Wednesday, September 02, 2026

1396. என் கதை - வேல்முருகன்




வணக்கம்!
காசியாபுரம், தற்போதைய தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகாவில், நல்லூர்–ஆலடிப்பட்டிக்கு அடுத்த தெருவிலுள்ள ஒரு சிறு கிராமம்.
எனக்கும் ஐயா தருமிக்கும் ஏற்பட்ட தொடர்பும், எங்கள் கிராமமான காசியாபுரத்தை Google தேடலும் ஏற்படுத்திக் கொடுத்ததுதான்.
11.09.2011 அன்று மின்னஞ்சல் மூலம் ஐயாவிடமிருந்து வந்தது: “தம்பி, இங்கே ஒரு காசியாபுரத்தான்” என.
2012-ல் மதுரையில் சந்தித்தோம்.
நெல்லைச் சீமையில் பிறந்தாலும், மதுரையம்பதியில் வளர்ந்ததாலும், கேள்விகள் கேட்கப்படும் என்பதால் “தருமி” என்பது புனைப்பெயராகாது; வினையோடு காரணப்பெயரானது.
“என்கதை” – வாழ்க்கை வரலாறு.
ஆம், அவரின் 80 ஆண்டு கால நினைவலைகள், 1940–1960 காலகட்டத்தின் வாழ்வியல் சூழலை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.
பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதால், (அரசியல், வரலாறு, மதம், ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் கடவுள் எனும் மாயை, மதங்களும் சில விவாதங்களும் அவரின் சொந்த படைப்புகளும் உண்டு)அவரின் தமிழ் நடை படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
இன்பமும் துன்பமும் தானே வாழ்வு!
சிறு வயதில் தாயை இழந்தது முதல், முதுமையில் கோவிட்-19 தாக்கியது வரை...
சின்னச் சின்ன ஆசைகள், ஜாவா பைக் முதல்...
80-ஐக் கடக்கும் போது, பழைய நினைவுகளை அசைபோடும் போது, நண்பர்களைத் தேடும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பித்தளை, செம்பு என்று புழங்கிய காலம்
கும்பா, சொளவு, அருங்காட்சியகங்களுக்குச் சென்றுவிட்ட பொருட்களை ஞாபகப்படுத்துகிறார்.
கடவுள் மறுப்பினால் குடும்பத்தினர், நண்பர்களிடம் எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு சாமானியனின் வாழ்க்கையை உங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளப் படியுங்கள்.
நன்றி.
அ. வேல்முருகன்






\\
ப்ளாகர் காலத்தில் ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் பல மிக நல்ல  பின்னூட்டங்கள் வருவதுவே வழக்கம். அந்த வழக்கம் இப்போது இல்லாமல் வெறும் ஸ்மைலிகளில் காலம் கரைகின்றது.

பழைய நினைப்புடா பேராண்டி என்ற நினைப்பில் உங்கள் கருத்துகளை இங்கே கீழே comments எழுத அழைக்கின்றேன். வாருங்கள் ...