Friday, June 24, 2011

508. ”ஜாதி இந்து” என்பவன் யார்?

*
இன்றைய தினசரியில் - Deccan Chronicle - பக்கம் 3-ல் கோவையருகில் கெம்பனூர் என்ற கிராமத்து “ஜாதி இந்துக்களின்” திருவிளையாடல் பற்றி ஒரு செய்தி. தங்கள் ஊர் வரை வரும் பேருந்தை நாற்பது ஆண்டுகளாகப் போராடி, (அமைச்சர் வேலுமணி மூலம் ..) அவர்களை ஊரைத்தாண்டியுள்ள சேரி வரை நீட்டித்திருப்பதை இந்த ஜாதி நாய்களால் -- மன்னிக்கணும் -- ஜாதி மாக்களால் தாங்க முடியவில்லை. அதை எதிர்த்து ஒரு போராட்டம். காலை பள்ளி செல்லும் நேரத்தில் மட்டும் பேருந்து சேரி வரை போவதை இவர்கள் “பொறுத்துக்” கொள்வார்களாம்; ஆனால் மற்ற நேரத்திலும் சேரி வரை சென்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நட்டத்திற்கு உள்ளாவது இந்த நாய்களுக்கு -- மன்னிக்கணும்.. மறந்து சில உண்மைகள் வெளிவந்து விடுகிறது -- இந்த ”ஜாதி இந்துக்களுக்கு” தாங்க முடியவில்லையாம்.

தினசரிகளில் அடிக்கடி இது போல் வரும் செய்திகளில் ஜாதி இந்துக்கள் என்றொரு புது ஜாதியை அறிமுகப்படுத்துகிறார்கள். இதற்கான தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. எந்த ஜாதி இது போல் ‘உயரிய’ போராட்டம் நடத்துகிறார்களோ அவர்கள் ஜாதியை முழுவதுமாகக் குறிப்பிட்டு எழுதினால், ஒரு வேளை அந்த ஜாதி மக்களில் சிலருக்காவது புத்தி வந்து அந்தந்த ஜாதிக்காரனை அவனவன் கொஞ்சம் விரட்ட மாட்டானா என்று நினைப்பு வருகிறது. ஆனால் இங்கே எப்போதும் ‘ஜாதி இந்துக்கள்’ என்று மட்டும் போடுகிறார்கள். அப்படி ஒரு ஜாதி இருந்து தொலைக்கிறதா என்ன?

தினசரிகளுக்கு என் வேண்டுகோள்.

இதுபோன்ற நிகழ்வுகளில் எந்த ஜாதிக்கார மாக்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துகிறார்களோ, அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்த ஜாதியை அப்பட்டமாக தினசரியில் குறிப்பிடுங்களேன். நிச்சயமாக இது ஜாதி வெறியாட்டத்தை கொஞ்சமாவது குறைக்கும்.
 -------------------------
பி.கு.
தருமி said...
இதே “கதை”யைப் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு இது. வாசித்துப் பாருங்கள் ... நான் கோவை மாவட்ட கலெக்டராக இன்று இருந்தால் என்ன செய்வேன் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன். அதையும் வாசித்துதான் பாருங்களேன்... -- அண்ணா நகருக்கு மட்டும் பஸ் போகும் .. கெம்பானூர்ருக்கு பஸ் கிடையாது!!!


46 comments:

Indian said...

//”ஜாதி இந்து” என்பவன் யார்?"//

The one belonging to a FC/BC/MBC caste that is politically and/or economically strong enough to temporarily disrupt the business of the newspaper in their stronghold through their muscle power.

அழகிய நாட்கள் said...

திரு தருமி அவர்களே!
ஆங்கிலத்தில் கூட நீங்கள் குறிப்பிட்ட "ஜாதி இந்து" என்னும் பதத்தை "caste hindus" என்றுதான் அழைத்துத் தொலைக்கிறார்கள். அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியாரைத்தவிர மற்ற அனைவரும் இந்த ஜாதி இந்து என்னும் வார்த்தைக்குள் அடக்கும் முயற்சிதான் இது. இருக்கும் பத்திரிகை மற்றும் மீடியாக்களில் அட்டவணை சாதியினர் ஒருவர் கூட இல்லை என்பது கூட சுடும் உண்மைதான். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றுதான் தோன்றுகிறது.

சீனு said...

தாழ்த்தப்பட்டவர்களை தலித் என்று அழைப்பதால், தலித் அல்லாதவர்களை 'ஜாதி இந்து'க்கள் என்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு.

வால்பையன் said...

இந்து என்பது மதம் மாறி ஜாதி இந்தாகிவிட்டதோ!?

saarvaakan said...

வணக்கம்,
தலித் அல்லாத மற்றவர்கள் சாதி இந்துக்கள் என்ற வரையறுப்பு பல கால நடைமுறை.இந்த ஊடகத்தின் செயல் வன்மையாக் கண்டிக்கத்தக்கது.
அதாவது குறிப்பிட்ட ஊரில்,குறிப்பிட்ட சாதி(கள்) சேர்ந்த சிலர் செய்த மோசமான் காரியத்தை அதனை ஊடகம் பொதுவில் குறிப்பிடுவது வழக்கமான செயலாக நியாயபடுத்துவது போல் உள்ளது.
இம்மாதிரி அவர்களின் பெயர் ,சாதி,கட்சி வெளியிடப் படும் என்றாலே எவரும் செய்ய மாட்டார்கள்.

நன்றி

தருமி said...

//அவர்களின் பெயர் ,சாதி,கட்சி வெளியிடப் படும் என்றாலே எவரும் செய்ய மாட்டார்கள்.//

ஒரு நம்பிக்கை மட்டுமே ..!

தருமி said...

தலித்துகளைத் தவிர மற்ற எல்லோரும் நடத்தும் நாடகம்.

எந்த நாய் குரைத்தது என்று யாருக்கும் தெரியாமல் போவதற்காகக் கையாளப்படும் ஒரு திட்டம். வெற்றிகரமாகவே சென்று வருகிறது.

தருமி said...

அந்த ஊர் கெம்பானூர் ஜாதி இந்து யாரென்று தெரிந்தவர்கள் எழுதுங்களேன். இப்பதிவிலாவது அவர்களது ‘முகவரி’யைப் பார்ப்போமே!

Anonymous said...

தலித்தும் இல்லை, பார்ப்பனரும் இல்லை எனில் மிச்சம் இருப்போர் தான் சாதி இந்துக்கள் .... இப்படியே மக்களை பிளவுப் படித்தியே வைக்கத் தான் இந்த பிரசங்கங்கள் ..

ஆனால் இந்த சாதி இந்துக்கள் தான் மக்களில் பெரும் தொகையானோராக இருக்கின்றார்கள். அங்கு இருக்கும் ஆதிக்கச் சாதியம் என்பது பல நேரங்களில் அவர்களுக்குள்ளேயே இருக்கு ...

சாதி இந்துக்கள் என மக்களைப் பிரிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் என்ன சாதி வெறிப்பிடித்த இந்துக்களா ? ஆனால் அவர்களில் கணிசமானோர் சாதி வெறிப்பிடித்தவர் தான். ஆனால் சாதி வெறிப்பிடித்தவர்களை தனியாக சுட்ட வேண்டுமே ஒழிய, ஒரு சமூகத்தையே சுட்ட ஆரம்பித்தால் பிளவுகள் தான் மிஞ்சும் ..

இப்போது மிஸ்டர்.எக்ஸ் சாதி வெறியானவர் எனில்.. அந்த மிஸ்டர்.எக்ஸைத் தான் சாதி வெறியாளன் என நாம் கூற வேண்டும், அதனை விடுத்து அந்த சமூகம் முழுவதையும் கூறுவது தான் பிளவுகளுக்கு காரணமே...

இப்படி பல மிஸ்டர் எக்ஸ்கள் நம் நாட்டில் அனைத்து மட்டங்களிலும், அனைத்து பிரிவுகளிலும் உண்டு தானே !

தருமி said...

//மக்களை பிளவுப் படித்தியே வைக்கத் தான்//

பிளவு படுத்துவது மட்டுமின்றி தாங்கள் செய்யும் குற்றங்களிலிருந்தும் சமூகக் கண்ணோட்டத்திலிருந்தும் தப்பிக்கவும் இந்த ‘முகமூடியை’ப் போட்டுக் கொள்கிறோம். இந்தப் பதிவில் சொல்லப்படும் அந்தக் குற்றத்தைச் செய்யும் கேவலமானவர்கள் எந்த ஜாதி என்பதே தெரியாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா .. அதற்காகத்தான்.

தருமி said...

//மிஸ்டர்.எக்ஸ் சாதி வெறியானவர் எனில்.. அந்த மிஸ்டர்.எக்ஸைத் தான் சாதி வெறியாளன் என நாம் கூற வேண்டும், அதனை விடுத்து அந்த சமூகம் முழுவதையும் கூறுவது தான் பிளவுகளுக்கு காரணமே.....//

இதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒரு ஜாதியினர் வழக்கமாக தலித்துகளை இழிவு படுத்துவது சகஜம். அது தப்பென்று தெரிந்தாலும் அந்த ஜாதிக்காரர்கள் இதுவரை ஏதும் தங்கள் ஜாதிக்காரர்களைத் திருத்தியதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறார்களா? எல்லோரும் ஒரே செம்மறியாட்டுக் கூட்டமாகத்தானே நடந்து வருகிறார்கள்.

இதில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், காவல் துறை எல்லோரும் தலித்துகளுக்கு ஆதரவின்றி நடந்து வருவதும் காலங்காலமாய் நடந்து வரும் ஒரு கேவலம்தானே?

இந்த நிகழ்ச்சியிலும் தொண்டமுத்தூர் வார்டு கவுன்சிலர் K.K. கதிரவன் என்பவந்தான் தமிழக போக்குவரத்திற்கு நட்டம் வரக்கூடாதே என்ற ”ஆதங்கத்தில்” ”அண்ணாநகர் சேரிக்கு” பேருந்து செல்வதைத் தடை செய்யும் கோரிக்கையாளன்!

தருமி said...

இதே “கதை”யைப் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு இது. வாசித்துப் பாருங்கள் ...

நான் கோவை மாவட்ட கலெக்டராக இன்று இருந்தால் என்ன செய்வேன் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன். அதையும் வாசித்துதான் பாருங்களேன்...

-- அண்ணா நகருக்கு மட்டும் பஸ் போகும் .. கெம்பானூர்ருக்கு பஸ் கிடையாது!!!

Anonymous said...

//இதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒரு ஜாதியினர் வழக்கமாக தலித்துகளை இழிவு படுத்துவது சகஜம். அது தப்பென்று தெரிந்தாலும் அந்த ஜாதிக்காரர்கள் இதுவரை ஏதும் தங்கள் ஜாதிக்காரர்களைத் திருத்தியதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறார்களா? எல்லோரும் ஒரே செம்மறியாட்டுக் கூட்டமாகத்தானே நடந்து வருகிறார்கள்.//


உண்மைதானுங்க.. ஒன்றல்ல பல சாதிகளிடம் சாதி வெறியூட்டப்பட்டே இருக்கு ... கல்வியறிவு, உலகறிவு, கலப்பு மணங்கள், எல்லாத்துக்கும் மேலே காசு, பொருளாதார வளர்ச்சி சீராக கிடைத்தால் தான் இது எல்லாம் திருந்தும் ... எனக்கு என்ன சொல்றதேனு தெர்ல.. சாதி வெறி இந்த தலைமுறையில் குறையத் தொடங்கி இருக்கு.. ஆனால் முற்றிலும் அழிய பலத் தலைமுறைக் கூட ஆகலாம்..

Anonymous said...

//தங்கள் ஜாதிக்காரர்களைத் திருத்தியதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறார்களா? எல்லோரும் ஒரே செம்மறியாட்டுக் கூட்டமாகத்தானே நடந்து வருகிறார்கள்.//

முற்றிலும் உண்மை.. ஒரு சிலர் தவிர பலரும் கண்டும் காணமலுமே இருக்கின்றார்கள் ... ஒவ்வொரு பிராந்தியத்திலும் எதாவது ஒரு ஆதிக்கச் சாதியினர் பிறரை வஞ்சித்தே வருகின்றார்கள்.

சமத்துவ இந்தியா எப்போது சாத்தியப்படும் !!! ????

Anonymous said...

//இந்தப் பதிவில் சொல்லப்படும் அந்தக் குற்றத்தைச் செய்யும் கேவலமானவர்கள் எந்த ஜாதி என்பதே தெரியாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா .. அதற்காகத்தான்.//

உண்மைதான் அய்யா ! எந்த சாதி என வெட்டவெளிச்சப்படுத்தினால் தான் அவமானம் என்றும், தமது சாதியார்கள் குற்றம் செய்கின்றார்கள் என பிறருக்கும் உரைக்கும் இல்லை எனில் எவனோ செய்யுறன்.. என்னவோ செய்யுறன்.. நாம் செய்யறதை செய்வோம் என குற்றம் என்பதை உணராமலே சாதியம் பேசுவார்கள் ( உதா. எமதுக் குடும்பத்தில் பலரும் சாதியவெறியர்களாக இருப்பவர்களே... சிலர் திருந்திவருகின்றார்கள் )

naren said...

ஐயா, இது politically correct என்ற கோட்பாட்டை ஜவ்வு மாதிரி இழுத்து தேவை இல்லாமல், ஜாதி இந்துக்கள் என்ற வார்த்தையை பயன் படுத்துகிறார்கள்.

மேற்கு நாடுகளில் Liberal அரசியல் ஆளுமை ஏற்பட்டப்பிறகு, சமூகச் சூழலில் சில வார்த்தைகள் பயன்பாடு கொச்சைப் படுத்தும் என்பதால் வேறு வார்த்தைகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதில் முதலில் மாற்றம் ஆரம்பித்தது, கறுப்பர் நீக்ரோ என்ற சொல்லுக்கு AFRO AMERICAN என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. கூறியீட்டுச் சொற்களுக்குத் தான் பயன்படுத்தப் படுகிறது.

ஆனால் ஜாதியை வைத்து தங்கள் primeval இச்சைகளை போக்கிக் கொள்ளும் தரித்திர ஜாதிகளுக்கு ஏன் இந்த political correctness என்று தெரியவில்லை. அவர்களை அம்பல்ப்படுத்த வேண்டும்.

hariharan said...

செய்திகளே அப்படித்தான் உயர்ஜாதியினரை காப்பாற்றுகிறது. இந்து மதத்தில் தான் தீண்டாமை என்ற இழிவு முதலில் இருந்திருக்கிறது, அதனால் அழுத்தப்பட்டவர்கள் தலித் மக்கள், அமுக்கியவர்கள் எல்லாம் `ஜாதி இந்துக்கள்` இது பார்பனர்கள் நீங்களாக. பார்ப்பனர்கள் வகுத்தார்கள், பிற்படுத்தப்பட்ட என்று கூறிக்கொள்ளும் ஜாதி இந்துக்கள் பஞ்சமர்களை அழுத்துகிறார்கள். எல்லாம் நிலவுடமை அல்லது பொருளாதாரம் யார் கையில் இருக்கிறது என்பதில் தான்.

இக்கொடுமை என்று முடியுமோ?

hariharan said...

செய்திகளே அப்படித்தான் உயர்ஜாதியினரை காப்பாற்றுகிறது. இந்து மதத்தில் தான் தீண்டாமை என்ற இழிவு முதலில் இருந்திருக்கிறது, அதனால் அழுத்தப்பட்டவர்கள் தலித் மக்கள், அமுக்கியவர்கள் எல்லாம் `ஜாதி இந்துக்கள்` இது பார்பனர்கள் நீங்களாக. பார்ப்பனர்கள் வகுத்தார்கள், பிற்படுத்தப்பட்ட என்று கூறிக்கொள்ளும் ஜாதி இந்துக்கள் பஞ்சமர்களை அழுத்துகிறார்கள். எல்லாம் நிலவுடமை அல்லது பொருளாதாரம் யார் கையில் இருக்கிறது என்பதில் தான்.

இக்கொடுமை என்று முடியுமோ?

தருமி said...

//சாதி வெறி இந்த தலைமுறையில் குறையத் தொடங்கி இருக்கு.. //

ஜோக் அடிக்காதீங்க, இக்பால் செல்வன்!

என் தலைமுறைக்கு இப்போது கூடியிருப்பதாக என் அனுபவம்.

தருமி said...

//எந்த சாதி என வெட்டவெளிச்சப்படுத்தினால் தான் அவமானம் என்றும், தமது சாதியார்கள் குற்றம் செய்கின்றார்கள் என பிறருக்கும் உரைக்கும்//

இதே .. இதே ..!

suvanappiriyan said...

//ஜோக் அடிக்காதீங்க, இக்பால் செல்வன்!

என் தலைமுறைக்கு இப்போது கூடியிருப்பதாக என் அனுபவம்.//

வினவு பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் படித்த மக்களிடத்தில் எந்த அளவு ஜாதி வேரூன்றியிருக்கிறதென்று. வழக்கம் போல் இக்பால் செல்வன் மூடி மொழுக பார்க்கிறார்.

தருமி said...
This comment has been removed by the author.
Anonymous said...

இல்லை சகோ. இந்த தலைமுறையில் குறையத் தொடங்கி இருப்பது தான் மெய். சென்ற தலைமுறையில் இருந்த அதே வன்மம் இப்போது பலரிடம் இருக்கு ... அப்போது அது செய்திகளாக்கப்படவில்லை, இப்போது வெட்டவெளிச்சமாக்கப்படுகின்றது அவ்வளவு தான் வித்தியாசம்.....

குறையத் தொடங்கி இருக்கின்றது என்று தான் கூறினேன். குறைந்துவிட்டது எனக் கூறவில்லை என்பதையும் கவனிக்க அய்யா !!!

முற்றிலுமாக சாதியம் ஒழிக்க அரசு மற்றும் மக்கள் போதிய நடவடிக்கைகள் எடுத்தால் ஒழிய சாதிய முற்றிலுமாக நீங்காது ... ( மதம் மாறினாலும் கூட நீங்காது )

Anonymous said...

//வழக்கம் போல் இக்பால் செல்வன் மூடி மொழுக பார்க்கிறார்.//

மூடி மொழுக வேண்டிய அவசியமே இல்லை.. சாதி வெறி நம் அனைவரிடத்தில் வெவ்வேறு சதவீதத்தில் இருக்குது.. அதனை வெளிக்காட்டுவதில்லை அவ்வளவு தான் வித்தியாசம் ... அந்த வெறியை குறைக்க முற்படுகின்றோம் சிலர்... சிலர் அதனை குறைப்பதில்லை ...

சாதி வெறி வெளிப்படுவதில் அதிகார வரம்பு மற்றும் பொருளாதார நிலையும் இருக்கு .. ஒருவன் பொருளாதாரம் குன்றிய நிலையில், அதிகாரம் மற்ற நிலையில் சாதியத்தை வெளிக்காட்ட மாட்டான்.. ஆனால் அவனுக்கு அதிகாரமும், பொருளாதாரமும் கிடைக்கும் போதே அவனது சாதிய வெறி எந்தளவுக்கு இருக்கு என்பதை நம்மால் உணரமுடியும் .....

சாதியங்கள் குறைய கலப்பு மணங்கள் அவசியம் , கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியும் தேவை .... இது தான் எனது நிலைப்பாடு .... !!!

இல்லைங்க.. இந்தப் பதிவை படிக்கும் எவனாவது எனக்குத் துளியும் சாதி வெறி இல்லை எனக் கூறமுடியுமா ???? மனச்சாட்சிக்கு தெரியும் எவ்வளவு வெறி நம்முள் இருக்கு என்பதை ....

தருமி said...

//குறையத் தொடங்கி இருக்கின்றது என்று தான் கூறினேன். //

நான் மாணவனாக இருந்த காலத்திலும், பின் ஆசிரியனாக இருந்த ஆரம்ப காலத்திலும் என் ஜாதியைப் பிறர் அதிகம் அறிந்ததில்லை; மற்றவர் ஜாதியையும் நான் அதிகம் அறிந்ததில்லை. இப்போது நடைமுறையில் சாதிகள் எங்கும் நிலவி இருப்பதைப் பார்க்கிறேன். எல்லா நிலையிலும் சாதி விளையாட்டு தீவிரமாகியுள்ளதைப் பார்க்கிறேன்.

அதனால் குறையவில்லை; வளர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். கலப்புத் திருமணங்கள் சிறிது கூடியுள்ளன. பழைய எதிர்ப்புகள் இப்போது இல்லை.

‘சகோ’ - இதில் எனக்கு உடன்பாடில்லை. வெறும் வெற்று வார்த்தை என்பது என் கணிப்பு. நான் யாருக்கும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் ...?

தருமி said...

//சாதி வெறி நம் அனைவரிடத்தில் வெவ்வேறு சதவீதத்தில் இருக்குது.. அதனை வெளிக்காட்டுவதில்லை அவ்வளவு தான் வித்தியாசம் ... அந்த வெறியை குறைக்க முற்படுகின்றோம் சிலர்... சிலர் அதனை குறைப்பதில்லை ...//

முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன்.

தருமி said...

//தருமி said...

அந்த ஊர் கெம்பானூர் ஜாதி இந்து யாரென்று தெரிந்தவர்கள் எழுதுங்களேன். இப்பதிவிலாவது அவர்களது ‘முகவரி’யைப் பார்ப்போமே!//

என்னங்க இது ... யாருக்குமே தெரியலையா அந்த ஆளுங்க சாதி ..? கோவைக்காரங்க கண்டுபிடிச்சி எழுதுங்க ...

Gujaal said...

//அந்த ஊர் கெம்பானூர் ஜாதி இந்து யாரென்று தெரிந்தவர்கள் எழுதுங்களேன். இப்பதிவிலாவது அவர்களது ‘முகவரி’யைப் பார்ப்போமே!//

முதல் சாய்ஸ் கொங்கு வேளாளக் கவுண்டர்கள்.

ரெண்டாவது ஒக்கலிகர்கள்.

மூணாவது நாயுடுகள்.

இவர்கள் இல்லாமலும் இருக்கலாம். இவர்கள் அனைவரும் சேர்ந்தும் இருக்கலாம்.

Gujaal said...

//ஜோக் அடிக்காதீங்க, இக்பால் செல்வன்!

என் தலைமுறைக்கு இப்போது கூடியிருப்பதாக என் அனுபவம்.//

தற்போதைய தகவல் நுட்பங்களால் அடக்குமுறைகள் பரவலாக வெளியில் தெரிய வருகின்றன. அதுதான் அப்படியொரு தோற்றத்தைத் தருகிறதோ?

தந்தை கிராமத்தில் விவசாயம் செய்கையில் தொழிலாளர்களை தீண்டாமை பார்த்து, அடே-புடே என்று அழைத்துப் பழக்கப்பட்டவர். இன்று விவசாயத்தை விட்டுவிட்டு நகருக்கு வந்துவிட்டாலும் ஊரிலிருந்து வரும் தொழிலாளர்களிடம் முன்பு போலவே பேசுவார். அதே சமயம் என்னுடன் படித்த நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரும்போது அவர் அய்யராக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் ஒரே மாதிரி நன்றாகவே நடத்துவார்.

அவருக்கு சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் புரிந்தாலும் உடனடியாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

சிலருக்கு சொல்லிப் புரிய வைக்கலாம். சிலருக்கு செய்கையில் புரிய வைக்கலாம். சிலரை விட்டுவிடுவதே சிறந்தது.

என் மனைவி நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு வயதில் மூத்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அண்ணா, அக்காதான்.

என் வயதையொத்த உறவினர்கள் சிலர் காதல் திருமணம்தான் செய்து உள்ளனர். பெற்றோர்களின் தற்போதைய ஆதங்கம்; காதலித்துக்கொள்ளுங்கள், அதை நாங்கள் இனிமேலும் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் இணை சமூகத்தில் சம அளவில் உள்ள சாதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பதே. இதுவும் மாற்றந்தான்.

ஒருவேளை சுஜாதாவின் அனிதாவின் காதல்கள் நாவலில் வருவது போல கோடீஸ்வரராக இருந்தால் தலித்தையும் ஏற்றுக் கொள்வார்களோ என்னமோ?

என்னுடைய குழந்தைகள் காலத்தில் சாதியின் முக்கியத்துவம் மறைந்து பொருளாதாரம் காதலில் முக்கியக் காரணியாகலாம்.

ஒடுக்கப்பட்டவர்கள் வேதனை புரிந்தாலும், தாங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் அவர்களின் அவசரம் புரிந்தாலும் பிற சாதியினரின் மன மாற்றம் அவர்கள் விரும்பும் வேகத்தில் இல்லையென்பதே நிதர்சனம்.

தருமி said...

//என்னுடைய குழந்தைகள் காலத்தில் சாதியின் முக்கியத்துவம் மறைந்து பொருளாதாரம் காதலில் முக்கியக் காரணியாகலாம்.//

சாதியும், வரதட்சணையும் ஒழிந்து விடும் என்றுதான் நானும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன்!

தருமி said...

//உங்கள் இணை சமூகத்தில் சம அளவில் உள்ள சாதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பதே. இதுவும் மாற்றந்தான். //

இது வெளியிருந்து வரும் புத்திமதி! ஆனால் சாதி விட்டு திருமணம் செய்தோர் வீட்டில் இன்று அந்த இரு சாதிக்குள் கல்யாணம் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளதே, அதை என்ன சொல்ல?

Anonymous said...

"அங்கு" பேருந்து செல்வது தொடர்ந்தால், உடனே நாங்கள் அருகிலுள்ள மலைமீது குடியேறுவோம். அவ்வாறு இருக்கும் நாட்களில், பேருந்தை மலை வரை நீட்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.
இப்படிக்கு
தொட்டாத் தூக்கும் (தொட்டும் தூக்கலாட்டி நல்ல மருத்துவரைப் பாரு!),
நயம் ஒரிஜினல் சாதி இந்துக்கள்
"எல்லாரும் வாழணும் (இல்லாட்டி யாரை ஆளுறது),
நாங்க மட்டும் ஆளணும்"

தருமி said...

//தொட்டாத் தூக்கும் (தொட்டும் தூக்கலாட்டி நல்ல மருத்துவரைப் பாரு!),
நயம் ஒரிஜினல் சாதி இந்துக்கள்
"எல்லாரும் வாழணும் (இல்லாட்டி யாரை ஆளுறது),
நாங்க மட்டும் ஆளணும்"//

பெயரைச் சொல்லியே எழுதியிருக்கலாமே!

நீங்கள் சொல்லும் ’தொட்டாத் தூக்கும்’ நம்ம கீரிப்பட்டி மனுசங்க. ஆனா ‘நாங்க மட்டும் ஆளணும்’ யாருன்னு தெரியலையே!

Anonymous said...

"எக்குலமும் வாழணும், முக்குலந்தான் ஆளணும்", "எல்லாருந்தான் வாழணும், வெள்ளாளந்தான் ஆளணும்", "யாவருந்தான் வாழணும், யாதவந்தான் ஆளணும்" என்றும் எங்கள் பரம்பரை ஆண்ட பரம்பரை என்றும் சொல்லாத சாதியே இல்லை. எல்லாப் பரம்பரையும் பேண்ட பரம்பரைதான்.

எனக்குத் தெரிந்து ஒரேயொரு முறை ஒட்டர் சாதிகளின் கூட்டமைப்பு என்று நினைக்கிறேன். மிகவும் அடிப்படையான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து "எந்தக் குலமும் ஆளட்டும்; எங்கள் குலமும் வாழட்டும்" என்று சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்

R.Puratchimani said...

எனக்கென்னமோ ஜாதி இந்து, இந்து தீவிரவாதம் இவையெல்லாம் இந்து மதத்தின் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்க நாத்திகவாதிகள் மற்றும் மற்ற மதத்தினர் சதி என்று நினைக்கின்றேன்.

மற்றும் ஒன்று ....எல்லோரையும் தலித் என்ற வார்த்தையால் சிலர் ஒன்றிணைக்க முயல்கிறார்கள் ஆனால் அவர்களுக்குள்ளும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற எண்ணம் உள்ளது.

தருமி said...

//எல்லாப் பரம்பரையும் பேண்ட பரம்பரைதான்.//

அப்புறம் அதெல்லாம் இல்லாம எப்படி ...?!

தருமி said...

//...நாத்திகவாதிகள் மற்றும் மற்ற மதத்தினர் சதி என்று நினைக்கின்றேன்.//

செய்தித்தாட்கள் எல்லாவற்றிலும் இந்த முறை பயன்படுத்தப் படுகிறது என்று சொல்லி, அதை மாற்றச் சொல்லியுள்ளேன். நீங்கள் சொல்வது உண்மையென்றால் பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் நாத்திகர்கள் / மற்ற மதத்தினர் ... இல்லையா?

//அவர்களுக்குள்ளும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற எண்ணம் உள்ளது.//

இது ஒரு பெரிய சோகம். இதனால் அவர்களிடம் ஒற்றுமையும் முன்னேற துடிப்பும் இல்லையே. இதற்கும் நாத்திகர்கள்/ மற்ற மதத்தினர்தான் காரணம் என்று சொல்ல மாட்டீர்களே?!

R.Puratchimani said...

//செய்தித்தாட்கள் எல்லாவற்றிலும் இந்த முறை பயன்படுத்தப் படுகிறது என்று சொல்லி, அதை மாற்றச் சொல்லியுள்ளேன். //

ஐயா நீங்கள் சொன்னால் அவர்கள் மாற்றி விடுவார்களா? மாற்றினால் சந்தோசம் தான்...முஸ்லிம் தீவிரவாதம் எனபதையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

//நீங்கள் சொல்வது உண்மையென்றால் பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் நாத்திகர்கள் / மற்ற மதத்தினர் ... இல்லையா?//
நாத்திக கொள்கைகளை மற்றும் இந்து மதத்தின் மேல் வெறுப்புண்டாகும் படி பத்திரிகை வருவதை தாங்கள் பார்த்ததில்லையா படித்ததில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறதே...
நான் எல்லாரையும் சொல்லவில்லை...ஆனால் சொன்னதில் உண்மையும் உள்ளது.

//இது ஒரு பெரிய சோகம். இதனால் அவர்களிடம் ஒற்றுமையும் முன்னேற துடிப்பும் இல்லையே. இதற்கும் நாத்திகர்கள்/ மற்ற மதத்தினர்தான் காரணம் என்று சொல்ல மாட்டீர்களே?! //
மனிதனை மனிதனாக மதிக்காக வரைக்கும் ஏதாவது ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கும்.

Gujaal said...

//ஆனால் சாதி விட்டு திருமணம் செய்தோர் வீட்டில் இன்று அந்த இரு சாதிக்குள் கல்யாணம் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளதே, அதை என்ன சொல்ல?//

பெற்றோர் பாத்து செய்யும் திருமணத்தில் அப்படித்தானே சம்பந்தம் தேட முடியும்.

அதே நேரத்தில் இருசாதிக் குழந்தைகள் வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்தால் பெற்றோர் என்ன செய்ய முடியும்?

தருமி said...

குஜால்,
//அப்படித்தானே சம்பந்தம் தேட முடியும். //

ஏன் அவர்கள் சாதி தவிர மற்ற சாதியிலும் தேடக்கூடாதா?

Gujaal said...

பார்க்க...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15870:2011-07-29-10-03-32&catid=1352:2011&Itemid=599


கோவை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், வயல்வெளிகள் நிறைந்த கிராமங்களில் ஒன்றுதான் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெம்பனூர் கிராமம். இக்கிராமத்தில் 500 ஒக்கலிகர் குடும்பங்களும், 10 போயர் குடும்பங்களும், 350 அருந்ததியர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலான ஒக்கலிகர் குடும்பங்கள் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 3 குடும்பங்கள் தவிர அருந்ததியர்கள் யாருக்கும் நிலம் இல்லை.கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்ட அரசுப் பேருந்து 64 டி. அப்பேருந்து கெம்பனூர் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் கெம்பனூர் எல்லைக்கு 200 மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குள்ளேயே நின்று விடும். கிராமத்தின் எல்லையில் சேரியில் இருப்பவர்கள் 200 மீட்டர் நடந்து சென்று பேருந்தில் ஏறி நகரத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இக்கிராமத்தை உள்ளடக்கிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, எட்டு கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியை சேர்ந்த தமிழக அமைச்சர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவிப்பதற்காக கெம்பனூர் வந்தார். கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்டிருக்கும் அரசுப் பேருந்து 64 டி எல்லை வரைக்கும் வராமல், ஊருக்குள்ளேயே நின்று விடுவதைக் கூறி பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென சேரிமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அமைச்சரும் பின்விளைவுகள் ஏதும் அறியாமல் உடனே அதிகாரிகளை அழைத்து, பேருந்துகளை முறையாக இயக்குமாறு உத்தரவிட்டு சென்று விட்டார். பேருந்து சரியாக மூன்று முறை கிராம எல்லையான சேரி வரைக்கும் சென்று திரும்பியது.

பேருந்து சேரி வரை சென்று திரும்பியதால் தலித்துகளுக்கு இம்முறை உட்கார்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. ஊர் பேருந்து நிறுத்தத்தில் ஏறியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தலித்துகள் உட்கார்ந்து கொண்டும், சாதிஇந்துக்கள் நின்று கொண்டும் பயணிக்க பொறுக்குமா சாதிவெறியர்களுக்கு? நான்காவது முறையாக பேருந்து வரும்போது, கடல் கடந்தும் வாழ்கின்ற தமிழர்களின் உரிமைக் குரலான ம.தி.மு.க.வின் மாவட்ட துணைச் செயலரும், ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலருமான கதிரவன் தலைமையில் ஊர்மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் செய்ததோடு, இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் போகக் கூடாது என்றும் மிரட்டினர்.

அதிகாரிகள் வழக்கம் போல் தலையிட்டு, இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் செல்லாது என உத்தரவாதம் தந்து அவ்வாறே நடைமுறைப்படுத்தினர். அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளும் சாதி பிரச்சனைகளை எல்லாம் மூடி மறைத்து, ஏதோ இரண்டு வெவ்வேறான ஊர்களுக்கு இடையில் நடந்த பிரச்சனை போல செய்தி வெளியிட்டன.

அமைச்சர் கொடுத்த உத்தரவு ஒரே நாளில் காற்றில் பறக்க விடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த தலித்துகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அமைச்சர் கொடுத்த உத்தரவை நிறைவேற்றக் கோரி முறையிட்டனர். சேரி மக்களின் போராட்டத்திற்குப் பிறகு, வழக்கம் போல நடந்து முடிந்த அநீதிக்கு தண்டனை என்பதையெல்லாம் மறந்து, இனிமேல் பிரச்சனை வராமல் இருக்க அமைதிக் கூட்டத்தை நடத்தி, உலகளாவிய கண்டுபிடிப்பாக ஒரு சமரச முயற்சிக்கு கொண்டு வந்தனர். அதுதான் "இரட்டைப் பேருந்து'.

ஒரே வழித்தட எண் (64 டி) கொண்ட அரசுப் பேருந்து 6 முறை சேரிக்கும், மீதமுள்ள முறை ஊருக்குள்ளும் வரும் என அதிமேதாவித்தனமான முடிவுக்கு காவல் துறை – இரு தரப்பினரையும் ஒப்புக் கொள்ள வைத்து, அவ்வாறாக ஒப்புக் கொண்ட பின்னரும் கூட காவல் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட முடிவை காற்றில் பறக்க விட்டு, ஒரே ஒரு முறை மட்டும் அரசுப் பேருந்து சேரிக்குள் வந்து செல்கிறது. சேரி மக்கள் பயன்படுத்தும் அப்பேருந்தை பெரும்பாலும் ஊர் மக்கள் பயன்படுத்துவது இல்லை. ஆக, தலித்துகளுக்கு ஒரு பேருந்து; ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஒரு பேருந்து என கெம்பனூர் தன் சாதி வெறியை மெய்ப்பித்திருக்கிறது.

தருமி said...

//எட்டு கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியை சேர்ந்த தமிழக அமைச்சர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற எஸ்.பி. வேலுமணி //

இவர் மீண்டும் ஏதும் முயற்சிக்க மாட்டார்... ஓட்டு ..!

//500 ஒக்கலிகர் குடும்பங்களும், 10 போயர் குடும்பங்களும்//
ஓ! சாதி இந்துக்கள் இவ்ர்கள்தானோ! கேவலம் தான்!

//கடல் கடந்தும் வாழ்கின்ற தமிழர்களின் உரிமைக் குரலான ம.தி.மு.க.வின் மாவட்ட துணைச் செயலரும், ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலருமான கதிரவன்//

கேப்டனிடம் சொல்லணும் ...

//அதிமேதாவித்தனமான முடிவுக்கு காவல் துறை // வழக்கம் தானே.

prem said...

Boyers were kings and emperors of early India, வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோழி (Koli) என்றும் அழைப்பர்.இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.
போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.

போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.
மகாராஷ்டிராவில் போயர்கள்.

ராஜபுத்திர இனமான அஹீர் (Ahir)எனும் இனத்தினை, கோலி (Gaoli), கோள (Guala),கோளகர் (Golkar),கோலன் Gaolan,ரவட் Rawat,கஹ்ர Gahra, மகாகுல் Mahakul.


மவுரிய (Maurya) மன்னர்களின் வம்சம் சூரிய குலமாகும் வம்சாவளி ஆகும்.

ஆட்சி செய்த அரசர்கள் : சந்திரகுப்தா மௌரிய, பிந்துசார, அசோக பேரரசர், தசரத சக்ரவர்த்தி மற்றும் ப்ரிஹ்றதா ஆகியோராவர். (Chandragupta Maurya, Bindusara, Ashoka the great, Dasaratha, Satadhanvan, Brihadratha)

போயர்கள் (Bhoya/Boyar) மற்றும் கொற்கு (Korku) இனத்தவர்கள் தார் (Dhar) எனும் நகரினை பூர்விகமாக கொண்ட வம்சாவளியினர் ஆவர். மேலும் பெப்ச (Bopcha ) எனும் கொற்கு (Korku) இனம், போயர்கள் (Bhoya – Cultivator), பாரதி (Parthi – Hunter ), கோழி (Kohil – Local Cultivating Caste ), சனரியா (Sanaria – Tribe ), சௌதரி (Chaudhari – Head Man), பட்லிய (Patlia – Patel or Chief office of a village ), மற்றும் சோன்வானியா (Sonwania – one who purifies offenders among Gonds & other tribes) ஆகியோர் ஒரே ரத்த இனத்தினை (வம்சாவளியினர்) சார்ந்தவர்கள் இவர்கள் தங்களுக்குள் பெண் குடுத்து பெண் எடுதுக்கொள்ளுவர்.


பன்வர் இனத்தவர்கள் மல்வா (Malwa) எனும் உஜ்ஜைன் (Ujjain ) அரசர்களாவர் மேலும் தார் (Dhar) எனும் இடத்தினை தலைநகராக கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள் ஆவர்.[28]

சாளுக்கிய சம்ராஜியாமனது ஒரு போய சாம்ராஜ்யம் ஆகும், இவர்கள் ஒரிசா தேசத்தினை கி .பி. 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து 234 ஆண்டுகள் 12 போய அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது அரசு ஆவணங்களின் மூலம் அறியமுடிகின்றது.

சூரிய குலமான போய (Boya) வால்மீகி முனிவரின் கோழி வம்சாவளியினரை பலிஜா, பாலிஜி, குருச்துல மற்றும் நாயுடு (Balija / Balji / Gurusthula / Naidu) என அழைப்பர். இவர்கள் மதுரை (Madura), தஞ்சாவூர் (Tanjore) மற்றும் விஜயநகர் (Vijayanagar) ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அட்சிபுரிந்துவந்துள்ளனர். பலிஜா இனம் இரு பிரிவுகளை உடையது.

போய நாயக்கர்களின் கோவில்கள்
ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்

ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம் கி.பி. 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக சத்ரிய வம்சமான சாளுக்கிய மன்னர்கள் வழி தோன்றலாகிய போய அரச வம்சாவழி மக்களால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.[55][56]

ஸ்ரீ சென்னகேசவ கோவில்

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரிலுள்ள சென்னகேசவ கோவில் போய பாளயக்காரர்களான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 – ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அரசியலில் போய இன முக்கியஸ்தர்கள்

மறை திரு டாக்டர் B.R .அம்பேத்கார் போய இனமான மஹார் (Mahar ) எனும் துணை பிரிவினை சார்ந்தவராவார்.
Reference:

1. www.nayaka.in

2. http://ta.wikipedia.org/s/25ue

3. http://boyanayaka.blogspot.in/2013/01/boyar-boya.html

தருமி said...

prem,
நீங்கள் யாரன்றறிய உங்கள் profile பார்த்தேன். உங்கள் இடுகைகளில் தலைப்பைப் பார்த்து “அசந்து” விட்டேன்.

//
போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.//

500 ஒக்கலிகர் குடும்பங்களும், 10 போயர் குடும்பங்களும்//
ஓ! சாதி இந்துக்கள் இவ்ர்கள்தானோ! கேவலம் தான்!

//500 ஒக்கலிகர் குடும்பங்களும், 10 போயர் குடும்பங்களும்//
ஓ! சாதி இந்துக்கள் இவ்ர்கள்தானோ! கேவலம் தான்!//

போயருக்கு எதற்கு இம்புட்டு ‘சங்கு’ ஊதுகிறீர்கள்??

prem said...

i am a researcher of kings of early india,just i have seen the word 'boyar' in your discussion, so i have been shared that, what i known with you all.... thank you and have a nice day...

prem said...

sir, i am a researcher, and see the thought of us @ http://www.nayaka.in/Boyar_Kirat_Valmiki_Kingdom.php

KIRAT KINGDOM

Boyar = Kirat = Valmiki

History

Socio –Economic Conditions of Ramayana Period

The society was divided in four Varnas. The four divisions (Varna) of the society were Brahamana , Kshatriya, Vaishya and Shudra. This division was based on the guna (characteristic tendencies) and the Karma (acts) of the individuals.

जन्मना जायते शूद्रः कर्मणा जायते द्विजः

Janmana jayate Shudrah – Karmana Jayte Dvijah

“At birth every child is born as Shudra. By his own Karma (action) he becomes a twice-born (dvijah). Brahaman, Kshatriya and Vaishya.

The caste, as understood today is based on birth in particular division. It is the result of generations of people trying to preserve their knowledge and trade within limited circles, by limiting their alliances and minglings with others who follow the same pursuits for the same reasons.

During the Ramayana period ,varna system(Varnashram Dharma) was prevalent. Vishwamitra , who was Kshatriya , was recognized as Brahmarishi.
Why there was no caste discrimination in ancient India? read details?

The Ramayana was written by sage Valmiki, born in a Nayaka, Kirat, Boya community.
The Mahabharata was written by Veda Vyas,the son of Satyavati, daughter of a ferryman or fisherman, and the wandering sage Parashara.
Maharshi Vasishta, Guru of Lord Rama, married Arundhati , not a brahmin.
They were not brahmins.

MY QUESTION IS HOW AND WHO DIVIDED INDIA INTO UPPER CASTES AND LOWER CASTES AND DALITHS WERE REGARDED AS UNTOUCHABLES?
During Indo-Aryan migration around 5th century BCE, The Boya warriors from Indus valley invaded south-eastern region. The original population of Boyas was mixed with Rajasthani-speaking Rajput cavalry together with various lingustic group, These Beda or Boya = Boyar = Kirat = Valmiki warriors served as military regiment and chiefs between 10th century to 15th century in Chalukya, Chola, Vijayanagar and Hoysala empires.

Karnataka -- Names Bedar(nayaka), Valmiki nayaka are in vogue. Bedar was the word used by Muslims either to show the dauntless quality or may be inability to pronounce properly. Muslim books mention the word Bedar as powerful group.s

Pracetas Valmiki Kshatriya was born into this hunter tribe but due to his wisdom and saintly personality he became a Brahmana who learned Sanskrit. once a savage, became ‘Adi kavi’ in Sanskrit by writing the epic Ramayana and great sage.

In Yoga Vasistha 1.15.5 Rama speaks of Kirateneva vagura, "a trap [laid] by Kirats", so about BCE Xth Century, they were thought of as jungle trappers, the ones who dug pits to capture roving deer. The same text also speaks of King Suraghu, the head of the Kirats who is a friend of the Persian King, 'Parigha'.

Boyas or Bedars were none other than Vanaras of Kishkinta kingdom of Ramayana times in South India. These were the vanara warriors who were controlled by Sri Rama in the war against Demon Ravana of Srilanka to rescue Sita. Boya and Valmiki are the names in vogue. Boya consider themselves as descendents of ' Bhagwan Valmiki' a sanskrit writer.

The most famous Kirats in Hinduism are the Kiratra avatar of Shiva, Lord Buddha and Bhagwan Valmiki, writer of the Ramayana.

Boya caste corresponds to Kirats of sanskrit writers, the Warriors, hunters and mountaineers, as the names indicate, they belonged to one of the hill tribes who subsisted by hunting and tending cattle. The accounts of their origin are sometimes confusing, but it appears some group were involved in building forts, temples and bridges. That is how they are well versed in construction activity even today.

In ancient Hindu scriptures, The Himalayas is referred as the "Kirant Desh" or "the Land of Kirants".

Post a Comment