Friday, January 18, 2013

634. இலங்கைப் பயணம் - 17 - வீடு திரும்பல்*’வீடு செல்லும் போது ...’ என்ற ஒரு தொடர்சங்கிலிக் கடைகளின் பெயராக இலங்கையில் பல இடங்களில் பார்த்தேன். இந்தத் தலைப்பு எனக்குப் பிடித்துப் போயிற்று.
கொழும்புவில் கலைப் பொருள் விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றிந்தேன். ஊர் வந்து சென்ற  நினைவாக இருக்கட்டுமே ஏன்று மேலேயுள்ள முகமூடிகளில் ஒன்றை (இடது பக்கம் மேலிருந்து கீழாக இரண்டாவது முகமூடி) வாங்கினேன். அந்த முகமூடிகளின் பட்டியல் மிகப் பெரிது போலும். காட்சிக்காக விமான நிலையத்தில் இருந்த பட்டியலின் படம் இது.


ஆயுதங்கள் ஏந்தும் சிப்பாயகளைப் பார்க்கும் நேரமெல்லாம் ஒரு படபடப்பு  ...நம் சூரியக் குடும்ப வாகனம் ரெடி ...
இலங்கைக் கரைமேகக் கூட்டம்...........


விமானத்தில் ‘ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்திலேயே’ சீட் கிடைத்தது. ஆனால் பாதி விமானம் காலி. அதுனால் எப்போதும் போல் வழக்கமா உக்கார்ரது மாதிரி ’கடைசி பெஞ்சுக்கு’ நானும் நண்பனும் போய் விட்டோம்., அங்கே இருந்து படம் எடுக்க வசதியாக இருந்தது.

விமானப் பணிப்பெண் ஒருவர் ‘என்னை மாதிரியே நீங்களும் படம் எடுக்கும் ஆவல் உள்ளவர் போலிருக்கே’ என்று சொல்லி நண்பராயிட்டாங்க.
 

நாடு விட்டு நாடு போய் .....இந்திய மண் கண்ணுக்குத் தெரிய

ஆரம்பித்தது.
 
மதுரை மண் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் எனக்கு வெறும் வயலும் வரப்பும் மட்டும் தெரிந்தது.அடுத்த ஜன்னல் வழியே படம் எடுத்த நண்பனுக்கு மதுரையின் கட்டிடங்கள் எல்லாம் நன்கு தெரிந்ததாம்.   ... ஓசி வாங்கி இங்கே சேர்க்கணும் ...இனிய பயணம் இனிதே முடிந்தது.

*தலைப்பை (மோகன் குமாரிடமிருந்து) திருடியிருக்கிறேன். அவருக்கு நன்றி.

*

9 comments:

ப.கந்தசாமி said...

"The End" போட்டுட்டீங்க. ரசித்தேன்.

தருமி said...

//"The End" போட்டுட்டீங்க. ரசித்தேன்.//

ரொம்ப நல்லாவே புரிஞ்சிருச்சுங்க !!

ராமலக்ஷ்மி said...

மேகக் கூட்டம்; பறவைப் பார்வை படங்கள் மிக அருமை.

அடுத்து செல்பவர்களுக்குப் பயனாகும் இந்தத் தொடர்.

வேகநரி said...

அழகான படங்கள்.பயண கட்டுரை முடிந்தது வருத்தம்.

CS. Mohan Kumar said...

அவசியம் ஒரு முறை போகணும் சார் ! Thanks for sharing your experience !!

James said...

உங்கள் பயணக்கட்டுரை மிகவும் அருமையாயிருந்தது ஐயா.

Unknown said...

An happy ending sir. . . . . . . .i never saw traveling articles about srilanka in any blogs. . .its our pleasure and i'm proud to be your fan. . .ayubowan,sthuthi (no tamil fonts in my mobile! :-))

தருமி said...

thanks a lot, vijayan

வேகநரி said...

ஐயா,
நீங்க யானை பார்க்க போன Pinnawela
அதேயிடத்திற்கு தான் நண்பரும் போய்யிருக்கிறார். மொத்தமாக இலங்கை பிரயாணம் பற்றி நண்பர் வாக்கு மூலத்தில் இருந்து அறிந்தபடிஅவர்கள் எதிர்பார்த்ததை விட இலங்கை பயணம் திருப்த்தி. தமிழக மக்களின் வாழ்கை தரம் உயரும் போது நீங்க சொல்லும் இலங்கை செல்லும் பாதி விமானம் காலியாக இருக்காது.
தமிழக அரசியல்வாதிங்க தமிழக மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவாங்களா அல்லது ஈழம் சொல்லியே அரசியல் நடத்துவாங்களா என்பது தெரியல.
---------------

//எங்களுக்கு இப்போது வேண்டியது சாலைகளல்ல. வளர்ச்சி வேண்டும்//
எமக்கு தேவையானது அடீப்படைத் தேவைகள அல்ல என்று இலங்கை தமிழ்வாத அரசியல்வாதிங்களால கேட்கபடுவதாக அறிகிறேன்.
நவீன உலகில் சாலைகள் என்பது வளர்ச்சியுடன் பின்னி பிணைத்தது. சாலைகள் இல்லாம வளர்ச்சி கிடையாது.
//ஜாப்னா மக்களுக்குத் தேவையான் அடீப்படைத் தேவைகள் மட்டும் கிடைத்தால் இன்னும் சில ஆண்டுகளிலேயே அதனை ஒரு சிங்கப்பூராக தமிழர்கள் மாற்றி விடுவார்கள்.
அவர்களுக்கு முதலீடு செய்ய பல நாட்டு இலங்கைத் தமிழர்கள் போட்டி போடுவார்கள்//
கற்பனைகளுக்கு அளவு இல்லையா? பங்களாதேஷ்சை ஆசியாவின் வளமுள்ள நாடாக ஆகிவிடும் என்பது போல் இலங்கை தமிழர்கள் நல்ல வாழ்வு பெற்று விடுவார்களோ அப்படி நல்ல வாழ்கை பெறாம துன்பத்திலே அவங்க தொடாது வைதத்திருந்தே அவர்களை சாட்டி லாபம் பெற்று கொள்ளும் கூட்டத்தின் முயற்சி தான் இது என்பதை தெரிகிறது

Post a Comment