Friday, July 22, 2011

512. இஸ்லாமும் பெண்களும் ...2 / WHY I AM NOT A MUSLIM ... 17

*


ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16

பதிவு - 17


                 இப்பதிவு - 18


Image and video hosting by TinyPic


CHAPTER  14
WOMEN AND ISLAM - 2


( //நீங்கள் பெண்கள் சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத்தான் காட்ட முடியும்.//  - முந்திய பதிவின் பின்னூட்டத்தில் இப்படி ஒரு போடு போடுகிறார் ஒரு இஸ்லாமியப் பதிவாளர். முந்திய பதிவில் ஹதீதுகளை இரண்டாம் பட்சமாக மட்டும் காட்டி, ஆனால், முதலாவதாகக் குரானிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களையே கொடுத்துள்ளேன். 
கண்ணிருப்போர் காணட்டும்!


ஹதீதுகள் (சில சமயங்களில்) வேண்டாமென்கிறீர்கள். அவைகள் பொய்யென்றால் பின் ஏன் அதை இன்னும் தூக்கிப் பிடித்துள்ளீர்கள்; அதெல்லாம் எங்களுக்குப் புறம்பானது என்று ஒதுக்கி வைக்க .. இல்லை ...இல்லை... எறிந்து விட வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு, சிலவற்றை strong ஹதீதுகள், சிலவற்றில் weak ஹதீதுகள் என்று காலத்திற்கேற்றாற்போல், வசதிக்கு ஏற்றாற்போல் நீங்களே கூறிக்கொள்வதா? ஹ்தீதுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அதில் வரும் கேள்விகளை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும்? 


கட்டுரை தொடர்கிறது .....)


குரானில் ‘சுத்தம்’ பற்றிய கோட்பாடுகள் மிகத் தீவிரமானவை. உடம்பிலிருந்து வெளியேறும் எல்லாமே ஏதோ ஒரு தீய பொருளாகும். குரான் இவைகளைப் பற்றியவைகளில் மிக வெறுப்பான ஒரு பார்வையை மட்டுமே மனதைக் குழப்பும் வகைகளில் வைக்கின்றன. உதாரணமாக ஒரு பெண்ணோடு அல்லது ஆணோடு செய்த பாலின சேர்க்கை ஒருவரின் நோன்பை முறித்து விடுமா என்ற கேள்விக்கு, அவர் தன் விந்துவை வெளிக்கொணராவிட்டால் நோன்பு முறியாது என்கிறார். (இங்கு ‘செயல்’ முக்கியமல்ல; வெளிவரும் பொருளே முக்கியம்.)


பெண்கள் தங்கள் விலக்கு நாட்களில் அசுத்தமாகி விடுகிறார்கள்; அப்போது அவர்கள் நோன்பு இருக்கவோ, தொழுகை நடத்தவோ, காபாவைச் சுற்றி வரவோ, குரானைத் தொடவோ, வாசிக்கவோ, பள்ளிக்குள் நுழையவோ, கணவனோடு பாலின சேர்க்கை கொள்ளவோ தடுக்கப்படுகிறாள்.  அவளது இயலாமை என்ற பார்வை இதில் இல்லை; ஆனால் அவள் அப்போது அசுத்தப்படுத்தப் பட்டவள் என்ற பார்வை மட்டுமே உண்டு.(308) ( இவர்கள் மதத்திலேயே பெண் அசுத்தப்பட்டவள் என்ற பார்வை இருக்கும்போது இந்து மதத்தில் உள்ள சில கட்டுப்பாடுகளை இவர்கள் எப்படி எதிர்க்கிறார்கள்?)


சில தற்காலத்திய இஸ்லாமியர்கள் முகமதுவின் மனைவிமார்களின் ப்ங்களிப்பைப் பற்றி மிகையாக எழுதுவது உண்டு. ஆனால் உண்மையில் அவர்களுக்கு இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை எந்த வித ஆளுமையோ, ஈடுபாடோ ஏதுமில்லை. அவர்கள் முகமதுவின் வீட்டினுள் ‘அடைத்து வைக்கப்பட்டவர்களே!’ 


33.:32, 33 &  33 : 53 -- மற்றவர்களோடு பேசுவதற்குக்கூட  அவர்களுக்குத் தடையிருந்தது.


இஸ்லாமிய மதக் கோட்பாடுகளில் எந்த விதப் பங்கும் பெண்களுக்குக் கிடையாது.


2 : 282 --.. உங்களில் இரு ஆண்களைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால், மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவாள் என்பதற்காக! (இந்த ஆச்சரியக்குறி குரானிலேயே உள்ளது. அவர்களுக்கே இது ஒரு ‘ஜோக்’ மாதிரி உள்ளது போலும் !!!)


 ஃ ஒரு ஆண் = இரு பெண்கள். இந்த ”விநோதமான  இஸ்லாமியக் கணக்கு” ஏனென்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் பதில் சொல்ல வேண்டும் !!! (309)


இதிலும், திருமணம்,  விவாக ரத்து, hudud - ஹுதுத் என்று கூறப்படும் குற்றப்பட்டியலில் பெண்களின் சாட்சியை முகமது ஒத்துக் கொள்ளவில்லை.

Hudud - முகமது குரானிலும் ஹதீதுகளிலும் சில தண்டனைப் பட்டியல்களைக் கொடுத்துள்ளார்.
1. கள்ளத் திருமண உறவுக்கு  - கல்லாலெறிந்து கொல்லுதல்;
2. கள்ள உறவுக்கு - 100 கசையடி;
3. கள்ளத் திருமண உறவு என்று பொய்சொல்லிய தவறுக்கு - 80 கசையடி;
4. மதத்தை விட்டு வெளியேறுதல் - மரண தண்டனை;(மதத்திற்குள் வந்து விட்டால் அதன் பின் ‘கொத்தடிமை’ தானா? இப்படி ஒரு தண்டனை இந்து மதத்தில் இருந்தால் ஏ.ஆர். ரஹ்மானும், பெரியார் தாசனும் எப்படி உங்கள் மதத்திற்குள் வந்திருக்க முடியும்? எம்மதத்திலும் இல்லாத கொத்தடிமை ஏன் உங்கள் மதத்தில் மட்டும்? ’சரியான’ மதம் என்றால் இந்த ‘உள்கட்டு’ எதற்கு? பயமா? இஸ்லாமில் மத மறுப்பாளர்களே இல்லை என்று சுய புராணம் வேறு பாடுகிறீர்கள்! )
5. போதைப் பொருள் அருந்துதல் - 80 கசையடி;
6. திருட்டு - வலது கையை வெட்டி விடுதல்;
7. சாலைகளில் நடத்தும் சிறு திருட்டு - கை, கால் வாங்குதல்;
8. திருடி, கொலை செய்தல் - மரண தண்டனை.


24 :4 வசனத்தினை ஒட்டி, இஸ்லாமிய குருமார்கள் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாலும் நான்கு ஆண்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தாக சாட்சி சொன்னால் மட்டுமே அந்தக் கற்பழிப்பை ஒத்துக் கொள்வார்கள். குற்றம் சாட்டும் பெண் இதுபோல் சாட்சிகளைக் கொடுக்காவிடில் குற்றம் சாட்டுபவருக்கே தண்டனை கிடைக்கக் கூடிய சூழலுண்டு. கல்லெறிந்து கொல்லுவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறிது வேற்றுமையான கொடூர முறைகள் உண்டு. (310)


சொத்தின் உரிமையில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு இரு மடங்கு சொத்து அதிகம்.
4 : 11,12 -- உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்; ஒரு ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது.(இன்னும் பங்கு பிரிப்பு மிக நீளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. பெண்ணுக்குச் சமத்துவம், சொத்தில் நியாயமான பங்கு எங்கள் மதம் தருகிறது என்பார்கள்; ஆனால் பெண்ணுக்கு ஆணுக்குக் கிடைப்பதில் பாதி சொத்து. பின்னும் எப்படி இவ்வாறு பெருமை கொள்கிறார்கள்?)


ஆண் குழந்தைகள் இல்லாவிட்டால் இருக்கும் ஒரு மகளுக்குச்  சொத்தில் பாதி மட்டும் வருகிறது. மீதி அப்பாவின் ஆண் உறவினர்களுக்குப் போய்விடும். இந்தக் காரணத்தால் இன்றும் இஸ்லாமியப் பெற்றோர்கள் பெண் குழந்தைகள் பெறுவதை வெறுக்கிறார்கள். பல மனைவியுள்ளவர் இறந்தால் அவரின் சொத்தில் நான்கில் அல்லது எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனைவியருக்குக் கிடைக்கும்.


2 : 228 -- ....ஆயினும், ஆண்களுக்குப் பெண்களை விட ஒரு படி உயர்வு உண்டு. அல்லாஹ் பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான்.


4 : 34 -- ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் ... எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்.


முஸ்லீம் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது கடவுளின் விருப்பத்திற்கும், இஸ்லாமியக் கட்டளைகளுக்கும் எதிரானது.(312)


ஒரு ஹதீத் ’உன் மனைவியின் கண்ணில் படும்படி ஒரு சாட்டையைத் தொங்க விடு’ என்கிறது. ஆனாலும் சில ஹதீத்துகளில் முகமது மனைவியர்களை அடிப்பதை எதிர்க்கிறார். ஆனால் குரானில் மனைவியை எப்படி எப்படியெல்லாம் அடிக்கலாம் என்று கூறியுள்ளது. அப்படியாயின் குரானில் கடவுள் சொன்ன கட்டளையை முகமது மீறுகிறார். (அதெல்லாம் week ஹதீத்; அவையெல்லாம் செல்லாது  என்று சொல்லிவிடுவார்களோ?) (314)


(முகத்)திரை -- முகத்திரை அணிவது அடிமைத்தனத்தின் அடையாளம் என்று இஸ்லாமியப் பெண்கள் அவ்வப்போது போரிடுவதுண்டு. (நம்மூரில் முளையிலேயே “கிள்ளி எறிந்து விட்டார்கள்”!  ”நீயா, நானா” நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நம்மூர் பெண்களின் ஒரு பக்கக் குரலை மதத்தின் பெயரால் அன்றே அமைதியாக்கிவிட்டார்கள்; பாவம்!) 
1923-ல் எகிப்திய பெண்ணியத் தலைவி - Ms. Houda Cha'araoui தன் தோழியரோடு இணைந்து தங்கள் முகத்திரையைக் கடலுக்குள் வீசி எறிந்தார்கள்.
1927-ல் டர்கெஸ்தான் என்ற கம்யூனிச நாட்டில் 'de-hijabization' என்ற ஒருபோராட்டம் நடந்தது.  
உஸ்பெக்கில் 87,000 பெண்கள் தங்கள் ‘கறுப்புத் துணிகளை’ வீசியெறிந்ததும் நடந்தது. அப்போராட்டத்தில் 300 பெண்கள் கொல்லப்பட்டதும் நடந்தது.
1928-ல் ஆப்ஹானிஸ்தான ஷா சுதந்திரத் திருநாளில் இனி பெண்கள் திரை அணியத் தேவையில்லை என்ற சட்டம் கொண்டு வந்து, தன் மனைவியின் திரையையேக் கழட்டச் செய்தார். ஆனால் தொடர்ந்த ’மக்கள் போராட்டத்தால்’ அந்த ஆணையைத் திரும்ப பெற்றுக் கொண்டார்.
1936-ல் ஈரானின் ஷா திரை தேவையில்லை என்று சொல்லி ஆணை பிறப்பித்தார். ஆனால் தொடர்ந்த போராட்டத்தால் 1941-ல் அந்த ஆணையை எடுத்து விட்டார்.


குரானின் 33 : 53; 33 : 59; 33;  32, 33; 24 : 30,31  -- இந்த சுராக்களில் திரை வற்புறுத்தப் படுகிறது.


குரான் பெர்ஷ்யிய மக்களிடமிருந்து அரேபியாவிற்கு வந்தது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது பைசாந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட வழக்கம்.  ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் வேறொரு காரணம் சொல்வார்கள்.  ஒரே ஒரு மனிதனை  - Omar al-Khallab - மகிழ்ச்சிப் படுத்த கடவுள் கொண்டு வந்த சட்டம் இது என்பர். (315)
ஓமார் ஒரு நாள் முகமதுவிடம் கேட்டார்: “நல்லவர்களும் கெட்டவர்களும் உம் வீட்டிற்கு வந்து போகும் பழக்கமுண்டு. ஏன் நீங்கள் உங்கள் மனைவியர் அனைவரையும் தங்கள் முகத்தை மூடிக்கொள்ளச் சொல்லக்கூடாது’ என்றார். வழக்கம்போல் இதற்கும் வஹி வந்தது.
இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுவதுண்டு: தற்செயலாக ஓமரின் கரம் ஆயிஷா மேல் பட்டு விட்டது. அவர் மன்னிப்புக் கேட்கிறார்.
al-Tabari என்ற வரலாற்றாசிரியர் இன்னொரு நிகழ்வைக் கூறுகிறார். ஆண்கள்  இடுப்பிலிருந்து முழங்கால் வரை தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதிக்கு awra என்று பெயர். ஆனால் பெண்களுக்கான awra எது என்பதில் பலவேறு கோணங்கள் உண்டு. Hanafites முகம், கைகளை மூடத்தேவையில்லை என்கிறது. ஆனால் மூவகை சுன்னியினரும் முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும். மிக அவசியமான நேரங்களில் மட்டுமே முகம், கை இவைகளைக் காட்டலாம் என்கிறது.


பர்தாவைப் பற்றிய விவாதங்கள் இன்னும்நடந்து கொண்டே இருக்கின்றன. 1992-ல் ஈரானில் நடந்தவைகள் பற்றி New York Times தினசரியில் குறிப்பிடப்படும் செய்தி: பெண்களின் நிலை பற்றிய விவாதங்களில் அவர்கள் அணியும் துணிமணிகளே அதிக இடம் பெறுகின்றன. ஈரானின் 13 ஆண்டுகால போராட்டத்தில் இதற்கே அதிக இடம் கிடைத்தது. எது சிறந்த பர்தா என்பதே முக்கிய கேள்வி.போராட்டத்தின் ஆரம்பத்தில் தலைமையேற்ற Abod-Hassan Banisadr  என்பவர் ஆராய்ச்சியின் முடிவில் பெண்களின் தலைமுடியில் இருக்கும் பிரகாசம் ஆண்களை மயக்கக் கூடியது என்றார். ( பெண்களின் கூந்தலுக்குத் தனி வாசனையிருக்கிறதா என்ற நம் சண்பகமாறன் என்னும்  பாண்டிய மன்னனின் கேள்விக்கு இவரிடம் பதில் கேட்டிருக்கலாம்! ) இப்போராட்ட்த்தில் பல பெண்களுக்கு அவர்களின் ‘ஹிஜாபை’ வைத்து  பலவித தண்டனைகள் கொடுக்கப்பட்டன.


33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. அடிப்படைவாதிகள் இது எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் சொல்லப்பட்டது என்றும், மித வாதிகள் அந்த வசனம் முகமதுவின் மனைவியருக்கு மட்டும் சொல்லப்பட்டது என்றும் வாதிப்பதுண்டு. இதன் போக்கிலேயே, Ghawji என்ற அடிப்படைவாதி எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார்.  முகமதுவின் வசனம் ஒன்றில், ‘ஆணும் பெண்ணும் பேசும்போது ஷைத்தான் இருவருக்கும் நடுவில் தீயவற்றை வைத்து விடுவான்’ என்கிறார். (ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் sex தவிர வேறு ஒன்றுமேயில்லை போலும்!)


பெண்களுக்குக் கல்வி மறுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. முகமது ‘பெண்களுக்கு எழுத்தறிவு வேண்டாம்;  அவர்களுக்குத் துணி தைக்க சொல்லித் தரலாம்’, என்கிறார். ஆனாலும் இன்று சிலர் பெண்களுக்குக் கல்வியறிவு கொடுக்கலாம் என்கிறார்கள். ஆனாலும் இதிலும் அவர்கள் பெண்களுக்கு என்றே சில வேலைகளைக் காண்பிக்கிறார்கள். அதிலும் ‘புத்திசாலித்தனமான’ வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை. அவள் ஒரு இமாமாகவோ, நீதிபதியாகவோ ஆக முடியாது என்பது அவர்கள் முடிவு. மேலும், ஒரு பெண் தன் கணவனின் வீட்டை விட்டு வெளியில் சென்றாலே அவள் பாவத்தில் வீழ்ந்து விடுவாள் என்று நினைக்கிறார்கள். 1952-ல் எகிப்திய பெண்கள் ஓட்டுப் போடவும், நாடாளுமன்றத்தில் நுழையவும் போராட ஆரம்பித்தார்கள். பல குரான், ஹதீத் வசனங்கள் மூலம் குருமார்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள். ஆயினும் 1956-ல் அவர்களுக்கு அந்த உரிமைகள் அளிக்கப்பட்டன.


திருமணங்கள் போலவே திருமண விலக்குகளும் அதிகம். ஆயினும் இதற்கான வரையறைகள் பெண்களுக்குச் சாதகமானதாக இல்லை.(320)


ஏவாள் செய்த தீவினையால் இன்றைய பெண்ணுக்கு மறுக்கப்படுபவை என்று ஒரு பட்டியலை ஆசிரியர் தருகிறார்:
அவளால் செய்ய முடியாத / செய்யக் கூடாதவைகளின் பட்டியல் இங்கே:
1.  நாட்டின் தலைமைப் பதவி
2.  நீதியரசரின் பதவி
3. இமாம் ஆவது
4.  guardian -பாதுகாப்பாளராக ஆவது
5.  கணவனது அல்லது பாதுகாப்பாளரின் உத்திரவின்றி வீட்டை விட்டு வெளியேறுவது
6.  தெரியாத ஆண்களிடம் பேசுவது
7.  ஆணோடு கை குலுக்குவது
8.  வாசனைப் பொருட்கள் போட்டுக் கொள்வது; அழகு படுத்திக் கொள்வது.
9.  அவர்கள் ‘சோதனைக்கு” உள்ளாகாதபடி இருக்க முகத்திரை அணிவது
10. தனியாகப் பயணம் செய்வது
11. ஆணைப் போல் சொத்தில் பங்கு பெறுவது
12. ஹதுதிற்கு சாட்சி சொல்வது; தனது சாட்சிக்கு அரை ஆள் மரியாதை என்பது
13. மாதவிலக்காகும் காலங்களில் மத வழக்கங்களில் ஈடுபடுவது
14. வயதான காலத்தில் எங்கு வாழ்வது என்பதைத் தீர்மானிப்பது
15. திருமணத்திற்குத் தானே முடிவெடுப்பது
16. இஸ்லாமியரல்லாதவரை மணக்க முடியாதது
17. மண விலக்குப் பெறுவது
(பர்தா பற்றி ஒரு கேள்வி:
பர்தா போடுவதற்கு இஸ்லாமியர் சொல்லும் அடிப்படையே தவறு. 
//33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. ... எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார்.// 

மேலேயுள்ள  மேற்கோள்களை வாசித்தால், பர்தா ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை; ஆனால் பெண்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்குத்தான் என்பது புரியும். பெண்ணை அப்படித்தான் இஸ்லாமும், குரானும் பார்க்கிறது.

இன்னொரு கேள்வி: பெண்ணின் முகத்தை மட்டும் பார்த்தாலே காதலோ காமமோ ஆண்களுக்கு வராதா? ) --


5 comments:

saarvaakan said...

வணக்கம் நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்ட அனைத்து கருத்துகளும் இக்காலத்துக்கும் பொருந்தும் உண்மைகள் என்று கூறுவதாலும் ,சில நாடுகளில் இதன் மீதான சட்டங்கள் அமலில் இருப்பதாலேயே விமர்சிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.
1. பெண்ணுக்கு சொத்துரிமையில் ஆணுக்கு கிடைப்பது போல் பாதி பங்கு மட்டுமே.இந்த சொத்து பிரிப்பதற்கான் ஒரு எளிய கணக்கீடு இத்தளத்தில் செய்யலாம்
http://www.lubnaa.com/money/InheritCalc.php
_______
பொதுவாக ஆணுக்கு ஏன் இரு பங்கு பெண்ணை போல் என்பதற்கு பெண்ணுக்கு மஹர் (பெண் வரதட்சனை) கிடைக்கும்,ஆண் அளிக்க வேண்டும்,குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்று பல காரணங்கள் சொல்வார்கள்.
http://en.wikipedia.org/wiki/Mahr
http://www.facebook.com/topic.php?uid=31566408825&topic=5383
அரபு நாடுகளில் இந்த மஹரின் அளவு அதிகள் குறைந்த பட்சம் சில இலட்சம் இந்திய ரூபாய்களில் இருக்கும்.இதனாலும் அரபு சமூகத்தில் ஆண் திருமணம் கொஞ்சம் கஷ்டம்தான்.நம்ம இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் மஹர் அதிகமாக் கொடுப்பதில்லை ,சும்மா இந்துக்களின் பரிசப் பணம் மாதிரி சிறிய அளவு பண‌ம் கொடுத்தே முடிக்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் பெண்ணுக்கு ஆணின் சொத்தின் அளவில பாதி எனப்து சரியா?
நன்றி
(contd)

naren said...

ஐயா, பதிவில் கூறப்பட்டவைகள் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய முற்பட்டால் அசிங்கமான் சங்கதிகளே வருகின்றன. அதனால் பதிவிலிருந்தே மறுமொழி.

@இஸ்லாத்தில் சடங்குகள், சகுணங்கள் இருக்கின்றன, அதனால் மூடநம்பிக்கையும் இருக்கின்றது.
@பெண்களின் உடல்கூறு(physical) வித்தியாசத்தை வைத்து physical ஆக வித்தியாசப்படுத்தலாமே தவிர, அதை வைத்து மற்ற இடங்களான சமூகம், சட்டம், மதம் இன்னும் பல வற்றில் வித்தியாசப்படுத்த கூடாது.
@பெண்கள் பற்றிய இஸ்லாம் சட்டங்கள் முகமது காலதிற்கு ஒத்து வந்திருக்கலாம் ஆனால் தற்காலதிற்கு ஒத்து வராது. அதனால் குரான் எக்காலதிற்கும் பொருந்தும் என்ற கூற்று தவறு.
@இஸ்லாம் கூறும் ஆடையை எந்த ஒரு தனிமனிதனும் தன் சுயவிருப்பத்தின் படி அணிந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அது தான் எக்காலதிற்கும் எச்சமூகதிற்கும் சிறந்தது என்று நிர்பந்தம் ஏற்படுத்தி கசையடி தந்து அணியவைத்தால் அது தவறு.
@பெண்களின் இஸ்லாத்தின் உரிமை சரி என்பவர்கள் இனி மனித உரிமை பற்றி பேச அருகதை அற்றவர்கள்.
@மற்ற மததில் இவ்வாறு பெண்கள் எதிரான கருத்துகள் இருந்தாலும், அந்த அந்த தேசத்தின் சட்டங்கள் சரி செய்ய முயற்சிகின்றன.

பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் அதனால் கடவுளே(இயற்கையே????) வித்தியாசத்தை உண்டாக்கினான். அந்த மதத்தை பார் இந்த மதத்தை பார் என்று பின்னூட்டங்கள் வந்தால் என் பதிவான “அணுகுண்டை கண்டுபிடித்தது யார்” என்ற பதிவை
http://narenpaarvai.blogspot.com/2011/07/blog-post.html கண்டு ஆசுவாசப்படுத்தி கொள்ளவும்

saarvaakan said...

இஸ்லாமிய சொத்து பிரிப்பதற்கு இத்தளத்தினை உபயோகிக்கவும்.
http://www.islamicsoftware.org/irth/irth.html
________
நன்றி
(contd)

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

இஸ்லாம் மூடர்களின் மதம்,முஹம்மத் பொய்யர்,இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகின்றது இவை எல்லாம் நிரூபிக்க ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்.நீங்கள் சொல்லவதெல்லாம் உண்மை என்றால் நேரிடியான விவாதத்திற்கு வரலாமே.உங்களைப் போன்ற இஸ்லாமிய எதிரிகளுக்காகவே TNTJ என்ற முஸ்லிம் அமைப்பு பொது மக்கள் முன்னிலையில் பகிரங்க விவாதங்களை நடத்துகின்றது,மேலும் இஸ்லாம் ஒன்றே சரியான வழி என்பதை தக்க சான்றுடன் எடுத்துக்கூறி,குர்ஆனில் பொய் இல்லை என்பதையும் நிருபித்துக்காட்டுகின்றது.அந்த அழைப்பை ஏற்று இஸ்லாத்தை பொய்யான மதம் என்று நிரூபிக்க தயாரா.இந்த பகிரங்க அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இந்த சவாலை ஏற்று முடிந்தால் நிருபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்,அதை விட்டு விட்டு மாதக்கணக்கில்,வருஷ கணக்கில் இழுத்து(போர்)அடிக்கும் கட்டுரை ஏன்?இந்த சவாலை ஏற்க்காவிட்டால் உங்கள் BLOG பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி கட்டுரை எழுதிரிங்கனு நினைக்க தோணும் இல்லன உங்கள் கட்டுரை ஒன்னும் தெரியாத அப்பாவிமக்களை ஏமாத்தும் மூளை சலவை(BRAIN WASH)என்றே தோன்றும்.
மேலும் விபரங்களுக்கு http://onlinepj.com/ , http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/
இந்த தளத்தை பார்த்து விவாதத்திற்கு கலம்புங்க.

தருமி said...

//விவாதத்திற்கு கலம்புங்க. //
அப்படியெல்லாம் கலம்ப முடியாதுங்க!

Post a Comment