Friday, November 21, 2014

802. பெங்களூரு உலா


* போன முறை பெங்களூரு சென்ற போது ஆங்கிலத்தில் எழுதிய தன் கதையை உறவினர் என்னிடம் கொடுத்தார். வாசித்தேன். இருவருமாக உட்கார்ந்து கதை பற்றிய எங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

சில நாளில் மறுபடியும் பெங்களூரு. இப்போது அவரது அடுத்த கதை ரெடி. நானோ இந்தக் காலக்கெடுவிற்குள் ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மட்டும் தமிழ்ப்படுத்தியிருந்தேன். அதற்கே அவ்வளவு சிரமம்.

யாரோ எழுதியதைத் தமிழ்ப்படுத்தவே எனக்கு அவ்வளவு பாடு. ஆனால் மக்கள் சொந்த கதை ஒன்றை உருவாக்கி அதற்கு எழுத்துருவும் கொடுக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு கதையை உருவாக்குகிறார்கள் என்றே தெரியவில்லையே. எல்லாம் மேஜிக் மாதிரி தான் எனக்குத் தோன்றுகிறது.

 அடுத்த ஜென்மத்திலாவது கதை எழுதும் ஆற்றல் கைவரப் பண்ணணும்!!

 ************

எங்கள் ஊரில் நான்கு சீசன்களையும் ஒரே நாளில் பார்க்க முடியும் என்றார் உறவினர். சொன்னது மாதிரி இருந்த நாலு நாட்களும் வித விதமான நாட்களாகவே நகர்ந்தன. திடீரென்று வெயில். அடுத்த சில நேரம் கழித்து மழை. மாலையில் பனி..குளிர்.

ஆனாலும் நல்ல குளிரை எதிர்பார்த்து ஆசையோடு சென்றேன். குளிரவில்லை.

 ************

போகிற வழியில் விதான் செளதாவைப் பார்த்ததும் நம்மூரில் கட்டிய கட்டிடம் நினைவுக்கு வந்தது. பல எரிச்சல்கள். அழகில்லாத ஒரு கட்டிடம். கட்டிய பிறகு இடிக்கவா முடியும்? ஆனாலும் அதற்காக ‘அந்த ஆள் கட்டிய கட்டிடத்தில் நான் உட்காரவா?’ என்று வீண்பிடிவாதம் பிடிக்கும் அடுத்த அமைச்சர். ஒரு வீட்டைக் கட்டி விட்டு அததற்கு என்று சில இடங்களை வைத்து விடுகிறோம். ஒரு சின்ன வீட்டில் அதன் பிறகு கூட அதைக் கூட மாற்ற முடிவதில்லை. ஆனால் எதற்கோ கட்டிய ஒரு கட்டிடத்தை மருத்துவ மனையாக்குவேன் என்ற வீண்பிடிவாதம் ஒரு அரசியல்வாதியின் ஆணவமாகத் தான் தெரிகிறதேயொழிய அதில் எந்த அர்த்தமும் இல்லை.

 ம்ம் ... எல்லாம் நம் தலையெழுத்து!

 *************

விதான்செளதாவிற்கு எதிர்த்த நீதிமன்றங்களைப் பார்த்ததும் சென்னை நீதி மன்றமும், எங்கள் கல்லூரியும் நினைவிற்கு வந்தன. எல்லாம் Indo-Saracenic architecture. ஒரே ஆள் ... நிறைய கட்டிடங்களுக்கு டிசைன் போட்டிருக்கிறார். அதே சிகப்பு கலர்; வளைவுகள்; ஆர்ச்சுகள் .......

 ************* 

பெங்களூரு ஆட்களிடம் punctuality இருக்குமா? இருக்க முடியுமா?ன்னு கேள்வி எழுந்தது. இருக்க முடியாதுன்னு தான் தோன்றியது. எப்படி முடியும்? ஊர் முழுவதும் திரும்பும் இடத்திலெல்லாம் jam தான் ... traffic jam தான்! இந்த லட்சணத்தில் எப்படி அவர்களிடம் punctuality இருக்க முடியும் என்பது என் கேள்வி.

 ****************

சென்னையை விட விளக்கு அலங்காரங்கள் பெங்களூரில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. கடைகள், தெருக்கள் எல்லாம் வெளிச்ச மயமாக இருந்ததாகத் தோன்றியது.  அதுவும் Elevated Express way-ல் இரவில் போகும் போது சாலை மேலும் கீழுமாய் சென்றது. ஒரு பக்கம் நம் முன்னால் சிகப்பு விளக்குக்ள் அலங்காரமாகச் செல்ல, எதிரிப்பக்கம் வெள்ளை விளக்குகள் கண்ணைக் கூச வைக்கின்றன. படம் எடுக்க ஆசை. கொஞ்சம் க்ளிக்கினேன்.நல்ல படம் தான் கிடைக்கவில்லை!

 ******************

 Meet Up என்று ஒன்றை புதிதாக கணினியில் காண்பித்தார் உறவினர்; அப்படி ஒன்று இருப்பதை அப்போது தான் அறிந்தேன்.

அட... மதுரையை ஒரு பெரிய கிராமம் என்பார்கள். உண்மைதான் போலும்! சென்னை, பெங்களூரு ஊர்களோடு மதுரையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதுரை ரொம்பவே பாவமாக இருக்கிறது. சான்றாக ஒரே ஒரு குழுவை எடுத்து பார்த்தேன். புகைப்படக்காரர்கள் குழு. மொத்தம் நான்கு பேர். அதில் ஒருவர் மட்டுமே மதுரைக்காரர்.

 மதுரையில் நிலமை ரொம்பவே மோசமாக உள்ளது. கஷ்டப்பட்டு மதுரை Meet Up-யின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

*****************

பெங்களூரில்  நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன்.

ஒரு  கூட்டு வீடு - apartments - கட்டினால், அதன் கழிவு நீர் எல்லாம் ஒரு தொட்டியில் தேக்கப்பட்டு, recycle செய்யப்பட்டு அந்தக் கூட்டு வீடுகளின் கழிவறையில் மீண்டும் பயன் படுத்தப் படுகிறதாம். இந்த அமைப்போடு தான் வீடு கட்ட முடியும். கட்ட அரசின் உத்தரவும் கிடைக்குமாம்.

ஏனிந்த ஏற்பாட்டை நமது மாநிலத்தில் செயல்படுத்தப் படுவதில்லை. அட...நீதி தெய்வத்தை சிறையில் அடைத்த அநீதிக்காரர்கள் தான் அவர்கள்; இதய தெய்வத்தை இருட்டறையில் பூட்டியவர்கள் தான் அவர்கள். இருந்தாலும் அவர்கள் செய்வதில் உள்ள நல்லவைகளை நாமும் கடைப்பிடிக்கலாமே... இல்ல...

******************

பல இடங்களில் மம்மி படங்கள் ஒட்டியிருந்தார்கள். மறுபடியும் அதே மாதிரி நிறைய படம் ஒட்ட வேண்டிய நிலை வரட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


*****************
22.11.14

இன்னொன்று சொல்ல மறந்து போனேனே,,,, பெங்களூருக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கும் ட்ராபிக்... வண்டிக்குள் சிறை ... பொறுமை காக்க திறமை தேவை ... அங்கே வண்டியோட்டவும் பெருந்திறமை தேவை....

அசந்து போய் உட்கார்ந்திருந்த போது அந்தத் தெரு முக்கில் ஒரு பெரிய போர்டு வைத்திருந்தது.

SMALL FAMILY 

HAPPY FAMILY

என்று எழுதியிருந்ததைச் சத்தமாக வாசித்தேன். சில நொடி கழித்து ...

SMALL CITY

HAPPY CITY

என்று சொன்னேன். காருக்குள் இருந்த ‘மக்கள் கூட்டம்’ அனைத்தும் ஒரு சேர கை தட்டி சந்தோஷம் என்றார்கள் -- இருந்தவர்கள் அனைவரும் ‘மதுரைக் கூட்டம்’ !

வாழ்க மதுரை !!!*
10 comments:

துளசி கோபால் said...

ஒரே நாளில் நாலு சீஸன் அனுபவிக்கணுமுன்னா எங்க ஊருக்குத்தான் வரணும் நீங்க.

குளிர் கேரண்டீ. இன்னும் 9 நாளில் சம்மர் வரப்போகுதாம். இன்றைக்கு வெறும் 17 டிகிரி. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.....

விதான் சௌதாவின் அழகையும், கழிவுநீர் தொட்டி ( டேங்க்) யின் கோரத்தையும் எப்படி ஒப்பிடலாம்? :(

குறைஞ்சபட்சம் தமிழ்நாட்டுக் கோபுரக்கலையை அங்கே 'கோடி' காமிச்சு இருக்கலாம். தினம்பொழுது விடிஞ்சதும் பார்க்கிற சமாச்சாரம்தானே அவருக்கு. புதுசா என்ன?

Yaathoramani.blogspot.com said...

சென்றவாரம் நானும் அங்கு இருந்து
வெய்யில் மழையென அடுத்து அடுத்து மாறும்
சூழ் நிலை கண்டு அதிசயித்தேன்

நான் அடிக்கடி பெங்களூரு செல்பவன் என்பதால்
கொஞ்சம் கூடுதல் சுவாரஸ்யத்துடன் இப்பதிவைப் படித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Amudhavan said...

\\ஆனாலும் நல்ல குளிரை எதிர்பார்த்து ஆசையோடு சென்றேன். குளிரவில்லை.\\
நீங்க என்றைக்கு வந்து போனீங்க என்பது தெரியவில்லை. இப்போது வந்து பாருங்கள் நல்ல வெயில், நல்ல பனி, மற்றும் நல்ல குளிர்..

KILLERGEE Devakottai said...

நல்ல பதிவு ஐயா இடையில் அரசியல் தாக்கு உண்மையிலேயே வேதனையானதே... எனது காந்தி பதிவு காண அழைக்கிறேன்,
அன்புடன்
கில்லர்ஜி.

”தளிர் சுரேஷ்” said...

பெங்களூரு பயணப்பகிர்வுக்கு நன்றி!

G.M Balasubramaniam said...

ஒரு நண்பன் இந்த பெங்களூருவில் இருக்கிறான் என்றே மறந்து விட்டதா தருமி சார். இது ரமணிக்கும் சேர்த்த கேள்விதான்.

தருமி said...

நண்பர் என்றதால் தான் சொல்லவில்லை. உங்க ஊர்ல இருக்கிற போக்குவரத்து சிக்கல்களைப் பார்க்கும் போது ன், தொலைவுகளையும் பார்க்கும் போது, தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உங்கள் தொலைபெசி எண் இருந்தால் பேசியிருந்திருப்பேன். இதனால் இன்னும் இரு பதிவர் நண்பர்கள் கோபித்துக் கொள்ளவில்லை!

உங்கள் தொலைபேசி எண்...?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெங்களூருக்குப் பல முறை சென்றுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக மேலும் சில புதிய செய்திகளை அறிந்தேன். முதன் முதலாக 1980வாக்கில் நான் சென்ற பெங்களூர் ரம்மியமாக அழகாக இருந்தது. தற்போதைய பெங்களூர் அதிகமான பசுமையை இழந்து நிற்பதைக் காணமுடிகிறது.

தருமி said...

22.11.14

இன்னொன்று சொல்ல மறந்து போனேனே,,,, பெங்களூருக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கும் ட்ராபிக்... வண்டிக்குள் சிறை ... பொறுமை காக்க திறமை தேவை ... அங்கே வண்டியோட்டவும் பெருந்திறமை தேவை....

அசந்து போய் உட்கார்ந்திருந்த போது அந்தத் தெரு முக்கில் ஒரு பெரிய போர்டு வைத்திருந்தது.

SMALL FAMILY

HAPPY FAMILY

என்று எழுதியிருந்ததைச் சத்தமாக வாசித்தேன். சில நொடி கழித்து ...

SMALL CITY

HAPPY CITY

என்று சொன்னேன். காருக்குள் இருந்த ‘மக்கள் கூட்டம்’ அனைத்தும் ஒரு சேர கை தட்டி சந்தோஷம் என்றார்கள் -- இருந்தவர்கள் அனைவரும் ‘மதுரைக் கூட்டம்’ !

வாழ்க மதுரை !!!

சார்லஸ் said...

தருமி சார்

பெங்களூரை நேரில் கண்டது போலவே உணர்வு ஏற்படுமளவிற்கு அழகாக கதை சொல்கிறீர்கள் (உண்மை கதைதான் ). கதையெல்லாம் எப்படி எழுதுகிறார்கள் என்று நீங்கள் மற்றவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்கள். ரொம்ப தன்னடக்கம் . இடையிடையே மம்மி கதை சூப்பர்!

Post a Comment