Wednesday, November 26, 2014

804. ஒரு கட்டப் பஞ்சாயத்து*


மொத மொதல்ல ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தோடு (confession) இதை ஆரம்பிக்கிறேன்: எனக்கு சுத்தமா இசையறிவு கிடையாது. என்னென்னமோ சொல்லுவீங்களே… ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி (அனு பாடுற பல்லவியா இது?), சரணம் … இதெல்லாம் ”வீசை என்ன விலை”ன்னு கேட்கிற ஜென்மம் நான்.

பின் எந்த லட்சணத்தோடு பஞ்சாயத்து பண்ண வந்த அப்டில்லாம் கேக்கப்படாது. வந்தது வந்திட்டேன்.. சொல்ல நினச்சதை சொல்லிட்டு போய்றேன். அம்புட்டுதான் ………கொஞ்சம் பொறுங்க ... தோள்ல துண்டைப் போட்டுக்குறேன்... எங்கே அந்த சொம்பு...ம்.. இந்தா இருக்கு... ஆரம்பிப்போமா...

சார்லஸ் அப்டின்னு ஒரு புது பதிவர். பத்து பதிவு மட்டும் போட்டிருக்கார். அதில நாலு பதிவு இளைய ராஜா பற்றியது. தலைப்பே இசை ராட்சஷன் அப்டின்னு வச்சிட்டாரு. எப்படி சின்ன வயசில இருந்து பாட்டு கேட்டேன் … சர்ச்ல பாட்டு பாடினேன் … எப்படி என் இசை வளர்ந்தது. எப்படி ஒரு இசை அமைப்பாளரிடமிருந்து கடைசியில் ராஜாவின் ரசிகனானேன். எந்த பாட்டை எப்பெப்போ கேட்டேன். அது எப்படி என்னை ஈர்த்தது அப்டின்னு எழுதினார்.

இப்படி அவர் பத்த வச்சதும் சிலர் – குறிப்பாக இருவர் – அமுதவன், காரிகன் வந்து எதிர்க்கருத்து வைத்தார்கள். நானும் கூட அந்தப் பக்கம் போய் ஒன்று ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அங்க அவங்கவங்க பத்த வச்சதில ஒரேடியா புகையா வந்திச்சா. கண்ணும் மண்ணும் தெரியலைன்னு வெளியே வந்துட்டேன். ஆனால் அங்க ஒரேடியா இன்னும் புகை வந்து கிட்டே இருந்ததா … சரி .. நமக்கு தோன்றதைச் சொல்லலாமேன்னு ஒரு தைரியத்தில வந்திட்டேன் …

சாமிதான் என்னய காப்பாத்தணும்.

நான் பாட்டு கேட்பேன். ஆனாலும் என் வயசுக் காலத்தில வந்த தமிழ்ப்பாட்டுகள் ஒண்ணும் தேறலை. அனேகமா அப்போவெல்லாம் முழு கர்நாடக இசையே அதிகமா இருந்திருக்குமோ என்னவோ.. அதுனால சில தமிழ்ப் பாட்டுகள் பிடிக்கும். கைராசின்னு ஒரு படம். ஜெமினி நடிச்சதுன்னு நினைக்கிறேன். அதில் ஒரு காதல் பாட்டு. கதாநாயகன் பாடுற பாட்டு. அது தான் எனக்கு மொதல்ல முழுப் பாட்டும் மனப்பாடமா இருந்தது. என்ன பாட்டுன்னு இப்போ மறந்து போச்சு. பள்ளிப்பருவம் இப்படிப் போச்சு.

காலேஜ் வந்ததும் இந்திப் பாட்டுகள் தான் பிடிச்சிது. ‘பார்ரா..அம்பது, நூறு வயலின் வச்சி இழைக்கிறாண்டா இந்த சங்கர் ஜெய்கிஷன்’ அப்டினு சொல்லுக்குவோம். தெரிந்த இன்னொரு பெயர் லஷ்மண் – பியாரிலால் மட்டும் தான். அப்பா கூட ஒரு தடவை கேட்டார்; ஏண்டா! இந்தி வேண்டாம்னு போராட்டம்; ஆனால் கேக்குறது இந்திப் பாட்டா?’ நாங்க பதில் வச்சிருந்தோம்ல … இந்தி படிக்கிறது திணிப்பு; இந்தி கேக்கிறது இனிப்பு! 


கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள். நமக்கு அதெல்லாம் எட்டவில்லை. அன்னையிலிருந்து இன்னைக்கி வரை தெரிஞ்சதே நாலஞ்சு இங்கிலிபீசு பாடல்கள். அதுக்கு மேல ஏறலை. அதுக்கெல்லாம் இங்கிலிபீசு தெரியணுமாமே… நமக்கெதுக்கு வம்பு.


எம்.எஸ்.வி. வந்ததும் தமிழ்ப் பாட்டுகள் பிடிக்க ஆரம்பிச்சது. இதுவரை வார்த்தைகள் மட்டுமே பாடல்களின் முத்திரைகளாக இருந்தன. எம்.எஸ்.வி. பாடல்களில் இசை வார்த்தைகளோடு இணைந்தன. வார்த்தைகள் மெருகேறின. வார்த்தைகளும் புரிந்தன; இசையும் அவற்றோடு இணைந்தன. கேட்க இன்பமாக இருந்தது. அன்று கேட்ட பாட்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. என்றும் இருக்கும்.

70களின் நடுவில் ராஜா வந்தார். அதன் பின் அவரது ராஜ்ஜியம் தான். நான் பார்த்த ஒரு திருப்பம்;- வெறும் வார்த்தைகளாக இருந்த பாடலில் இசையை இணைத்தார் எம்.எஸ்.வி.. அந்த இசையை மேலும் மேலும் மெருகேற்றி பாடலுக்குள் ஏற்றினார் ராஜா. 2000 வரை அவர் பாடல்கள் தான் காதில் ரீங்கரித்தன. ஆனால் இன்று ராஜாவின் புதிய பாடல்களைக் கேட்கும் போது பழைய பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அது போல் தல ஏன் இப்போ ஒரு பாடல் கூட போட முடியவில்லை என்ற ஏக்கம் தான் வருகிறது. 


ராஜாவிற்குப் பிறகு மற்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் பிடித்தன. ’அன்னக்கிளி என்னைத் தேடுதே’ கேட்ட போது எழுந்த நினைப்புகளும் நினைவில் இருக்கு. ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டு முதல் முறை கேட்ட நேரம், இடம் எல்லாமே நினைவில் இருக்கிறது. ஆனாலும் ரஹ்மான் ராஜா போல் சிம்மாசனம் போட்டு அமர முடியவில்லை, வார்த்தைகள் புரிந்து பாடல் கேட்ட காலம் முடிந்து, இசைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்பட்டதாலோ என்னவோ பழைய பாடல்கள் போல் புதுப் பாடல்களில் மனம் ஒன்று படவில்லை. இது நான் ரசித்த விதம்.

சார்லஸ் ரசித்ததும் இதுபோல் தான் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவரது பதிவு எனக்கு உடந்தையாக இருந்தது. ஆனால் அமுதவனும் காரிகனும் முற்றிலும் வேற்றுச் சுவையோடு இருக்கிறார்கள். இதுவும் இயற்கையே…. Tastes differ.

ஆனால் அவர்கள் எனக்கு இந்த இந்த இசையமைப்பாளர்கள் பிடிக்கிறது; ராஜாவைப் பிடிக்கவில்லை  என்று சொன்னால் சரி தான். ஆனால் ராஜாவின் மேல் ஏதோ வன்மம் கொண்டது போல் எழுதுவது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

பஞ்சாயத்தில் இதைப் பற்றிப் பேசுவோமே …. 

காரிகனுக்கு … 

உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் இசையில் நிறைய அறிவுள்ளவர் என்று தெரிகிறது. நல்லது.  மகிழ்ச்சி.

இருப்பினும் உங்கள் சில கருத்துகளுக்கான என் எதிர் கருத்துகள்: காரிகன் என்னிடம் -- //இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது.// என்று கேட்டிருக்கிறார். என் பதில் -- ஒரு வேளை நான் அதிகம் வாசித்திருக்க மாட்டேனாக இருக்கலாம். ஆனால் சில வாசித்திருக்கிறேன். அதிலும் மதுரைக்காரர் ஒருவர் - குமரன் - இளையராஜாவின் இயற்பியல் என்று எழுதுகிறார்.  அந்த தலைப்பில் அவர் எழுதிய அழகான பதிவுகளும் நினைவுக்கு வருகிறது. //இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது எப்படி? வாழ்க்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும்.// இது போல் அழகாக எழுதிச் செல்வார். வாசிக்கவே இன்பம் வாசித்துப் பாருங்கள் காரிகன். (இப்போது எனக்குப் பின்னால் ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடல் கேட்கின்றது…. நல்ல பாட்டு …இல்லீங்களா?)இது போல் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் என் கண்பார்வையில் ராஜாவைப் ‘போற்றிப் பாடடி கண்ணே…’ பதிவுகள் தான் அதிகம் பட்டன. அதனாலேயே உங்கள் கருத்துகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

உங்களின் இன்னும் சில கருத்துகள் என் பதில்களோடு;

//உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்?// காரிகன் நாம் யாருக்கும் conduct certificate கொடுக்க வேண்டியதில்லை. யார் இசை யார் யாருக்குப் பிடிக்கிறது என்பது மட்டுமே ‘பஞ்சாயத்தின் முன் உள்ள கேள்வி’. ?/

ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.// ஓ! இசை அறிஞர் நீங்களே இப்படிச் சொல்லும் போது நான் என்ன சொல்ல? என் ஒரே பதில்: அப்படியா? //

ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.// ஓ! நானும் ஒரு மர மண்டை தான். //

இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன்.// 
காரிகன் , This shows just how biased you are. 

காரிகன், உங்கள் இசையறிவைப் பார்த்து வியக்கிறேன்.இருப்பினும் இன்னும் சில பதிவர்களின் பதிவுகளை வாசித்த போது உங்களைப் போல், அல்லது - என் பார்வையில் உங்கள் அளவோ அல்லது அதற்கு சிறிது மேலோ உள்ள - சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தேன். படித்தவை எனக்கு மகிழ்ச்சியளித்தன. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 செளந்தர் 
ராகங்களைக் கையாள்வதில் இசைமேதை ஜி.ராமனாதனையும் , இசைமேதை கே.வீ.மகாதேவனையும் , மெல்லிசைப்பாங்கில்உயர் பிரகோகங்கள் காட்டிய மேதைகள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் தனி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒன்று கலந்து ,அவற்றுடன் தனக்கேயுரிய சப்தஜாலங்களைக் காட்டி நம்மை தன் இசையோடு கட்டி வைத்து , நினைவில் நின்றகலாத பாடல்களைத் தந்த இசைஞானி இளையராஜா அமைத்த இன்னும் சில மாயமாளவ கௌளை ராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு ....

பால ஹனுமான்
ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, (ஹே ராம்) படமாக்கப்பட்டு விட்டது. அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி, இயக்க வேண்டும். அது மிகச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்.

காரிகன், எனக்கும் இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

 செழியன்
ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ, ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது. (அமுதவன், இதே கருத்தை நாம் சிவாஜிக்கும் வைத்தோம்...)

இசை விதிகளுக்கு முரணான மீறல்களை தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளை திருத்தி எழுதியுள்ளார்.

 ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின், அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும், அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது, அவன் திசைகள் கடந்து... தனது படைப்பின் எல்லைகளை, மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை, அவனுக்குத்தரும். 

அடித்துச்சொல்கிறேன்.. உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ், ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா. (ஹே ராமில்) இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க, கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு. ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள், தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.

அமுதவனுக்கு ….
நீங்கள் சிவாஜி பற்றி எழுதி, அதற்கு வவ்வால் பதில் சொன்னது போல் இங்கு நீங்கள் எதிர்க் குரலில் பேசுவது போல் தெரிகிறது. சிவாஜி ஒரு பெரும் நடிகர்; அவரது ரசிகர் நீங்கள். வவ்வால் குறை சொன்னது உங்களுக்கு எந்த அளவு கோபம் தந்தது. இப்போது வவ்வாலின் ரோலை நீங்கள் இதில் எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா; மொசார்டுக்கு இசை சொல்லிக் கொடுத்தவர்; பாக்கிற்கு ட்யூஷன் எடுத்தவர் – இப்படியெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பது உங்கள் குற்றச்சாட்டு. சிவாஜியைப் பற்றி நீங்கள் சொன்ன சில வாசகங்களைத் தருகிறேன். நம்மைப்போல் சிவாஜி மேல் பற்றில்லாத ஒருவருக்கு நீங்கள் சொன்னவை எப்படி பொருள் படும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல,

சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.

அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய் இருந்தார்.

உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத மனிதர்கள் மிக மிக அதிகம்.

வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது. 

அத்தனையையும் குரலிலேயே கொண்டு வந்த மகா கலைஞன் உலகத்திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர யாருமே இல்லை.

அமுதவன்,  எனக்கும் மிக மிகப் பிடிக்கும் சிவாஜியைப் பற்றி நமது ஆர்வத்தில் சொல்லும் வார்த்தைகளாகத்தான் இவை இருக்க முடியும். இதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எதிர்க்கும் ஆட்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெரியாதா உங்களுக்கு?

உங்களைப் போல் இங்கே ராஜாவை விரும்புவோர் சிறிது உயர்வுபடுத்திப் பேசினால் என்ன தவறு? அவர்கள் ரசிகர்கள் - நாம் சிவாஜிக்கு இருப்பது போல்.- உயர்த்திதான் பேசுவார்கள்.

தீர்ப்பு.........

நானே ஒரு கட்சிக்காரனாகப் போயாச்சு .. இதில் என்ன தீர்ப்பு!

ஒரு எம்.ஜி.ஆர். ரசிகனையோ, ரசினி ரசிகனையோ என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர்களையெல்லாம் எப்படிடா ரசிக்கிறாங்கன்னு தான் வருஷக் கணக்கா நினச்சிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இந்த ஆளுகளுக்கு அதீத ரசிகர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் பட்டியலில் ராஜைவைச் சேர்க்க அமுதவனும், காரிகனும் கூட சம்மதிக்க மாட்டார்கள். ராஜாவை மிக அதிகமாக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் ... அதுவும் அவர்களில் பல விஷய ஞானத்தோடு இருக்கிறார்களும் என்பதும் உண்மையே.

சமீபத்தில் நண்பன் ஒருவனோடு காரில் செல்லும் போது அவன் சேமித்து வைத்திருந்ததில் Stanford Universityல் It's Different என்ற FM நிகழ்ச்சியைக் கேட்டேன். கேட்டுப் பாருங்கள். ராஜாவின் இசையை முழுக்க முழுக்க analysis செய்து, மற்ற பெரும் இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு.... மிக அருமையான நிகழ்ச்சி. இசையறிவு உள்ளவர்களுக்கு அது ஒரு உயர்ந்த விருந்து.

எனது வருத்தம் இரண்டு;
1. How to name it?, Nothing but wind போன்ற தனி இசைத்தட்டுகளை வெளியிடாமல் போய் விட்டாரே ...
2. இன்று போடும் பாடல்கள் அவரின் பழைய பாடல்கள் போல் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் ...

ராஜா 142 ராகங்களிலோ, 846 ராகங்களிலோ பாடல்கள் அமைத்திருக்கலாம். அவர் ரசிகர்கள் அவரை ரசிக்கட்டும். முடியாதவர்கள் ஒதுங்கிக் கொண்டு, அவர்கள் ரசனையைத் தேடி செல்லட்டும்.. It is all so simple!

My reqyest:
//The perfect porn music director of the Tamil film music industry//..

—  My very sincere request: better all of you stop talking about this porno music. Who is to be condemned for this – the directors, lyricists, music directors or above all, WE, the audience? இதைப் பற்றி அப்பதிவில் பேசியது நமது தரத்திற்கு மிகவும் கீழான ஒன்று.


சொம்பை எடுத்து உள்ளே வைங்க’ப்பா ... !!

*
 *

63 comments:

சார்லஸ் said...

வாங்க தருமி சார்

நீங்கள் சரியான நடுவர். இளையராஜாவை தூக்கி வைக்கவுமில்லை; தூக்கிப் போடவுமில்லை. காரிகன் கோஷ்டிக்கும் என் கோஷ்டிக்கும் நடுவில் சமர்த்தாக (சமமாக) நின்று கொண்டு இரண்டு பூனைக்கு அப்பம் பங்கிட்ட... வேண்டாம் வேறு உதாரணம் போகலாம் ....நாட்டாமை படத்தில் விஜயகுமார் போல தீர்ப்பு சொல்லியிருக்கிறீர்கள். 'தீர்ப்பை மாத்தி சொல்லு' என்று பொன்னம்பலங்கள் வந்தாலும் வரலாம் . தயாராக இருக்கவும் . பத்து பதிவுக்கே பல பேரை பார்க்க வேண்டியிருக்கு. எப்படி சார் 800 போட்டீங்க?

குறும்பன் said...

எனக்கு தெரிந்து இளையராசாவைப் பற்றி ஆகா ஓகோன்னு பாராட்டி இடுகை போட்டா அங்க அமுதவன் வந்து காரசாரமா மறுமொழியை கொடுப்பார். காரிகனைப்பற்றி தெரியவில்லை. அமுதவன் இடுகைகளை படிப்பவன் என்ற முறையில் இசைராசா மீது அவருக்கு வெறுப்பு உள்ளது என்று சொல்லமுடியும்.

துளசி கோபால் said...

!!!! ?????

நம்பள்கி said...

நேக்கு ஒன்னும் புரியலை!

கரந்தை ஜெயக்குமார் said...

இசையை ரசிப்பது என்பது அவரவர் மனதைப் பொறுத்தது
நல்ல அலசல் ஐயா நன்றி
தம 1

”தளிர் சுரேஷ்” said...

எனக்கும் இசையில் பெரிய ஆர்வம் இல்லை! ஆனால் தமிழ் இசை உலகில் இளையராஜாவிற்கு என்று ஓர் இடம் நிரந்தரமாய் உண்டு! காலங்கள் கடந்தும் அவர் பேசப்படுவார் என்பதில் மாற்றமில்லை! அவரை ஓர் இசையமைப்பாளராய் மட்டுமே நோக்க வேண்டும்! மற்ற விசயங்களை நோக்கி இழிவு செய்தல் கூடாது!

Amudhavan said...

தருமி அவர்களே தங்களின் அக்கறைக்கு நன்றி. நீங்களும் இங்கே மற்றுமொரு இ.ராவின் ரசிகராகத்தான் பேசியிருக்கிறீர்களே தவிர- நாட்டாமை, தீர்ப்புச்சொல்கிறேன் என்பதெல்லாம் நீங்களாகவே உங்களுக்கே போட்டுக்கொண்ட வேடங்களாகத்தான் தோன்றுகின்றன. அவையெல்லாம் இல்லாமலேயே நீங்கள் உங்கள் அபிமானத்தை உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் மேல் சொரிந்துவிட்டுப் போகலாம். யாரும் கேள்விகேட்கப் போவதில்லை.
சார்லஸ் தளத்திற்கு திரு காரிகன் சொல்லித்தான் வந்தேன். பொதுவாகவே எல்லாத் தளங்களுக்கும் போவதில்லை. அவர் தமது தளத்தில் சார்லஸ் தளத்திற்கு நிறையவே விளம்பரம் செய்துகொண்டிருந்தார். வருகிறவர்களிடமெல்லாம் இங்கே சென்று படித்துப்பாருங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால்தான் போக நேர்ந்தது.

நியாயமோ அநியாயமோ வேறுவிஷயம், ஓரளவு மரியாதையுடனும் கௌரவத்துடனும் பின்னூட்டங்கள் போடுகிறவர் அவர் என்பதனால்தான் பின்னூட்டங்களும் எழுதினேன். பத்ரகாளி பற்றி அவர் தவறான செய்தியைச் சொன்னார் என்பதற்காகத்தான் விவாதம் ஆரம்பித்தது. அந்த விவாதம் எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போனது.

ஒரே தளத்தில் சொல்லும் எல்லா வார்த்தைகளைக்கும் வரிகளுக்கும் விவாதம் என்று சண்டைக்கோழி போல வெற்று விவாதங்கள் பண்ணிக்கொண்டிருக்க விருப்பமும் இல்லை. நேரமும் இல்லை. இணையம் மூலம் தெரிந்த நண்பர்களாயிருக்கிறார்களே என்பதற்காக ஓரளவு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்குமேல் அங்கு வந்த சில நண்பர்கள் வரம்பு மீறிப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுகூட அவர்களைப் பற்றி எந்தவிதமான விமர்சனமும் வைக்காமல் பொதுவான விஷயத்தை மட்டுமே பேசினேன். ஆனால் நண்பர்கள் அப்படி இல்லை. இது ஒருபுறமிருக்க-------
அபிமானம் என்பது வேறு. உண்மைகளும் யதார்த்தங்களும் வேறு. இந்த வேறுபாடுகள் பற்றிய புரிதல் இணையத்தில் நிறையப்பேருக்கு இருப்பதில்லை. இதைச் சொன்னாலேயே சண்டைக்கு வருகிறார்கள். உதாரணம் சொல்கிறேன். ஜெயலலிதாவைத் தலைவியாக, தெய்வமாக கொண்டாடுவது அபிமானம். இன்றைக்கு அவர் குற்றம் செய்தவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்குப் போய் பிணையில் வெளியில் வந்திருக்கிறார் என்பது யதார்த்தம். ஆனால் இன்றைக்கும் என்றைக்கும் அவர்தான் முதல்வர், அவர் என்றென்றும் மக்களின் முதல்வர் என்று சிலர் சொல்கிறார்களென்றால் அதற்குப்பெயர் அபிமானம். யதார்த்தம் அல்ல.
இளையராஜாவைப் பற்றி இணையத்தில் அளவுக்கதிகமான துதிகள் வருவது பல யதார்த்தங்களை மறைக்கும் செயல் அல்லது மறைத்துவிடும் செயல் என்பதனால் அவருக்கு முன்னேயும் இசை இருந்தது, இவர் ஒருவர் மட்டுமே இசையமைப்பாளர் இல்லை இன்னமும் இவரை விடவும் சாதித்தவர்கள் பலர் உள்ளனர் என்று எழுத ஆரம்பித்தேன்.(தொடரும்)

Amudhavan said...

என்னுடைய பதிவுகள் ராஜா ரசிகர்களிடம் ஓரளவு அதிர்ச்சியை ஏற்படுத்திற்று என்பதை நான் உணர்வேன். காரணம் அவர்கள் இத்தனை நாட்களும் குறிப்பிட்ட ஒரே திசையில் எந்தவிதமான hurdlesஸும் இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த கருத்தை ஒட்டி போய்க்கொண்டிருந்தவர்கள். 'நாம் நினைத்ததுதான் உண்மையானது, சரியானது, உலகின் ஒரே உண்மை இதுதான்' என்றபடியேதான் போய்க்கொண்டிருந்தார்கள். அதற்கு மாற்றாக நான் பேச ஆரம்பித்தவுடன் என் மீது பாய ஆரம்பித்தார்கள். அவர்களுடைய மிகப்பெரிய ஏமாற்றம் பிளஸ் அதிர்ச்சி- சிம்பனி இசை. இப்போது யாரும் சிம்பனி பற்றிப் பேசுவதில்லை.

நான் கொஞ்சம் பதவிசாகவும் பக்குவமாகவும் பேசுவதை காரிகன் அவர் பாணியில் கொஞ்சம் காரசாரமாகப் பேச ஆரம்பித்தார். அவருடைய பாணி கொஞ்சம் வேகமான பாணி. அதிலும் அவர் மிகப்பெரிய உழைப்புடன் எழுத ஆரம்பித்த தொடர் பதிவு நிறைய இணைய நேயர்களை வேறொரு பார்வைக்கு உட்படுத்தியிருக்கிறது.

\\குறும்பன் said...
எனக்கு தெரிந்து இளையராசாவைப் பற்றி ஆகா ஓகோன்னு பாராட்டி இடுகை போட்டா அங்க அமுதவன் வந்து காரசாரமா மறுமொழியை கொடுப்பார். காரிகனைப்பற்றி தெரியவில்லை. அமுதவன் இடுகைகளை படிப்பவன் என்ற முறையில் இசைராசா மீது அவருக்கு வெறுப்பு உள்ளது என்று சொல்லமுடியும்.\\

இப்படி ஒரு கருத்து என் மீது இவர்களாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவைப் புகழ்ந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் அதுபாட்டுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் படிப்பதே இல்லை. படித்தாலல்லவா கருத்துச் சொல்ல? இதுவரை வினவு, வே.மதிமாறன், சார்லஸ், வவ்வால் ஆகியோர் தளங்களுக்கு மட்டுமே சென்று இ.ரா பற்றிப் பேசியிருக்கிறேன். இன்னமும் ஒன்றோ இரண்டோ தளங்கள் இருக்கலாம்.ஒரு ஏழெட்டு வருடங்களில் இவ்வளவு மட்டும்தான்.

ஆனால் இவரோ இ.ரா பற்றி பதிவு வந்தாலேயே அங்கே நான் ஆஜராகி சண்டைப்போடுகிறேன் என்பதுபோல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.(அப்படி ஏதாவது இருந்தால் தயவுசெய்து காட்டுங்கள் குறும்பன்) தவிர இ.ரா மீது எனக்கு 'வெறுப்பு' 'வன்மம்' என்றெல்லாம் கருத்துக்களை விதைக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவருடைய சில பாடல்கள் எனக்கும் பிடிக்கும். சில பாடல்கள் பிடிக்கும் என்பதற்கும் 'அவரைப்போல்...plus, plusக்கும்' நிறைய வித்தியாசம் இருக்கிறது. 'அவரைப்போல என்ற பிளஸ் பிளஸ்ஸை நான் சொல்லுவதில்லை. அதுதான் வித்தியாசம். இதைத்தவிர நான் இளையராஜா பற்றி மோசமாகவோ தரம்தாழ்ந்தோ விமர்சித்திருக்கிறேன் என்பதாக ஏதாவது ஒரு வரியையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். கிடையவே கிடையாது.

இங்கே மகாத்மாவை விமர்சிக்கலாம், நேருவை விமர்சிக்கலாம், இந்திரா காந்தியை, கலைஞரை ரஜனியை யாரைப்பற்றியும் விமரிசிக்கலாம் ஆனால் இ.ராவைப் பற்றி மட்டும் விமரிசிக்கவே கூடாது, சில உண்மைகளைக்கூட சொல்லவே கூடாது என்றால் என்ன அநியாயம்? என்ன அராஜகம்?
************** ********************** ****************
போஸ்டர் ஒட்டுகிறவர்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம் கிடைக்கும் இடத்தில் எல்லாம் போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடுவது என்பதுதான்.

சிவாஜி பற்றிய என்னுடைய பதிவின் மீது நீங்கள் உங்களுடைய இ.ரா பற்றிய போஸ்டரை ஒட்டியிருக்கிறீர்கள் என்பதைத்தவிர இந்த விஷயத்தில் நான் ஒன்றும் சொல்லவிரும்பவில்லை. சிவாஜியையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுப் பேசும் உங்கள் விவாதத்திற்கு நான் வரவில்லை.
******************* ***************** ********************
சார்லஸ் தளத்தில் கண்ணன் என்ற நண்பர்- (பாவம் அவர் யாரோ தெரியவில்லை). 'இவர்களிடமெல்லாம் விவாதித்துக்கொண்டிருக்காதீர்கள் மரியாதையில்லை' என்பதுபோல் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். கூடவே ஒரு வார்த்தையையும் உபயோகித்திருந்தார். அவருக்கு நன்றி சொல்லி 'விலகிக்கொள்கிறேன்' என்று சொல்லியிருந்தேன்.
உடனே இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் கண்ணன் என்ற அந்த நண்பரின் மோசமான வார்த்தைகள் கொண்ட பின்னூட்டத்திற்காகத்தான் நான் விலகிக்கொண்டேன் என்றும், அந்த கண்ணனைக் கண்டித்து அந்த வார்த்தையை விலக்கிவிட்டோம் என்றும் சொல்கிறார்கள். தலையிலடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. காரணம் இவர்கள் 'புரிதல்' இந்த அளவில்தான் இருக்கிறது.
************* ************************ *******************

நீங்கள் என்னை மதித்து நேரம் ஒதுக்கி பதிவு போட்டதனால்தான் கொஞ்சம் விரிவாக சொல்ல நினைத்துச் சொல்லியிருக்கிறேன். நன்றி.
.

Unknown said...

#கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள்#
அநேகமாய் நீங்கள் சொல்வது ...ராஜசேகரன் அவர்களின் blue birds ஆர்கஸ்ட்டிராவை சொல்கிறீர்கள் என்று நினைக்கறேன் .நீங்கள் பணிபுரிந்த அமெரிக்கன் கல்லூரியில் அவரின் இசையைக் கேட்டு மகிழ்ந்த ஞாபகம் வருகிறது !
த ம + !

வருண் said...

அடடா!

எதுக்கு வம்பு?

நான் எதையாவது சொல்லி, விவாதம் விபரீதமாக முடிஞ்சுடுமே?!

வருண் said...

****சார்லஸ்17 November 2014 05:50

அமுதவன் சார்

நீங்கள் சொல்வது முழுக்க உண்மை இல்லை . ராணிச்சந்திரா என்ற நடிகை நடித்துக் கொண்டிருக்கும்போது விபத்தில் இறந்துபோன விஷயம் நானும் அந்த நேரத்தில் அறிந்திருந்ததே! அந்தப் படத்திற்கு நானும் சென்று பார்த்து பயந்து எனக்குக் காய்ச்சல் வந்த கதையெல்லாம் தனி ! இறுதிக் காட்சிகள் பயமுறுத்தும் . ராணிச்சந்திரா அதைவிட பயமுறுத்துவார் . எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது ***

Amudhavan Sir,

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. சார்ல்ஸின் "விதண்டாவாதத் திறமைக்கு" சான்றுனு பார்க்கப்போனால..

"பத்ரகாளி" உதவுவாள்..

பத்ரகாளி (ஒரு ப்ளாக் அண்ட் வைட் படம்) வெற்றிக்கு ராணி சந்திரா ஆக்ஸிடெண்டல் மரணம் காரணம் என்பது பச்சைக்குழந்தைக்குக்கூடத் தெரியும். பாவம் சார்ஸ்க்கு என்ற அறியாக் குழந்தைக்குத் தெரியவில்லை. தெரியாதது தவறில்லை. தெரிந்து கொள்ள மறுப்பதுதான் பிரச்சினை. It is hard to prove though. It is just like giving credit to the God for someone's accidental success. Our Charles's God is IR!

காரிகன் said...

தருமி சார்,

தற்பொழுதுதான் உங்களை பஞ்சாயத்தைப் படித்தேன். முதலில் சில விஷயங்களை பேசிவிடலாம்.

நான் மர மண்டைகள் என்று சொன்னது வம்படியாக குழாயடிச் சண்டை போடும் ராஜா ரசிகர்களைத்தான். உங்களையல்ல. மேலும் நான் உங்களை இளயராஜா ரசிகர் என்றே எண்ணிகொள்ளவில்லை இந்தப் பதிவை படிக்கும் வரை. இப்போது பூனை வெளியே வந்துவிட்டது.( இது ஒரு ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம்.உங்களைத் திட்டுவதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.) எதற்காக இளையராஜாவை வீணாக வம்புக்கு இழுக்காத போதே நான் அப்படிச் செய்தேன் என்று நீங்கள் சால்ஸ் தளத்தில் ஒரு திரியைப் பற்றவைத்தீர்கள் என்று இப்போது புரிகிறது. எல்லாம் ராசா பாசம். நல்லது.

நீங்களே சொல்கிறீர்கள். சுவைகள் மாறுபடும் என்று. பின் எனக்கும் அமுதவனுக்கும் மட்டும் இந்த மாறுபடும் சுவை இருக்கக் கூடாதா? நீங்கள் இளையராஜாவின் பத்தாயிரம் பாடல்களையும் சிறப்பானவை என்று எண்ணினால் நானும் அப்படியே என்னவேண்டுமா? நானாவது சில நேரங்களில் சற்று சூடாக வார்த்தைகளைக் கொட்டுபவன். ஆனால் அமுதவன் எப்போதும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் தனது வாதங்களை வைப்பவர். அவரையும் நீங்கள் வன்மம் கொண்டு எழுதுவதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. சில உண்மைகளை சந்திக்கும் சமயங்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகிறீர்களோ என்று தோன்றுகிறது.

உங்களால் சால்ஸ் தளம் தகிப்பதாக நீங்கள் எண்ணிக்கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் உண்மையில் பத்ரகாளி படத்தைப் பற்றி நான் சொன்ன ஒரு மிகச் சிறிய தகவல் -அதுவும் நடந்த ஒன்று, பலருக்கும் தெரிந்தது அது- அவரை சூடேற்றி விட்டதாக அறிகிறேன். அமுதவன் வேறு அந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை உறுதிசெய்யவும் அவருக்கு கோபத்தில் பாயைப் பிராண்டுவதற்குப் பதில் என்னையும் அமுதவனையும் போட்டுத் தாக்க ஆரம்பித்துவிட்டார். வருண் இப்போது இந்தச் செய்தியை உறுதிசெய்திருக்கிறார். ஏன் உங்களுக்கே இது தெரியும். இடையே விமல் என்றொரு ராஜா அபிமானி - இவர் கலகம் செய்வதில் கைதேர்ந்தவர். என் பழைய பதிவுகளில் ஏகப்பட்ட முறைகள் வீண் விவாதங்கள் செய்து முடிவில் வெற்றியுடன் காணமல் போனவர் இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். அதுகூட நான்தான் அவருக்கு சால்ஸ் அவர்களின் தளத்தைப் பற்றி அறிமுகம் செய்துவைத்தேன். இதைத் தவிர முடிந்தவரை டி சவுந்தர் பதிவுகளில் என்னைப் பற்றி தரக் குறைவாக ஒரு சொல்லாவது சொல்லாமல் கருத்து எழுதமாட்டார் இந்த விமல்.

வன்மம் கொண்டு எழுதுவதாக சொல்லும் நீங்கள் இந்த விமல் போன்றவர்கள் எழுதும் --எம் எஸ் வீ இப்போதும் உயிருடன் தானே இருக்கிறார்.யாரவது நல்லிசை தரவேண்டாம் என்று மறுத்தார்களா ? 1980 , 1990 கலீல் T.R.பாப்பா ,சுப்பையா நாயுடு செத்தா போனார்கள்?உயிருடன் தானே இருந்தார்கள்.ஏன் சங்கர் கணேஷ் இப்போதும் உயிருடன் தானே வாழ்கிறார்.---- அநாகரீக கருத்துகளை படிக்காமலே தாவிச் சென்று விடுகிறீர்களோ?

--------தொடரும்-----------

Unknown said...

தருமி சார்

அமுதவன் சாக்கு போக்கு சொல்வதில் ஆகாய சூரர் ! அவரை பொருத்தவரையில் ராஜா குறை கூறுபவர்களை நன்றாக முறுக்கி விடுவார் !

இவர் யாரோ அப்படி சொன்னார் அவர் இப்படி சொன்னார் என்று தனது எழுத்து வன்மையால் கயிறு திரிப்பார்.

காரிகனுக்கு இப்போது வேப்பிலை அடிப்பது இவரது தலையாய பணி !

இவராலும் ,காரிகனாலும் ராஜாவை நக்கல் பண்ணாமல் எழுத முடிவதில்லை.ராஜா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவரை பற்றி முன்னைய இசையமைப்பாளர்களை வசை பாடாமல் தான்எழுதுகிறார்கள்.

இவர்களால் பழையவர்கள் எப்படி ராஜாவை விட சிறந்தவர்கள் என்று காண்பிக்க முடியாததால் கொதிக்கிறார்கள் வசை பாடுகிறார்கள். இது கூட ராஜா ரசிகர்களுக்கு தெரியவில்லையே என்பார்கள் !

இதில் காரிகன் செய்வது என்னவென்றால் முன்பெல்லாம் தானே சீந்தாத பாடல்களை எல்லாம் தேடி பிடித்து வரிசையாக நாமாவாளி செய்கிறார்.அதில் கொஞ்சம் ராஜாவை நக்கல் நையாட்டி சேர்க்கிறார்.அது அமுதவனுக்கு தேனில் குழைத்த அமுதம் போல ருசிக்கிறது.

கேள்வி கேட்டால் பதில் நேராக வராது !


இவர்கள் பண்ணும் கூத்துக்களில் ஒரு புள்ளி ,,,,ஒரு துளி :


Amudhavan28 April 2014 08:06
குறிப்பிட்ட ஒருவருடைய இசையை மட்டுமே புகழ்ந்து பஜனை பாடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைத்தான் இணையத்தில் சிலர் வேண்டுமென்றே செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் மனதில் அது அப்படியே படிந்துவிடும் என்ற 'சைக்காலஜியை'ப் பயன்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சிலர் இதனைச் செய்துகொண்டிருக்கிறார்களாம்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அமுதவன்:

பாரதிராஜாவுடன் இளையராஜாவுக்குத் தகராறு ஏற்பட்டு அவர் தேவேந்திரனைக் கொண்டுவந்த மாதிரி, கோவைத்தம்பிக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்படவே அவர் பம்பாய்க்குப் பறந்துசென்று அழைத்து வந்தவர்கள்தாம் லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் ஜோடி. என்னவெனில் இவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதே சண்டை கே.பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும், மணிரத்தினத்திற்கும் இளையராஜாவுக்கும்(இவர் யார் யாருடன் சண்டைப் போட்டிருக்கிறார் என்பதுபற்றி வவ்வால் போன்றவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு நல்ல பதிவு ஒன்றை எழுதலாம்) ஏற்படவே இவர்கள் அழைத்து வந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இவரால் ஏற்பட்ட 'மாற்றம்' என்னவென்பது உலகுக்கே தெரியும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

vimal

Unknown said...

அமுதவன் சார் தொடர்கிறார்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ரீதி கௌளை ராகத்தைப் பற்றிய உங்களின் லேசான கிண்டலையும் ரசித்தேன். அந்த ராகத்தில் அவ்வளவு எளிதாக பாடல் அமைக்கமுடியாது என்கிற மாதிரி நிறையப்பேர் சொல்லிக்கொண்டிருக்க ரொம்பவும் அசால்ட்டாக கண்களிரண்டால்- பாடலைப்போட்டு அசத்தினார் ஜேம்ஸ் வசந்தன்.// அமுதவன்


ரீதிகௌளை ராகத்தில் வேறு யார் என்ன பாட்டு போட்டார்கள் என்று சொல்வாரா அமுதவன் ? என்றுதான் கேட்கிறோம்.அந்த ராகத்தில் மெட்டு போட்ட ஜேம்ஸ் வசந்தனை காரிகனுக்கு பிடிக்காதாம் ஏனென்றால் " சின்ன கண்ணனை " கொப்பியடித்து விட்டாராம்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>sekar27 April 2014 09:49

இரண்டு கேள்விகளுக்கு எனக்கு முழுமையான விளக்கம் தருவீர்களா?

1, இளையராஜாவின் பாணி என்று சொல்கிறார்களே அப்படி எதைப் புதிதாகக் கண்டு பிடித்துத் தனக்குத் தனித்தன்மையை ஏற்படுத்தினார்.(அப்படி அவர்தான் கண்டுபிடித்தார் என்றால் அதற்குச் சரியான ஆதாரம்)

2, மற்ற இசை அமைப்பாளர்கள் மக்கள் மனங்களில் நிலைக்காமல் போனதற்கு என்ன என்ன காரணிகள்?

உங்களிடம் இருந்து இன்னும் பல உண்மைக் காரணிகளை எதிர்ப்பார்க்கிறேன்.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<:
இசை ஆய்வாளர் , இசை விமர்சகர் காரிகன் பதிலளிப்பதை பாருங்கள் :


காரிகன்28 April 2014 18:33

வாருங்கள் சேகர்,
இளையராஜாவின் பாணி என்ன என்று ஒரு இசை வடிவத்தை நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் அவர் 76-80 களில் மென்மையான இசையை தாலாட்டு போல அளித்தார். பின்னர் தன் இசையை பிரதானப் படுத்தி 80களில் வேறு பரிமாணம் கொண்டார். அதன்பின் வெறும் தகர டப்பா ஓசைகளாக அவரது பாணி வறட்சியடைந்தது. இன்று பெரும்பாலும் அவரின் இந்த அலுப்பூட்டும் கிராமிய இசையையே பொதுவாக மக்கள் அவரது இசையாகக் கருதுகிறார்கள். மேற்கத்திய இசையை நமது நாட்டுபுற இசையுடன் கலந்து அவர் கொடுத்த பல நல்ல பாடல்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவருடைய சாதனையில் இதை மிக முக்கியமானதாகச் சொல்வேன். ஆனால் இன்று அவர் ஒரு நாட்டுபுற இசையின் நாயகனாகவே முன் நிறுத்தப்படுகிறார். (கரகாட்டக்காரன் பாணி இசை.)

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"தகர டப்பா " என்று இப்படி சொல்லி விட்டு ,,,,,,, தொடர்கிறார்

நீங்கள் சொல்வது போல மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் மக்கள் மனதில் நிற்கவில்லை என்பது விவாதத்திற்குரியது. சமயங்களில் இது உண்மை போல தோன்றினாலும் இது ஒரு ஆரோக்கியமற்ற இசை ரசனை. இளையராஜாவின் இசை பெருமளவில் சந்தைப்படுத்தப் படுவது ஒரு காரணமாக இருக்கலாம்.கிரிக்கெட் என்ற சோம்பேறிகளின் சொரனையற்ற அலட்டல்களை விளையாட்டு என்று வியாபாரம் செய்வதைப் போல இது ஒரு மூளைச் சலவை.

,,,,,<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இந்தியாவெங்கும் உள்ள ஊடகங்களுக்கேல்லாம் ராஜா நிதி அளித்து தனது பாடல்களை ஒளிபரப்பும் படி செய்கிறார் என்ற சந்தேகம் வருகிறது இல்லையா ,,?

விமல்

காரிகன் said...

பஞ்சாயத்து என்று சொல்லிவிட்டு ஒரு சார்பாக பேசியிருக்கிறீர்கள். நல்லது. ராஜா ரசிகர்கள் என்றைக்கு நடுநிலையோடு பேசினார்கள்? 50,60 களிலிருந்து பாடல்கள் கேட்டுவரும் நீங்கள் இளையராஜாவிடம் வந்து நின்றுகொண்டு இவரைப் போல ஒருவரில்லை என்று முடிப்பது அதிர்ச்சியான ஒன்று. அப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு ராஜா மேல் அளவு கடந்த அபிமானம் வேண்டும். இந்த அபிமானம் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாது என்பது எனக்குத் தெரிந்ததே. எவ்வாறு நீங்கள் இளையராஜா என்று உங்கள் வாதத்தை நிறைவு செய்கிறீர்களோ அதேபோல நான் அவருக்கு முன்னே இருந்த இசை மேதைகளோடு என் இசை விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்கிறேன். அவ்வளவே.

இளையராஜா பற்றி எழுதும் பதிவர்கள் பலரும் ஒரே வார்ப்பில் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவர்கள். குமரன் என்பவர் தத்துவங்களோடு இளையராஜாவை அணுகுவார். எழுத்து நன்றாக இருக்கும். ஆனால் படிக்கத் துவங்கும்போதே இத்தனை மேதாவித்தனங்களும் கடைசியில் எங்கே சென்று முடியும் என்று நன்றாகத் தெரிந்துவிடும். கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார். படிச்சியா போய்க்கிட்டே இரு உனக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என்கிற ரகம். மேலும் அவர் பதிவுகளில் இளையராஜா இசை மட்டுமே இருக்கும். வேறு யாரையும் பற்றி அவர் எழுதியதாகத் தெரியவில்லை. இதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் நடுநிலையோ தருமி சார்?

சவுந்தர் ஒருவரே பழைய இசை அமைப்பாளர்களை மதித்து எழுதும் ஒரே இளையராஜா பதிவர். அபாரமாக எழுதக் கூடியவர். ராகங்களில் தேர்ச்சி பெற்ற எழுத்து அவருடையது. எல்லோரையும் பாராட்டுவார். இளயராஜாவிடம் வரும்போது இன்னும் பிய்த்து உதறுவார். ராஜாவைப் போல ஒரு ஆளில்லை என்று மற்ற ராஜா ரசிகர்கள் பாமரத்தனமாகச் சொல்வதை இவர் சற்று பூடகமாக மெழுகில் ஊசி ஏற்றுவது போல சொல்வார். ஆனால் ரஹ்மான் என்றால் அவரது அளவுகோல் சட்டென கீழிறங்கி விடும். ரஹ்மானின் ஒரு பாடலைக்கூட இவர் ஒரு விமர்சனமின்றி குறிப்பிட்டதில்லை. பாராட்டுவது கிடையவே கிடையாது. இது எந்த ஊர் நாட்டமை என்பதையும் நீங்களே பஞ்சாதது வைத்து முடிவு சொல்லுங்கள் தருமி அவர்களே.

பால ஹனுமான் தேர்ந்த இசை ரசிகர். எல்லோரையும் சிறப்பித்துப் பேசுவார். ராஜா என்றால் கொஞ்சம் கூடுதல் சிறப்பு சேர்ப்பார். ஆனால் யாரையும் இகழ்ந்து எழுதியதாகத் தெரியவில்லை.

இளையராஜாவை அளவுமீறிப் புகழும் தளங்களுக்கு சென்றுவிட்டு என் பக்கம் வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நான் நல்ல இசை கொடுத்த எல்லாரையும் பற்றி எழுதுகிறேன். அதில் இளையராஜாவுக்கும் இடம் இருக்கிறது என்பதோடு என் கருத்து முற்றுப் பெறுகிறது. அவரைத் தலையில் வைத்துகொண்டு ஆடவேண்டும் என்று எல்லோரையும் நீங்கள் கட்டாயப் படுத்த முடியாது.

நான் இளையராஜாவை விமர்சிப்பது உங்களுக்கு கசப்பது வேடிக்கைதான். கிருஸ்துவக் குடும்பத்தில் பிறந்த நீங்கள் உலகின் பெரும்பான்மையான மக்கள் வழிபாடும் ஏசுவை மறுதலித்து விமர்சனம் செய்வது குறித்து நான் ஏதாவது கேள்வி எழுப்ப முடியுமா? அது உங்களது தனி மனித சுதந்திரம் என்பதை நம்புவன் நான். உங்களது நாத்திகம் குறித்து அது தவறு என்று நான் கருத்து சொல்வது நியாயமாக இருக்குமா?

இறுதியாக இங்கிலிபீசு, சொம்ப உள்ள வைங்கப்பா என்றெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு உங்களின் தரத்தை தயவு செய்து குறைத்துக்கொள்ளவேண்டாம் பேராசிரியரே.

Unknown said...

சார்ல்ஸ் தளத்தில் ஒரு கேள்வி வைத்தார்

// எப்படித்தாண்டினார், எங்கே தாண்டினார், யாரைத் தாண்டினார், எப்போது தாண்டினார் என்ற கேள்விகளைத்தானே கேட்கிறோம். இது ஒருவேளை காரிகன் பேசும் 'porn music கிற்கான பதில் மட்டுமே' எனில் ஓகே. ///

பதிலும் சொன்னேன் ,,
ராஜாவின் சாதனை :

எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற்றது

1976 லிருந்து தொடர்ச்சியாக இசையமைப்பது.

இளையராஜா ஒருவரே தனி இசை ராஜ்ஜியம் நடாத்தியவர்.அதிகமான படங்களுக்கு இசையமைத்ததுடன் , தொடர்ச்சியாக ஹிட் பாடல்கள் தந்தது.

ஒரு இசையமைப்பாளன் சினிமா நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டது.

தொடர்ந்து அவரின் பாடல்கள் ஹிட் ஆனது, அந்த ஹிட்டை அவருடைய பாடல்கள் தான் முறியடித்தது. அவை பற்றி இன்றும் இணையத்தில் பத்திரிகைகளில் , மற்ற ஊடகங்களில் பேசப்படுதல்,

இந்தியாவில் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் வைத்தது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் தான்! இது முக்கியமான இந்திய சினிமா வரலாறு !


இசையமைக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளாதது.

பாடல் எழுதும் ஆற்றல் உள்ளமை.

இது கொஞ்சமே.

இதில் எந்த இடத்திர்க்காவது அவருக்கு முன்னைய இசையமைப்பாளர்கள் வருகிறார்களா சொல்லுங்கள் அமுதவன் ஐய்யா !/////


அது தொடர்பாக கேள்வியும் கேட்டேன். ஆள் எஸ்கேப் !

இப்போ புது கதை தயார் பண்ணியிருக்கிறார்.

///- சிம்பனி இசை. இப்போது யாரும் சிம்பனி பற்றிப் பேசுவதில்லை. ///

ஒரு படைப்பு வெளிவரவில்லை என்றால் அது படைக்கப்படவே இல்லை என்பது தான் இவரது வாதம் ! எத்தனையோ படைகள் தயாரிக்கபடுகின்ரன சில வெளிவராமல் போகின்றன.அதற்காக படம் எடுக்கபடவில்லை என்று சாதிக்கும் மேதமமையை என்ன சொல்வது?


சுப்புடு [கேட்டதாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கின்றார் ] தொடங்கி அதை கண்டக் செய்தவர் வரை பலர் பேசியாயிற்று.

சிம்பனி என்பது மேலைத்தேய இசையில் உயர்ந்த வடிவம் என்கிறார்கள் ,அதில் ராஜா செய்ததை கண்டக் செய்தவரே பாராடும் போது ராஜா ரசிகர்களுக்கு சந்தோசம் வராதா?

ராஜா ரசிகர்கள் எங்கே "சிம்பொனி கேட்டோம்" என்று எழுதினார்கள். ராஜாவின் பாடல்களிலேயே சிம்பொனியின் தன்மை உள்ளதை இசை ரசிகர்கள் உணரவில்லையா ?

இதனை அவர் சுஜாதாவிடமே கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா..?

அமுதவன் இவற்றை எல்லாம் வலிந்து திரிப்பது உள்நோக்கம் கொண்டது. அது இளையராஜா மீது உள்ள வெறுப்பே ஒழிய வேறொன்றில்லை.

அது அவரின் எழுத்தில் அலையின் நுரை போல தெரிகிறது !


ராஜா மீது விமர்சனம் வைக்கலாம் .அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்க வேண்டும் அல்லவா!

நன்றி !

விமல்

நம்பள்கி said...

ஹலோ! பத்ரகாளி படம் ஓடியதற்கு காரணம் இ.ராவும் காரணம் அல்ல ராணி.சந்திராவும் காரணம் அல்ல! தேங்காய் சீனிவாசனின் காமெடி தான் காரணம்.அவர் ஐயரா 'நன்னா உருட்டி திரட்டி லபக் என்று வாயில் போட்டால் பேஷா இருக்கும்' என்று பேசிய வசனம் எங்கள் மனதில் இன்றும் இருக்கிறது! அவர் சொம்மது அவல் உருண்டையைப் பற்றி!

Packirisamy N said...

பொறுத்தமான தலைப்பு!
சிவாஜி நடையை ராஜ நடை என்று சொல்பவர்களும் உண்டு. பேண்டுட்டு கழுவாம டவுசர் போட்டுட்டு நடக்குறமாதிரி இருக்குண்ணும், அத சொல்றவுங்களும் இருக்காங்க.
சங்கப்பலகை போல ஏதாவது இருந்தாதான் இதுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கும்.

காரிகன் said...

மேலுள்ள விமல் கேள்விகளுக்கு சால்ஸ் தளத்தில் பதில் சொல்லியாகிவிட்டது. மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

காரிகன்,
காலையில் பொட்டியைத் திறந்ததும் உங்களின் இந்த கடைசி பின்னூட்டத்தைப் பார்த்தேன்,
//மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.//
உங்கள் நாகரீகத்தைப் பற்றிப் பலரும் சொன்னதை உண்மையாக்கி விட்டீர்களே...
மிக மட்டமான வார்த்தைகள். what a 'style'!
so sorry about your "standard".

உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு வருகிறேன்.

வருண் said...

விமல்:

காரிகன் - அமுதவன் வலையுலக நட்பை நீண்ட நாட்களாக அறிவேன். இளையராஜா பற்றி மட்டுமல்ல, ஏதாவது இண்டெரெஸ்டிங் விவாதப்பதிவுகள் வந்தால், காரிகன், அமுதவன் தளத்தில் ஒரு பின்னூட்டமிட்டு "வந்து பாருங்க!" என்பார்.

இளையராஜா பதிவுக்கு மட்டுமே இவ்வழைப்புனு சும்மா இஷ்டத்துக்கு கதை விடாதீங்க!!!

---------------

இளையராஜாவின் திறமைமேல் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் "இவர் இல்லைனா இசையே செத்து இருக்கும்" என்பதுபோல் ராஜா விசிறிகள் கொடிபிடிப்பதால் பலருக்கும் எரிச்சல் ஏற்பட்டு ராஜாவை மெச்ச முடியாமல் தினறுகிறார்கள் என்பதே உண்மை நிலவரம். அதற்கு யார் காரணமென்று பார்த்தால் "ராஜாவின் பரம விசிறிகள்" என்பதுதான் உண்மை.

***அது தொடர்பாக கேள்வியும் கேட்டேன். ஆள் எஸ்கேப் !***'

எந்த ஒரு விவாதத்திலும் ஒருவர் கேட்ட கேள்விக்கு எதிரணி பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. இதென்ன நேர்முகத் தேர்வா??? அந்தக் கேள்வியை புறக்கணிக்க பல காரணங்கள் இருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு அர்த்தமற்ற கேள்வியாகக் கூட இருக்கலாம். அப்படி ஒரு கேள்வியை புறக்கணித்து ஒருவர் பதில் சொல்லலைனா, கேள்வி கேட்டவர் "வெற்றியடைந்ததாக" பிதற்றுவது விவாதக்கள அனுபவம் பற்றாமைதான் காரணம்.

****இந்தியாவில் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் வைத்தது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் தான்! இது முக்கியமான இந்திய சினிமா வரலாறு !***

அடடா!! என்ன ஒரு அளவுகோல்!! செம காமெடி!!!!

உங்ககிட்ட வாதம் செய்ற காரிகன், அமுதவன் இருவருமே பாவம். தங்கள் த்ரம் மற்றும் தகுதியிலிருந்து ரொம்ப இறங்கி வந்துட்டாங்க போல இருக்கு-உங்க லெவலுக்கு!!!
இணையத்தில் ஒவ்வொரு நேரங்களில் இப்படியும் ஆகிவிடுகிறது.
----------------

BTW, Are you "new" this blogwold???

Or this "identity" new?? I am sure you were existing here in some other "identity". I strongly believe, you purposely wore this anonymous "vimal costume" just for this debate! YES, I am accusing you of pretending to be a "vimal" and you do have other avatars in this blog world. :)

வருண் said...

***காரிகன்,
காலையில் பொட்டியைத் திறந்ததும் உங்களின் இந்த கடைசி பின்னூட்டத்தைப் பார்த்தேன்,
//மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.//
உங்கள் நாகரீகத்தைப் பற்றிப் பலரும் சொன்னதை உண்மையாக்கி விட்டீர்களே...
மிக மட்டமான வார்த்தைகள். what a 'style'!
so sorry about your "standard".

உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு வருகிறேன்.***

Dharumi Sir!

Even the "God" can not stay "cool" in internet debates ALL THE TIME! If one does not cross the "line" one time or other in a heated argument with someone who is REALLY annoying, then he/she is not a "human being". I think Karigan is a human being and so you see what you see.

Unknown said...

காரிகன்
நீங்க பதில் சொல்லவில்லை.
சொன்னது பொழிப்புரை!

தாண்டியது பற்றி ...
எனக்குத் தேவை yes. அல்லது No

ப்ளீஸ்

விமல்

காரிகன் said...

தருமி சார்,

ஏனிந்த கோபம்? பேராசியராக இருந்தவர் அனுபவம் வாய்ந்தவர் இப்படி கோபப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பொட்டியை திறந்ததும் என் மட்டமான பின்னூட்டத்தைக் கண்டது இன்றைக்குத்தானே? நேற்றே இரண்டு பின்னூட்டங்கள் பிரசுரித்தீர்களே அது உங்கள் கண்ணில் பட்டதால் தானே இத்தனை ஆவேசம்? முதலில் பெரிய மனித தோரணையில் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லுங்கள். என் நாகரீகம் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. மதம் பிடித்த பதிவுகளை எழுதும் உங்களுக்கு நாகரீகம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று introspect செய்துகொள்ளுங்கள்.

நண்பர் சேகர் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாராம். அதை நீங்கள் வெளியிடவில்லை என்று தெரிவிக்கிறார். அதையும் செய்துவிடுங்கள். பஞ்சாயத்தை ஆரம்பித்தால் போதுமா? வாதம் செய்ய அஞ்சலாமா? சொம்பை மறுபடி எடுத்து வைக்கவும்.

காரிகன் said...

இங்கிலிபீசு என்று நக்கல் அடித்துவிட்டு பிறகென்ன ஆங்கிலத்தில் காமெண்ட்? இதை கேட்க மறந்து போனேன். இதற்கும் பதில் சொல்லிவிடுங்கள்.

காரிகன் said...

வருண்,

அடுத்த கட்டங்களை நோக்கி நர்கவதே விவாதங்கள். சால்ஸ், விமல், இப்போது தருமி போன்றவர்கள் பதில் சொல்லமுடியாது ஒரு பழைய கருத்தை வைத்துக்கொண்டே இருபது முப்பது காமெண்ட் போடுவார்கள். பொறுமையாக பதில் சொல்லியும் கேட்கமாட்டார்கள். ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரியே. எனது தரத்தை விட்டு கீழிறங்கியே இவர்களுக்கு நான் பதில் சொல்லவேண்டியதாக இருக்கிறது. அதற்காக சிறிது வருத்தம் ஏற்பட்டாலும் இத்தனை வேகம் அவசியம்தான் என்று தோன்றுகிறது. விமல் என்ற ராஜா வெறியர் எழுதியதை நீங்கள் படித்தால் என் உஷ்ணத்தை உணர்ந்துகொள்வீர்கள்.

அவர் சொல்கிறார்:""எம் எஸ் வீ இப்போதும் உயிருடன் தானே இருக்கிறார்.யாரவது நல்லிசை தரவேண்டாம் என்று மறுத்தார்களா ? 1980 , 1990 கலீல் T.R.பாப்பா ,சுப்பையா நாயுடு செத்தா போனார்கள்?உயிருடன் தானே இருந்தார்கள்.ஏன் சங்கர் கணேஷ் இப்போதும் உயிருடன் தானே வாழ்கிறார்.

1980 கலீல் உயிருடன் இருந்த ராமமூர்த்தி , கோவர்த்தனம் ,சுதர்சனம் , லிங்கப்பா , ராஜேஸ்வரராவ் இன்னும் பலரை யாரும் சீந்தவில்லை என்பதே உண்மை.இன்னும் எத்தனையோ பேர் ராஜாவுக்கு பின்னால் வந்தவர்களுக்கும் இதே கதி நடக்கிறது உங்களுக்கு தெரியாதா ..?---

இப்படி கருமாந்திரக் கருத்து சொல்லும் ஒருவரை விட்டுவிட்டு வாந்தி எடுக்கவேண்டாம் என்றதை மட்டம் என்று சான்றிதழ் அளிக்கிறார் தருமி. ராஜா ரசிகர்கள் 'ராஜா தவிர மத்தவனெல்லாம் செத்துப் போனவனுக" என்று எழுதினால் கூட தருமி அவர் ப்ரொபைல் படத்தில் சிரிப்பது போல சிரித்துவிட்டு "உண்மைதானே" என்று சொல்வார் போல.

நானும் ஒரு மனிதப் பிறவி என்பதைத் தாண்டி இதைவிட மோசமாக என்னால் வார்த்தைகளை வீச முடியும். பாவம் இளையராஜா. உங்கள் கருத்து நியாயமானது. ஆனால் இவர்களிடம் நியாயம் எடுபடாது. உங்களையும் வைத்து வீடு கட்டுவார்கள். சில சமயங்களில் சற்று கீழிறங்கி ஆடினால்தான் நமக்கு மரியாதை போல.

உங்களின் எதிர்பாராத திடீர் ஆதரவுக்கு நன்றி.

Unknown said...

அருண்

காரிகன் ரொம்ப நல்லவராக இருக்கலாம் ,ஆனால் அறியாமையில் அவர் இடும் "பதிவுகளில் " ,அவரது பின்னூட்டங்களில் இருக்கும் அறியாமையைத் தான் சுட்டுகிறோம்.

"ராஜா ரசிகர்கள் " தவறுதலாக ஏதாவது சொன்னால் - அடடா இது கட தெரியவில்லையே என்பது தானே காரிகனும் அமுதவனும் சொல்வது உங்கள் நெற்றிக்கண்ணுக்கு படவில்லை .பரவாயில்லை.

சார்ல்ஸ் தளத்தில் பின்வருமாறு கூறுகிறார் பாருங்கள் :
//சரிதான். சரக்கு அவ்வளவுதானா? இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன். நானே இதைவிட இளையராஜாவின் சிறப்பை அழகாகச் சொல்வேனே? // காரிகன்

இந்த தலைக்கனம் தான் அவரின் கண்ணை மறைக்குது.

சொன்னாலும் தெரியாது சுயமாயும் தெரியாது
மன்னாதி மன்னர் என்று மனதுக்குள்ளே நினைத்திடுவார்

கட் அவுட் வைத்த கதை காமடி என்று அமுதவன் காரிகன் பாணியில் பேசி தப்பிப்பதில் பயனில்லை.

எந்த ஒரு விவாதத்திலும் ஒருவர் கேட்ட கேள்விக்கு எதிரணி பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. இதென்ன நேர்முகத் தேர்வா???

என்கிறீர்கள் , காரிகன் போன்றவர்கள் இதை தான் எதிபார்க்கிறார்கள்.அதன் எதிர் வினை தான் இது.

மீண்டும் சவுடால் விடுவது அவர் தான் ; இதோ பாருங்கள்
//// <<< இன்னும் பத்து பாய்ன்ட் இளையராஜாவைப் பற்றி தயாரித்துக்கொண்டு வாருங்கள். இன்னும் அதிகமாக விவாதிக்கலாம்.>>>> /// காரிகன்

vimal

காரிகன் said...

வருண்,

விமல் உங்களைத்தான் அருண் என்று அழைக்கிறார். வியப்படைய வேண்டாம். அவரது தமிழ் கொஞ்சம் ஒரு மாதிரியானது. நமக்கு தமிழ் தெரிந்ததால் அவர் சொல்ல வரும் கருத்துக்களை அவர் தவறாக எழுதினாலும் புரிந்துகொள்ளலாம்.

இளையராஜாவின் சிறப்பை கண்டிப்பாக நான் விமலை விட அழகாகச் சொல்வேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். அதே சமயம் விமர்சனம் செய்யவும் தயங்கமாட்டேன்.

கட்டவுட்சாதனை காமடியாகிப் போனதில் விமல் நொந்துவிட்டார் போலும். அவரது முத்திரை சமாளிப்பான அமுதவன் காரிகன் வசவுகள் தொடர்கின்றன. பத்து இருபதடி கட்டவுட் வைப்பதை மிக சீரியஸாக ஒரு சாதனை ரேஞ்சுக்கு பட்டியல் போட்டுவிட்டு இப்போது அந்த அபத்தத்தை நீக்க வழியின்றி என்னைத் தாக்குகிறார்.

நீங்கள்தானேப்பா இளையராஜாவை தாண்டியவர்கள் உண்டா என்று கரகாட்டம் ஆடினீர்கள்? ஏன் அடுத்த பத்து சாதனைகளைத் தொகுப்பதில் சிரமமோ? இல்லை எதுவும் தேறவில்லையா? வருண் விவாதத்தின் இயல்பை சொன்னதும் அதன் பின்னே ஒளிந்துகொண்டு "இவன்தான் கேட்டான் எனக்குத் தெரியாது" என்று
கண்ணாமூச்சி விளையாடுகிறீர்கள். வருண் சொன்னது விவாதத்தின் உண்மை பொருள் அறிந்தவர்களுக்கு. உங்களுக்கல்ல.

சார்லஸ் said...

தருமி சார்

இப்ப உங்கள் தளம் சூடு பிடிச்சிடுச்சு ! காரிகன் இங்கும் வந்து 'பதினாறு வயதினிலே காந்திமதி ' போல காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறார் . இதில் அவர் தரத்திற்கு நம்மிடம் இறங்கி வந்து பேசுகிறாராம் . வருண் அவரை ' Karigan is a human being ' என்று தரச் சான்றிதழ் வேறு கொடுத்திருக்கிறார் . -த்திரத்தை கூட அடக்கிடுவார் போல ! ஆத்திரத்தை அடக்க மாட்டேன் என்கிறார். நீங்கள் சொன்ன kaari gun என்ற வார்த்தை சரிதான் !

Gujaal said...

பெரியவர் அமுதவனுக்கு இளையராஜா மீது எரிச்சல். அதாவது இணையத்தில் ராஜாவைப் பாராட்டுவது போல் அவருக்கு முந்தைய தலைமுறையை யாரும் கண்டு கொள்வதில்லை என்ற ஆதங்கம். அதனால் அவர் செய்வது எல்லாம் 'ராஜா என்னய்யா ராஜா, எங்க எம்மெஸ்விய கேட்டிருக்கியா, கேவியெம்ம கேட்டிருக்கியா, சுப்பராயன/சுதர்சனத்த/சுப்பையா நாயுடுவ கேட்டிருக்கியா, அவங்களுக்கு முன்னால இவரெல்லாம் கால் தூசு' என்பது.

ராஜாவின் இசையை அதன் இனிமையாலும், நுட்ப நேர்த்தியாலும் ரசிப்பவர்கள் இரண்டு விதமாக ரியாக்ட் செய்கிறார்கள். ஒன்னு, 'எங்காளு கடவுள், நீ மூடிட்டுப் போ' என்பது இல்லாட்டி 'சரி. அவங்க இசையெல்லாம் எப்படி சிறந்ததுன்னு இளையராஜா இசைய dissect பன்னின மாதிரி செஞ்சு விளக்குங்க' அப்படிங்கறாங்க. இதுக்கு பதிலளிக்க அந்தக் கால இசைய ரசிப்பவர்களை வைத்து விளக்காமல் ராஜா ரசிகர்களை கிணற்றுத் தவளைகள் என்று வசை பாடுவார்.

காரிகன்! அவரு crowdல தனியாத் தெரிய விரும்பும் ஆசாமி. ஊரே கொண்டாடும் ஒருவரை எதிர்ப்பதன் மூலம் தன்னை அறிவாளி எனக் காட்டிக் கொள்ள விரும்புபவர். தான் கொண்ட கருத்துக்கு மாற்றாக எதையும் காது கொடுத்துக் கேட்க விருப்பம் இல்லாமல் *my way or the freeway* என்றிருப்பவர்.
அவருடன் ஒரு constructive விவாதம் நடத்த முயன்று தோற்ற ராஜா ரசிகர்கள், இசை ரசிகர்கள் பலர் உளர்.

இதனாலேயே இவருடைய தொடர் 70களின் பிற்பகுதியைத் தாண்டாமல் நொண்டியடிக்கிறது.

இந்த மென்டாலிட்டி கொண்ட இன்னொருவர் வவ்வால்.

ஒரு விதத்தில் மேற்சொன்ன இருவரும் கடும் உழைப்பாளிகள், தேடுதல் வேட்கை கொண்டவர்கள், ஆனால் தான் சொன்னதே சரி என்று நம்பும் egotists.

ஆக இளையராஜா எதிர்ப்பு என்ற புள்ளியில் இவர்கள் ஒன்றிணைந்து சேர்ந்திசை நடத்துகிறார்கள்.

Gujaal said...

*எம்.எஸ்.வி. வந்ததும் தமிழ்ப் பாட்டுகள் பிடிக்க ஆரம்பிச்சது. இதுவரை வார்த்தைகள் மட்டுமே பாடல்களின் முத்திரைகளாக இருந்தன. எம்.எஸ்.வி. பாடல்களில் இசை வார்த்தைகளோடு இணைந்தன. வார்த்தைகள் மெருகேறின. வார்த்தைகளும் புரிந்தன; இசையும் அவற்றோடு இணைந்தன. கேட்க இன்பமாக இருந்தது. அன்று கேட்ட பாட்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. என்றும் இருக்கும்.

70களின் நடுவில் ராஜா வந்தார். அதன் பின் அவரது ராஜ்ஜியம் தான். நான் பார்த்த ஒரு திருப்பம்;- வெறும் வார்த்தைகளாக இருந்த பாடலில் இசையை இணைத்தார் எம்.எஸ்.வி.. அந்த இசையை மேலும் மேலும் மெருகேற்றி பாடலுக்குள் ஏற்றினார் ராஜா. 2000 வரை அவர் பாடல்கள் தான் காதில் ரீங்கரித்தன. ஆனால் இன்று ராஜாவின் புதிய பாடல்களைக் கேட்கும் போது பழைய பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அது போல் தல ஏன் இப்போ ஒரு பாடல் கூட போட முடியவில்லை என்ற ஏக்கம் தான் வருகிறது. *

இது சரியான புரிதல்தான். ராஜாவோட மெலடிக்கு சமாதி கட்டி இப்போது ரிதத்திற்கு முக்கியம் தருகிறார்கள், அடுத்தது எல்லா கருவிகளின் இசையையும் செயற்கையாக உருவாக்குவதால் இசையின் உயிர் போய்விட்டது.
ரஹ்மானின் இசையிலோ, யுவனின் இசையிலோ மெலடியினால் வசீகரிக்கும் பாடல்கள் குறைவே. இன்னொரு சாபம், வேற்று மொழிப் பாடகர்களைக் கொண்டு உச்சரிப்பைக் கொலை செய்வது.

வேகநரி said...

//எனக்கு சுத்தமா இசையறிவு கிடையாது.//
அப்படின்னு ஒண்ணு இருக்கா?நானும் காதுல மாட்டி கொண்டு பல நேரம் இசை கேட்டு தான் திரிகிறேன். இசை அறிவு என்று ஒன்றே தெரியாது. பிடித்ததை ரசிப்பேன். தமிழ் பாடல்கள் என்று நண்பர்கள் தந்ததில் அறிமுகபடுத்தியதில் எனக்கு பிடித்தது ஹாரிஸ்சின் பாடல்கள். ஆனா இளையராஜாவுக்கு சிறு தமிழ் பசங்க பசங்கிகள் உட்பட பெரும் ரசிகர் படையே இருப்பதை கண்டிருக்கேன். அதனாலே தமிழ் இசை உலகில் சிம்மாசனத்தில் இருப்பது உங்க இளையராஜா என்று தான் நினைக்கிறேன்.

காரிகன் said...

சார்லஸ் said...
தருமி சார்
இப்ப உங்கள் தளம் சூடு பிடிச்சிடுச்சு ! காரிகன் இங்கும் வந்து 'பதினாறு வயதினிலே காந்திமதி ' போல காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறார் . இதில் அவர் தரத்திற்கு நம்மிடம் இறங்கி வந்து பேசுகிறாராம் . வருண் அவரை ' Karigan is a human being ' என்று தரச் சான்றிதழ் வேறு கொடுத்திருக்கிறார் . -த்திரத்தை கூட அடக்கிடுவார் போல ! ஆத்திரத்தை அடக்க மாட்டேன் என்கிறார். நீங்கள் சொன்ன kaari gun என்ற வார்த்தை சரிதான் !------


பேராசிரியர் தருமி அவர்களே,

உங்கள் நண்பர் சார்லஸ் வெளியிட்டிருக்கும் இந்தப் பின்னூட்டம் மிகவும் நாகரீகமாக உங்களுக்குத் தெரியுமே? இதைப் பற்றி பேச உங்களுக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்காதே? பொட்டியைத் திறந்ததும் இது உங்கள் கண்ணில் படாதே? நாட்டமை ரேஞ்சுக்கு சொம்புடன் உட்கார்ந்த உங்களின் இமேஜ் சரிவது போலத் தெரிகிறதே. மீண்டும் ஏதாவது மதத் தொடர்பான உளுத்துப் போன கட்டுரை ஒன்றை காப்பி பேஸ்ட் செய்து தருமி 805 என்று வெளியிடுங்கள். இப்போதுதான் தெரிகிறது எப்படி இந்த 800 சாத்தியமாயிற்று என்று.

காரிகன் said...

குஜால்,(பேரைச் சொல்லவே ஒரு மாதிரியாக இருக்கிறது. வேற வழி!)

இளையராஜா ரசிகர்கள் இரண்டு ரகம் என தரம் பிரித்திருக்கிறீர்கள். அது அப்படியல்ல. நான்கைந்து ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். தருமி கூட இளயராஜா ரசிகர் என்பதையே இப்போதுதான் அறிகிறேன்.

அமுதவன் கொண்டுள்ள ஆதங்கம் உண்மையே. ஆனால் அதை தவறு என்கிற ரீதியில் நீங்கள் குறிப்பிடுவது சரியல்ல. அறிவியல் தொழில் நுட்பம் விரிவடைந்த சமயங்களில் புதிய புதிய மாற்றங்கள் எல்லா துறையிலும் உணரப்படும் நிதர்சனத்தில் திரையிசையும் அதனால் மெருகேறியது என்பதை மறுக்க முடியாது. இளையராஜாவின் காலத்தில் டேப் ரெகார்டர் (கசெட் ப்ளேயர்) ஜனனம் கண்டது. இசையை கைகெட்டிய சிறு செலவில் பதிவு செய்து கேட்கக்கூடிய வசதியை அது கூடவே கூட்டி வந்தது. ரஹ்மான் காலத்தில் இந்த வளர்ச்சி பிரமாண்டமாக மாறியது. இந்த நோக்கில் நாம் இசை அமைப்பாளர்களையும் அவர்கள் காட்டிய புதுமைகளையும் அடையாளம் கண்டால் ஒரு தெளிவான படம் கிடைக்கும். இல்லாவிட்டால் வீண் வாதங்கள்தாம் மிஞ்சும்- இப்போது போல.

நான் என்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள புகழ் பெற்றவர்களை விமர்சிப்பதாக நீங்கள் குறிப்பிடுவது நான் எதிர்பார்த்ததே. நான் இணையத்தின் லைக்ஸ் ஹிட்ஸ் போன்ற சங்கதிகளையே அறியாதவன் மேலும் விரும்பாதவன். அப்படியானால் இளையராஜாவை விட இன்றைக்கு அதிக புகழ் அடைந்திருக்கும் ரஹ்மானை விமர்சித்தால் நான் இன்னும் பெரிய அறிவாளியாக அறியப்படுவேனே? அல்லது ஒரு ரஜினிகாந்த், கமலஹாசன், பாரக் ஒபாமா, வில் ஸ்மித்,கிறிஸ்டபர் நோலன்...
--காரிகன்! அவரு crowdல தனியாத் தெரிய விரும்பும் ஆசாமி. ---- எனக்கு நீங்கள் சொல்லும் அந்த கூட்டமே பிடிக்காத ஒன்று. நான் ஒரு தனிமை விரும்பி.
-----அவருடன் ஒரு constructive விவாதம் நடத்த முயன்று தோற்ற ராஜா ரசிகர்கள், இசை ரசிகர்கள் பலர் உளர். ------மிக்க நன்றி. ஒரு சிறிய திருத்தம். constructive என்று நீங்கள் சொல்வதோடு மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. ராஜா ரசிகர்கள் செய்யும் விவாதங்கள் ஒன்று ஆராதனையாக இருக்கும் அல்லது அபத்தமாக இருக்கும். அவர்கள் கொண்டுள்ள அபிமானத்தையும் அவர்கள் சந்திக்கும் நிஜத்தையும் பிரிக்கும் கோட்டுக்கு அவர்களை கொண்டு வரவேமுடியாது. அதனால்தான் அவர்களால் என்னுடன் ஒரு நிலைக்கு மேல் வாதம் செய்ய முடியாது என்னை வசைபாடிக்கொண்டே காணாமல் போய்விடுவார்கள். இப்போது தருமியையே உதாரணம் கொள்ளலாம். அவர் ஒரு நாத்திகர். மதங்களை விமர்சிப்பார். அவர் பிறந்த மதத்தின் ஏசுவை நக்கல் அடிப்பார். இதற்கெல்லாம் வசதியாக தனி மனித சுதந்திரம் பேசும் அவர் நான் இளையராஜாவின் பாடல்களில் எத்தனை தேறும்? என்றதும் அப்படியா? என்று அதிர்ச்சியடைகிறார். அது எப்படி இளையராஜாவை இப்படி விமர்சிக்கலாம் என்பதே அதன் அர்த்தம். எனக்கு எதோ இளையராஜா மீது வன்மமாம். என் நோக்கத்தைக் குறித்து உங்களுக்கு என்ன கவலை என்பதே எனது தாழ்மையான கேள்வி. என் கருத்தை விமர்சியுங்கள். அதுதானே நியாயமான விவாதம்.

---இதனாலேயே இவருடைய தொடர் 70களின் பிற்பகுதியைத் தாண்டாமல் நொண்டியடிக்கிறது. ----

நண்பரே, நீங்கள் கண்டது முழுமையானதல்ல. நான் இருபது பதிவுகளுக்கு மேலே இசை பற்றி எழுதியிருக்கிறேன். தற்போது எழுபதுகளின் இன்னிசையை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஒரு சிறிய பணியாக எழுபதுகள் பற்றி தொடர்ச்சியாக பதிவுகள் எழுதி வருகிறேன். இதை வைத்து நொண்டியடிக்கிறது படுத்துவிட்டது என்று சொல்வதெல்லாம் முட்டாள்களின் முடிவுகள். எழுபதுகளைத் தாண்டி இது எண்பதுகள் என்று நீளும். அப்போது இன்னும் அதிகமாக நீங்கள் ஆவேசப்படுவீர்கள் என்று இப்போதே சொல்லிக்கொள்கிறேன்.

Anonymous said...

//உளுத்துப் போன கட்டுரை ஒன்றை காப்பி பேஸ்ட் செய்து தருமி 805 என்று //

காரிகன்,
In this case, I am on your side Kaarigan

I support You, Amudhavan & Varun. But, please don't indulge in personnel attack on Dharumi sir and his posts. He is just expressing his thoughts.

Unknown said...

தருமி சார்
தங்கள் தரமான நாகரீகமான எழுத்தை ரசித்தேன்.அமுதவன் பொதுவாக இளையராஜாவை நாசூக்காக இழிவு படுத்துவார்.சிவகுமார் ,சிவாஜி என்றால் உச்சி முகர்வார்.அதே அளவுகோல்களை மற்றவர்கள் மீது வைத்தால் தாங்கி கொள்ளமாட்டார்.
தனியே எழுதிக்கொண்டிருந்தவருக்கு காரிகன் கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

// அவருடன் ஒரு constructive விவாதம் நடத்த முயன்று தோற்ற ராஜா ரசிகர்கள், இசை ரசிகர்கள் பலர் உளர். //

மேலே குஜால் சொன்ன கருத்து தெளிவானது.நான் சொல்ல வந்ததை அவர் அழகாகச் சொல்லியுள்ளார்.
பாடல்களைப் பட்டியல் போடுவதை இசை எழுத்தாக கருதுகிறார்கள்.என்ன செய்வது இசை என்பது மலிந்த சரக்காகி விட்டது .
காலாவதியாகிப் போன கருத்துக்களை காவித் திரிபவர்கள் இவர்கள்.!!

காரிகன் said...


ஏலியன், நன்றி.

சரியாகப் புரிந்துகொண்டதற்கும், ஆதரவுக்கும்.

பேராசிரியர் தருமியை நான் தாக்க விரும்பவில்லைதான். நான் அனுப்பிய இரண்டு நியாயமான பின்னூட்டங்களுக்கு வேண்டிய பதிலை தவிர்த்துவிட்டு நான் சில குள்ளநரிகளுக்கு அவர்கள் பாஷையில் சொல்லியிருந்த ஒரு வார்த்தையை வைத்துகொண்டு உடனே என்னைப் பற்றி ஒரு குறிப்பு வரைந்தார். குறிப்புடன் ஒரு அடைமொழியும் வைத்தார். முதலில் பஞ்சாயத்து என்ற பெயரில் எதற்கு இந்த தேவையில்லாத பதிவு? நடுநிலையோடு கருத்து சொல்லியிருந்தால் நான் எதற்கு இங்கே வரப்போகிறேன். இதோ அவரே சொன்னது
"தீர்ப்பு......... நானே ஒரு கட்சிக்காரனாகப் போயாச்சு .. இதில் என்ன தீர்ப்பு!" இப்படிச் சொல்லிவிட்டு தீர்ப்பு கொடுக்கும் நாட்டாமையை பார்த்து மக்கள் நக்கலடிக்காமல் வேறென்ன செய்வார்கள்?

நானும் மதங்களை விரும்பாதவன்தான். ஆன்மீகத்தில் திளைக்கும் கூட்டத்தினரையும் கடவுள் பெயரில் அரங்கேறும் மூடச் செயல்களையும் அறவே வெறுப்பவன். எனவே நானும் அவரும் ஒரு வகையில் ஒரே கட்சிதான்.

சார்லஸ் said...

காரிகன்

தருமி சார் பதிவர்களில் சீனியர் . நீங்கள் 20 பதிவுகள் போட்டுவிட்டு அலட்டிக் கொண்டிருக்கும் வேளையில் 805 ஐ தொடப் போகும் அவர் அமைதியாக உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் . இளையராஜாவின் இசை முன்னோர்களை விமர்சிக்கும் ரசிகர்களை கண்டமேனிக்கு வார்த்தைகளால் வசை பொழிகிறீர்களே ....அதே மாதிரி பதிவர்களில் முன்னோரை நீங்கள் வசை பாடலாமா? உங்களை 'குறைத்து' ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் எவ்வளவு கோபம் வருகிறது . ' உளுத்துப் போன பதிவு ' என்று தருமி அவர்களின் பதிவை மட்டமாகப் பார்க்கிறீர்கள் . அவர் தொடாத சப்ஜெக்ட் இல்லை. உங்கள் வார்த்தைகளுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்க்கும் நாகரீகம் உங்களிடம் இல்லையே!

தருமி said...

2005ல் என் பதிவில் - http://dharumi.blogspot.in/2005/10/81.html - ’மனிதன்’ என்ற புனைப்பெயரில் வந்த ஒருவன் பின்னூட்டப் பகுதியில் மடத்தனமாக சில சொல்லிச் சென்றான். அது ஒன்று மட்டுமே இத்தனை ஆண்டுகளில் ஒரு பதிவனாக நான் அனுபவித்த ஒரே ஒரு கஷ்டமான விஷயம்; மனதைப் புண்படுத்திய ஒரே விஷயம். ஆனால் ஒன்பதைரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இப்பதிவில் சில பின்னூட்டங்கள் மனதை மிகவும் பாதித்தன. அவைகள் எழுதத் தெரியாத என் எழுத்துகளால் விளைந்த விஷயமாக இருக்க வேண்டும்; அல்லது எழுதியவரின் அசாதாரணமான ”புத்திக் கூர்மை”யின் விளைவாக இருக்க வேண்டும். இதில் எது என்பதை இப்போது எழுத மனமில்லாததால் இரு நாட்களாக ஏதும் அது பற்றி எழுதவில்லை.

ஆனால் அப்படியே விட்டுப் போகவும் மனமில்லை. கட்டாயம் அது பற்றி எழுதியே ஆகவேண்டும் ……..

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//மதம் பிடித்த பதிவுகளை எழுதும் உங்களுக்கு நாகரீகம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று introspect செய்துகொள்ளுங்கள். //

படா ஜோக் இது!!! யோசித்து, புரிந்து தான் இந்த சொற்றொடரை எழுதினீர்களா என்று ஒரு சந்தேகம். ஏனெனில் இது அத்தனை ………………..!!!

மதங்களை மறுத்தால் அவன் நாகரீகம் அற்றவனாகி விடுகிறானா? ஓ .. இவ்வளவு பெரிய ஆத்திகப் பெருமானா நீங்கள்? மதம் மறுத்து எழுதுவது நாகரீகம் இல்லாதது என்று நாகரீகம் தெரிந்தவர்கள் யாரும் சொல்வதில்லை; சொன்னதில்லை. ஆனால் காரிகன் ஸ்வாமிஜிக்கு இது கஷ்டமாகத்தானிருக்கும். அவரின் நாகரீகம் இது தான்!!! நீங்கள் இப்படிப்பட்ட ஒரு ஸ்வாமிஜி என்று எனக்குத் தெரியாது.

காரிகன் ஸ்வாமி, இப்படி ’நாகரீகம் இல்லாத பதிவுகளை’ எழுதும் என்னிடம் என்ன வேலை உங்களுக்கு?

தருமி said...

காரிகன் ஸ்வாமி,

நான் செய்தது பஞ்சாயத்து அல்ல .... கட்டப் பஞ்சாயத்து என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு என் தலைப்பைக் கேள்வியாக்குங்கள். புரியாமல் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பதை விட அர்த்தம் தெரிந்து கேள்வியெழுப்புங்கள், ஸ்வாமி!

தருமி said...

//மீண்டும் ஏதாவது மதத் தொடர்பான உளுத்துப் போன கட்டுரை ஒன்றை காப்பி பேஸ்ட் செய்து தருமி 805 என்று வெளியிடுங்கள். இப்போதுதான் தெரிகிறது எப்படி இந்த 800 சாத்தியமாயிற்று என்று.//

Don’t you have any trace of decency? Who the hell are you to call my posts “உளுத்துப் போன கட்டுரை”? // No decent blogger will ever have this stupid audacity to call another blogger like this.

நான் எழுதுவது உளுத்துப் போன கட்டுரைகள் என்றால் ஏனய்யா அந்தப் பக்கம் வந்து தொலைக்கிறீர்கள்?

better be restrained with your words. dont stoop so low to show who you are.

தருமி said...

அமுதவன்,

உங்களைப் போல்வேதான் நானும்.எல்லா பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் போடுவதில்லை. உங்கள் பதிவு ’நமது’ சிவாஜி என்பதால் வந்தேன். நம் தொடர்பு அதிலிருந்து தான் . அதை ஒதுக்கி விட்டுப் பேசுவோம் என்பது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை……

நமக்குப் பிடித்த சிவாஜி என்பதால் அங்கு உயர்ந்த பாராட்டுகளைத் தந்தீர்கள் அல்லவா அது போல் இங்கே இ.ரா.வைப் பிடித்த நாங்கள் அவரைச் சிறப்பித்துச் சொன்னோம். எல்லாம் ஒன்று தான். ஏன் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. ராஜாவைப் பிடித்தவர்களுக்கு அவர் உயர்வு; இல்லை .. எனக்கு அவரைப் பிடிக்கவில்லை... இன்னார் தான் பிடிக்கிறது என்றால் ஒன்றும் குறைவில்லை. you just go ahead that way. that is all. இதைத் தான் நான் திரும்ப திரும்பச் சொல்கிறேன்.

//”நாட்டாமை, தீர்ப்புச்சொல்கிறேன் என்பதெல்லாம் நீங்களாகவே உங்களுக்கே போட்டுக்கொண்ட வேஷம்”// நான் இதைப் பஞ்சாயத்து என்று சொல்லவில்லை. தலைப்பே “கட்டைப் பஞ்சாயத்து”. கட்டைப் பஞ்சாயத்திற்குப் பொருள் தெரியாதிருந்தால், தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

தருமி said...

காரிகன்,

//இங்கிலிபீசு என்று நக்கல் அடித்துவிட்டு பிறகென்ன ஆங்கிலத்தில் காமெண்ட்? இதை கேட்க மறந்து போனேன். இதற்கும் பதில் சொல்லிவிடுங்கள்.//

Another piece of arrogant stupidity… நீங்கள் என்ன இங்கிலீஸ்காரனின் தத்துப் பிள்ளையா? இங்கிலிபீசுன்னு எழுதினா உங்களை நக்கல் செய்வதாக நீங்களே நினைத்துக் கொண்டு பொங்கிக் குமுறீர்களே…உங்கள் அறிவுப் புலமையை வைத்து ஆங்கில மோகி என்று யாரோ சொன்னதும் கால் நிலத்தில் நிற்க முடியவில்லையோ? அநாவசியமாக இப்படி குதிக்க வேணடாம்.

ஆங்கிலத்தை அவ்வப்போது இப்படி எழுதுவது என் பழக்கம் சான்று வேண்டுமா?
2006ம் ஆண்டில் பின்னூட்டத்தில் எழுதியதையும் - http://dharumi.blogspot.in/2006/03/145.html),
2009ல் http://dharumi.blogspot.in/2009/03/299.html எழுதியதையும் வேண்டுமானால் வாசித்துப் பாருங்கள்.

யாரைய்யா யார் நக்கல் அடித்தார்கள்.? அந்தக் கேடு கெட்ட புத்தி என்னிடம் சுத்தமாகக் கிடையாது.

இப்போதைக்கு அந்தப் புத்தியுள்ள ஒரு ஆளைக் கண்டுபிடித்திருக்கிறேன். வேண்டுமானால் கேளுங்கள் …அவரைப் பற்றி முழுவதுமாகச் சொல்ல நிறைய இருக்கிறது. வேண்டுமா...?

தருமி said...

Varun,

//Dharumi Sir!
Even the "God" can not stay "cool" in internet debates ALL THE TIME! If one does not cross the "line" one time or other in a heated argument with someone who is REALLY annoying, then he/she is not a "human being". I think Karigan is a human being and so you see what you see.

Varun,
If somebody is annoying no wonder he can too be annoyed in response. But hurting and demeaning the work of another is quite an ungentlemanly behavior.

As you say if one does not cross the ‘line’ it is good. But your friend has crossed the ‘limits’ vulgarly so much. A better human being should be courteous, gentle and cool when he debates. Or better he keeps off.

Too sad about your friend.

தருமி said...

//நீங்களே சொல்கிறீர்கள். சுவைகள் மாறுபடும் என்று. பின் எனக்கும் அமுதவனுக்கும் மட்டும் இந்த மாறுபடும் சுவை இருக்கக் கூடாதா? //
இதைத் தானே திரும்பத் திரும்ப நான் சொல்கிறேன்.

//உங்களால் சால்ஸ் தளம் தகிப்பதாக நீங்கள் எண்ணிக்கொள்வது உங்கள் விருப்பம்.//
அங்க அவங்கவங்க பத்த வச்சதில ஒரேடியா புகையா வந்திச்சா.- இப்படித்தான் நான் எழுதியிருக்கிறேன். என்னால் தகிப்பதாக நான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால் ..நீங்கள் ஒவ்வொன்றையும் முறையாக வாசியுங்கள் என்று தான் சொல்ல முடியும்.

//பஞ்சாயத்து என்று சொல்லிவிட்டு ஒரு சார்பாக பேசியிருக்கிறீர்கள்.//
நான் செய்தது பஞ்சாயத்து இல்லை. பஞ்சாயத்தில் இரு பக்கமும் கேட்டு முடிவு செய்வது. ஆனால், கட்டப் பஞ்சாயத்து எப்போதுமே one-sided என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதனால் தான் அந்தத் தலைப்பே வைத்தேன். புரியாதவர்களுக்காக இங்கு விளக்கமும் அளித்தாகி விட்டது. இப்போதைக்கு நான் ஒரு ராஜா ரசிகன். இன்னும் அந்த அரியணையில் வேறு யாரும் அமரவில்லை என்று கூறியுள்ளேன்.

//நீங்கள் இளையராஜாவிடம் வந்து நின்றுகொண்டு இவரைப் போல ஒருவரில்லை என்று முடிப்பது அதிர்ச்சியான ஒன்று.// //அதேபோல நான் அவருக்கு முன்னே இருந்த இசை மேதைகளோடு என் இசை விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்கிறேன். அவ்வளவே.

உங்களது இந்த இரு வாக்கியங்களையும் சேர்த்தால் சரியான ஒரு முடிவு கிடைக்கும். எனக்கு ராஜா பெரிது. இதில் உங்களுக்கென்ன சார் அதிர்ச்சி. அதே போல் நீங்கள் அவருக்கு முன்னே இருந்த இசை மேதைகளோடு பூர்த்தி செய்து கொள்கிறீர்களா … நல்லது. அப்படியே இருக்கட்டும். எனக்கு இதில் எந்தவித ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை.

தருமி said...

குமரனைப் பற்றி எழுதியது - //இதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் நடுநிலையோ தருமி சார்? //
கேள்வியே சரியில்லாத கேள்வி. அவருக்குப் பிடிச்சதை அவர் எழுதுவார். எல்லோரையும் பற்றி எழுத வேண்டும் என்பது கட்டாயமா?

சவுந்தர் - // ராகங்களில் தேர்ச்சி பெற்ற எழுத்து அவருடையது. எல்லோரையும் பாராட்டுவார்..//
அதனால் தான் அவருக்கு அதிக மரியாதை கொடுத்தேன்.
// இளயராஜாவிடம் வரும்போது இன்னும் பிய்த்து உதறுவார்//

புரிந்தால் சரி… உங்கள் திருவாயால் தேர்ச்சி பெற்றவர் என்று கூறப்பட்டவர் ராஜாவைப் பற்றி உயர்வாகச் சொல்கிறார். அதற்காகவே அந்த மேற்கோள்.

// இது எந்த ஊர் நாட்டமை என்பதையும் நீங்களே பஞ்சாதது வைத்து முடிவு சொல்லுங்கள் தருமி அவர்களே.//
சவுந்தருக்குப் பிடிக்கவில்லை; எழுதவில்லை. இதற்கு ‘நாட்டாமை’ என்ன செய்ய முடியும்?

// பால ஹனுமான் தேர்ந்த இசை ரசிகர். எல்லோரையும் சிறப்பித்துப் பேசுவார். ராஜா என்றால் கொஞ்சம் கூடுதல் சிறப்பு சேர்ப்பார். ஆனால் யாரையும் இகழ்ந்து எழுதியதாகத் தெரியவில்லை//
உங்கள் திருவாயால் தேர்ச்சி பெற்றவர் என்று கூறப்பட்டவர் ராஜாவைப் பற்றி உயர்வாகச் சொல்கிறார். அதற்காகவே அந்த மேற்கோள்.. நீங்களும் அவரைப் போல் உயர வேண்டும் என்பது என் அவா........


//அவரைத் தலையில் வைத்துகொண்டு ஆடவேண்டும் என்று எல்லோரையும் நீங்கள் கட்டாயப் படுத்த முடியாது. //
Very good.யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாது. இது உங்களுக்குப் புரிந்தால் சரி. சார்லஸ் தனக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதினார். தவறல்ல. எனக்கும் பிடித்தது .எழுதினேன். தவறென்ன?

// கிருஸ்துவக் குடும்பத்தில் பிறந்த நீங்கள் (ஆஹா … என்னைப்பற்றி எத்தனை ஆராய்ச்சி; நன்றி) உலகின் பெரும்பான்மையான மக்கள் வழிபாடும் ஏசுவை மறுதலித்து விமர்சனம் செய்வது குறித்து நான் ஏதாவது கேள்வி எழுப்ப முடியுமா?//
எழுப்பலாம். வம்படி பண்ணக் கூடாது. கேள்வி எழுப்பியவர்களுக்கு மிக மரியாதையாகப் பதில் கொடுத்துள்ளேன். உங்களுக்கு இது புரியாதது,,புரிய முடியாதது என் தவறல்ல

// நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு உங்களின் தரத்தை தயவு செய்து குறைத்துக்கொள்ளவேண்டாம் பேராசிரியரே.//
பலே… நான் நகைச்சுவையாக எழுத முயற்சிப்பதை எப்படியோ கண்டுபிடித்து வீட்டீர்களே. எப்டிங்க…!

Unknown said...

தருமி அவர்களே

காரிகன் சுவாமி ஒரு அநாகரீகன் என்பது பல முறை ராஜா ரசிகர்கள் கண்டதே !

மூத்தவர்களை மதிக்கும் நாகரீகம் தெரியாமல் , எதற்க்கெடுத்தாலும் ஆட்களை நக்கல் அடிப்பது , எடுத்தெறிந்து பேசுவது அவரை பொருத்தவரையில் சுண்டல் சாப்பிடுவது போல!

இவரது பின்னூட்டங்களை அவதானித்தால் மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்ற ஏகத் தாளம் வேறு.அவருக்கு தான் எல்லாம் தெரியும் என்ற வீராப்பு!

இந்தியாவின் அதிசிறந்த இசைமேதையை [ இளையராஜா ] சாவுமேளம் என்று நக்கலடிக்கும் இசை இசையின் அரிச்சுவடியே தெரியாத ஜென்மங்களுடன் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள் பேராசிரியரே !

காரிகன் said...

பேராசிரியரே,

நான் எப்ப சார் சார்லஸை இளையராஜா பற்றி புகழ்ந்து எழுத வேண்டாம் என்று சொன்னேன்? நீங்களாகவே எதோ ஒன்றை கற்பனை செய்துகொண்டு இவன் இப்படித்தான் பேசுவான் என்று முன் முடிவு செய்துகொண்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. பொதுவாக நான் ஒரு கருத்தைதான் முன் வைப்பேன். இதில் கூட பத்ரகாளி பட விவகாரம்தான். சால்ஸ் இப்போது என் கருத்தை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒத்துக் கொள்கிறார். நான் சொன்னதும் அதுவேதான். அந்தப் படத்தின் வெற்றிக்கு அந்த நடிகை திடீரென இறந்ததும் ஒரு காரணமாக அமைந்தது என்றுதான் நான் எழுதினேன். அது ஒன்றே காரணம் என்று சொல்லவில்லை. புரிதல் அவருக்கு இல்லை. அவருக்கு என்னை சீண்டி விட்டுப் பார்ப்பதே வேலை. பிறகு விமல் என்ற ஒரு விலங்கு கண்டபடி பேசியது. நீங்கள் அதைப் பற்றி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். வழக்கம் போலவே ராஜா ரசிகர்கள் மீது உங்கள் கோபக் கண்கள் திரும்பாது என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

உங்கள் ஆங்கிலமெல்லாம் சரி. நீங்கள் தான் இங்கிலிபீசு என்று கிண்டல் செய்தீர்கள். இதுவெல்லாம் எட்டாம் கிளாஸ் சிறுவர்கள் அடிக்கும் லூட்டி. அதைத்தான் நான் கேட்டேன்.

---ஆனால் ஒன்பதைரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இப்பதிவில் சில பின்னூட்டங்கள் மனதை மிகவும் பாதித்தன. அவைகள் எழுதத் தெரியாத என் எழுத்துகளால் விளைந்த விஷயமாக இருக்க வேண்டும்; அல்லது எழுதியவரின் அசாதாரணமான ”புத்திக் கூர்மை”யின் விளைவாக இருக்க வேண்டும். இதில் எது என்பதை இப்போது எழுத மனமில்லாததால் இரு நாட்களாக ஏதும் அது பற்றி எழுதவில்லை.------

என் எழுத்து உங்களை அப்படி பாதித்திருக்கும் என்றால் எனது அதற்காக எனது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிக்கவும். (மன்னிப்பு கடவுள் செயல் என்பார்கள். உங்களுக்குத்தான் அந்த நம்பிக்கை கிடையாதே).

---அவைகள் எழுதத் தெரியாத என் எழுத்துகளால் விளைந்த விஷயமாக இருக்க வேண்டும்; ---

உண்மைதான். நீங்கள் இந்தப் பதிவை எழுதாமல் இருந்திருக்கலாம். அந்த உளுத்துப் போன கட்டுரைக்கும் எனது வருத்தங்கள். மன்னிக்கவும் அந்த வார்த்தையை நான் எழுதியதற்காக.

--- அல்லது எழுதியவரின் அசாதாரணமான ”புத்திக் கூர்மை”யின் விளைவாக இருக்க வேண்டும். ----

உங்களின் sarcasm புரியாமல் இருக்குமா? இதை மட்டும் அடர்த்தியாக வெளியிட்டு உங்கள் விடையை தெரிவித்துவிட்டீர்கள். இதுவும் உண்மையே. எனக்கும் சில சமயங்களில் கோபம் வரும். இதைதான் வருண் சொல்லியிருந்தார். நீங்கள் என்னை மட்டும் குறிவைத்தது என்னை இப்படி எழுதத் தூண்டியிருக்கலாம். அநாகரீகவாதி என்ற சான்றிதழ் எனக்கு மட்டும் வழங்கிவிட்டு அதற்குத் தகுதியான சிலரை தவிர்த்தது என்னை பாதித்தது.

--மதம் பிடித்த பதிவுகளை எழுதும் உங்களுக்கு நாகரீகம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று introspect செய்துகொள்ளுங்கள்----

நான் சொன்ன மதம் யானைக்கு பிடிக்கும் மதம். இருந்தும் என் வாக்கியத்தை நான் justify செய்யவில்லை.

---தொடரும்---

தருமி said...

//இதுவெல்லாம் எட்டாம் கிளாஸ் சிறுவர்கள் அடிக்கும் லூட்டி. அதைத்தான் நான் கேட்டேன்.//

இது போன்ற சில்லுண்டித் தனங்களை என்னிடம் காட்டாதீர்.

தருமி said...

//---தொடரும்---//

வேதனை ...........

கண்ணன் கருத்துக்கள் said...
This comment has been removed by the author.
காரிகன் said...

பேராசிரியரே,

உங்கள் தளத்துக்கு வரவேண்டுமென்ற விருப்பமா என்ன? உங்களின் பதிவுகள் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து எந்த கருத்தும் என்னை சிந்திக்க வைத்ததில்லை. ஒரு மாதிரியான மேலோட்டமான எழுத்து உங்களது. அதிகம் சிரமமிலாமல் ஒரு முறை வாசிப்புக்கு ஏற்றதாக இருக்கும். அவ்வளவே. இதில் நீங்கள் 800எழுதினால் என்ன 1000 எழுதினால் என்ன? நான் இளையராஜாவின் வத வத வென்ற பாடல்கள் குறித்துச் சொன்ன போது உங்களுக்கு ஏன் கோபம் வந்தது என்று இப்போதுதான் புரிகிறது.

நீங்கள் வீண் வேலையாக கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் என்னையும் அமுதவனையும் குறித்து எழுதியதால்தானே அவரும் நானும் இங்கே வந்தோம். நானென்ன உங்களை சால்ஸ் தளத்திலேயே எதிர்த்து எதுவும் எழுதி இருந்தேனா? பின் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வேலியிலே போற ஓணான .. என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உங்களுக்கும் அது தெரிந்திருக்கும். இப்படி செய்துவிட்டு என்னை இதுவரை யாரும் இப்படி பேசியதில்லை என்று பரிதாப கோலம் பூண்டால் அது எப்படி சரியாகும்?

---காரிகன்,
காலையில் பொட்டியைத் திறந்ததும் உங்களின் இந்த கடைசி பின்னூட்டத்தைப் பார்த்தேன்,
//மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.//
உங்கள் நாகரீகத்தைப் பற்றிப் பலரும் சொன்னதை உண்மையாக்கி விட்டீர்களே...
மிக மட்டமான வார்த்தைகள். what a 'style'!
so sorry about your "standard".
உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு வருகிறேன்.---

இப்படி நீங்கள்தான் என்னை முதலில் அநாகரீகமாக தாக்க ஆரம்பிதீர்கள். நான் அதற்கு முன் அனுப்பிய இரண்டு பின்னூட்டங்களிலும் எந்த இடத்திலாவது உங்களை வீணாக கோபம் கொள்ளச் செய்யும் பண்பற்ற வார்த்தைகள் எழுதியிருந்தால் குறிப்பிடவும். என் ஸ்டாண்டர்ட் என்ன என்பதைப் பற்றி நீங்கள் வீணே கவலை கொள்வது, உங்களின் பேராசிரியர் என்ற தொழில் அணுகுமுறை அதே மனோபாவம், இறுமாப்பு எல்லாமே உங்கள் எழுத்தில் அப்பட்டமாகத் தெரிந்ததால்தான் நான் எனது பாணியை மாற்றிக்கொள்ளவேண்டி வந்தது. மற்றபடி நீங்கள் எந்த கருமத்தை ரசித்தால் எனக்கென்ன? இளையராஜாவை தூக்கிப் பிடிக்கும் எவரின் இசை ரசனையையும் நான் பெரிதாக மதிப்பதில்லை.

எப்படி சவுந்தர், குமரன், பால ஹனுமான் போன்றவர்களுக்கு ஒரு விருப்ப எழுத்து இருக்குமோ அதைப் போல எனக்கும் சில இசை விருப்பங்கள் இருப்பதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்குகிறீர்கள்? சிலருக்கு இளையராஜாவைத் தாண்டி எழுதுவதில் விருப்பம் இருக்காது . எனக்கு இளையராஜாவை பற்றி மட்டுமே எழுதுவதில் விருப்பம் கிடையாது. இருந்தும் நான் அவரை பாராட்டாமல் இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். ஆனால் அது அவசியமான இடங்களில் மட்டுமே. இதுவே நான் கடுமையாக விமர்சிக்கப்படுவதின் பின்னணி.

--கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள். நமக்கு அதெல்லாம் எட்டவில்லை. அன்னையிலிருந்து இன்னைக்கி வரை தெரிஞ்சதே நாலஞ்சு இங்கிலிபீசு பாடல்கள். அதுக்கு மேல ஏறலை. அதுக்கெல்லாம் இங்கிலிபீசு தெரியணுமாமே… நமக்கெதுக்கு வம்பு.-----

இது நீங்கள் உங்கள் பஞ்சாயத்தில் எழுதியது. இதைத்தான் நான் மேற்கோள் காட்டினேன். என்னை நீங்கள் இங்கிலிபீசு என்று நக்கல் செய்ததாக சொல்லவில்லை. இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசிவிட்டு இதை நான் குறிப்பிட்டதும் இந்த சில்லுவண்டித்தனத்தை உங்களிடம் காட்டவேண்டாம் என்று மீசையை முறுக்குகிறீர்கள். நல்ல நகைச்சுவைதான். இதைத்தான் இங்கிலிபீசு என்று நக்கலடித்து விட்டு இப்போது நான் அப்போதே ஆங்கிலத்தில் பதிவுகள் எழுதியிருக்கிறேனாக்கும், ஆங்கிலத்தில் கோபம் கொண்டு விளாசுவது என்று சற்று தடுமாறுகிறீர்கள்.

--better be restrained with your words. dont stoop so low to show who you are.--

Mr. Sam George, You know what? If I stoop so low, I stoop only to conquer. Beneath your civilised English lies a savage anger waiting to explode. So, why this pretence?

--தருமி said...
//---தொடரும்---//
வேதனை ...........

தருமி சார்,

எனக்கும் வேதனைதான்.

Unknown said...

/// சவுந்தர் - // ராகங்களில் தேர்ச்சி பெற்ற எழுத்து அவருடையது. எல்லோரையும் பாராட்டுவார்..//
அதனால் தான் அவருக்கு அதிக மரியாதை கொடுத்தேன்.
// இளயராஜாவிடம் வரும்போது இன்னும் பிய்த்து உதறுவார்// - காரிகன்

// பால ஹனுமான் தேர்ந்த இசை ரசிகர். எல்லோரையும் சிறப்பித்துப் பேசுவார். ராஜா என்றால் கொஞ்சம் கூடுதல் சிறப்பு சேர்ப்பார். ஆனால் யாரையும் இகழ்ந்து எழுதியதாகத் தெரியவில்லை// - காரிகன்
///

//இளையராஜாவை தூக்கிப் பிடிக்கும் எவரின் இசை ரசனையையும் நான் பெரிதாக மதிப்பதில்லை./// - காரிகன்

இவருக்கு ஒன்றுமே புரியவில்லை !

இதில் எது உண்மை ! ஒருவருக்கு எத்தனை நாக்கு !

சார்லஸ் said...

காரிகன்

/// மற்றபடி நீங்கள் எந்த கருமத்தை ரசித்தால் எனக்கென்ன? இளையராஜாவை தூக்கிப் பிடிக்கும் எவரின் இசை ரசனையையும் நான் பெரிதாக மதிப்பதில்லை.///

உங்களின் இந்த நாகரீகமில்லா பேச்சு இன்னும் உங்களோடு தொக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் பின்னூட்டத்தில் உங்களை சிலர் 'அநா காரிகன் ' என்று சொல்கிறார்கள் . நாங்கள் கருமம் ரசிக்கிறோம் . நீங்கள் அதற்கு 'முந்தைய கருமத்தை' ரசிக்கிறீர்கள் . சீ....உங்களைப் போலவே எழுத வருது . நாங்கள் இளையராஜா இசை ரசிக்கிறோம். நீங்கள் அவருக்கு முந்தின இசையை ரசிக்கிறீர்கள் . சரிதானே?

இளையராஜாவை ரசிக்கத் தெரியாத கருமங்களையும் நாங்கள் பெரிதாக மதிக்க மாட்டோம்.

சார்லஸ் said...

தருமி சார்

இளையராஜா இசையமைத்த பாடல்களை யார் பாடி கேட்டாலும் அதில் ஒரு லயிப்பு வருகிறது. நீங்கள் புதிதாகச் சேர்த்த வீடியோக்கள் அருமை. உங்களை சிலர் உசுப்பேத்தப் பார்த்ததும் நீங்களும் இந்தா வாங்கிக்க என்று பதிலடி கொடுத்ததாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

Amudhavan said...

தருமி அவர்களே, ஒரு நான்கைந்து நாட்கள் வெளியூருக்குச் சென்றுவிட்டு இன்றைக்குத்தான் திரும்பினேன். மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இணையத்திற்கு வரமுடியவில்லை. அதற்குள் என்னைப்பற்றித்தான் எத்தனை எத்தனை விதமான சொல்லாடல்கள்.
இணையம் என்றால் வேறு வேலை வெட்டி எதுவுமே இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள் போலும். அதில் அவர்களுக்கு ஒரு வகையான லாகிரியும் ஆனந்தமும் கிடைக்கலாம். நமக்கு அப்படியில்லை. நீங்களும் என்னுடைய ரகம்தான் போலிருக்கிறது. சில பின்னூட்டங்களை ஓகே செய்யவே ஒரு நாளோ இரண்டு நாட்களோ கூட எடுத்துக்கொள்கிறீர்கள். என்னுடைய பின்னூட்டங்களுக்கான பதிலையே இரண்டொரு நாட்கள் கழித்துத்தானே போட்டிருக்கிறீர்கள். அதற்குள் நான் எகிறிக்குதித்து உங்களை தப்புத்தப்பாக அல்லது எக்குத்தப்பாக ஏதாவது சொன்னேனா? இல்லை. காரணம் பக்குவமும் மரியாதையும் கைவரப்பெற்றிருப்பதுதான். இது ஒருபுறமிருக்க -
தருமி said.
\\நமக்குப் பிடித்த சிவாஜி என்பதால் அங்கு உயர்ந்த பாராட்டுகளைத் தந்தீர்கள் அல்லவா அது போல் இங்கே இ.ரா.வைப் பிடித்த நாங்கள் அவரைச் சிறப்பித்துச் சொன்னோம். எல்லாம் ஒன்று தான். ஏன் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. ராஜாவைப் பிடித்தவர்களுக்கு அவர் உயர்வு; இல்லை .. எனக்கு அவரைப் பிடிக்கவில்லை... இன்னார் தான் பிடிக்கிறது என்றால் ஒன்றும் குறைவில்லை. you just go ahead that way. that is all. இதைத் தான் நான் திரும்ப திரும்பச் சொல்கிறேன்.\\
அதேபோல் நானும் சிலவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். 'உனக்கு இ.ராவைப் பிடிக்கிறதா வைத்துக்கொள். அவரைப்போல யாருமே இல்லை என்பதைச் சொல்கிறாயா? ஃபேஸ்புக்கில் சொல்லிக்கொள். அதுதான் இங்கே தனிப்பட்டவர்களின் ரசனையை 'மட்டுமே' சொல்லிக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் மிகச் சரியான தளம். வலைப்பூ என்பது தனிப்பட்டவர்களின் ரசனையைத் தாண்டி ஒரு பொதுத் தளம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும் ஒரு மீடியா. இங்கே பொதுத்தளத்தில் சொல்லும்போது சரியான தகவல்களுடன் சொல். வெறும் உன்னுடைய தனிப்பட்ட ரசனையை எல்லார் மீதும் ஏற்றாதே. எனக்கு இந்தப் பாட்டைப் பிடிக்கும், அல்லது இந்தக் கதையைப் பிடிக்கும், இன்னாரின் நாட்டியம் பிடிக்கும், இவர் வரைந்தது பிடிக்கும்...........எது வேண்டுமானாலும் சொல்லலாம். அது உன்னுடைய தனிப்பட்ட ரசனை என்ற அளவில் சொல்லிக்கொண்டு போ. ஏனெனில் தனிப்பட்ட ரசனை என்பது ' எனக்குப் பக்கத்து வீட்டு கவுசல்யாவைப் பிடிக்கும். என்னுடைய உயிரே அவள்தான். அவளுக்கு இணையான பேரழகி உலகிலேயே இல்லை' என்பது தனிப்பட்டவரின் ரசனை. அதனைப் பொதுவாக வைத்து எல்லாரையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காதே'. என்பதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறேன்.
இந்த தனிப்பட்ட ரசனைக்கும் பொதுவெளிக்கும் வித்தியாசம் தெரியாமல்தான் என்னை இங்கே இணையத்தில் ஒரு சிலர் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
உடனே நீ சிவாஜியைச் சொல்லவில்லையா? என்ற கேள்வி வேறு. இதனை மற்ற நண்பர்கள் கேட்டால்கூட அறியாமை என்று சொல்லி பேசாமல் இருந்துவிடலாம். வம்படியாய்ப் பேசுகிறவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உங்களைப்போல் மெத்தப் படித்தவர்கள், பெரிய பொறுப்பு வகித்தவர்கள் கேட்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது.
முதலில் சிவாஜியையும் இ,ராவையும் சேர்த்துப்பேசுவதே தவறு. இங்கே இ.ரா மட்டுமில்லை. சிவாஜியையும் எம்எஸ்வியையும் பேசலாமா, சிவாஜியையும் ஜி.ராமனாதனையும் பேசலாமா, சிவாஜியையும் கேவிஎம்மையும் பேசலாமா என்ற கேள்விகளே தவறு. 52ல் ஆரம்பித்து 80வரை சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்தவர் சிவாஜி. (இ.ராவும் இசை சாம்ராஜ்யம் நடத்தவில்லையா என்று சிலர் உடனே எகிறுவதற்குத் தயாராக இருப்பதையும் என்னால் உணர முடிகிறது) அந்த சாம்ராஜ்யம் வேறு. சிவாஜியின் சாம்ராஜ்யம் வேறு.
சிவாஜியை நம்பி சிவாஜிக்குப்ப்பின்னால் ஒரு முப்பது வருடங்களுக்கு ஒரு தனி industry யே இருந்தது. அங்கே சிவாஜி வைத்ததுதான் சட்டம். அவர் நடித்த படங்களின் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகரிலிருந்து எல்லாமே சிவாஜியின் எண்ணம் எப்படியோ அப்படித்தான் .இதில் இசையமைப்பாளர்களும் அடக்கம். ஆனால் எம்எஸ்வியோ, இளையராஜாவோ அல்லது இன்றைய ஏ.ஆர்.ரகுமானோ அவர்களின் இசையமைப்பில் வேண்டுமானால் தனிப்பட்ட அரசர்களாக இருந்து ஆளுமையைச் செலுத்தமுடியுமே தவிர மொத்த திரைப்படத்துறையில் ஆளுமையைச் செலுத்த முடியாது. (தொடரும்)
Amudhavan said...

இந்த நிலைமை எம்ஜிஆருக்கும் இருந்தது. எம்ஜிஆரும் ஒரு industry தான். எம்ஜிஆர் நினைத்தால் ஒரு கதாநாயகியிலிருந்து இசையமைப்பாளர் வரை யாரை வேண்டுமானாலும் தீர்மானிக்க முடியுமே தவிர, எந்த ஒரு இசையமைப்பாளரும் சிவாஜியையோ, எம்ஜிஆரையோ 'தீர்மானிக்கய முடியாது. இதில் எம்ஜிஆர் ரொம்பவும் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தார். சிவாஜி அத்தனை வெளிப்படையாக இல்லையே தவிர எதுவொன்றையும் அவருடைய ஒப்புதல் வாங்கித்தான் ஒவ்வொரு படத்திலும் தீர்மானிப்பபார்கள். ஆக சிவாஜியுடன் எம்ஜிஆரைத்தான் ஒப்பிட்டோ எதிர்த்தோ வாதம் செய்ய முடியுமே தவிர எந்தவொரு இசையமைப்பாளரையும் ஒப்பிட்டுப் பேசுவது சரியானதாக இருக்காது.
'உனக்கு சிவாஜியைப் பிடிக்கிறதா? எனக்கு ஹாரிஸ் ஜெயராஜைப் பிடிக்கும். இரண்டும் ஒன்றுதான்.' என்று வாதம் செய்வது சரியாக இருக்குமா என்ன?
சிவாஜியின் வரலாறு வேறு; இசையமைப்பார்களின் வரலாறு வேறு.
நான் செக்கிழுத்த சிதம்பரனார் பற்றிப் பேசினால் 'எங்க ஊரு நைனா இன்னா ஷோக்கா தயிர் கடைவார் தெரியுமா? உனக்கு சிதம்பரம் முக்கியம் மாதிரி எனக்கு தயிர் கடையும் நைனா முக்கியம்' என்று வாதம் செய்தால் என்ன செய்யமுடியும்?
பேசாமல் நகர்ந்துவிட வேண்டியதுதான்.

\\நான் இதைப் பஞ்சாயத்து என்று சொல்லவில்லை. தலைப்பே “கட்டைப் பஞ்சாயத்து”. கட்டைப் பஞ்சாயத்திற்குப் பொருள் தெரியாதிருந்தால், தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். \\

விளக்கம் தந்தமைக்கு நன்றி. நான் பஞ்சாயத்து என்று நினைத்துத்தான் பதில் சொல்லியிருந்தேன். கட்டப்பஞ்சாயத்து என்பதற்குப் பொருள் தெரிகிறதோ இல்லையோ கட்டப்பஞ்சாயத்து 'நடத்துபவர்களுக்கு' சமுதாயத்தில் என்ன மரியாதை என்பது எனக்குத் தெரியும். நான் அந்த மரியாதைக்கேற்ப உங்களை நினைக்கவில்லை. இன்னமும் உங்களை ஒரு பேராசிரியர் என்ற அளவிலேயே மதிக்கிறேன். நன்றி.

Unknown said...

தர்மி சார்

அமுதவன் அவர்களின் எழுத்தை வாசித்தால் நியாயம் போலவே தோணும்.அதில் உண்மை தான் எங்கோ ஒளித்திருக்கும்.சிவாஜி பற்றிய ஒப்பீட்டை நமக்கு விரிவாக விளக்கியுள்ளார்.அருமை.

அவரவர் ரசனை அவரவர்க்கு முக்கியம் என்பதை நீங்கள் விளக்கியதால் இந்த விவரணச் சித்திரம் எழுதியுள்ளார் அமுதவன்.

ஆனால் ராஜா ரசிகன்ஒருவன் , ராஜாவை உயர்வாக எழுதும் போது [ சிவாஜியை ராஜாவுடன் ஒப்பிடாமல் ]அமுதவனும் , காரிகனும் நக்கலடிப்பார்கள் , கேவலமாக நையாண்டி செய்வார்கள், வன்மம் காட்டுவார்கள்.

இளையராஜாவைப் பற்றி பேசும் போது அமுதவன் "நாகரீகமாக" கேவலம் படுத்துவார், காரிகன் எல்லை மீறி பேசுவார் ,அதை அமுதவன் தட்டிக் கொடுப்பார்.

இங்கே ராஜ ரசிகர்கள் யாரும் சிவாஜியையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு எழுதவில்லை என்பது முக்கியமான விஷயம் !

அமுதவன் இதை பெருதுபடுத்தி தான் நியாயத்திற்கு போராடியது போல சோடிக்கின்றார்.

இவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் மக்களிடம் கருத்தெடுத்து வழங்கப்பட்டது போல சித்தரிப்பார்கள் !

எப்படி தாண்டினார் என்று கேட்டார் . நியாயமாக பதில் சொன்னோம் .

ஏதாவது சொல்லி ராஜாவை கீழே இறக்குவதில் கவனம் எடுப்பார்கள்

வருண் said...

****அமுதவனும் , காரிகனும் நக்கலடிப்பார்கள் , கேவலமாக நையாண்டி செய்வார்கள், வன்மம் காட்டுவார்கள்.****

விமல்: "கேவலம்" "வன்மம்" என்ற வார்த்தை ஜாலங்கள், தேவையே இல்லாதது. We all know people's quality and everyone here is with a "scale" of their own in assigning the quality of bloggers here. You dont need to try hard to "mislabel" people. That will only be a WASTE OF YOUR TIME!

"இளையராஜாதான் இசைக்கடவுள்!" என்று நீங்கள் அவரை உயரே வைத்துப் பேசும்போது, "இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர், வேணா குறிப்பிடதக்கவர்" னு ஒரு சிலர் சொல்லத்தான் செய்வாங்க. அதை நீங்க ஏற்றுக்க வேண்டிய அவசியம் இல்லை. திரு அமுதவனும், காரிகனும் தான் உலகமா?? உலகில் ரெண்டு பேருதானே அவர்கள்? அவர்கள் உலகில் அவர்கள் வாழட்டும்ணு விட்டுப் போக வேண்டியதுதானே?? அது ஏன் உங்களால் முடியவில்லை???

I dont think you can ever change anybody's opinion. You need to learn to ignore opinions of others which does not make you happy or please you! After getting to "this point" you should believe in yourself and your judgment and move on! Getting personal on each other is not going to help to "lift" or "dump" IR!

****ஏதாவது சொல்லி ராஜாவை கீழே இறக்குவதில் கவனம் எடுப்பார்கள்.***

You formed an opinion about them already! Then why dont you stop NOW? You still believe you can convince them that "IR is the God of music"? You know that it is impossible. Right?

Unknown said...

வருண்

தங்கள் கரிசனையான பதிலுக்கு நன்றி. காரிகன் நல்லவர் என்று நீங்கள் முன்பே கூறினீர்கள்.அவர் நல்லவராகவே இருக்கலாம். ஆனால் நாம் இங்கே அவரின் கருத்துகளுடனேயே மோதுகின்றோம்.

யாரையும் யாரும் திருத்திவிட முடியாது என்பதை அறிவேன்.அவரவர் கருத்து அவரவருக்கு பெரிதாக இருப்பது நல்லதே ஆனால் பொதுவெளியில் பேசும் பொது கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும் அல்லவா ? இதை அமுதவன் அவர்கள் அழகாக விளக்குகிறார் பாருங்க , அருமை ! என் வேலையை எளிதாக்கி விட்டார்.

***************** 'உனக்கு இ.ராவைப் பிடிக்கிறதா வைத்துக்கொள். அவரைப்போல யாருமே இல்லை என்பதைச் சொல்கிறாயா? ஃபேஸ்புக்கில் சொல்லிக்கொள். அதுதான் இங்கே தனிப்பட்டவர்களின் ரசனையை 'மட்டுமே' சொல்லிக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் மிகச் சரியான தளம். வலைப்பூ என்பது தனிப்பட்டவர்களின் ரசனையைத் தாண்டி ஒரு பொதுத் தளம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும் ஒரு மீடியா. இங்கே பொதுத்தளத்தில் சொல்லும்போது சரியான தகவல்களுடன் சொல். வெறும் உன்னுடைய தனிப்பட்ட ரசனையை எல்லார் மீதும் ஏற்றாதே. எனக்கு இந்தப் பாட்டைப் பிடிக்கும், அல்லது இந்தக் கதையைப் பிடிக்கும், இன்னாரின் நாட்டியம் பிடிக்கும், இவர் வரைந்தது பிடிக்கும்...........எது வேண்டுமானாலும் சொல்லலாம். அது உன்னுடைய தனிப்பட்ட ரசனை என்ற அளவில் சொல்லிக்கொண்டு போ. //************ அமுதவன்

ராஜா ரசிகர்கள் சொன்னால் அது தனிப்பட்ட கருத்து , அமுதவனும் ,காரிகனும் சொல்வது என்ன பொதுக்கருத்தா என்று தான் கேட்கிறோம் !அவர்கள் எவ்விதம் தட்டிக் கேட்பார்களோ அவ்விதமே நாமும் கேட்கிறோம்.அவ்வளவே !

சாரதா படத்தில் பாடல் போட்டி ஒன்றில் [ ஆண் கவியை வெல்ல வந்த - பாடல் ] எஸ் எஸ் ஆர் சொல்லுவார் " நானாவது தோற்ப்பதாவது..." என்ற பாணியில் பதில் வருகிறது.

காரிகன் பெருமையாக சொல்வார் ராஜசிகாமணிகளுடன் விவாதம் புரிபவன் என்று !அதனால் தான் நாமும் களத்தில் குதிக்கிறோம்.நமக்கு என்ன அவருடன் வரப்பு வாய்க்கால் தகறாரா ..?

காரிகன் சொல்கிறார் பாருங்க @
///** மீண்டும் porn இசை பற்றி பேச ஆரம்பிக்கிறீர்கள். தமிழ்த் திரையிசையில் படுக்கையறை இசையை விரக ஓசையை அந்த நரகல் இசை பாணியை அறிமுகம் செய்து அதன் மூலம் தன் புகழின் அடர்த்தியை மேருகேற்றிக்கொண்டவர் இளையராஜா. அவர்தான் இவ்விதமான இசையின் முன்னோடி. அவர் ஆரம்பித்த அந்த கேடுகெட்ட இசை வடிவம்தான் தரமான தமிழிசையை சீரழித்தது.இளையராஜாவுக்கு முன் வேறு எந்த இசை அமைப்பாளர்களும் இதைச் செய்யவில்லை/// --

இதற்கு நாம் இல்லை ராஜாவுக்கு முன்னர்களே இதை செய்து காட்டினார்கள் என்று சொன்னால் , மீண்டும் ஆணித்தரமாகப் பதிலளிக்கிறார் பாருங்க , அருமை !

/// ......இளையராஜாவே நமது இசைச் சீரழிவிற்க்கு முதல் காரணம் என்று. நீங்கள் அதை விரும்பாவிட்டாலும் அதுதான் எனது முடிவு. நீங்கள் உங்களுக்கு வேண்டிய பதிலை நான் சொல்லவேண்டும் என்று என்னை நிர்பந்தித்ததால் அது நடக்காத காரியம். ..../// காரிகன்

அவர் விவாதம் நடாத்தும் முறை இது தான் போலும் !

/// ஒரு பொதுத் தளம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும் ஒரு மீடியா. இங்கே பொதுத்தளத்தில் சொல்லும்போது சரியான தகவல்களுடன் சொல். /// - அமுதவன்

[இந்த வாசகம் மற்றவர்களுக்கு மட்டும் , அவருக்கல்ல என்பதே அமுதவன் அவர்களது கொள்கை ]

இறுதியாக ...

///திரு அமுதவனும், காரிகனும் தான் உலகமா?? உலகில் ரெண்டு பேருதானே அவர்கள்? அவர்கள் உலகில் அவர்கள் வாழட்டும்ணு விட்டுப் போக வேண்டியதுதானே?? அது ஏன் உங்களால் முடியவில்லை???/// வருண்

வருண் , அவர்களது வாழ்க்கை இந்த விவாதத்திலா இருக்கிறது ?ஏதோ விவாதித்தோம்.
இத்துடன் இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்பதை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.


விமல்

Post a Comment