Friday, July 08, 2011

510. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*

மயிரும் மதங்களும்

வைக்கம் முகமது பஷீர் தன் மந்திரப் பூனை என்ற புனைவில் எழுதிய ஒன்று பிடித்தது. அவர் மலையாளத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்தினாரோ தெரியவில்லை; ஆனால் இந்த தமிழ் மொழியாக்கத்தில் ரோம மதங்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைவிட தலைப்பில் உள்ளது போல் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?!

“இதுவரை இந்த பூமியில் இருக்கும் எல்லா மதங்களும் ரோமத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. கொஞ்சம் ரோமத்தை நீக்கி, கொஞ்சம் ஒரு இடத்தில் மட்டும் ரோமம் வைத்து, சிலர் முழுமையாக நீக்கி, சிலர் முழுமையாக ரோமத்தை அப்படியே விட்டு .... இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது ரோம மதங்கள்! இப்போது ரோமங்களின் பிடியில் இருந்து மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது.”

விடுபட்டால் சரி!!

----------------------------------

விம்பிள்டன் 2011விம்பிள்டன் 2011 பற்றி எழுதணும்னு நினச்சி, சோகத்தில எழுத முடியாம போச்சு!

வில்லியம்ஸ் அக்கா-தங்கச்சி முதலிலேயே போயாச்சு. எப்படியோ நவரத்திலோவாவின் ஆசி பெற்ற பெண் வென்று விட்டது.

ஸோங்கா பெடரரை வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அன்று ஸோங்காவின் ஆட்டம் அழகாக இருந்தது. ஸ்வீப் செஞ்சாலே பந்து எப்படி இறங்கியது! அரையிறுதிக்குள் 1,2, 3 தர ஆட்டக்காரர்களோடு 12ம் தர ஸோங்கா இறங்குகிறாரே என்று நினைத்தால், ஜோக்கோவிச்சிடம் பெரும் தோல்வி!

இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச் வென்று விடுவார் என்று சோகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது செட்டில் 6:1 என்ற கணக்கில் ஜோக்கோவிச்சை நம்ம ஆளு ரபா வெற்றி பெற்றதும் ... ஆஹா .. அடுத்த செட்டும் நம்ம ஆளு... அப்டின்னா 5 செட் ஆடினால் ரபா தான் என்று நினைக்கும்போது நாலாவது செட்டிலேயே ஜோக்கோவிச் அடிச்சி துவச்சி எடுத்துட்டார்.

ஒரே ஒரு செகன்ட் நேரத்தில் விம்பிள்டன் தரையிலிருந்து சின்ன புல்லை எடுத்து வாயில் போட்டார் ஜோக்கோவிச். ஆனால்  அதை எத்தனை அற்புதமாகப் படம் எடுத்து விட்டார்கள். ரொம்ப கவனமா இருப்பாங்க போலும்!

---------------------------

திஹார் ஜெயிலில் சாய்பாபா!!

Kancha Ilaiah - காஞ்சா ஐலையா Deccan Chronicle-ல் 6.7.11 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ராம் தேவ் செய்த போராட்டம் பற்றிய ஒரு குறிப்பு; அதில் எப்படி ராம் தேவிடம் இவ்வளவு பணம்?; 200கோடிக்கு தனி ஒரு தீவு .. இப்படி பல கேள்விகள் கேட்டு விட்டு, பணக்காரர்களின் கறுப்புப் பணம் வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்பதோடு நிற்காது, நம்ம சாமியார்களின் / மதப் பிரச்சாரர்களின் ‘தெய்வீகப் பணமும்’ - divine money - வெளியே வரவேண்டுமென்றார்.

அமிர்தமாயி, ஸ்ரீ ஸ்ரீ, ராம் தேவ் போன்றோர் பெயரையும் குறிப்பிட்டார். (நம்ம ஊர் தினகரன், மோகன் லாசரஸ் பெயரெல்லாம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் போலும்!)  அதோடு இத்தனை கோடி பணமும், கிலோ கணக்கில் தங்கமும் சாய்பாபா படுக்கை அறையில் இருந்தது எப்படி என்று கேட்டுள்ளார். இன்று சாய் பாபா உயிரோடு இருந்திருந்தால் அ. ராசா, கனிமொழி மாதிரி சாய்பாபாவையும் திஹார் சிறையில் அரசு அடைத்திருக்குமா? என்று கேட்டிருந்தார்.

பாபா உயிரோடு இருக்கும்போது அந்தச் செல்வங்கள் பிடிபட்டிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? ஒன்றும் நடந்திருக்காது.

’எல்லாம் அவன் செயல்’!
----------------------------------

கெம்பனூர் 'சாதி இந்து'க்களின் சாதி என்ன என்று கேட்டிருந்தேன். ஒரு கோவைக்காரரும் பதிலே சொல்லவேயில்லையே!!
--------------------------------------

11 comments:

Gujaal said...

//கெம்பனூர் 'சாதி இந்து'க்களின் சாதி என்ன என்று கேட்டிருந்தேன். ஒரு கோவைக்காரரும் பதிலே சொல்லவேயில்லையே!!
//

http://dharumi.blogspot.com/2011/06/508.html?showComment=1309076433714#c7592306317149953833

saarvaakan said...

வணக்கம்
/ரோமங்களின் பிடியில் இருந்து மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது.”/
Hair என்பதன் தமிழாக்கம் ரோமமா அல்லது உரோமமா?.எதுவும் இருக்க வெண்டிய இடத்தில்,இருக்க வேண்டிய அளவு மட்டும் இருந்தால் சரி.
******************************
/ரொம்ப கவனமா இருப்பாங்க போலும்!/
இப்படித்தால் எல்லாமே செய்தார்கள்!!!!!!!!!!!!
***************************************
/தினகரன், மோகன் லாசரஸ் பெயரெல்லாம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் போலும்!)/
இதுவும் கூட இறைவனின் செயலே!!!!!!!!!!!!.
______________________
கலாத்தியர் 2:17 கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
___________________
********************************
//கோவைக்காரரும் பதிலே சொல்லவேயில்லையே!!//
ஊர்க் கட்டுபாடு சாமியோவ்!!!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி

குறும்பன் said...

//ரோம மதங்கள் // என்றால் ரோமாபுரியின் மதங்கள் என்று பொருள் வருகிறது. மயிரு மதங்கள் அல்லது மசிறு மதங்கள் என்று சொல்லியிருக்கலாம்.

பெடரர் தோற்றதில் வருந்தமிருந்தாலும் ரபா தோற்றதில் மகிழ்ச்சி. ரபா மேல் ஏன் வெறுப்பு வருகிறது என தெரியவில்லை, பெடரர் மேல் இருக்கும் அன்பா?

அது யாருங்க மோகன் லாசரஸ் ? விளக்கம் please.

naren said...

இப்பொழுது பிறக்கும்பொழுதே எல்லாரும் சொட்டையாகத்தான் பிறக்கிறார்கள், அப்புறம் எப்படி ரோமம் சம்பந்தமாக மதக்காரியங்களை செய்யமுடியும்.
சாமியார்களே தாடியில்லாமல் தான் அலைகிறார்கள்.
முடித்திறத்தும் நிலையங்களே வேலையில்லாமல் இருக்கின்றன.....

துளசி கோபால் said...

//“இதுவரை இந்த பூமியில் இருக்கும் எல்லா மதங்களும் ரோமத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. //

மதங்கள் மட்டுமா?????

ஒரு பத்து நிமிஷன் டிவி பார்த்தால் ஆயிரத்தெட்டு விளம்பரம், இந்த ரோமத்துக்கு!!!!!!

இத்தைப்போடு அத்தைப்போடுன்னு......

பத்து ஆள் சேர்ந்து நகர்த்தமுடியாத ட்ரக்கை ஒரு அம்மிணி தன் மயிரால் இழுத்துவிட்டுருது!!!!!!!!

தருமி said...

//பிறக்கும்பொழுதே எல்லாரும் சொட்டையாகத்தான் பிறக்கிறார்கள், //

சொந்தக் கதை .. சோகக் கதை மாதிரி இருக்குதே !!

தருமி said...

//அது யாருங்க மோகன் லாசரஸ் ? விளக்கம் please.//

தினகரன் & குடும்பம் ஒரு “கம்பெனி” நடத்துவது போல் இந்த ஆளும் ஒரு கம்பெனி செமையா நடத்துறார்.

naren said...

//தினகரன் & குடும்பம் ஒரு “கம்பெனி” நடத்துவது போல் இந்த ஆளும் ஒரு கம்பெனி செமையா நடத்துறார்//

அசிங்கமாக சிந்திக்கிறேன், பார்க்கிறேன் என சொல்லக்கூடாது.

ஏன் இந்த தினகரன் மற்றும் மோகன் லாசரஸ் பன்னாட்டு நிறுவன கம்பெனிகளின் core supporters and workers எல்லாம் நாடார்களாவே இருக்கின்றார்கள்.

இதில் கூடமா ஜாதி பாசம்...

தருமி said...

//எல்லாம் நாடார்களாவே இருக்கின்றார்கள்.//

மற்ற பக்திகாரர்களையெல்லாம் விடுத்து, ஏன் இப்படி ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரிடத்தும் ஒட்டு மொத்தமாய் யேசு பிரியமாகி விடுகிறார் என்றும், நீங்கள் கேட்ட கேள்வியையும் கேட்டு விட்டேன்.

பதில் கிடைக்கவில்லை ...

தருமி said...

//இதில் கூடமா ஜாதி பாசம்...//

இல்லியே ... ஏசு ‘அந்த’ ஜாதி இல்லையே !!!!!!!!!

saarvaakan said...

இந்த கிறித்தவ உயர்சாதி ஊழியக்காரர்கள் பெரும் வெற்றி(வசூல்,சாம்ராஜ்யம் கட்டியெழுப்புதலில்) பெறுகிறார்கள்.அபப‌ப்பா காசு வசூலிக்க 1,000,000 வழிகள் என்று புத்தக்ம் போடும் அளவிற்கு திறமியானவர்கள்.
கிறித்தவ தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஊழியர்கள்(பேர் தெரியவில்லை) ஏதோ வயிற்றுக்கும்,வீட்டுக்க்கும் அளவாக சம்பாதித்து ஏதோ வாழ்கிறார்கள்!!!!!!!!.
________________

Post a Comment