*
பினாயக் சென் கைது செய்யப்பட்டபின் பெரும் தொடர் போராட்டங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தன. அப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டத்தை இந்திய நாடு அது வரை நடத்தியதே இல்லை.
பினாயக் சென் தன் மருத்துவப் படிப்பைத் தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் தொடர்ந்து கடிதங்களும் விண்ணப்பங்களும் எழுதி, மக்களின் ஆர்வத்தையும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். தலைவர்கள் பலரையும் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். அவர்களும், ‘பினாயக் சென்னின் பாதுகாப்பிற்கான மருத்துவர்கள் அமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் போராடினார்.
அவரது சிறைத் தண்டனை பல போராளிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாகப் போய்விட்டது. பல போராளிகளை அது முடக்கியது. மௌனமாக்கியது
2011இல் ‘சோனி சோரி விடுதலை’ என்ற ஒரு புதிய முயற்சி கையில் எடுக்கப்பட்டது. இரு பிரபல செயற்பாட்டாளர்களுக்காக அடுத்தடுத்து மக்களிடையே பெரும் கிளர்ச்சிகள் ஏற்படுவதுஇந்திய வரலாற்றிலேயே, இந்திய சமூகப் பேராளிகளின் நடைமுறைகளிலேயே இதுவே முதல் முறை. முதலாவதே இரண்டாவதுக்கு வழிகோலியது.
பஸ்தாரின் உரிமைகளுக்குப் போராடும் தனி ஒரு மனுஷியாக எல்லோராலும் அறியப்பட்டார். அவரே 2015ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகையாளரிடம், ‘நான் சிறையில் அடைக்கப்பட்டு அல்லற்பட்ட பிறகு பொது மக்கள் கொடுத்த ஆதரவு என்னை ஓர் உண்மையான போராளியாக மாற்றியது’ என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
********
பாராளுமன்ற இடதுசாரிகள் பொதுவாகத் தங்களை முழுதாக வெளிப்படுத்தும் திறன் இல்லாதவர்கள். தாங்கள் செய்த நல்ல விஷயங்களைக்கூட தண்டோரா போட அவர்களுக்குத் தெரியாது. அக்கட்சியினர் ஓர் அரிதில் கடத்திகள்!
********
இன்றைய குழப்பமான உலகில் ஊடகங்களில் வரும் செய்திகள்தான் சமூகத்தின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் திறம் வாய்ந்தவை. கிராமங்களில் இருப்பவர்களுக்கு கைப்பேசிஒருவித ஊடகமாகச் செயல்படுகிறது. இனியும் தாங்கிக்கொள்ளமுடியாது என்னும் நிலையில்தான் மனித உரிமையை மக்கள் ஒரு விவாதமாக முன்னெடுக்கிறார்கள். தனக்கு என்ன தொல்லை வந்தாலும் பரவாயில்லை என்று வீரத்தோடு தங்கள் தரப்பை மக்கள் முன்வைக்க ஆரம்பிக்கிறார்கள்.
*******
சிபிஜேசி, சிஐபிஎன்ற இரு அமைப்புகளுமே சமாதானப் பேச்சு, மனித உரிமைகள் என்ற இரு முக்கிய விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதையும் தாண்டி, மாவோயிஸ்டுகள் கையில் எடுத்திருக்கும் சில முக்கிய பிரச்னை ஒன்றும் இருந்தது. அதுதான் மிக உண்மையான மையக் கருத்தாக இருக்கவேண்டும். அவை நில ஆக்கிரமிப்பும், சுரங்கத் தொழிலும்.
*******
மல்கான்கிர் (ஒடிசா), சுக்மா என்ற இரு இடங்களின் ஆட்சியர்கள் வினீல் கிருஷ்ணா, அலெக்ஸ் பால் மேனன் இருவரும் கடத்தப்பட்டபோது நாட்டின் அனைத்து ஊடகங்களும் தங்கள் பார்வையை அதில் குவித்தனர்..... ஆனால், மேனன் பத்திரமாகத் திரும்ப வந்தபின் சில ஊடகங்கள் தங்கள் குரலைச் சிறிது மாற்றிக்கொண்டன. மேனன் தேவையற்ற முறையில் தன்னை முன்னிறுத்தி, தன்னைக் கைது செய்யத் தூண்டிவிட்டார் என்றும், அவருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது என்றும் வலதுசாரி ஊடகங்கள் எழுதின, பேசின.
கடத்தப்பட்ட இரு ஆட்சியர்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அதில் நூற்றில் ஒரு பங்கையேனும் வன்முறைகளும் கொலைகளும் நடக்கும்போதும், கிராமத்து மக்கள் ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படும்போதும் காண்பித்திருக்கலாம். அப்போதெல்லாம் சிறிதும் அக்கறையில்லாமல் இருந்தன.
*******
மேலும் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரையில் பேச்சு வார்த்தை என்பதே அர்த்தமில்லாத ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். புதிய பேச்சுவார்த்தைகளில் பேசுவதற்கென்றே ‘புதிய’ விஷயங்களாக முளைக்கப் போகின்றன. அரசு புதிய சுரங்கங்கள் தோண்டுவதையும், நில உரிமைகளையும் எந்தச் சமயத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கப் போவதேயில்லை. பின் பேச்சு வார்த்தைகள் எதற்கு? ... பேச்சு வார்த்தைகள் மாவோயிஸ்ட் தலைவர்களின் உயிருக்கும் உலை வைக்கவே நடத்தப்படுகின்றன.
******
2015
செப்டெம்பர் 21ஆம் தேதி பத்திரிகையாளர்கள் ‘சிறை நிரப்புப் போராட்டம்’ ஒன்றை நிகழ்த்தத் திட்டமிருந்தனர். ஆனால், அதற்கு முந்திய நாளில் காவல் துறையினர் தங்கள் திட்டத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை இரண்டாகப் பிளந்தனர். எல்லாம் ஐஜி கலூரியின் புத்திசாலித்தனமான திட்டம்தான். போராட்டத்திற்கு முந்தைய நாள் பத்திரிகையாளர்களின் வாட்சப் குழு ஒன்றை ஆரம்பித்தனர் காவல் துறையினர். அதில் அடுத்த நாள் நடக்கும் பேரணியில் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பங்கெடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளனர் என்ற பொய்ச் செய்தி விரைவாகப் பரப்பப்பட்டது.
*******
சில ஊடகச் செய்திகள் உலகத்தின் கவனத்தைக்கூட தன் பக்கம் திரும்ப வைக்கும் ஆற்றலும் உண்மையும் உடையவை. அருந்ததி ராய் எழுதிய, தோழர்களுடன் ஒரு பயணம் என்ற கட்டுரையும்அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த பல நேர்காணல்களும் உலகத்தின் பார்வையை பஸ்தார் பக்கம் திருப்பியது. அங்கிருந்த சல்வா ஜுதும், மாவோயிஸ்டுகள் அனைவரும் முழு உலகுக்குத் தெரிந்தவர்களாகிப் போனார்கள்
*