Wednesday, October 01, 2014

790. அம்மா ---> காளி மாதா









*




 http://www.vinavu.com/2014/09/30/ammaa-glycerin-kavithai/ வினவு பதிவில் - துரை. சண்முகம் என்பவரின் கவிதை மிக அழகு. இன்றைய தமிழனின், தமிழ் நாட்டின் நிலையை அழகாகக் காண்பித்துள்ளார்.

வாசித்ததும் நானும்  அழுவாய்ச்சியாக மாறினேன்....!

திரைப்படத் துறையினர் உண்ணாநோன்பிருக்கின்றனராம். (தீபாவளி வேறு சீக்கிரம் வருகிறதே! படங்கள் வெளியாகி ஓடணுமே!) ‘தர்ம தேவதைக்கு அநீதியா? என்றொரு கேள்வி அவர்கள் கூடாரத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருந்ததாம்.  காதின் ஜவ்வு கிழிகிறது.
படங்கள் - வினவு

படங்கள் - வினவு


மக்களின் ‘உணர்ச்சிக் கொந்தளிப்பு’ ரொம்பவே பயங்கரமாக இருக்குது. அது இந்து ஆங்கில இதழின் கடிதப்பகுதியில் கூட கொந்தளித்தது ஆச்சரியமாக இருந்தது. நேற்று  ஒரு அறிவு(கெட்ட)ஜீவி இப்படி எழுதியிருக்கிறார் -- செயலலிதா முதல் படத்தில் வெண்ணிற ஆடை கட்டி வரும் சோகத்தோடு படம் முடிந்ததாம். ஆனால் அந்த வெண்ணிற ஆடை இப்போதும் தொடர்ந்து சிறையில் கட்டிய வெண்ணிற ஆடையோடு வந்து நிற்கிறதாம். - வாசித்ததும் உங்களுக்கும் அழுகாச்சி வரவில்லை ...? எனக்கு ரொம்ப வந்தது.

நேற்று தீர்ப்பு வந்த நான்காவது நாள். நேற்றும் எங்கள் பகுதியில் கடையடைப்பு தொடர்கிறது. விடாது கருப்பு ...!

வழக்கமாக வரும் மின்சாரமும் நேற்று இல்லை. வழக்கமாக இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்து மீண்டும் வந்து தொடர்ந்திருக்கும். ஆனால் இன்று அரை மணி நேரம் மின்சாரம் ... பின் ஓரிரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்று காலை ஆறு மணியிலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்தது. மின்சார அமைச்சர் பெங்களூரு போனதினாலோ, அல்லது மம்மி சிறையில் இருப்பதினாலோ என்னவோ இப்படி மின்சாரம் ஆட்டம் போடுகிறது. ஆட்டத்தில் சிக்கிக் கொண்டோம்.

மீனவர்கள் மிகவும் வருந்தி போராடுகிறார்களாம்  -- ஏனென்று எனக்குத் தெரியவில்லை.

வக்கீல்கள் சேர்ந்து ஒரு போராட்டமாம். இவர்கள் தான் நமக்கு சட்ட திட்டங்களைப் பற்றிய அறிவைத் தருகிறார்களாம். ஆனால் இவர்கள் இப்படிப் போராடுவது ஏன் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. தீர்ப்புக்கு எதிராக அவர்கஇருந்தால் பேசாமல் அடுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக இந்தப் போராட்டம் ... அதுவும் ஒட்டு மொத்தமாக எப்படி சேர்ந்தார்கள்? நமக்கேன் தெரியும், நாராயணா...!

அதிமுகவில்  பதவியில் இருக்கும் நண்பனொருவனிடம், ‘ஏண்டா உங்க கட்சியில் இருக்கிறவங்க இப்படி பொசுக் ... பொசுக்குன்னு கால்ல விழுகுறீங்க?’ அப்டின்னு கேட்டேன். சரியா பதில் சொன்னான். ’அமைச்சர் கால்ல ஒரு தடவை விழுந்தா சில பல கோடி; எங்கள மாதிரி ஆளுக விழுந்தா சில பல லட்சம். விழக்கூடாதா?’ அப்டின்னான். நல்லா விழுந்து  விழுந்து  எழுந்திருங்க அப்டின்னேன்.




கடந்து வந்த காலத்தைக் கொஞ்சம் திருப்பி ஆச்சரியத்தோடு  பார்க்கிறேன்.

அந்தக் காலத்திலிருந்து சில அரசியல் ஆரூடங்கள் நான் சொல்லி, அவற்றில் பல நிகழ்வுகள் அப்படியே நடந்து வந்துள்ளன.

***ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் மாணவ நண்பன் (பெயரளவில் அவன் ஒரு இந்து) தனது மகனுக்கு எனது பெயரை வைப்பதாகக் கூறினான். ‘வேண்டாமப்பா ... நாடு போகிற போக்கில் உன் பையன் பெரியவனாக வரும் போது மைனாரிட்டுகளுக்குப் பிரச்சனைகள் வரலாம்  என்றேன். (முழுவதும் உண்மையாகவில்லை என்று இன்றுவரை மகிழ்ச்சிதான்.)

***இருபது ஆண்டுகளுக்கு முன் புது வீட்டுக்குக் கல்லிடைக்குறிச்சியில் கதவு செய்யப் போன போது அங்கு இரு மாடல்களில் செய்ய முடியும் என்றார்கள். ஒன்று, வெறும் வட்ட அமைப்பில் ஒரு பூ,  இன்னொன்று, தாமரைப் பூ. கட்டாயம் பா.ஜ.க. வந்து விடும். அதனால் தாமரைப் பூ வேண்டாமென்றேன்.



***எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டதும். தி.மு.க. (அண்ணா பாசறை) என்ற பெயரில் புதிய கட்சி உருவாகும் என்றேன்.

***அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்படும் என்று மாணவர்களிடம் சில நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன்.

***எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க. தலையெடுக்க முடியாது என்றேன்.

இதே போல் இப்போதும் ‘ஆத்தா’ இறங்கி வந்து என்னிட்ட என்ன சொல்றா தெரியுமா....?

பெரிய ஆளுக ஜேத்மலானி மாதிரியெல்லாம் நீதி வேண்டி களத்தில் இறங்குறாங்க... பெரிய குருஷேத்திரப் போர் தான்! சில வாரக்கணக்கில் மம்மிக்கு பெயில் கிடைக்கும். மம்மி இப்போ புது வேஷம் எடுப்பாங்க. காளி வேஷம் தான். ஒரு கையில் துண்டமாக ஒரு தலை -- அதைப் பார்த்து மட்டும் எனக்குப் பயம். இந்த பயம் நம் திரைத் துரையினருக்கும் வந்திருக்கும் போலும். அதான் வரிசை கட்டி நிக்கிறாங்க ...

இப்போ கண்ணீராக தமிழ் நாடு அழுது கொண்டு இருக்கிறதல்லவா? அழுகும் ம்க்களை மம்மி கரையேத்த வேண்டுமா இல்லையா? இந்த sympathy waveயை வடி கட்டி திசை திருப்ப வேண்டுமா இல்லையா? பெயிலில் வெளி வந்தும் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாததால் பல மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறாமல் இருக்குமல்லவா? அதையெல்லாம் மக்கள் உணர்ந்து மம்மி உட்கார முடியாமல் இருக்கிறார்களே என்று வருத்தத்தின் உச்சியில் அமர்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது மம்மி டக்குன்னு அரசைக் கலைத்து விட்டு ஓராண்டிற்கு முன்னாலேயே அடுத்த தேர்தலை வச்சிருவாங்க.... அலையோ ..அலை... அப்படி ஒரு அலை. நாப்பதும் நமக்கே என்பது மாதிரி இந்த தேர்தலிலும் ஒரு குறி இருக்கும். அது நடக்கவும் செய்யும். எதிர்க் கட்சியாவது ... ஒண்ணாவது. (பாவம் ...ஸ்டாலின்!)

இதற்குள்  உயர் நீதி மனறம் ... பிறகு உச்ச நீதி மன்றம். என்று வழக்கு வேகமாக முன்னேறும். இப்போது போல் 18 ஆண்டுகள் நடக்காது. வழக்கறிஞர்கள் ... வாய்தாக்கள் ... இன்ன பிற ... அதிகமாகப் போனால் 18 மாதங்கள் நடக்கும். வழக்கின் முடிவில் “கறைகள் மிக நல்லது” என்பது முடிவாகும். இதற்குப் பின் மம்மிக்கு முழு விடுதலை. இருக்காதா பின்னே... நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்!

முழுவதுமாக மம்மி முதலமைச்சர். இப்போது நிறைய பாடம் கற்றிருப்பார்கள்.  இனிமேல்  இப்போது போல் தங்கள் பெயரிலேயே இல்லாமல்  வேறு வழியில் வெளிநாட்டு drafts வாங்குவார்கள். இன்னும் ஒரு எஸ்டேட்.... முந்திரிப் பழத் தோட்டம் (இத்தாலியிலோ?) ... ஹோட்டல் (இப்போது இங்கிலாந்தில்; அப்போது எங்கேயோ) இப்படியே வண்டி போகும். காளி மாதாவின் ருத்ர தாண்டவம் தொடரும் ............ -- எல்லோருக்கும் நன்மையைச் செய்ய என்பதைத் தான் அப்படிச் சொல்கிறேன்!

நமது தமிழ்நாட்டு மக்கள் அவரை ‘நிரந்தர முதலமைச்சர்’ ஆக்காமல் ஓய்ந்து விடுவார்களா .. என்ன..?! (’நிரந்தர பிரதம அமைச்சர்’ என்பது ஓய்ந்து விடும் என்று தான்  நினைக்கிறேன்.)

ஒரு கை பார்த்து விடுவோம் !!!


*

சில பின் குறிப்புகள்;

அது ‘பார்ப்பன அக்ரஹாரா’ அல்லது ’பரப்பான அக்ரஹாரா’ -- இரண்டில் எது சரி?

*

தீர்ப்பு வந்ததும் நண்பர் ஒருவர் - அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். வழிவந்த அதிமுக காரர் -  ரொம்ப வருத்தப்பட்டார். இந்த அம்மா நூறு கோடிக்கு எங்கே போகும் என்றார். அட .. நமக்குத்தான்யா நூறு கோடிங்கிறது ரொம்பப் பெருசு; அவுகளுக்கு இதெல்லாம் தூசு மாதிரி என்றேன்.

அவரால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

நம் நாட்டு மக்களுக்கும் நூறு கோடி இதே மாதிரிதான் பெருசா தெரியுது; அவுகளுக்கு இதெல்லாம் ஜுஜுபி என்பது தெரியவில்லை. நம்ம அளவுக்கே அவுகளையும் நினச்சிக்கிறாங்க போலும்.........

*







 *



*

10 comments:

G.M Balasubramaniam said...

மக்களுக்கு நல்ல காலம் பிறக்காதா என்று ஏங்கும் என் போன்றவருக்கு you get what you deserve என்று அழகாக ஆருடம் கூறி இருக்கிறீர்கள். பார்ப்போம்.

தருமி said...

GMB,
what you cannot eat you have to swallow.....!

விசு said...

A Nation deserves its Leader!

? said...

தீர்ப்பு வந்ததும் நண்பர் ஒருவர் - அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். வழிவந்த அதிமுக காரர் - ரொம்ப வருத்தப்பட்டார். இந்த அம்மா நூறு கோடிக்கு எங்கே போகும் என்றார்//

உங்க அப்பாவி அதிமுக நண்பரின் பார்வைக்கு...
https://www.youtube.com/watch?v=_aT-PzHsDV0

தருமி said...

நந்தவனம்,
போட்டுட்டோம்ல.... நல்லா பேசியிருக்கிறார்!!!

தருமி said...

நந்தவனம்,
இந்த ஆளு அம்மாவின் அம்மா பத்தில்ல சொல்லிக்கிட்டு இருக்கார்??

? said...

தருமி ஸார், எஸ்.எஸ். சந்திரனை ரொம்ப காலம் எம்பியாக வைத்திருந்த அம்மா, ஏன் செந்திலுக்கு ஒரு எம்எல்ஏ பதவிகூட தரவில்லை என்கிற கேள்விக்கு பதில் இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிந்தது. கம்பனி சீக்ரட்டை இப்படி அப்பட்டமாக போட்டு உடைத்தால் எப்படி?

தருமி said...

எஸ்.எஸ். சந்திரனும் பெரிய parliamentarian தான்..!

வேகநரி said...

அம்மாவுக்காக கண்ணீர் வடிக்கும் அறிவு கெட்ட பிழைக்கும் புத்தியுள்ள ஜீவனங்களின் அட்டகாசம் தாங்கல்ல.
சகோ நந்தவனத்தான், செந்தில் சொல்கிறார் அம்மா அடித்த 66 கோடி -11மில்லியன் அமெரிக்கன் டாலர் இந்தியாவில் சின்ன வியாபாரி வைச்சிருக்கான், பிளாட் போட்டவன் வைச்சிருக்கான், எல்லாருமே வைச்சிருக்காங்க என்கிறார் 11மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் வைத்திருக்கும் அளவுக்கு இந்தியன் எங்கேயோ பேயிட்டான்!!!
தமிழன் திராவிடன் என்று சொல்லியே ததாராளமாக மொட்டை அடித்துவிடலாம்.

அ. வேல்முருகன் said...

“கறைகள் மிக நல்லது” உண்மைதான்

Post a Comment