Sunday, August 06, 2006

169. “இட ஒதுக்கீடு” - தவறு.

சென்ற வாரம் மதுரை அருகில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் மாநிலக் கருத்தரங்கு ஒன்று _ இட ஒதுக்கீடு - தாக்கமும், தடைகளும் - என்ற தலைப்பில், திரு, நல்லக்கண்ணு அவர்களின் தலைமையுரையுடன் நடந்தது. அதில் நெல்லை வழக்கறிஞர் பிரிட்டோ அவர்கள் பேசும்போது தான் நெல்லையில் நடத்திய கருத்தரங்கத்தில் தமிழ்ப் பேராசிரியர் திரு. தெ.பொ,மீ, அவர்கள் கூறியதாகச் சொன்னது:

இட ஒதுக்கீடு என்ற சொல் காலனிய ஆதிக்கத்தின் எச்சம். Reservation என்ற ஆங்கிலச்சொல்லை அடிப்படையாக வைத்து வந்த சொல்லே இட ஒதுக்கீடு. இந்தச் சொல் குறிப்பிட்ட சிலருக்குச் சலுகையாகத் தருவதான பொருளில் வருகிறது. அப்படியின்றி அது அவர்களது உரிமை என்ற பொருளில் இட ஒதுக்கீடு என்றின்றி ‘இடப் பங்கீடு’ என்று அழைக்கப்படுவதே சரி.

அதனால், நம் பதிவுலகத்தில் இச்சொற்களை அறிமுகப்படுத்துகிறேன். நான் இனி இந்த சொற்களையே பயன்படுத்தப் போவதாக முடிவெடுப்பதோடு, மற்ற பதிவர்களையும் இச்சொற்களையே இட ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டுகிறேன்.









Pathivu Toolbar ©2005thamizmanam.com


Aug 06 2006 02:54 pm சமூகம் edit this
5 Responses
kumar Says:
August 6th, 2006 at 6:55 pm e
ஹூம்!!
உழைப்பதைத்தவிர எதை சொல்லிக்கொடுத்தாலும், இனாமாக கொடுத்தாலும் அது அவனுக்கும் நாட்டுக்கும் கெடுதல் என்பது என் எண்னம்.

TheKa Says:
August 6th, 2006 at 7:10 pm e
//இட ஒதுக்கீடு என்ற சொல் காலனிய ஆதிக்கத்தின் எச்சம். //

இன்னும் என்னவெல்லாமிருக்கோ. எங்கவெல்லாமிருக்கோ. பகவானுக்கே வெளிச்சம்!!

Sivabalan V Says:
August 6th, 2006 at 8:43 pm e
அருமையான சொல்… இடப் பங்கீடு எனும் போது அடிப்படை உரிமை போன்ற உணர்வை ஏற்படுகிறது.

தருமி அய்யா,

இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

தருமி Says:
August 6th, 2006 at 10:47 pm e
குமார்,
நீங்க சொல்றது ஒண்ணும் புரியலை .
அந்த ‘அவன்’ யார்?

தருமி Says:
August 6th, 2006 at 10:48 pm e
தெக்கா, சிவபாலன்,
நன்றி.
சிவபாலன்,
நீங்கள் சொன்னது மிகச்சரி

2 comments:

கோவி.கண்ணன் said...

ஒதுக்கீடு என்று போட்டாலே அது சமுக்கத்தால் ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வைத்திருக்கிறவர்களுக்கு என்று நன்கு தெரிந்தே அதிலும் 'பங்கீடு' கேட்கிறார்கள்.

இடபங்கீடு என்றால் அப்பறம் 'உரிமை' கோரால் ஆகிவிடும் !

:)))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஹீம் இட ஒதுக்கீடு என்பதை மாற்றி இடப் பங்கீடு என்று சொல்லப் பழக வேண்டும்.

Post a Comment