Monday, November 10, 2014

800. எண்ணூறாம் பதிவில் ஒரு சின்ன விசேஷம்


*

ஒன்பதரை ஆண்டு ... எண்ணூறு பதிவுகள்.

போன பதிவு போடும் போதே சொல்ல வேண்டிய செய்தி. ஹிட்சுகளுக்காக எழுதிய காலம் முந்தியே முடிந்து போனது. அதுவும் மதங்களைப் பற்றி அதிகம் எழுதியதால் ஓரளவு தொடக்கூடாத ஒரு பதிவனாகவும் ஆனேன். reality புரியாதா என்ன? ஆனாலும் எழுத வேண்டும் என்ற ஆவல் இதுவரை குறைய வில்லை. பழைய நல்ல பதிவர்கள் நின்று போனது கொஞ்சம் கவலை தான். அதில் பலரும் சமுக வலைத்தளங்களுக்குச் சென்று விட்டார்கள். அதற்கும் நண்பர்களுடனான chatக்கும் அதிக வித்தியாசமில்லை. நண்பர் ஒருவர் கூறுவது போல் அதெல்லாம் வெறும் டீக்கடை பேச்சு என்பது போல் தோன்றி விட்டது. டீ குடிக்கும் போது ரெண்டு ஜோக் .. குடிச்சி முடிச்சதும் ’பை’ போய்ட்டு வர்ரேன்னு காலேஜ் கான்டீன்ல சொல்லிட்டு போவோமே அது மாதிரி ....

பதிவுகள் எல்லாம் quite solid ! எழுதும் போதும் சீரியஸ் ... எழுதுவதும் சீரியஸ் .. .. முடித்ததும் ஒரு திருப்தி. இது போதும்! யாருமே வாசிக்காமல் போவதில்லை. எனக்கு எழுதியதில் திருப்தி ... நாலைந்து பேர் படித்ததில் திருப்தி. இது போதும். அதுவும் வழக்கமான பின்னூட்டக்காரர்கள். என் பதிவுகளை விட அதை  வாசித்து அவர்கள் எழுதும் பின்னூட்டங்கள் அர்த்தம் பொதிந்தவைகளாக இருப்பதிலும் ஒரு பெருமை; மகிழ்ச்சி.

உண்மையைச் சொல்லியாக வேண்டுமல்லவா? சில சமயங்களில் பொதுக் காரியங்களைப் பற்றி எழுதும் போது பதிவர்களிடமிருந்து கட்டாயம் வரவேண்டிய firm support வராமல் போகும் போது ‘என்னடா ..இது?’ என்ற எண்ணம் வந்து விடுகிறது. தமிழ்மணத்திற்கு இன்னொமொரு கோரிக்கை  என்று ஒரு பதிவு எழுதினேன். நிச்சயமாக எல்லோருக்கும் உகந்த கோரிக்கைகள் தான் அதில் வைத்திருந்தேன். அதில் எதுவும் எல்லோருக்கும் உகந்தவைகளாகத்தான் இருக்க வேண்டும். 467 பேர் பார்த்திருக்கிறார்கள். பொது விசயத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை பலர் ஆதரித்திருக்க வேண்டுமென நினைத்தேன். “எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டேன்” என்ற தத்துவத்தில் பலரும் இருப்பதைப் பார்த்தால் எரிச்சல் வருமா வராதா....? நன்றாகவே வந்தது.

******

800 பதிவுகள் போட்டதை நான் கொண்டாட வேண்டாமா...? எப்படிக் கொண்டாடுவது என்று நினைத்தேன். ஏதாவது ஒரு பொதுக்காரியத்தை எடுத்துச் செய்ய வேண்டுமென நினைத்தேன்.

சாராயக் கடைகளின் கேடு பற்றி இப்போது அடிக்கடி போராட்டங்கள், விண்ணப்பங்கள் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பக்கத்து வீடு கேரளாவில் முழுவதுமாக குடிக்கடைகளை நிறுத்துவது பற்றி ஆவன செய்து கொண்டிருக்கின்றது. ( யார் கண்டது ... அந்தக் கூட்டமெல்லாம் இனி டாஸ்மாக் பக்கம் வந்து வரிசையில் நிற்கப் போகிறதோ என்னவோ...!) நான் டாஸ்மாக்கை விட அதிகம் அஞ்சுவது பக்கத்திலிருக்கும் பார்களை. அதுவும் அவர்கள் வண்டிகளை நிறுத்தும் இடத்திற்கு அருகில் இரு முறை நின்ற அனுபவமும் உண்டு - பக்கத்திலிருந்த ப்ரோட்டா கடையில் நின்ற அனுபவம் தான். அதில் இரு குடிமகன்கள் வண்டி எடுத்த ‘கண் கொள்ளா காட்சியைக் காணும் அனுபவம்’ ..... வண்டி எடுக்கும் போதே இன்று எத்தனை பேரை இவன் சாய்ப்பானோ என்றே தோன்றியது.

இரண்டாவதாக, பார் வைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம் மக்களுக்கு. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் என்ற “சுதந்திரம்” குடிமக்களுக்கு.

நானும் குடிப்பேன் என்பதால் குடியை ஒழிக்க வேண்டும் என்பதற்கு எதிராக இருக்க மாட்டேன். ஆனால் இந்த “சுதந்திர குடி” எளிதாய் ஒழிக்கக் கூடியது. அதில் நிச்சயமாக  பலருக்கு ஏற்படும் தடையால் அவர்களது குடி குறையும். நிச்சயமாக விபத்துகள் குறையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.

மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!

ஆகவே தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள். அதோடு இதே விண்ணப்பத்தை உங்கள் பதிவிலும் பதிப்பித்து மேலும் இச்செய்தி பலரையடைந்து, விண்ணப்பத்திற்கு நிறைய கையெழுத்து வர உதவ கேட்டுக் கொள்கிறேன்.
*

Please join this campaign:

https://www.change.org/p/tamil-nadu-ministerial-cabinet-close-down-the-bars-in-all-tasmac-shops?recruiter=5035702&utm_campaign=mailto_link&utm_medium=email&utm_source=share_petition
*
30 comments:

Avargal Unmaigal said...

/////தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள்.///

ஒட்டு அளித்துவிட்டேன்

Unknown said...

நல்ல ஆலோசனைதான் ! அது மட்டுமல்ல ! தாங்கள் அனுப்பிய மனுவும் நன்றே!

Avargal Unmaigal said...

தமிழ் மணம், ரேங்க் என்று ஏன் தான் இன்னும் அதைவிடாமல் பிடித்து கொண்டிருக்கிறீர்களோ? ஒரு வேளை தமிழ்மண நிர்வாகிகள் அதை இழுத்து முடிவிட்டு போய்விட்டால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அப்துவு எழுதுவதை நிறுத்திவிடப் போகிறீர்களா என்ன?

தமிழ்மணம் நமக்கு உதவுகின்றது என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் தமிழ்மணம் இல்லாவிட்டால் குடியே மூழ்கிவிடாது... உங்கள் பதிவுகளை கூகுல் மற்றும் கூகுல் ப்ளஸ் மற்றும் பேஸ்புக் டிவிட்டரில் சேருங்கள்

தருமி said...

//உங்கள் பதிவுகளை கூகுல் மற்றும் கூகுல் ப்ளஸ் மற்றும் பேஸ்புக் டிவிட்டரில் சேருங்கள்//

தெரியாது. கேட்டு அதன்பின் செய்கிறேன். நன்றி

G.M Balasubramaniam said...

நானும் இதில் சேர்ந்து முகநூல் நண்பர்கள் ஐந்து பேரையும் பரிந்துரைத்திருக்கிறேன். சரிதானே சாம் ஜார்ஜ்

வரவனையான் said...

உங்கள் கருத்துடன் 100% விதம் ஒத்து போகிறேன். நானும் குடிப்பேன், ஆனால் வேளிநாடுகளைப்போல கான்ஸியஸ் டிரிங்கிங் நம்நாட்டில் இல்லவே இல்லை. எனவே மதுக்கூடங்களை மூடுவது குடிக்கும் வாய்ப்புகளை குறைக்கும். பெரும்பாலும் வீட்டில் குடிக்க முடியாது என்பதால் பாதுகாப்பான இடம் அமையும் வரை குடிப்பது தள்ளிப்போகும் . நல்ல முயற்சி.

பி.கு - 8 ஆண்டுகளுக்கு மின் நாம் சந்தித்தபோது புகைப்பதை நிறத்த சொன்னீர்கள். விட்டுவிட்டேன் 2 ஆண்டுகளாகப்போகிறது :-)

தருமி said...

நன்றி ஜிஎம்பி

தருமி said...

// புகைப்பதை நிறத்த சொன்னீர்கள். விட்டுவிட்டேன் 2 ஆண்டுகளாகப்போகிறது :-)//

ரொம்ப நல்ல பிள்ளை. மிக்க நன்றி.

உங்கள் எழுத்துகள் எவ்வளவு நகைச்சுவையோடு இருக்கும். அதைத் தொடர்ந்தால் என்ன?

ராமலக்ஷ்மி said...

விண்ணப்பத்தில் வாக்களித்து விட்டு வருகிறேன். எண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்!

Anonymous said...

Signed.
But my name is not appearing.

KILLERGEE Devakottai said...

800 க் கடந்து 1000 த்தை விரைவில் தொட வாழ்த்துக்கள் ஐயா நல்ல விசயத்தை குறித்து எழுதியமைக்கு நன்றியுடன்
கில்லர்ஜி

இரா. பிரபாகர் said...

வாழ்த்துக்கள் சார். 800 பதிவுகள்- லட்சக்கணக்கில் நோட்டமிட்டவர்கள் - ஆயிரக்கணக்கில் பின்னூட்டங்கள் - ஆரம்பிக்கும்போது இதையெல்லாம் எதிர்பார்த்தீர்களா என்று தெரியவில்லை. நீங்கள் செயலாய், வாத்தியார் வேலை பார்த்த நாட்களில் கூட இவ்வளவு பொது விசயங்களை நீங்கள் பேசி மாணவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். பணி ஓய்வுக்குப் பின்னும் ஆசிரியர் போலவே சுறுசுறுப்பாக இயங்கி வந்துள்ளீர்கள். உங்களை நேரில் சந்திக்காத உணர்வே எழுவதில்லை. வாழ்த்துக்கள் மீண்டும். (பின் குறிப்பு: அடுத்து எப்படி இணையத்தில் இயங்குவது என்ற குழப்பம் / ஐயம்/ தெளிவின்மை ஏதேனும் இருப்பின் ஒரு குடிவிருந்திற்கு ஏற்பாடு செய்தால் 'குடி ஒழிப்பு' உட்பட எல்லாவிசயங்களையும் உங்களுக்காக விவாதிக்க ஒரு மாலைப் பொழுதை தியாகம் செய்ய நான் தயாராக இருப்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

”தளிர் சுரேஷ்” said...

பெட்டிசனுக்கு ஓட்டளித்துவிட்டேன்! மதுரை தமிழன் சொல்வது போல தமிழ் மணத்தையே சார்ந்து இருக்க வேண்டாம்! என்னுடைய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைப்பது இல்லை! இருந்தாலும் நிறைய பார்வையாளர்கள் வருகிறார்கள்! புதிய நட்புக்களை உருவாக்குங்கள்! உங்கள் பழைய நட்பு வட்ட பதிவர்கள் பதிவு எழுதுவதில்லை! புதிய பதிவர்களின் தளங்களுக்குச் சென்று கருத்திடுங்கள்! அவர்களும் உங்கள் தளம் வருவார்கள்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

ஓட்டு அளித்துள்ளேன் ஐயா
முயற்சி வெற்றி பெறட்டும்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

கரந்தை ஜெயக்குமார் said...

எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன் ஐயா

Anna said...

Congrats sir! I've signed the petition as well.

கருப்பையா.சு said...

ஐயா!, உங்களின் வலைப்பூவிற்குள் நுழையும் வாய்ப்பு இன்று தான் எனக்கு கிட்டியது. மிகவும் ஊக்கதுடன் 800 பதிவுகளை ( வரிசை எண் உட்பட) வெளியிட்டு உள்ளீர்கள். சில பதிவுகள் பிரமிப்பாக உள்ளது. முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கி உள்ளது. உங்கள் எழுத்துகளுக்கு எதிர்பார்த்த பின்னூட்டமும் ஆதரவும் இல்லை என்கிற வருத்தம் உங்களது 800 பதிவில் தென்பட்டது. வேண்டாம் இந்த தளர்ச்சி. நீங்கள் எழுதிக் கொண்டேயிருங்கள். அது என்றாவது ஒரு நாள் கவனிக்கப்படும். எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமும் இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி.
-சு.கருப்பையா.

சார்லஸ் said...

தருமி சார்

நானும் உங்களைப் போலவே 2012 இல் எழுத ஆரம்பித்து எதையாவது எழுதுவோம் என்று எழுதி பின் நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்குப் பிடித்த ..ஏன் .. எல்லோருக்கும் பிடித்த இசையைப் பற்றி சுய அனுபவம் கலந்து எழுதுவோம் என்ற முடிவுக்கு வந்து ...எழுதுகிறேன் . நீங்களும் என் தளத்திற்கு வருகிறீர்கள் . நான் இப்பதான் 10 பதிவு போட்டிருக்கிறேன் . ம் ...இன்னும் 790 பாக்கி இருக்கா?

குறும்பன் said...

எண்ணூறுக்கு வாழ்த்து. மற்றவர் தொட அஞ்சும் கருத்துக்களை இடுபவர் நீங்கள் குறிப்பாக மதம் சார்ந்த இடுகைகள். சார்வாகன் இன்னொருவர். உங்கள் இடுகைகள் திரும்ப திரும்ப படிக்க கூடியவை. வெளிநாடுகளிலும் கூத்துக்கள் உண்டு ஆனால் காவல்துறை பிடித்தால் அபராதம் அதிகம் நீதிமன்ற செலவு தொடர்ந்து வரும் வண்டி காப்பீடு உயர்வு என்று பணம் முக்கிய காரணம் வகிக்கிறது. போக்குவரத்து காவலர்களும் நிறைய இருப்பார்கள் எங்க இருந்து வந்து பிடிப்பானுங்க என்று தெரியாது. வாக்கு போட்டாச்சு.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் சார்

தருமி said...

//ஆசிரியர் போலவே சுறுசுறுப்பாக இயங்கி வந்துள்ளீர்கள். //

????????????//....

//ஒரு குடிவிருந்திற்கு ஏற்பாடு செய்தால்...//

வழக்கமாக விருந்து தருபவன் நீ: எடுப்பவன் நான். இந்த ‘நீதியை:” மாற்றலாமா ... அது தகுமா? நீதியாகுமா? தரணி தாங்குமா?


குலவுசனப்பிரியன் said...

நல்ல முயற்சி. நானும் கையெழுத்திட்டிருக்கிறேன்.
அமெரிக்காவில், போதையில் வண்டி (மிதிவண்டி உட்பட) ஓட்டினால் கடுமையான தண்டனைகள் உண்டு. சனாதிபதியின் பிள்ளைகளானாலும் சரி.

நான் குடிபதில்லை, அதனால் பல முறை நண்பர்கள் குழாமில் ஓட்டுனராக (designated driver) இருந்திருக்கிறேன்.

நம் புண்ணிய பூமி, மக்களுக்கு நலம் தரும் புதிய மரபுகள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

Avargal Unmaigal said...


தமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா? http://avargal-unmaigal.blogspot.com/2014/11/tamil-nadu-ministerial-cabinet-close.html

unmaiyanavan said...

மிகவும் ஒரு நல்ல விஷயத்திற்கு பாடுபடுகிறீர்கள். என்னால் முடிந்த சிறிய உதவி - ஓட்டு அளித்துவிட்டேன் ஐயா.

விசு said...


"குடி" உயர "கோள்" உயரும், "கோள்" உயர "குற்றம்" உயரும்!

http://vishcornelius.blogspot.com/2014/11/blog-post_17.html

விசு said...

அருமையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

800ஐப் போற்றும் வகையில் தாங்கள் எடுத்துள்ள முயற்சி 100 விழுக்காடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

800வது பதிவுக்கு வாழ்த்துகள். மனுவில் கையெழுத்திட்டு விட்டேன். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
பதிவு எழுதாமல் இருப்பது மனது வேதனையைத் தருகிறது. சீக்கிரம் எழுத ஆரம்பிக்கிறேன்.
மிக்க நன்றி.

koilpillai said...

தருமி ஐய்யா, வணக்கம்.

எட்நூராவது பதிப்பிற்கு எந்தன் இதய வாழ்த்துக்கள்.

கோ

Post a Comment