Friday, November 07, 2014

798. தோரணம்







*



 ’க்ரிக்கெட் இருக்கிறது வரை எந்த விளையாட்டும் இந்தியாவில் வளரவே வளராது.’

’க்ரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம். இந்த மதம் குறைந்தால் தான் மற்ற விளையாட்டுகள் வளரும்.’

 ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகள் வரும் போதும் இப்படி சொல்வர் பலர். ஆனால் இப்படி சொன்னவர்கள் கூட (என்னையும் சேர்த்து தான்!!) I.S.L. விளையாட்டு நடக்கிறதே .. அதைப்பற்றி ஏதாவது எழுதுவோம்னு ஒரு பதிவருக்கும் (என்னையும் சேர்த்து தான்!!) ஏன் தோன்றவில்லை?

 அம்புட்டு தான் உங்க கால் பந்து ரசிப்பு அப்டின்னு கிரிக்கெட் தீவிர ரசிகர்கள் சொல்வதும் கேக்குது!

நியாயம் தான். ஏன் யாருமே அதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. சரி ... நம்மளாவது நாலு வரி எழுதிடுவோம் ...

விளையாட்டு நல்லாவே இருக்கு. international level இல்லாவிட்டாலும் நல்லா சுறுசுறுப்பான விளையாட்டு. பார்க்க நல்லாவே இருக்கு. அதைவிட பார்க்க வர்ர ஆளுக நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகம். இதற்கும் கிரிக்கெட்காரர்களின் விளம்பரங்களும், நடிகர்களின் அரவணைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால் .. அவர்களுக்கும் நன்றி.

 சூழல் கொஞ்சம் மாறியிருப்பது போலும் தோன்றுகிறது. அங்கங்கு கால்பந்து விளையாடும் பையன்களைப் பார்க்க முடிகிறது.

 ஒரு குறை - நம்மூர் ஆட்களின் முகத்தை ஆட்டக்காரர்களில் மத்தியில் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. எல்லாம் வெளி நாட்டு ஆட்களின் ஆட்டமாகத்தானிருக்கிறது. ஒரு வேளை வரும் வருஷங்களில் நம்மூர் ஆட்கள் அதிகமாகலாம்; அதிகமாக வேண்டும்!


 *****


 ரெண்டு வாரத்துக்கு முந்தின இரு பிரபல நீள் தொடர்களில் - நாதஸ்வரம் & சரவணன் மீனாட்சி - ஒரே வாரத்தில் இரு சிறு பெண்கள் தற்கொலை. .... பரவாயில்லை .. நல்ல பாடங்கள் சொல்லித் தருகிறார்கள்.


 *****

டாஸ்மாக் பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்லலை. ஆனால் அந்தக் கடைகளை ஒட்டி நடத்தும் பார்களை மட்டுமாவது முதலில் நிறுத்தலாமே..

பார் முன்னால் நிறுத்தியிருக்கும் வண்டிகளை குடிமக்கள் எடுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது இன்னைக்கி எத்தனை பேர் பலியோ என்று தான் தோன்றுகிறது.

அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் வராது?

யாராவது சமுகத் தளங்களில் பார்களை முதலில் எதிர்க்க ஏதாவது ஒரு ஏற்பாடுஆரம்பியுங்களேன்....ப்ளீஸ்.

அதற்குப் பிறகு கேரளா மாதிரி ஏதாவது பண்ணலாமே! அம்மாட்ட கேட்டு ஓபிஎஸ் ஏதாவது பண்ணுவாரான்னு பார்ப்போம்!


 *****


யாராவது அந்த sleep well அப்டின்னு ஒரு விளம்பரம் டிவியில வருதே... அதில் கடைசியில் கையில் டீ தம்ளரோடு மீசை வச்ச ஒரு ஆளு என்னமோ சொல்றாரே ... அது என்னன்னு கேட்டு எனக்குச் சொல்லுங்களேன்.

இரண்டு வாரமா முயற்சி பண்றேன் - அவர் என்ன சொல்றார்னு கண்டு பிடிக்கிறதுக்கு.

மனுஷன் பிடி கொடுக்க மாட்டேங்கிறாரே ...!


******

ரேடியோவில ஒரு விளம்பரம். வீட்ல கக்கூஸ் கட்டணும்னு. அகில இந்திய விளம்பரம் போலும். அதில் பேசும் தமிழ் எந்த ஊர் தமிழ் அப்டின்னு தெரியலை. நல்ல வேளை எங்க ஊர் சீத்தலைச் சாத்தனார் இல்லை. அவர் எழுத்துப் பிழைக்கு தலையைப் பிய்த்துக் கொள்வாராம், இங்கே பேச்சுத் தமிழுக்கு வந்த நிலையைக் கேட்டார்னா தலையையே பிய்த்துக் கொள்வார் என நினைக்கிறேன்.

அந்தந்த மொழிக்காரங்க கிட்ட கொடுத்து அந்தந்த மொழியைப் பேச வைக்கக் கூடாதா? கொல்றீங்களே’ப்பா ...!


 *
நம் சமுகத்தில்  half brother,  half sister  என்பவைகளுக்குஇது வரை தமிழ்ச் சொல் ஒரு வேளை தேவையில்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இரண்டு காரணம் பற்றி இனி அது தேவை என்றே நினைக்கிறேன்.

முதல் காரணம்:
பழைய சமுகத்தில் இந்த வார்த்தைகள் தேவையில்லாததால் அதற்குரிய தமிழ்ச் சொற்கள் தேவையில்லாமல் இருந்தது. ஆனால், இன்று சமுக மாற்றங்கள் நிறைய வந்து விட்டன. இனி இந்த வார்த்தைகள் இனி நம் சமுகத்திற்கும் தேவை தான்.

இரண்டாம் காரணம்:
வெளிநாட்டுக் கதைகளை மொழியாக்கம் செய்யும் போது இதற்கான வார்த்தைகள் தமிழில் இல்லையென்பதால் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுள்ளது!

புது வார்த்தைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்!


*****

cinthol சோப்புக்கு ஒரு விளம்பரம். சில உடம்புக்கார சிப்பாய்கள் ... நம்புகிறோம் அப்டின்னு ஒரு பாடல்.
சாமிகளா... இந்த பின்னூட்டத்தை ஆக்கிய, தமிழாக்கிய புண்ணியவான்களே!  போதுமய்யா .. முடிஞ்சா இந்த பின்னூட்டத்தை எடுத்திட்டா அந்த சோப்புக்கு நல்லது.

*****


ஆங்கில இந்து வில் ஒரு செய்தி வந்திருந்தது - ஓரிரு நாட்களுக்கு முன்.

ஆங்கில இணையப் பதிவுகளின் தீரம் மிகவும் குறைந்து போய் விட்டதாம். எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகப் போய் விட்டதாம். இப்படியெல்லாம் எழுதிய செய்தியில் தமிழ் இணையப் பூக்கள் நன்றாக, நிறைய, எண்ணிக்கை குறையாமல் வருகிறது என்ற செய்தி இருந்தது.

பரவாயில்லையே ... நல்ல பெயர் வாங்கியிருக்கிறோம். எனக்கென்னவோ ப்ளாக் மாதிரி மற்ற சமுகத்தளங்கள் மீது விருப்பம் இல்லை.

தொடருவோம் .................


*****





7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

டாஸ்மாக் அதிக விபத்துக்களுக்குக் காரணமே இதுதான் ஐயா

G.M Balasubramaniam said...

அடடா.... என்னவெல்லாம் விஷயங்கள் உம்மைக் குடைகின்றன. ஐபிஎல் போல ஐஎஸெல்-லில் வெளி நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை வரையறுக்கலாமோ.அப்படியே மொழி பெயர்க்கலாமே அரை சகோதரன் , அரை சகோதரி என்று. இதில் நாம் வல்லவர்களாயிற்றே........!

”தளிர் சுரேஷ்” said...

சுவையான குறுந்தகவல்கள்! நன்றி! கால்பந்தை பற்றி எழுத ஆசைதான். ஆனால் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது காலால் உதைத்து ஆடும் ஆட்டம் என்பதை தவிர! நன்றி!

சார்லஸ் said...

சார்

நீங்களே பல்கலைக் கழகம் . ஒவ்வொன்றுக்கும் கேட்டுச் சொல்லுங்க என்று யாரை கேட்கச் சொல்கிறீர்கள்?

தருமி said...

ஐயா சார்லஸ்
ஆள உடுங்க சாமி ... நான் இந்த ஆட்டைக்கு வரலை...........

வெங்கட் நாகராஜ் said...

பல சாலை விபத்துகளுக்கு குடித்து விட்டு வண்டி ஓட்டுவதே காரணம் என்பதை நினைக்கும் போது நீங்கள் சொல்லும் பார்களை மூடுவது நல்ல விஷயமாகத் தெரிகிறது.

தற்கொலையைக் காண்பிக்கும் தொலைக்காட்சி... - வருத்தம் !

த.ம. +1

குறும்பன் said...

டீ தம்ளரோடு மீசை வச்ச ஒரு ஆளு சொல்றாரே அது அரசாங்கம். ஆனா அது அங்க ஏன்னு புரியலை.

Post a Comment