Saturday, April 08, 2006

151. இதுதாண்டா காங்கிரஸ்…!

Image and video hosting by TinyPic
அது என்ன ராசியோ, என்ன மாயமோ தெரியலை..அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ‘நெஹ்ரு குடும்ப-அடிமை சிண்ட்ரோம்’ என்ற வியாதி. நம்ம தமிழ் நாட்டுக் காங்கிரஸுக்கு ரெண்டு வியாதி - எப்பவுமே. முதலாவது: தில்லிக்கு எப்பவுமே சலாம்; இரண்டாவது: இங்கே எப்பவும் கோஷ்டி அரசியல்.இதில நம்ம மக்கள் பலருக்கு -காமராஜரையும் கக்கனையும் மட்டும் மனசில வச்சிக்கிட்டு, இப்போ 40 வருஷமா திராவிடக் கட்சி, அதிலேயும் கருணாநிதி வந்ததாலதான் தமிழ்நாடு கெட்டு சீரழிஞ்சு போச்சு; காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தா தேனும் பாலும் ஓடும் என்று ஒரு அசைக்க முடியாத hypothesis.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 08 2006 09:33 am | அரசியல்... |
11 Responses
muthu(tamizhini) Says:
April 8th, 2006 at 10:34 am
முப்பது வருச திராவிட ஆட்சிகளினால் தமிழகம் இன்று இந்தியாவிலேயே கடைசி இடத்தில் கேவலப்பட்டு இருப்பது உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை?

muthu(tamizhini) Says:
April 8th, 2006 at 10:36 am
அமைதி பூங்காவாக இருந்தால் போதுமா? சாமி பெயரை சொல்லி உயிரோடு பலபேரை எரித்தால் தானய்யா வளர்ச்சி..குஜராத்தை பாருங்கள்..

ஜோ Says:
April 8th, 2006 at 12:57 pm
//இப்போ 40 வருஷமா திராவிடக் கட்சி, அதிலேயும் கருணாநிதி வந்ததாலதான் தமிழ்நாடு கெட்டு சீரழிஞ்சு போச்சு; காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தா தேனும் பாலும் ஓடும் என்று ஒரு அசைக்க முடியாத hypothesis. //

ஐயோ! இந்த தொல்லை தாங்க முடியல்ல..அதுலயும் காமராசர் ஆட்சி கொண்டுவர கனவு காணுற முக்காவாசி பேரு இந்திராகாந்தி கூட சேர்ந்து காமராசருக்கு குழி பறிச்சவங்க .அந்த மவராசன் மனசொடிஞ்சதுக்கு இந்த புண்ணியவான்கள் தான் காரணம்.

munna Says:
April 8th, 2006 at 4:36 pm
//முப்பது வருச திராவிட ஆட்சிகளினால் தமிழகம் இன்று இந்தியாவிலேயே கடைசி இடத்தில் கேவலப்பட்டு இருப்பது உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை?//

muthu(tamizhini):

Sorry for straying out of the subject. However, I felt compelled to put in record a few things for clarification.

Instead of generalising, it would be better if you can specify the field in which Tamilnadu stands last.
Factually, we do much better than what is in the mind of most of us.

I was also having an opinion like yours for a long time, but then statistics say otherwise. We are within top 3 states (within India) in almost all fields - be it industrialization, per capita income, State Domestic Product, export of IT / ITES services, FDI, Human Resources Index or anything you name it.
Some of these data can be had from this forum.

http://skyscrapercity.com/archive/index.php/t-319337.html

We are next only to Gujarat and Maharashtra in most of the criteria considered above. Andhra - a larger state compared to TamilNadu fares below us.

Look here where we are in an Asian Survey.
http://www.fdimagazine.com/news/fullstory.php/aid/1489/ASIAN_CITIES___REGION
and
http://www.fdimagazine.com/news/fullstory.php/aid/1490/ASIAN_CITIES___REGIONS_OF_THE_FUTURE_2005_06__Part_Two.html

Please note that these statistics are relevent only within India (I assume we are limiting our discussion within India). And if any error is committed in the statistics, it will be committed throughout and the effect is nullified in the relative rankings.

Regards,

munna

செல்வகுமார் Says:
April 8th, 2006 at 5:56 pm
// ஐயோ! இந்த தொல்லை தாங்க முடியல்ல..அதுலயும் காமராசர் ஆட்சி கொண்டுவர கனவு காணுற முக்காவாசி பேரு இந்திராகாந்தி கூட சேர்ந்து காமராசருக்கு குழி பறிச்சவங்க .அந்த மவராசன் மனசொடிஞ்சதுக்கு இந்த புண்ணியவான்கள் தான் காரணம். //

அப்படி போட்டுத்தாக்குங்க ஜோ !

காமராசப் போன்ற உத்தமருக்கு குழி பறித்து, தங்களது கட்சியை தாங்களே கோஷ்டிப்பூசலில் அழித்துவிட்டு, காமராசர் ஆட்சி அமைப்போம் என்று முழங்கும் இவர்கள் என்றும் மாறப்போவதுமில்லை, மீளப்போவதுமில்லை

செல்வகுமார்

மோகன் Says:
April 9th, 2006 at 12:25 am
தமிழ் நாட்டு தலைவருக்கு எப்பேது முழு அதிகாரம் டெல்லி தறுகிறதே
அப்பேது தான் இந்த நிலை காங்கிரஸ்க்கு மாறும்

sne_han Says:
April 9th, 2006 at 8:03 pm


SK Says:
April 9th, 2006 at 8:30 pm
இரு கழக ஆட்சி ஒழிப்புக்கு காங்கிரஸ் மாற்றே அல்ல!

இவர்கள் முதுகில் ஏறி மத்தியில் அரசு செய்ய வேண்டும் என்ற ஒரே கனவுடன், தமிழகம் எக்கேடு கெட்டால் என்ன என்று மாறி மாறி இவ்விரு கழகங்களையும் ஆதரித்துக் கொண்டிருக்கும் அக்கட்சியிடம் நம்பிக்கை போய் 40 வருடம் ஆகிறது நமக்கு.

தம்பி ‘ஜோ’ சொன்னது போல, காமராஜரைக் கலங்க அடித்துக் , கரை சேர்த்தது இந்தப் புண்ணியவான்கள்தான்!

அது சரி, இந்த போஸ்டர் விஷயத்தை கொஞ்சம் மாற்றி எழுதினால், திருவல்லிக்கேணி[தொகுதி சரியா?] அ.தி. மு. க. வேட்பாளர் திருமதி. ஃபதர் சயீதுக்கும் பொருந்துமே!
ஹி…ஹி!

sankar Says:
April 9th, 2006 at 10:00 pm
//
அமைதி பூங்காவாக இருந்தால் போதுமா? சாமி பெயரை சொல்லி உயிரோடு பலபேரை எரித்தால் தானய்யா வளர்ச்சி..குஜராத்தை பாருங்கள்..
//

மன்னிக்க வேண்டும், அது ஏன் பா ஜ க என்றாலே ஒரு வெறுப்பு, இன்றய குஜராதின் நிலைக்கு பா ஜ கவும், மோடியும் தான் காரணம். குஜராதின் வளர்ச்சியய்ச் சொல்றேன். எதோ மதக் கலவரத்திற்கு குஜராத் தான் ஆணி வேர் போல் பேசுகிறிர்கள். மதக்கலவரத்திற்கு மூல காரணம் எது என்பதை ஆராய்ந்த பிறகு,

“சாமி பெயரை சொல்லி உயிரோடு பலபேரை எரித்தால் தானய்யா வளர்ச்சி..குஜராத்தை பாருங்கள்..”

போன்ற அபத்தமான முடிவுக்கு வந்து இருக்கிறீர்களா?

எது அமைதிப் பூங்கா, தமிழகமா? தங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்யவும்.

ஷங்கர்.

துளசி கோபால் Says:
April 10th, 2006 at 4:03 am
தருமி,

எதுக்கு அவுங்க மாதிரி, இவுங்க மாதிரி எல்லாம் ஆட்சி தரணும்?

மக்கள் பணத்தைச் சுரண்டாம ஆட்சி செய்வேன்னு சொல்லி ஓட்டுக் கேட்டா ஜெயிக்கமுடியும் இல்லையா?

மக்களுக்கு நன்மை கிடைக்கிறமாதிரி, தன்னுடைய மனசாட்சிக்கு
விரோதமில்லாமல் நல்ல ஆட்சி கொடுக்கக்கூடாதாமா? இல்லே மாட்டாங்களாம்மா?

ஜோ Says:
April 10th, 2006 at 8:20 am
முன்னா,
உங்கள் தகவல்களுக்கு நன்றி ..ஆனால் முத்து அவர்களின் கேள்வி ‘வஞ்சப்புகழ்ச்சி’ அணி சார்ந்த எதிர்மறை கிண்டல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

No comments:

Post a Comment