Wednesday, December 17, 2014

807. JIHADI COLLECTION (13)


*
17.12.2014

*

PAKISTAN TALIBAN : PESHAWAR SCHOOL ATTACK  LEAVES 141 DEAD


132 CHILDREN MASSACRED IN ATTACK IN SCHOOL  


மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தீவிரவாதிகள்  சுடுவதற்கு முன் எங்களை ஓதும்படி ஆணையிட்டார்கள்.
  என்னே ஒரு பக்தி …!!


செத்தவர்கள் இளம் பாலகர்கள். குற்றமில்லாத  குழந்தைகள். நிச்சயமாக மார்க்க நம்பிக்கைகளின் படி அவர்கள் எல்லோரும் கட்டாயம் சுவனம் செல்வார்கள்.

ஆனால் அவர்களைக் கொன்றொழித்தசுவனப்பிரியர்களானதற்கொலைப்படையாளர்கள் எங்கே போவார்கள்? அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளாக மாறுவதற்கே சுவனத்தின் ஈர்ப்பு தான் காரணம் என்கிறார்கள். அப்படியானால், அவர்களும் சுவனம் தான் செல்வார்களோ..?As the Taliban black boots approached


அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான், “எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால் எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாகு அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து விட்டனர்.

  என்னே ஒரு பக்தி …!!

 (பல முறை கேட்ட கேள்வி தான் …. ஏன் இம்மார்க்கத்தில் கொலை செய்யும் போது இந்த கோஷம்  எழுப்பப் படுகிறது/?)


*

17.12.2014

**

 

12 comments:

வேகநரி said...

இந்த கொடுமைக்கெல்லாம் காரணமே சுவனஈர்ப்பு வெறி தான்.

suvanappiriyan said...

//மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தீவிரவாதிகள் சுடுவதற்கு முன் எங்களை ஓதும்படி ஆணையிட்டார்கள்.//

//அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான், “எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால் எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாகு அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து விட்டனர்.//

இதிலிருந்து என்ன தெரிகிறது? இதன் மூலம் இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்று இந்த செய்தியை கேள்விபடுபவர்கள் உணர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியிருந்ததை காண்கிறோம். எனவே இந்த கொடியவர்கள் இஸ்லாமிய எதிரிகளால் தயாரிக்கப்பட்டு மூளை சலவை செய்யப் பட்டவர்கள் என்பது நன்கு விளங்குகிறதல்லவா?

இது சம்பந்தமாக நான் எழுதிய பதிவையும் பார்வையிடுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/12/blog-post_85.html

கரந்தை ஜெயக்குமார் said...

கொடுமை ஐயா
அனைத்து மதங்களுமே அன்பைத்தானே போதிக்கின்றன
இருந்தும் ஏன் இப்படி?

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

சார்லஸ் said...

நடந்த நிஜம் நெஞ்சைப் பிளக்கிறது . இறைவனிடம் என்ன சொல்லி மன்றாடுவது?

தருமி said...

//இந்த கொடியவர்கள் இஸ்லாமிய எதிரிகளால் தயாரிக்கப்பட்டு மூளை சலவை செய்யப் பட்டவர்கள் என்பது நன்கு விளங்குகிறதல்லவா?//

அப்படியா.....? ‘அல்லாகு அக்பர்’..........

வேகநரி said...

//அப்படியா.....? ‘அல்லாகு அக்பர்’..........//
முன்பு மலாலா மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தி கொல்ல முயன்றதை பற்றிய ஒரு பதிவில் எல்லோரும் தலிபானை கண்டித்த போது அண்ணர் வந்து தலிபான்கள் அப்படிபட்டவங்க கிடையாது இது திட்டமிட்ட சதி என்று விளக்கம் அளித்தார்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

மன்னிக்கணும் சார்லஸ் ..
.// இறைவனிடம் என்ன சொல்லி மன்றாடுவது? //

எந்த இறைவனிடம் மன்றாடுவது ?!

தருமி said...

என்ன வேகநரி... இப்படி ஆச்சரியப்பட்டு விட்டீர்கள்! சு.பி. எப்போதுமே இப்படித் தானே...எனக்குப் பழகிப் போச்சு. என்ன சொன்னாலும் அவரது - தாடி மீசையில் மண் ஒட்டுவதேயில்லையே!

யாரோ ஒருவர் - அவர் ஒரு ஆசிரியராகக் கூட இருக்கலாம். கொடுத்த அபாய அறிவிப்பிற்காக அடுத்த நிமிடமே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்.- கொடுத்த ஒரு அறிவிப்பே சு.பி,க்கு ஒரு தடயம். இதை வைத்து //இந்த கொடியவர்கள் இஸ்லாமிய எதிரிகளால் தயாரிக்கப்பட்டு மூளை சலவை செய்யப் பட்டவர்கள் என்பது நன்கு விளங்குகிறதல்லவா?// என்று ஒரு தீஸிஸ் எழுதுகிறார்!
இப்போதெல்லாம் வஹாபிகள் அமைதியாகி விட்டார்கள். ஏதோ இது ஒரு பெரிய காட்டுத் தனம் என்பதால் சிறிது அமைதியைக் கலைத்திருக்கிறார். விடுங்கள் .......

suvanappiriyan said...

வேக நரி!

//முன்பு மலாலா மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தி கொல்ல முயன்றதை பற்றிய ஒரு பதிவில் எல்லோரும் தலிபானை கண்டித்த போது அண்ணர் வந்து தலிபான்கள் அப்படிபட்டவங்க கிடையாது இது திட்டமிட்ட சதி என்று விளக்கம் அளித்தார்.//


பெஷாவரில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானிய தெஹ்ரிக் தாலிபான் பழங்குடியினர். கம்யூனிஸ்ட் என்ற பெயரில் தாக்குதல் நடத்தினால் ஒட்டு மொத்த உலக கம்யூனிஸ்டுகளையும் வம்புக்கிழுப்பீர்கள் போல் இருக்கிறது. :-)

இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஆப்கன் தாலிபான்கள் அறிக்கை விட்டுள்ளதை நீங்கள் பார்க்கவில்லையா?


“அப்பாவி மக்கள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது. ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், இயக்கமும் அடிப்படை சாராம்சத்தின் படி நடக்க வேண்டும்.

ஆப்கான் இஸ்லாமிய அமிரகம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.”

http://suvanappiriyan.blogspot.com/2014/12/blog-post_72.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வேதனையையும் சோகத்தையும் எடுத்துரைக்க சொற்களே கிடையாது. இதில் இறைவனை இழுத்துக்கொள்வது இன்னும் வேதனை.

Post a Comment