Tuesday, July 01, 2014

769. FTFA 14 - PRE-QUARTER MATCHES

* அட போங்க’ப்பா ...!

லீக் சுற்று முடிஞ்சி நாக் அவுட் சுற்று வந்ததுமே ஒரே சோகமா போச்சு! என்ன சொல்லுங்க... யார் விளையாடினாலும் முழுசா விளையாடி கோல் போட்டு ஒரு அணி வென்று, அடுத்த அணி வெளியேறணும். வெளியே போற அணி நமக்குப் பிடிச்ச அணின்னா மனசு கஷ்டமாயிருது. சரி ...தோத்துப் போச்சு... போகட்டும்னு விட்டுறலாம். ஆனால் ரெண்டு அணியும் விளையாடி கோல் சமமாகி, ஓவர் டைம் விளையாடி அதுக்குப் பிறகும் சமமா இருந்தால் ...அப்போ வருது பாருங்க பெனல்டி கிக். அது தான் இந்தக் கால்பந்து ஆட்டத்திலேயே ரொம்ப மோசமான ஒரு விஷயம். எல்லா பாவமும் அந்த இரண்டு கோல் கீப்பர்கள் தலையில் மட்டும் விடியுது பாருங்க ... ரொம்ப கஷ்டம். யாரு ஜெயிச்சாலும் யாரு தோத்தாலும் வருத்தமாக இருக்கு.

உதாரணமா ப்ரேசில் - சிலி விளையாடினதில் இரண்டு கோலை ஜுலியஸ் சீஸர் தடுத்தார். வென்றார்கள், ஒருவரின் முயற்சியால் எல்லோருக்கும் பெருமை; ஏன் அந்தப் பெருமையை அனைவருக்கும் பொதுவாகக் கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு.

இப்போ டென்னிஸில் best of five ஆட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஆளுக்கு ரெண்டு செட் எடுத்தாச்சு; ஐந்தாவது தொடர்கிறது. இதில் tie-breaker கிடையாது. இரண்டு கேம் வித்தியாசத்தில் ஒருவர் வெல்ல வேண்டும். சில தடவை மிகவும் இழுத்துக் கொண்டே போகும். ஆனாலும் பார்க்கவே திகிலாக இருக்கும். அதே போல் இங்கேயும் 15 நிமிடம் இரு extra time. முடிவு இல்லாவிட்டால் அடுத்து 20 நிமிடம் ஓய்வு. பின், தொடந்து ஆட்டம். sudden death rule வச்சுக்கணும். யார் முதலில் கோல் போட்டாலும் அதோடு ஆட்டம் முடியும். டென்ஷன் இருக்கும்; விறுவிறுப்பு இருக்கும்; வெற்றி தோல்வி பதினோரு பேருக்கும் சமம் தான். இப்படி ரூல்ஸ் போடணும்னு தோணுது. 


சரி ... சரி ... இந்தியா உலகக் கோப்பையில் விளையாடும் போது அப்படி மாத்திக்கலாம் ...!

ப்ரேசில் - சிலி

1 : 1
3 : 2

முன் பாதியிலேயே இரு அணிகளும் ஆளுக்கு ஒரு கோல் என்று சம நிலையில் இருந்தார்கள். இரண்டாம் பகுதியும் விறுவிறுப்பாய் நடந்தது. சிலி எந்த வகையிலும் ப்ரேசிலுக்குக் குறைந்ததாக இல்லை. அடுத்து  extra time. அந்த அரை மணி நேரமும் முடிந்தது. கோல் எதுவும் இதுவரை விழவில்லை. பெனல்டி கிக். ப்ரேசிலின் கோலி சீஸர் இரண்டாம் மூன்றாம் கோல்களைத் தடுத்தார். சிலியின் ஒரு கோல் வெளியே போயிற்று, ப்ரேசில் வென்றது. நெய்மர் உதவியால் முதல் கோல் விழுந்தது. இதைத் தவிர அவரது ஆட்டத்தில் ஏதும் சொல்லும்படி இல்லை. 


கொலம்பியா - உருகுவே
2 : 1

ஆட்டம் பார்க்கவில்லை.


நெதர்லாந்து  -  மெக்ஸிகோ
2 : 1

ஒவ்வொரு ஆட்டமும் இறுதி ஆட்டம் போல் இருக்கிறது. இரு அணிகளும் மிகத் திறமையாக ஆடின. ஆனால் மிகவும் பிடித்த பெர்ஸி ஆடியது போலவே தெரியவில்லை. அவரை நான் முழுமையாகப் பார்த்தது அவரை ஆட்டத்திலிருந்து வேறு அணி வீரரை உள்ளே அழைக்க வெளியேற்றப்பட்டாரே அப்போது தான் பார்த்தேன். ஏனோ இந்த ஆட்டத்தில் அவரின் பங்கு வெகு குறைவு. ஆனால் ராபன் வழக்கம் போல் நன்கு ஆடினார். 

மெக்ஸிகோ இரண்டாம் பகுதியின் ஆரம்பத்திலேயே கோல் போட்டு விட்டது. அதன் பின் கோல் எதுவும் விழவில்லை. மெக்ஸிகோ வென்று விடுமோ என்ற நிலை. இறுதி நிமிடங்களில் இரு கோல்கள் போட்டு நெதர்லாந்து வென்றது.

கோஸ்டா ரிகா  -  க்ரீஸ்
1 : 1
5 : 3

சும்மா சொல்லக் கூடாது. இதுவரை கோஸ்டா ரிகா இரண்டாவது சுற்றுக்கு வந்ததில்லையாம். ஆனால் இந்த முறை அமர்க்களமாக நுழைந்து விட்டது. முதலில் கோல் போட்டு முன்னிலை வகுத்தது. ஆனால் ஏறத்தாழ இரண்டாம் பகுதி ஆரம்பத்திலேயே ஒரு அணி வீரர் இரண்டாம் மஞ்சள் அட்டையால் வெளியேற்றப்பட்டார்,  அதன்பின் ஒரு அணி பத்து வீரர்களுடனும் இன்னொன்று முழு அணியுடன் விளையாடியும் ஆட்டம் சமன் நிலையிலேயே இருந்தது. அதுவே கோஸ்டா ரிகாவிற்குப் பெருமை சேர்த்தது.

அதன் பின் ஆட்ட இறுதியில் க்ரீஸ் கோல் போட்டு சமன் செய்தது, ஆட்ட நேரம் முடிந்து, extra time முடிந்து சமன் நிலையிலேயே இருந்தது. இதிலேயே கோஸ்டாரிகா கோல் கீப்பர், நவாஸ்  நன்கு பந்துகளைத் தடுத்திருந்தார். ஆகவே அவர் ஜெயிக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பந்தை நவாஸ் தடுத்தார். அவரின் அணி வென்றது.


ப்ரான்ஸ்  -  நைஜிரியா
2 :  0

நைஜீரியாவில் பிடித்தது அந்த கோல் கீப்பர் என்னீயீமா (Enyeama). ஆளு சரியான குட்டை. பார்ப்பதற்கு நம் ஊர் நடிகர் ஒருவர் மாதிரி இருந்தார், மதராசப்பட்டணத்தில் ஆங்கிலம் சொல்லித் தருவாரே ஒரு கூத்துப்பட்டறை நடிகர். அவரை மாதிரியே இருந்தார். பயங்கர நட்புறவோடு இருந்தார். முந்திய பந்தயம் ஒன்றில் அவர் எதிரணி வீரர்களோடு மிகச் சாதாரணமாக, மகிழ்ச்சியாக கலந்து உறவாடினார். அதைவிட அந்தப் போட்டியில் எந்த வீரரின் சத்தத்தை விட இவர் சத்தம் மிகவும் அதிகமாகக் கேட்டது. கோல் முன்னால் இவரது அணி ஆட்கள் தடுப்புக்காக நிற்கும் போது மிகச் சத்தமாக ‘அமா   ... அமா’ என்று சத்தமாகக் கத்துவார். நைஜீரிய மொழியில் அமா என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க வேண்டும்.

ப்ரான்ஸ் அணி பெரிய அணி தான்; ஆனால் நைஜீரியா விட்டுக் கொடுக்காமல் விளையாடியது. ஆனால் forwards கொஞ்சம் குறை வைத்தார்கள். கோலுக்குக் கொண்டு போகும் பந்தை இன்னும் கொஞ்சம் பக்கத்தில் போகலாம். ஆனால் தள்ளி நின்று பந்தை அடிப்பார்கள். அடிக்கும் இடத்தில் நம் ஆட்கள் இருக்கிறார்களா என்றும் பார்ப்பதில்லை. ப்ரான்ஸ் அணியும் தலையால் தண்ணீர் குடித்து ஆட்ட இறுதியில் ஒரு கோலும், அடுத்த சில நிமிடங்களில் கோல் குழப்பம் ஒன்றில் இன்னொரு கோலும் விழுந்து  வென்றார்கள்.

 *

3 comments:

Packirisamy N said...

இந்தக் காலத்துல கம்ப்யூட்டரின் உதவியுடன் பந்து யார் கண்ட்ரோலில் அதிக நேரம் இருந்தது என்று எளிதாக பார்த்திவிட முடியும். அதைப் பொறுத்து முடிவெடுக்கவும் முடியும். இந்த பெனாலிட்டி கிக் ஒரு கொடுமையான விஷயம்தான்.
இதையும் பாருங்களேன்

http://www.youtube.com/watch?v=rFSyuUGgFpE

வேகநரி said...

//சிலி எந்த வகையிலும் ப்ரேசிலுக்குக் குறைந்ததாக இல்லை.//
உண்மை தாங்க .அதனாலே 3 : 2 முடிவு வந்தபோ வருத்தமாக தான் இருந்திச்சு.
இரண்டு அணிகள் சமனாக விளையாடி கோல் சமமாகி ஓவர் டைம் கொடுக்கபடும் போதும், அதுக்குப் பின்னும் சமமா இருக்கும்போதும்,ஒன்றுக்குமே நேரமில்லை அதில இவங்க வேறு நாளை வேலைக்கு வேறு போக வேண்டுமே என்ற கவலையும் வருகிறது :)

வேகநரி said...
This comment has been removed by the author.

Post a Comment