Monday, December 29, 2014

812. இளைய ராஜா பற்றி ஒரு புகழ் பெற்ற பாடகர் கூறியது .........






*



இளைய ராஜாவின் இசை மீது எனக்குப் பெரும் மரியாதை. அவரை நான் எங்கோ வைத்திருக்கிறேன். இருப்பினும் இன்று அவரது பாடல்கள் பழைய பாடல்கள் போலில்லையே என்ற ஆதங்கமும் உண்டு. இருப்பினும் அவருக்குப் பின் அவரது அரியணையில் இன்னும் யாரையும் இதுவரை ஏற்றவில்லை.

ஆனால் சில மேதாவிகள் //இளையராஜாவை தூக்கிப் பிடிக்கும் எவரின் இசை ரசனையையும் நான் பெரிதாக மதிப்பதில்லை.// என்று சொன்னதும் என்னடா ... நமக்குத்தான் இசையறிவு இல்லையே ... நாம்தான் அறிவில்லாமல் இப்படி தப்பாக எண்ணிக்கொண்டிருக்கிறோமோ என்று கூட நினைத்தேன்.

அந்த சோகத்தில் இருக்கும் போது 'இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள்’ என்றும் அவர் கூறியதும் ... சரி .. நாம் தான் தற்குறியாக ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நினைத்து வருந்திக் கொண்டேன்.



தற்செயலாக நான் நல்லெண்ணம் கொண்டிருந்த ஒரு கர்நாடகப் பாடகர் - தொழில் முறையிலேயே பெரிய பாடகர்; வெறும் எழுத்துகளில் மட்டும் தன் பாண்டியத்தைக் காண்பிக்காமல் குரல் வளத்தாலேயே பெரும் பாடகர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவர் - இ.ரா. வைப் பற்றிக் கூறியதைப் படித்ததும் என் ‘ஜென்மம் சாபல்யமானது’!!

 டி. என். கிருஷ்ணா இளையராஜா பற்றி ஆ.வி.யில் கூறியது:

 “தமிழ் சினிமா இசையை ரசிப்பீர்களா?”


 ”இளையராஜா காலம் வரைக்கும் ரசிச்சேன். இப்போதைய இசையமைப்பாளர்கள் பத்தி சொல்ல ஏதும் இல்லை. கொஞ்சம் கவலையாகக் கூட இருக்கு.

’டெக்னாலஜி .. டெக்னாலஜி’னு சொல்றாங்க. கலைஞனின் சிந்தனைக்கு உருவம் கொடுக்கத்தான் டெக்னாலஜி பயன்படணும். ஆனா, இப்போ அந்தச் சிந்தனையையே டெக்னாலஜி தான் பண்ணுது. கலைஞர்கள் வெறும் ‘ஏற்பாட்டாளர்’களாக மாறிட்டாங்க. சின்ன பிட், குட்டி நோட் கூட பிசகாம பக்காவா பாட்டு பாடுறாங்க. ஆனா, அதுல உயிர் இல்லையே! மெஷின்ல பட்டன் தட்டி உருவாக்கும் பாட்டு அப்படித்தான் இருக்கும். சின்னச் சின்னக் குறைகளோடு கூட பாட்டு பண்ணுங்க. ஆனா அதுல உங்க கிரியேட்டிவிட்டினு ஏதோ ஒரு டச் இருக்கணும். அது இல்லாம வர்ற இசை ... நிக்காது.”

 அப்பாடா ....!


 *

12 comments:

விசு said...

// ”இளையராஜா காலம் வரைக்கும் ரசிச்சேன். //..There we go, he took the words straight out of my mouth.

”தளிர் சுரேஷ்” said...

சரியாத்தான் சொல்லியிருக்கார்! பகிர்வுக்கு நன்ரி!

Unknown said...

அருமை தருமி சார்

தாங்கள் குறிப்பிட்ட "வதை " விமர்சகருக்கு ஒன்றுமே புரியவில்லை.அவர்களுடன் நியாயமாக பேச முடியாது!

டி.எம். கிருஷ்ணா மட்டுமல்ல இசையுலகின் யாம்பவான்கள் பலரும் ராஜாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.திரு.கே.ஜே .ஜேசுதாஸ் கூட தனது 50 வது வருட இசை நிகழ்வில் " ராஜாவை உலக இசை மேதைகளுடன் ஒப்பிட்டு பேசினார்.

இதனை அமுதவன் அறிந்தால் பாட சான்ஸ் கேட்பதற்காகப் இப்படி கூறுவார்கள் என்று கயிறு திரிப்பார்.மற்றவர் அதை வைத்து சிலம்பாட்டம் ஆடுவார்.

ராஜாவுக்கு பின் யாராலும் சிம்மாசனத்தில் ஏற முடியவில்லை.

தங்கள் அசோகன் பற்றிய நூலுக்கும் எனது வாழ்த்துக்கள்.

புதுவருட வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

இளையராஜா இளையராஜாதான்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

S.Raman, Vellore said...

ராஜாவிற்கு ஈடு இணை எவருமில்லை. நம்முடைய ரசனையில் நிச்சயம் எந்த பிரச்சினையும் கிடையாது. சொன்னவர் பற்றிதான் ஆராய வேண்டும்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாங்கள் கூறுவதுபோல தொழில்நுட்பத்திற்கு முதன்மை கொடுத்து மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதை பல இடங்களில் காணமுடிகிறது.

காரிகன் said...

என்னை வைத்து உங்கள் பதிவுகளை எழுத வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். நான் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களையும் வைத்து நீங்கள் கண்டிப்பாக இந்த தருமி 812 டை தருமி 1000 ஆக்கிவிடலாம். வாழ்த்துக்கள்.

சார்லஸ் said...

தருமி சார்

கொஞ்ச நாளாய் இணையம் பக்கம் வரமுடியவில்லை . அதற்குள் மூன்று பதிவுகள் போட்டு முடித்து விட்டீர்கள் . இளையராஜா பற்றிய விளக்கம் கொடுத்த கிருஷ்ணா அவர்களின் பேட்டியை நானும் வாசித்து மகிழ்ந்தேன் . உண்மையான இசை மேதைகள் யார் வந்து புறக்கணித்தாலும் மற்ற இசைக் கலைஞர்களால் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி . ஏதோ சில இசையறிவு குறைந்த 'மேதாவிகள்' சொன்னது எல்லாம் நிஜமாகி விடுமா என்ன !? இளையராஜா என்றென்றும் இசைக்கு ராஜாதான்!

தருமி said...

காரிகன்,

// என்னை வைத்து உங்கள் பதிவுகளை எழுத வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். //

உங்களைப் பற்றி உங்களுக்கிருக்கும் ”உயர்ந்த எண்ணம்” ’ நான் எற்கெனவே அறிந்தது தான். ஆனால் இது இத்தனை பெரியதாக இருக்கும் என்று நினைக்கவேயில்லை. பாவம் தான் ....

//நான் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களையும் வைத்து நீங்கள் கண்டிப்பாக இந்த தருமி 812 டை தருமி 1000 ஆக்கிவிடலாம்.//

அப்படி நான் எழுதினாலும் சிலர் மண்டையில் எதுவும் ஏறப்போவதுமில்லை என்பதும் எனக்கு நன்கு தெரியும், அய்யா!

தருமி said...

காரிகன்,

வாழ்த்து வேறு சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மிக மிக நன்றியய்யா ....!

Unknown said...

தருமி sir

ஓட்டை ஒடிசலாக பதிவு எழுதி "மனக்கணக்கில் வீங்கி திரியும் கிறுக்கர் " ஒருவர் படும்பாடு பெரும்பாடு.உண்மைக்கும் அவர்களுக்கும் ரொம்ப தூரம் .

Post a Comment