Saturday, July 09, 2022

1171. என் வாசிப்பு THE ROOTS



*
                                                       Alex Haley  



Leon Uris  எழுதிய EXODUS  புத்தகம் பத்தி சொன்னியே ஏன் என்ன உட்டுட்டன்னு Roots: The Saga of an American Family எழுதின Alex Haley   சண்டைக்கு வந்துட்டார் (கனவுல). என்ன பண்றதுன்னு அவரைப் பத்தியும், அவரது புத்தகம் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம்னு நினைக்கின்றேன்.

பல வாரங்கள் best sellers listல இந்தப் புத்தகம் இருந்திருக்கு. இத வச்சி சீரியலும் எடுத்து ஓஹோன்னு ஓடியிருக்கு. சினிமாவா வந்துச்சான்னு தெரியலை.

ஹேலி ஒரு அமெரிக்க ஆப்ரிக்கன். (இப்படித்தான் அவங்களை சொல்லணுமாம். அப்டின்னா பிரான்சு நாட்டில், இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களை எப்படி சொல்லணும்னு நேத்து .. முந்தா நேத்து விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கும் போது ஒரு கேள்வி மனதிற்குள் வந்தது. பதில் தெரிஞ்சா சொல்லுங்க. தன்யமாவேன்.) இவர் அமெரிக்கப் படையில் பணியாற்றி, பின் அதிலேயே பதவி உயர்வெல்லாம் பெற்று ஓர் இதழியியலாளராக இருந்திருக்கின்றார். படைப் பதவிகளிலிருந்து வெளி வந்த பின் Readers’ Digest  இதழின்  Chief Editor ஆகவும் இருந்திருக்கிறார்.

தன் பரம்பரை எங்கிருந்து எப்படி வந்து, இப்படி ஆனோம்னு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார். ஏழு தலைமுறைக்கு முன்பு காம்பியா என்ற ஆப்ரிக்க நாட்டில் பறை செய்வதற்காக மரத்தில் ஏறி கம்பு வெட்டிக் கொண்டிருந்தவரை அடிமை வியாபாரிகள் அடித்து மயக்கமடையச் செய்து, கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு வந்து, விலைக்கு விற்கப்பட்டார் என்று ஆரம்பித்து தனது ஒவ்வொரு தலை முறையிலும் பல மாற்றங்கள் கண்ட கதையை மிக அழகாக, நம் மனத்தைக் கசக்கிப் பிழியும் வழியில் எழுதியிருப்பார்.

EXODUS வாசித்து முடித்ததும் என்னையறியாமலேயே ஒரு pro-Israelite ஆக மாறினேன் என்பது உண்மை. அதே போல் இந்த நூலை வாசித்ததும் இம்மக்கள் மீதான் அன்பும் கரிசனையும் அதிகமானதாக உணர்ந்தேன். இதேபோல் இன்னொரு வரலாற்று உண்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். Uncle Tom's Cabin; or, Life Among the Lowly  என்ற நாவலை Harriet Beecher Stowe என்ற பெண்மணி 1852 ஆண்டில் எழுதியுள்ளார். பத்தொன்பதாம்  நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்த படியாக விற்பனையான / வாசிக்கப்பட்ட புத்தகமாக இருந்திருக்கிறது. ஒரு அடிமையின் கதை. இந்த நாவல் வாசிச்த்ததும் மக்கள் பலரின் மனதில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக வைத்திருப்பது பற்றிய கேள்விகள் மனதில் எழுந்துள்ளன. அதன்பின் அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்பித்த உள்நாட்டுப் போரிற்கு இந்த நாவல் தான் விதை போட்டது என்பதும் ஒரு முக்கிய கருத்து. இதை வைத்தே அன்றைய அமெரிக்கன் பிரசிடென்ட் Abraham Lincoln  கூறியதை மேற்கோளிடுவார்கள் :  When Abraham Lincoln met Stowe in 1862 he supposedly commented, "So this is the little lady who started this great war.  … இதைச் சொல்லும் போது ஏன் யாராவது ஒருவர் நம் தலித் மக்களைப் பற்றியெழுதி, அது நம் மனசாட்சையை உலுக்கி எடுக்கும் என்றொரு நப்பாசை மனதில் எழுந்தது. ....ம்ம்...ம்... நாம் எங்கே மாறப்போகிறோம் .. எனக்கென்னவோ அந்த நம்பிக்கை சிறிதும் வரவில்லை இது வரை .... நாமென்ன திருந்துற ஜென்மங்களா ... இல்லியே ...


****

ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு  கேள்வி வழக்கமாக எழும்:

இவர்கள் நாய்களுக்கும் கீழாகவே அடிமைகளாக வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்டார்கள். இது உண்மையாக இருக்க, வெள்ளைக்காரர்களின் கிறித்துவ மதத்தின் பக்கம் அவர்கள் இழுக்கப்பட்டு விட்டனர். Uncle Tom's Cabin கதையில் வரும் டாம் பெரியதொரு கிறித்துவராகவே இருப்பார்.

 என் ஐயம்:

தங்களை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தும் போது ஆப்ரிக்கர்கள் எப்படி வெள்ளைக்காரர்களின் தெய்வத்தை ஏற்றுக் கொண்டார்கள்? அது எப்படி சாத்தியமாகும்? அவர்களை வெறுப்பது போல் அவர்கள் கடவுள்களையும் வெறுப்பது தானே சாத்தியம்?

நமது சமுதாயத்தில் முன்னோர் வழிபாடு மட்டும் இருந்தது மாறி, அனைவரும் இந்துக்கள் என்ற அடைப்புக்குள் வடநாட்டிலிருந்து வந்த மதத்திற்குள் சென்று விட்டோமல்லவாஅது போலவோ?  ….. இது இன்னொரு துணைக் கேள்வி.





*



No comments:

Post a Comment