எந்த ஆண்டு அந்தப் படம் வந்தது என்று ஆண்டவரிடம்
கேட்டேன். 1949 என்று போட்டிருந்தது. அதாவது எனக்கு நாலைந்து வயது. ஆனாலும் பாருங்க
... அந்தப் படத்தை ரொம்ம்ம்ம்ப சின்ன வயசில பார்த்திருக்கிறேன். எப்போ படம் இந்தியாவிற்கு
வந்ததோ... நான் எங்கு, யாருடன் அந்தப் படத்தைப்
பார்த்தேனோ என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்ன வயதில் பார்த்த ஒரு படம். ஒருவேளை பைபிள்
படம் என்பதால் பள்ளியில் காண்பித்திருக்கலாம்.(ம்ம்... அதற்கு வாய்ப்பில்லை.) எப்படியோ
அந்தப் படத்தை அன்னாளில் பார்த்தேன்.
https://youtu.be/yMo3DL_KkHE?si=dl0b261hgoUwe0O7
அந்த சாம்சன், நம்ம கர்ணன் மாதிரி தன் சக்திகள் அனைத்தையும் தன் தலைமுடியில் வைத்திருந்தாராம். அதை வெட்டிட்டா அவரை எதிரிகள் அடித்து வீழ்த்த முடியும், டிலைலா “முடிவெட்டும்” சீன் இன்னும் நினைவில் இருக்கிறது. இருந்தாலும் அவர் ஹீரோ அல்லவா... அதுனால் முடி போனாலும் முடிவில் ஹீரோ தான் ஜெயுக்கணும். கடைசியில் அவர் எதிரிகளோடு சண்டையிடுவார். அதில் நினைவில் இருப்பதெல்லாம், அவர் கையில் கழுதை அல்லது கோவேறிக் கழுதையின் கீழ்த்தாடை எலும்பு இருக்கும். அது மட்டுமே அவரது ஆயுதம். மயிரும் ஏற்கெனவே போய் விட்டது, இருந்தாலும் அந்த எலும்பை வைத்து எதிரிகளை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். அடின்னா அப்படி ஒரு அடி அடித்துக் கொல்லுவார்.
https://www.youtube.com/watch?v=yMo3DL_KkHE
அசந்து பார்த்தது அந்தக் காலம் அப்டின்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ பொங்கலுக்கு லியோ படம் போட்டாங்க. அது ஒரு மூணு நாலு மணியளவில் ஓடுமா... நல்ல வேளை .. படம் பார்க்கிறப்போ பொங்கல் வாழ்த்து சொல்லி, கதையடிக்க மூணு நண்பர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்பப்போ mute போட்டு பேசினேன். அப்போவெல்லாம் சில வெவ்வேறு மாநில ஊர்களின் பெயர்களின் ஸ்லைடுகளும் வந்திச்சு. அதையெல்லாம் வச்சி நானோ ஒரு கதை உண்டாக்கிக் கிட்டேன்.
அதிலும் பிக்பாஸ் ஜனனி,
மாயா இவங்கல்லாம் ஒத்த ஒத்த சீனுக்கு வந்தாங்க... எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை. அப்புறமா காணாம போய்டுறாங்க.
திரிஷா எங்கேயோ போய் டிடக்டிவ் வேலை செய்றாங்க. இப்படியெல்லாம் போச்சா ... கடைசி சீன்
வந்திருச்சா .... அதுல, சாம்சன் கையில் கழுதையின் தாடை எலும்புன்னா
இங்க பார்த்திபன் அலையாஸ் லியோ - அதாவது விஜய் அண்ணா - கையில் ஒண்ணறை இஞ்சி சைசில்
சின்னப் பேனா கத்தி மட்டும் இருந்தது. ஆனால் mortality rate இன்னைய
படத்தில் அதிகம். ஏறத்தாழ ஐநூறு பேரை அந்த ஒண்ணரையணா... இல்லைங்க .. ஒண்ணறை இஞ்ச் கத்தியே
வச்சி அத்தனை பேரையும் வெட்டிச் சாய்ச்சிட்டார் விஜய் அண்ணா.
சாம்சன்னை விட நம் விஜய் அண்ணாதான் பெட்டர்.