியல் இலாபங்களுக்காக தொகுக்கப் பட்டவையே.ஆக்வே அப்புத்தகங்களின் சான்று தேவையில்லை என்றாலும் உங்களின் ஒரு சகோதரர்கள்[கிறித்தவர்கள்] இதை குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.முகமது பழையஏற்பாட்டு உபாகமத்தில் குறிப்ப்பிடப் பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள்.இது பதிவுக்கு தொடர்பில்லாத விஷயம் என்றாலும் இது குறித்து கிறித்த்வ தளங்கள் மறுப்பு வெளியிட்டு உள்ளார்கள்.இதற்கு மறுப்பு உங்கள் தளத்தில் விரும்பினால் எழுதலாம்.
http://tamilbibleqanda.blogspot.com/2010/11/61.html
http://tamilbibleqanda.blogspot.com/2010_10_01_archive.html
http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html
* * *

saarvaakan said...

நண்பர் சுவன்ப் பிரியன்
இப்போது ஜின்கள் பற்றி பார்ப்போம்
ஜின்கள் பற்றி குரான் பல முறை குறிப்பிடுகின்றது.72 ஆம் சுராவின் பெயரே சுரா அல் ஜின்
1..இந்த ஜின் பற்றி பிற[மத] புத்தக்ங்கள் ஏதாவது கூறுகின்றனவா?.
2.ஜின்கள் பற்றி ஏதாவது அறிவியல் வழக்கம் போல் கூற இயலுமா?
3. ஜின்கள் இப்போதும் இருக்கின்றன,இவ்வுலகத்தில் மனிதர்களோடு வாழ்கின்றன.இவற்றை உணர முடியுமா?.இவ்வசனம் உணர முடியும் என்று கூறுகிறதா?
_______
17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
**
ஜின்களின் தளப்தி சுலைமான்(சாலமன்)
****
27:17. மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
_________
4.
________
6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
__________
ஜின்களில் உள்ள சைத்தான் என்றால் ஜின்களிலும் நல்லவர்கள்[அதாவது முஸ்லிம்கள்] இருக்கிறார்களா?
__________
72:1. நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
72:2. “அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
____________________

5.
___________

6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
_________
ஜின்களுக்கும் இறைத் தூதரா?

(ஜின்கள் பற்றி கேள்விகள் தொடரும்)

தருமி said...

நீங்கள் சொன்ன http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html - பக்கத்தில் அல்-புகாரியே ஒத்துக் கொண்ட சாத்தானின் வசனங்களை இப்போதுள்ளோர் ஏன் ஒத்துக் கொள்வதில்லை?

saarvaakan said...

//ஏன் ஒத்துக் கொள்வதில்லை?//
உங்களுக்கு ரொம்ப ஆசை அய்யா.1400 வருட கனவுக்கதைகளை ஒரு நிமிடத்தில் கலைப்பதா?.எத்த்னை சாம்ராஜ்யம், போர்கள்,நாடுகள், சரித்திரம் ஏற்படுத்திய விஷயத்தை சும்மா விட்டு விடுவார்களா?.பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதா? அய்யகோ!!!!!!!.இதை பற்றி இன்னொரு சமயம் பேசுவோம்.இப்போது ஜின் வாரம்!!!!!!!!!!!!!!

suvanappiriyan said...

சகோ. சார்வாகன்!

//1..இந்த ஜின் பற்றி பிற[மத] புத்தக்ங்கள் ஏதாவது கூறுகின்றனவா?.
2.ஜின்கள் பற்றி ஏதாவது அறிவியல் வழக்கம் போல் கூற இயலுமா?
3. ஜின்கள் இப்போதும் இருக்கின்றன,இவ்வுலகத்தில் மனிதர்களோடு வாழ்கின்றன.இவற்றை உணர முடியுமா?.இவ்வசனம் உணர முடியும் என்று கூறுகிறதா?
ஜின்களுக்கும் இறைத் தூதரா?//

மனிதர்களையும் - ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது
அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.
ஷெய்த்தான் - இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.
ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.
இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.
அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்

(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:130)

ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.
இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் - வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் - பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் - ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் - நேரான மார்க்கத்தின் பக்கமும் வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30)

இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ - குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் - காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.
46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.

Bibleunmaikal said...

**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)

ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...???

ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?

இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா?

என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18:22–23. ல்

"இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்..

இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்."

ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

REEAD THE LINK.

பைபிளில் உள்ளவை.
ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....


..

தருமி said...

Bibleunmaikal,

’உங்க பானை ஓட்டை’ அப்டின்னு சொன்னா அப்படியான்னு உங்க பானையைப் பார்க்கணும். ஓட்டையா இல்லையான்னு பதில் சொல்லணும்.

Post a Comment