Wednesday, January 09, 2019

1020. . பற்றியெரியும் பஸ்தர் -- இந்நூலிலிருந்து சில பகுதிகள் ... 3





*

ஆதிவாசிகள், நக்சல்பாரிகள்மீதான காவல் நடவடிக்கைகள் கடந்த நாற்பது ஆண்டுகளில் அதிகம் மாறவில்லை. 1970களில் அம்ருதா ரங்கசாமி எழுதியது:

ஸ்ரீகாகுளம் பகுதியில் சிறு எண்ணிக்கையில் இருந்த நக்சல்பாரிகளைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கமத்திய பாதுகாப்புப் படைஅனுப்பப்பட்டது. அப்படை அங்கிருந்த ஆதிவாசிகள் அத்தனை பேரையுமே தங்கள் சந்தேக வலைக்குள் கொண்டு வந்தார்கள். காவல் துறையே ஆச்சரியப்படும் அளவுக்குத் திரளான ஆதிவாசி மக்கள் பலரை ஆந்திரப் பிரதேச சிறைகளுக்குள் தள்ளி அடைத்தனர். அந்த மக்களை காவல்துறை சல்லடை போட்டுச் சலிக்கத் தொடங்கியது. இந்த முறையால் ஆதிவாசி மக்களிடமிருந்து நக்சல்பாரிகள் தனித்து, பிரித்து எடுத்துவிட முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. எப்போதும் நடப்பது போலவே அந்தப் பாவப்பட்ட ஆதிவாசிகளுக்கு நியாயங்கள் ஏதும் நடக்கவேயில்லை. அதிலும் ஸ்ரீகாகுளத்தில் ஆதிவாசிகளுக்கு நியாயம் கிடைத்துவிடவே கூடாது என்பதே ஒரு சட்டமாகி விட்டது.15


******


.‘இப்போதெல்லாம் ஏக்கர் ஒன்றுக்கு 28 முதல் 80 லட்சம் வரை விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 2001ஆம் ஆண்டில் வெறுமனே  11,000  ரூபாய் மட்டும் ஏக்கருக்குக் கொடுத்து மக்களிடமிருந்து அடிமாட்டு விலையில் நிலங்களைப் பறித்தார்கள்.

                                                                                       ******

கிராமத்து மக்களைக் கைது செய்தும், பாலியல் பலாத்காரங்கள் நிகழ்த்தியும் அரசு தொடர் அநியாயங்களைச் செய்தது. கிராமத்து மக்களைப் பயமுறுத்தி, அவர்கள் தங்கள் நிலங்களை டாடா கம்பெனிக்கு விற்பதற்காகவே இந்த முயற்சிகள்.

டாடா கம்பெனி மூச்சுவிடவே இல்லை. எதுவுமே நடக்காததைப் போல்  பள்ளிகளில் விளையாட்டுப் போட்டி நடத்தினார்கள். மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள்தங்கள் கம்பெனியின் சமூகப் பொறுப்புணர்ச்சியை (கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) வெளியே காட்டுவதற்காகப் போட்ட வெளிவேஷங்கள் இவை.

இன்று அதே வழியை ஸ்டெர்லைட் செய்கிறது. பன்னாட்டு குழுமங்களின் வழி முறைகளே இது தான் போலும்.


*******


ஆதிவாசிகளின் நிலங்களும் அதன் வளர்ச்சியும் முக்கியமானதாகக் கருதப்பட்டு, ஆதிவாசிகள் அவர்கள் நிலங்களிலிருந்தே புறக்கணிக்கப்பட்டனர்; விரட்டப்பட்டனர். இது பஸ்தாரில் மட்டுமல்ல. நாட்டின் அனைத்துக் காட்டுப் பகுதிகளிலும் இதே மோசமான நிலை நீடித்தது. சுதந்தரம் வாங்கிய நாளிலிருந்து இருபதாம் நூற்றாண்டு முடிவதற்குள் நாட்டிலுள்ள ஆதிவாசிகளில் நாலில் ஒருவராவது அணை கட்டுதல், தொழிற்சாலைகள் அமைத்தல், சுரங்கங்கள் அல்லது அது போன்ற அமைப்புகளின் வருகை ஆகியவற்றால் தங்களுடைய இருப்பிடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள்.

******


ஆதிவாசிகள் யாருமே வியாபாரிகளல்ல. இந்த வியாபாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் குடியேறியபோது சாதாரண ஏழை மக்கள்தான். ஆனால், இங்கு வந்த பிறகு வியாபாரத்தில் செழித்தார்கள். வனப் பொருட்கள் விற்பனையைவிட சட்டத்திற்கு விரோதமான பொருட்களைக் கள்ளத்தனமாக வியாபாரம் செய்து கொழித்தார்கள். இப்படிப் பணம் கொழித்தது என்பதற்குச் சான்றாக ஒன்றைச் சொல்லலாம். பஸ்தார் பரிவாகன் சங்கம் என்ற போக்குவரத்துக் கூட்டமைப்பில் 6000 லாரிகளும் டிரக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ன. அத்தனை வாகனங்களும் இந்த வியாபாரக் கும்பலின் வாகனங்களே. இந்த வியாபாரிகளில் முதல் நிலையில் இருப்பவர்கள் மார்வாரி மொத்த வியாபாரிகள். இவர்களது வியாபாரத் தொகுப்புகள் நாடு முழுவதும் உண்டு. இந்த மார்வாரிகள் மொத்தமாகப் பொருட்களை வாங்கி, தங்கள் விற்பனைச் சங்கிலிகள் மூலம் தங்கள் முகவர் மூலமாக நாடு முழுவதும் பிரித்து விற்றுவிடுகின்றனர்.

                                                                                             *******

மாவோயிஸ்டுகளின் உண்மையான பலம் அவர்கள் கைகளில் இருந்த ஆயதங்களில் இல்லை. அவர்களது கெரில்லாத் தந்திரங்களே அவை. அதைவிடவும் மேலாக, அமிதாவ் கோஷ் தனது 'Flood of Fire'என்ற நூலில் சொல்வதுபோல், அந்த மனிதர்கள் தங்கள் மண்ணுக்காக, தங்கள் வீட்டுக்காக, தங்கள் குடும்பத்துக்காக, தங்கள் பாரம்பரியத்துக்காக, தங்களுக்குப் பிடித்த அனைத்துக்காகப் போரிடும்போது அவர்கள் முகங்களில் தெரியும் உண்மையான ஆழ்ந்த உணர்வுகளே அவர்கள் பலத்தின் சரியான அளவுகோல்

                                        ********


லக்கி என்ற டோர்லா இனத்துப் பெண் தன் பெற்றோரின் கல்யாணக் கெடுபிடிகள் பிடிக்காமல் இயக்கத்தில் சேர்ந்தாள். அவள் இயக்கத்தில் ஒரு தெலுங்குப் பையனைக் காதலித்து மணந்து ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால், போராளிகள் குழந்தைகளை உடன் வைத்து வளர்ப்பதை இயக்கம் விரும்பாததால் பிள்ளைப் பேறில்லா கிராமத்துப் பெற்றோர் ஒருவரிடம் தன் பிள்ளையைக் கொடுத்து வளர்க்கவைத்தார். ‘இப்போது என் குழந்தைக்கே என்னைத் தெரியாதுஎன்று எங்களிடம் சோகத்தோடு சொன்னாள் அவள்.




*




5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆதிவாசிகளின் நிலையை நினைக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

வேகநரி said...

பற்றியெரியும் பஸ்தர் தமிழில் நீங்க எழுதிய புத்தகத்லிருந்து சில பகுதிகள் படித்தது மகிழ்ச்சி எனக்கு.
ஆதிவாசிகள் கிராமத்து மக்களுக்கு எதிரான இந்திய அரச நிர்வாகத்தின் கொடூரம் மிக கொடிய அநீதி. ஆனால் இவற்றுக்கு மாவோயிஸ்டுகள், அவர்கள் வன்முறைகள் தீர்வாக இருக்க முடியாது.
கொதிக்கும் எண்ணெய்யில்லிருந்து தப்பி நெருப்பு அடுப்புக்குள் விழுந்தது போல் இந்திய ஆதிவாசிகள் கிராமத்து மக்கள் நிலைமை.இது தான் மிகவும் வேதனையானது.
தற்போதைய வியாட்நாம்மின் உண்மை நிலை என்ன? தமிழகத்தில் வீரம் செறிந்த வியாட்நாம் என்று பலரிடம் ஒரு பொய் விம்பம் உருவாக்கி வைக்கபட்டுள்ளது. அந்த வியாட்நாம் போர் நடந்த காலகட்டத்தில் வியாட்நாமைவிட்டு தப்பி மேற்குலக நாடுகளில் வசிக்கும் வியாட்நாம் வாரிசுகளிடம் இதை சென்னால் கேலியாகவே இதை பார்க்கிறார்கள்.

தருமி said...

வியட்நாம் வாரிசுகளின் கதை கேட்டு கொஞ்சம் சொல்லுங்களேன். கேட்க அத்தனை ஆவல்.

வேகநரி said...

எனக்கும் வியட்நாம் வம்சாவளிகளிடம் ஆற அமர உட்கார்ந்து வீட்டில் உணவருந்திய படி :) (அவர்களும் சோறு சாதம் தான் விரும்பி உண்கிறார்கள்) வியட்நாம்பற்றிய விரிவான கதைகளை கேட்க தான் விருப்பம், ஆனால் எனக்கு அதிஷ்டம் இல்லாத காரணத்தால் அவர்களில் அந்தளவுக்கு நண்பர்கள் இல்லை. பொதுவிருந்தில், வைபவத்தில் அவர்கள் மற்றவர்களிடம் சொன்னதும், நான் கேட்டவைகளுக்கு அவர்கள் சொன்னதும் தான் நான் தெரிந்து கொண்டவை.அப்போது தமிழகத்தில் சொல்லபடும் வீரமிகு வியட்நாம் என்ற பொன்னுலகம் எனக்கு நினைவில் வந்தது போகும். வியட்நாமில் இப்போதும் கம்யூனிச அரசு தான் உள்ளது. வெளிநாட்டில் உள்ள வியட்நாம் வம்சாவளிகள் அங்கே சென்றுவர கட்டுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக நாடுகளிடம் மிகவும் பயபக்தியாக வியட்நாம் நடந்து கொள்கிறது.முதலாளித்து கொள்கைகள் கடைபிடிக்கபடுகின்றன.ஆனாலும் கம்யூனிச ஆட்சி அகன்று ஜனநாயக நாடாக வியட்நாம் வர வேண்டும் என்றே வியட்நாம் வம்சாவளிகள் விரும்புகிறார்கள்.

வேகநரி said...

39 வியட்நாம் குடிமக்கள் வியட்நாமை விட்டு தப்பி இங்கிலாந்தில் குடியேறும் முயற்ச்சியில் லாரியில் பிணங்களாகி போன துயரம் நடைபெற்றுள்ள செய்தி அறிந்திருப்பீர்கள்.இது மாதிரியானவை சிறு அளவில் பல நடைபெறுகின்றது.வீர மிகு கம்யூனிச மக்கள் ஆட்சி நடைபெறும் வியட்நாமை விட்டு இவர்கள் எதற்காக உயிரை பணயம் வைத்து முதலாளித்துவ இங்கிலாந்தில் குடியேறுவதற்கு முயற்சித்தார்கள்.

Post a Comment