*
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghbEJb-W_da1_RxlzHUs9lmce0yy3WUZyyX4YxLWAMuPZwqqcsDIL3t6MAHP9Th6nbnUgvgmQ8KE7TNnBazss_oOioz5p7mbMmCe882mtE22lGYQNRAzDqhpairMqEWLStTxthPg/s320/6.jpg) |
இக்கண்கள் எடுத்த படங்கள் கீழே..... |
கருவாயன் அப்டின்னு புனைப்பெயர். சரியா நனஞ்ச பனம் மரம் மாதிரி ஒருத்தரு இருப்பாருன்னு போய் பார்த்தா ரெங்கா நல்ல மாநிறத்தில மூஞ்சி பூரா நிறஞ்ச சிரிப்போடு நிக்கிறாரு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeIKpXmqbSO83Pm6gKYLt6UGJG1BWc3QzFYuSNsiWDoW9JB2RJhrUzg8WzK-vtEtWF8shKiMTcNMDCyM2wPChtExGsOWqkVI6DssLkiZK6KCJSTwnffKegSCsSoQMRvjo7uPPQyA/s320/5.jpg) |
கண்கள் ....ஆனால் ஒளியில்லை
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjDwOhrIzD82xdzI8icMNdL2e-8sltsl8ZAAprvDaHOg8Y0xnxIysu8QCYR6VlIZvS0h35-XXbAH9w6l654SzubBVohM1U-wYXgojhg7-vWIsTG_FG5_xA43RDwWhhGQonBLF_4g/s320/2.jpg) |
தனியொருவன் ... தன் தனித்த உலகில். |
அந்தப் பள்ளி என் வீட்டுக்கருகில் தான். சில தடவை அங்கு சென்றும் வந்துள்ளேன். ஆனாலும் ரெங்கா தினம் தாண்டிப் போகும் அந்த பள்ளி அவருக்கு ஒரு முனைப்பைக் கொடுத்திருக்கிறது. அடிக்கடி அந்தப் பள்ளிக்குச் சென்று பிள்ளைகளோடு பழகி, பழக்கத்தால் வந்த பிணைப்போடு படங்கள் எடுத்திருக்கிறார். அந்தப் பண்புக்கு முதல் சல்யூட்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0jFQWaDgtLGP8BmtMz1OINIK2HbMh_Y7EVZjBA6RAKRed4GjTsMbdg5ysByb0hIH6Wei9WZu4GjcaZ1RAtoKVfUFE1P3QMQRuCRl7z09Q0aq3ylIQ7yNUKechsiEe0_8GjAuQ9Q/s320/1.jpg) |
எனக்கு மிகவும் பிடித்த படம் -- ஒளியை நோக்கி ... |
அவர்கள் வாழ்க்கையே இருட்டு வாழ்க்கை. அதனால் தான் தன் படங்களையும் கருப்பு மிகுந்திருக்கும் கருப்பு-வெள்ளைப் படங்களாக எடுத்திருக்கிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigLp3gNe7becvv4KKQD3Kw2WP52jLgpO3kyn9ekJpj3a53ubgGfVhzjcRWrhEY0BoXIsYKHPugzWJ3c1Y0mTCuXy2fyyHEZQPLkgUkn_M1qxo1XA_b6K9_x9Fp03RYPJQPRdaJag/s320/DSC_0037.jpg) |
நம்மையும் தொற்றிக் கொள்ளும் சிரிப்பு ........... |
நம்மை மிரட்டும் கருப்பு. பல படங்களில் அந்தப் பிள்ளைகள் தனிமைப் பட்டு நிற்கும் பரிதாபத்திற்குரிய நிலை தெரிகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaL1l83urRdnApu6XmLaeKUXAMaWHsIzY0NzU5K1lZpCl5uYXYXVl6VLUa2MMNDnpYWquwapkdo90Ot93dUvF9_5rhlvbZ50a7_hyphenhyphenGyRCPzDbfc3CNYKj4tqmTEKcibJ4C5PX5vA/s320/DSC_0043.jpg) |
பொட்டிக்காரர் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf8eYuN-n34vZAJIATVRhl-F30-nafUKl8614sXUVVpFjsm16jwQO29scSIBZAU4Lei9kS5U9_z239UgDxsNPsSfpdJVgiQKG9_xI08KTr0GPxMHH3TMpgn18WuiX4YmZ59Hrnyg/s320/4.jpg) |
வித்தை காட்டுகிறார்கள் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWu_ZxsOc3A4EGxkX44TUvlIzjjMnx8ku21ilzS_YhlX0wtf3RuLZ_Pln-yRslcacY1Tcc_TxLX14JIyE7ROq8yt4QuI2fs1xkqDCZGDMr2RKJAhGtOnPEs0NVMJElHWADq7j0Xw/s320/DSC_0046.jpg) |
கண்காட்சிக்கு வெளியே ... பாடம் படிக்கிறார்கள். |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcsXC6I5a5zqxWxJp7DfiRQqLYSlvc6q4sePzqi-xJyCWa6LW7Dnx9nvEqSFXF5yB5zWduiovgDiXwMp_GTO4Iu5NgHiRRi2tnRSrkGx4aGB6kPLroek32n3z91TLgU62MBoJk2A/s320/DSC_0048.jpg) |
வந்தோர்களின் கருத்துகள் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmpcz1AHH6jyyrHhTL4q34X9fBw1i3kT4hRmO6bzbvbPYrpTX3QXenLmKSgpLF7J1jUkqehi19kqyX0rsnOEBzFSuuFhVfjrlftZ794Hhl_vp5Kc-Kv6SL7K8df3Fq1IDck1jSWg/s320/DSC_0036.jpg) |
பள்ளி மாணவர்களின் வருகை. அவர்களுக்கும் “அடுத்த பக்கம்” பற்றி ஒரு புரிதல். |
சுவற்றோடு முகம் புதைத்துக் கிடக்கும் சிறுவன், விளையாட்டு நேரத்திலும் தனியாகப் படுத்து தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் சிறுவன் … பல பாவங்கள். சில சிரித்த முகங்களும் நம்மை உறுத்துகின்றன.
நல்ல படைப்புகள். அந்தப் படைப்புகளுக்குப் பின்னே இருக்கும் நேசம் .. கனிவு… படைப்பாளிக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
*
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vFUnEM1mB7BJq0EtWsAwHvokGUml4ltNyaqb0mepA-gnhKfer3qywQlBSEKn1qAvUYL8pTL-MAHHUsk5_BFVL9FRfPVEK_oJMfEqqnASq1XxObIwHRsvw5zKpH-Fadw9kyVdogU3q2_Jkq8fulK06laoSgzVhY=s0-d)
1 comment:
மனதைத் தொட்ட படங்கள்.....
Post a Comment