Saturday, March 14, 2015

826. RELIGULOUS - ஒரு ஆவணப்படம்.





*




எப்படியும் இருபது முப்பது குறுந்தகடுகள் ... இறக்கி வைத்த சாப்ட் காப்பிகள் ... என்று நாற்பது ஐம்பது  திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன. பார்ப்பதற்காக வாங்கியது ... இறக்கியது.

படம் பார்க்க நேரமே கிடைக்க மாட்டேங்குது! ஒய்வுக் காலத்திலும் அத்தனை பிசி!!

ஒரு படம் ... இறக்கி வைத்தது. எப்போது, எதற்காக இறக்கி வைத்தேன் என்பதே மறந்தே போச்சு. ஆனாலும் நம்ம தொகுப்புல அர்த்தம் தெரியாத ஒரு தலைப்பு இருந்தது இந்த ஒரு படம் தான். சரி ... மொதல்ல அர்த்தம் பார்ப்போமேன்னு அகராதி எடுத்துப் பார்த்தேன். அப்படி ஒரு வார்த்தையும் இல்லை. சரின்னு படம் பார்க்க ஆரம்பித்தேன். அது திரைப்படம் இல்லை. ஒரு ஆவணப் படம். கொஞ்ச நேரம் கழித்து தான் தலைப்பு புரிந்தது.

RELIGION + RIDICULOUS = RELIGULOUS!!!

 அழகான தொகுப்பு ... அர்த்தமுள்ள தொகுப்பு ... பார்க்க ஆரம்பித்ததும் நிறுத்த முடியவில்லை, அத்துணை interesting .... 

படம் பார்த்து முடிந்த பிறகுதான் படத்தைப் பற்றிய விவரங்களை கூகுளாண்டவரிடம் கேட்டேன். தலைப்பு பற்றியும் போட்டிருந்தது.  LARRY CHARLES என்பவர் இயக்கியுள்ளார்; BILL MAHER என்ற நகைச்சுவை நடிகர் பலரை நேர்காணல் செய்கிறார். படம் திரையிடப்பட்டு மிக வெற்றிகரமாக, நல்ல லாபத்தோடு ஓடியிருக்கிறது.

மூன்று ஆபிரஹாமிய மதங்களைச் சார்ந்த பலரைக் கேள்விகள் கேட்டு, அவையெல்லாம் அழகாகத் தொகுக்கப்பட்டு,  அர்த்தமுள்ள முடிவுகளோடு இருந்தது. எப்படி நம்புக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கை என்ற ஒரு கோட்டின் ஒரு பக்கமே நின்று விடுகிறார்கள் என்று மிகத் தெளிவாகக் காண்பித்துள்ளார். தங்கள் மதங்களின் “ஓட்டைகளைக்” கண் திறந்து பார்க்காமல்  நம்பிக்கையாளர்கள் எப்படி மிக அழகாகக் கடந்து சென்று விடுகிறார்கள். வரலாற்று  உண்மைகளைக் கூட நம்பிக்கையாளர்கள் கண்டுகொள்வதில்லை. விஞ்ஞான உண்மைகளா..... என்று எப்படி ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்!! 

தொய்வில்லாமல் இந்த மூன்று மதக்காரர்களைச் சந்தித்து, நகைச்சுவையோடு விவாதித்து செல்வது ஒரே மூச்சில் ஆவணத்தைத் தொடர்ந்து பார்க்க வைத்து விடுகிறது.

ஒரு பெரும் மகிழ்ச்சி ....  மதங்களைப் பற்றி நான் எழுதிய பல கருத்துகள் இந்த ஆவணப்படத்திலும் இடம் பெற்றன. சில விவாதங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்ததாகத் தோன்றியது. 

சில முத்தான முடிவுரைகள்:

In U.S. 12% are non- believers. 

So many gods (!!) were born on 25th December !!!
 
So many gods (!!) were born from virgins!!



The plain fact is 
Religion must die
For mankind to live.

Faith means making a virtue out of not thinking.

Religion is dangerous because it allows human feelings who don't have the answers to think that they do.

Those who preach faith and enable and elevate it are our intellectual slaveholders keeping mankind in a bondage to fantasy and nonsense that has spawned and justified so much lunacy and destruction.

RATIONAL PEOPLE. ANTI-RELIGIONISTS, MUST END THEIR TIMIDITY AND COME OUT OF THE CLOSET AND ASSERT THEMSELVES.

                                            YES, I AM OUT OF THE CLOSET AND ASSERTIVE!!!















 *

5 comments:

விசு said...


Bill Maher.. You can live with him you cant live without him.

G.M Balasubramaniam said...

சில நம்பிக்கைகளுக்கு எதிராக ஏதாவது எழுதினால் வலையில் எழுதுபவரை ஓரங்கட்டுகிறார்கள் படித்தாலும் தாண்டிப்போய் விடுவார்கள் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாதுநாம் இன்னும் சுயமாக சிந்திக்கும் சுதந்திரம் அடையவில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

//RATIONAL PEOPLE. ANTI-RELIGIONISTS, MUST END THEIR TIMIDITY AND COME OUT OF THE CLOSET AND ASSERT THEMSELVES.//
I too Sir
Thank you Sir
tha ma 2

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தலைப்பைப் பார்த்ததும் இரு சொற்களின் இணைப்பு என்பதை உணர்ந்தேன். ஆனால் என்னவென்று புரியவில்லை. நம் எழுத்தோ கருத்தோ சற்றொப்ப அதே நிலையில் வரும்போது நமக்கு ஒரு திருப்தி ஏற்படுவது இயற்கையே. அதனைத் தாங்கள் பதிந்துள்ள விதம் நன்று.

தருமி said...

ஜம்பு சார்
உங்க பெயரை இந்துவில் பார்த்தேன் - தீர்த்தங்கர் சிலை கண்டுபிடிப்பு.

வாழ்த்துகள்.

Post a Comment