Sunday, March 22, 2015

827. அட .. போங்கப்பா .. நீங்களும் உங்க சூப்பர் சிங்கரும் ....


*


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆச்சரியத்தோடு பார்த்தது உண்டு. இம்புட்டு திறமையான்னு ... ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இருப்பாங்க போலும். muziklounge அப்டின்னு ஒரு பாட்டுப் பள்ளிக்கூடம் ஒண்ணு இருக்கிறது போலும். அதன் மாணவர்கள் பாடிய இரண்டே இரண்டு பாட்டு கேட்டேன். என்னமா பாடுறாங்க... இவங்க திறமையோடு பார்க்கிறப்போ சூப்பர் சிங்கர்ல ஜெயிச்சவங்க திறமை அதிகமில்லை.

சூப்பர்ல ஜெயிச்சவங்கள்ள அதிகமாக அதன் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி தெரியவில்லை. முதல் தடவை வந்த மாத்யு என்ன ஆச்சு? அஜேஷ் ஒரு அரை பாட்டு மட்டும் பாடியது மாதிரி இருந்தது. பின் ஆளைக் காணோம். கடைசியா வந்த திவாகர் என்ன ஆச்சுன்னு தெரியலை. ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு பாடுன பையன் முதல் ஆளாக போட்டியில வரலை. ரொம்ப நல்லா பாடின அல்காவைப் பற்றி அதற்கு மேல் தெரியவில்லை. பரிசு வாங்கினாலும் பின்னணி பாடகர் ஆவதற்கு ’அதற்கு மேலும்’ போவது எப்படி?

எது எப்படியோ... muziklounge போட்டிருக்கிற youtubeல் வர்ர நான்கு பாடகர்கள் பக்கத்தில் - except அல்கா - சூப்பர் சிங்கர் பாடகர்கள் பக்கத்தில கூட வர முடியாது. என்னமா பாடுறாங்க....

சச்சினும், அந்த சின்னப் பொண்ணும் - அஸ்வதி ராஜ் -  நல்லா பாடுறாங்க ... அதிலும் அந்த சின்னப் பொண்ணு பாடும் போது அட... யார் யாருக்கெல்லாம் 60 லட்சம்..70 லட்சம்னு வீடு கொடுக்கிறாங்களேன்னு தோணுச்சி ... * *

*

இப்படி ஒரு வித்தகரா? எந்த குருவும் இல்லாமல் பல வகை கம்பி வாத்தியங்களை வச்சி விளாசுகிறாரே.... வித்தகர் தான் .........*

10 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி
தமிழ் மணம் 1

துளசி கோபால் said...

அருமை!

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

விசு said...

இதுவரைக்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்போது தம் பதிவை படித்தவுடன் எதோ எனக்கு நல்ல காலம் போல் இருக்கு.. அதனால் தான் இந்நிகழ்ச்சியை பார்க்க எனக்கு கொடுத்துவைக்க இல்லை என்று உள்ளது..

G.M Balasubramaniam said...

ம்யூசிக் லௌஞ்ஜில் பாடுகிறவர்கள் நன்றாகவே பாடுகிறார்கள். சூப்பர் சிங்கரில் பாடியவர்களும் மிக அருமையே. ஒப்பிடல் சரியில்லையோ என்று தோன்றுகிறது இசை ரசிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடும். சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்கள் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ம்யூசிக் லௌஞ்ஜில் பாடுபவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாமே பரிசுகளை அள்ளலாமே

வேகநரி said...

நல்லாவே பாடுகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நான் ஒருநாளும் பார்த்ததில்ல, தமிழ்மணத்தில் அதை பற்றி படிப்பதோடு சரி.

சார்லஸ் said...

தருமி சார்

நல்ல பதிவு . பாடல்களை வெகுவாக ரசித்தேன் .
அதிலும் அந்த சின்னப் பெண் மழலைக் குரலில் சுருதி பிசகாது சின்னச் சின்ன குறும்புத்தனங்களுடன் பாடியது கூடுதல் அழகு . இளையராஜாவின் பாடல்கள் அதை விட அழகு . ஆன்மாவைத் தொடும் அந்தப் பாடல்களில் எவ்வளவு ஜீவன் கொட்டிக் கிடக்குது. எங்கே சார் இப்படி தேடிப் பிடிக்கிறீர்கள்!? நானும்தான் யு டியுபில் தேடுகிறேன் .

ஒலிப்பதிவு கூடத்தில் பாடுவது சற்று எளிது. மேடையில் பாடுவது கடினம். மிகவும் கவனமாகவும் பாட வேண்டும். சிறிய தவறும் தெளிவாக தெரியும் . எஸ்.பி.பி அவர்களே மேடையில் பாடும்போது சிறிது பதட்டத்துடன் இருப்பேன் என பேட்டியில் சொல்லி இருக்கிறார் .
ஆக சூப்பர் சிங்கர் பாடகர்கள் திறமைசாலிகளே! இசையில் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்டவர்கள் . அவர்களை ஒதுக்கி விட முடியாது. சினிமா சான்ஸ் எல்லோருக்கும் கிடைக்காது. அவர்களை விட திறமைசாலிகள் உள்ளே நுழைய முடியாமல் இருக்கிறார்கள் .

நீங்கள் குறிப்பிட்ட அல்கா இசையில் ஒரு பிசாசு. அந்தப் பெண்ணைப் போல் பாட இன்னொரு பெண் இன்னும் சூப்பர் சிங்கரில் வரவில்லை .

என்ன சார் என் பதிவுப் பக்கம் வரமாட்டேன் என்கிறீர்கள் ? இன்னொரு obligation . என் பதிவை முடிந்தால் தமிழ் மணத்தில் சேருங்கள் . என்னால் உள்ளே நுழைய முடியவில்லை .

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. தங்கள் பதிவு மூலம் பார்த்தேன்.

குறும்பன் said...

சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லை, வாய்ப்பு கிடைத்தாலும் அதை பார்க்கக்கூடாது என்பதால் பார்ப்பதில்லை. அது போலவை கேடி சகோதரர்களின் தொக்காவையும்.

தருமி said...

குறும்பன்
what is தொக்கா??

Post a Comment