Monday, July 18, 2011

511. இஸ்லாமும் பெண்களும் ...1 / WHY I AM NOT A MUSLIM ... 17

*

ஏனைய முந்திய பதிவுகள்:

பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16


இப்பதிவு - 17


Image and video hosting by TinyPic


CHAPTER  14

WOMEN AND ISLAM


16-ம் நூற்றாண்டில் Shaykh எழுதிய  The Perfumed Garden  என்ற நூலில் இஸ்லாமியத்தில் பெண்மையினைப் பற்றிக் கூறியுள்ளார். பெண்மை பல தொல்லைகளின் பிறப்பிடம்; பெண்களின் மதமே அவர்களின் யோனியில் தானிருக்கிறது என்று கூறியுள்ளார். (290)


Bullough, Bousquet & Bouhdiba - இஸ்லாம் கிறித்துவம் போலன்றி பாலின மையம் கொண்டது என்கிறார். (Islam is a sex-positive religion in contrast to Christianity.)  இஸ்லாமியத்தில் பெண்கள் கீழான நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். பாலினக் கோட்பாடுகள் இஸ்லாமியத்தில் ஆண்களின் பார்வையில் மட்டுமே காணப்படுகிறது.(291)


முகமது நல்ல, பெரிய, தீர்க்கமான மாற்றங்களை அரேபியப் பெண்களுக்காகக் கொண்டு வந்தார். அதில் இரு முக்கியமானவைகள்: பெண் குழந்தைகளை உயிரோடு கொல்லும் பழக்கத்தை மாற்றினார்; பெண்களுக்கான சொத்துரிமையைக் கொண்டு வந்தார். 


பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தது சமயத் தொடர்பானதாகவும், அரிதாக நடக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இஸ்லாமிய எழுத்தாளர்களே இது அடிக்கடி நடக்கும் ஒரு செயல் போல் தவறாகத் தங்கள் எழுத்துக்களில் காட்டி விட்டார்கள்.(292)


இஸ்லாம் பெண்களுக்கு எதிரான ஒரு சமயம். பெண்களை எல்லா வகையிலும் - உடல், அறிவு, ஒழுக்கம் எல்லாவற்றிலும்  கீழானவர்களாகவே மதிப்பிட்டு வந்துள்ளது. குரானின் வசனங்களும், ஹதீத்துகளிலும் இந்தக் கருத்துக்களே உள்ளன. (293)


முகமது பெண்களைப் பற்றிச் சொல்லும் வசனம் :  ’பெண்களை நல்லுறவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வளைந்த நெஞ்செலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்; ஆனால் அந்த எலும்பு வளைந்த ஒன்று. அதை நேராக்க நினைத்தால் ஒடிந்து விடலாம்’.  ஆனால் ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தால் எப்போதும் வளைந்தே இருக்கும்.’(295)


12. 22 - 34 குரான் வசனங்கள் ஜோசப்பின் கதையைச் சொல்கின்றன. அதில் வரும் பெண்களின் நடத்தையை வைத்து இன்றும் இஸ்லாமிய மதக் குருமார்கள் தந்திரம், பொய்மை, ஏமாற்று என்ற அனைத்தும் பெண்களின் குணங்கள் என்று சொல்வதுண்டு. பெண்கள் திருந்துவதுமில்லை; திருந்துவது அவர்களது நோக்கமுமல்ல. 


பெண்மையை, பெண்களைக் குறை சொல்லும் சில குரான் வசனங்கள் இவை: 


4 : 117;    ....ஷைத்தானை அவர்கள் வணக்கத்துக்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்.
43 : 15 - 19;  
52 : 39;
37 : 149-150;
53 : 21 - 22
53 : 27
(43: 15-19; 52:39; 37: 149-150 - இந்த வசனங்களில் ‘...பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? (37 : 153)என்றெல்லாம் கூறுவதற்குப் பொருளென்ன என்று புரியவில்லை ...?)


பெண்களை வெறுக்கும் இன்னும் சில வசனங்கள்:
2 : 228;  ஆண்கள் ஒரு படி பெண்களை விட உயர்ந்தவர்கள்.
2 : 282: ஒரு ஆண் அல்லது இரு பெண் சாட்சி சொல்ல வேண்டும்.
4 : 3;     ‘...உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள்.’
4 : 11:  இரண்டு பெண்களுக்குச் சமமாக ஒரு ஆண் ...
4 : 34:  ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்; ஆண்களை அல்லா உயர்வை அளித்துள்ளான்.
4 : 43:  ’...நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் ...உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.’
5 : 6        ’... பெண்களைத் தீண்டியிருந்தால்..தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்.’ ( ஏன் ஒரே விதமான கட்டளைகள் இரு இடத்தில் ..? ஜிப்ரேல் / அல்லா மறந்து இரு முறை சொல்லியதோ? )
33 : 32, 33   நபியின் மனைவியருக்குத் தனிக்கட்டளைகள் ..
35 : 53        ‘... நபியின் மனைவியரிடம் ஏதும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.(அடக் கடவுளே ... நபியின் மனைவியர், மற்றைய ஆண்கள் - யார் மேலும் அல்லாவுக்கு நம்பிக்கையில்லை போலும்!)
33 : 59  ‘நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் ... தங்கள் துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும்.’ (ஓ! பர்காவின் ஆரம்பம் இங்குதான், இப்படித்தான் போலும்! )


ஹடீத்துகளிலும் இதே போல் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பெண் வீட்டிலிருந்து கொண்டு, ஆண்களின் கட்டளைகளுக்குச் சிரம் தாழ்த்தி, அவனுக்குக் கீழ்ப்படிந்து, கணவனது நிம்மதியான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 


சில சான்றுகள்:
-- காலில் விழுந்து வணங்குவதைத் தடை செய்யாமல் விட்டிருந்தால், முதலில் பெண்கள் தங்கள் கணவனது காலில் விழுந்து வணங்கும்படி சொல்லியிருப்பேன். கணவனை ‘சம்ரஷிக்காத மனைவி’ கடவுளுக்கான கடமைகளையும் செய்ய மாட்டாள். (கல்லானும் கணவன்; புல்லானாலும் புருஷன்!!   கணவனே கண்கண்ட தெய்வம் !!!)


-- கணவனுக்கு நல்ல  ’சம்ரஷணை’ செய்த மனைவிக்கு நேரே மோடசம். (அந்த மோட்சத்தில் அவளுக்கு என்ன கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது! ஆண்களைப் போல்தான் அவளுக்குமென்றால் - கணவனும் இன்னும் 70 ஆண்களும் அவளுக்குக் கிடைக்கும் என்று பொருளாகிறது!!)


-- ஒரு மனைவி கணவனுக்கு எப்போதும் .... மறுக்கவே கூடாது, அவள் குதிரையில்  மேலே இருக்கும்போது கூட!! ( அடப்பாவமே ! இது  புல்லானாலும் புருஷன்’ என்ற “உயர் தத்துவத்தை’ விடவும் மிகவும் ‘உயரத்தில்’ அல்லவா இருக்கிறது!!)


-- முகமது நரகத்தைக் கனவில் எட்டிப் பார்த்த போது அது முழுவதும் கற்பு தவறிய பெண்களால் நிறைந்திருந்தது. ( அப்போ .. அவர்களோடு தங்கள் கற்பைத் தவற விட்ட  ஆண்கள் எங்கே?)


-- வீடு, பெண், குதிரை - இந்த மூன்றும் அபசகுனங்கள்.(நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)


இஸ்லாமிய மத நூல்கள் மட்டுமல்ல  இஸ்லாமிய கலிஃபாக்கள், மதக் குருமார்கள், தத்துவ மேதாவிகள் எல்லோருமே பெண்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளார்கள். சான்றுகள்:


ஒமார், இரண்டாம் கலிஃப்:  
-- பெண்களை எழுதப் படிக்க  அனுமதிக்காதீர்கள். ( கலிப் சொன்னதை இப்போது இவர்கள் ஏன் மீற ஆரம்பித்து விட்டார்கள்.)  


அலி, முகமதுவின் உறவினரும், நண்பரும் : 
-- பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை. 


-- பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (ஓ! பர்கா போடுவது பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்பதால்தானா??!  நல்லது. ) அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள். ( no chat ..நோ கடலை ...ப்ளீஸ் !)


-- ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.


-- பெண்களுக்குக் கல்வி தருவது தீமையோடு கவலையைச் சேர்ப்பது போன்றது. (299)


முகமதுவிற்குப் பின் வந்த மிகப் பெரிய இஸ்லாமியர் எனக் கருதப்படும் al-Ghazali (1058 - 1111)  என்ற இஸ்லாமியத் தத்துவ அறிஞரின் The Revival Of The Religious Sciences என்ற நூலிலிருந்து இரு மேற்கோள்கள்:


-- பெண்கள் பெரிய ஏமாற்றுக்காரர்கள்; தவறானவர்கள்;  கெட்ட குணம் நிறைந்தவர்கள்; தாழ்ந்த மனதுக்காரர்கள்.


-- ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வுகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் பெண்களிடமிருந்தே வரும். (300)


இஸ்லாம் பெண்களை அறிவு, பண்பு, உடல்கூறு இவைகளில் மிகவும் பலவீனமானவர்கள் என்கிறது. ( ஓ! இதனால் தான் அடிக்கடி நம் பதிவர்கள் பெண்கள் உடலளவில் மிகவும் பலவீனமானவர்கள் என்று அடிக்கடி எதிரொலிக்கிறார்களோ! )
முகமது ‘ பெண்கள், அடிமைகள்’ இருவருமே ‘பாவப்பட்டவர்கள்’ என்கிறார்.


பெண்களைத் தாழ்த்தும் இன்னும் சில ஹடீத்துகள்:


-- ஒரு பன்றி தன்மேல் உரசிச்செல்வதை அனுமதித்தாலும், ஓர் ஆண் தான் அனுமதிக்காத ஒரு பெண்ணின் முழங்கை கூட தன் மேல் படுவதை அனுமதிக்கக் கூடாது.-- கறுப்பு நாய், ஒரு பெண், ஒரு கழுதை இதில் எது வந்தாலும் உங்கள் தொழுகையை நிறுத்திக் கொள்ளுங்கள். (301) (நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)


பாலினத்து வேறுபாடுகள்:


இஸ்லாம் ஒரு பாலின மையம் கொண்ட மதம்.  ஆனால் இதில் அவளது பாலினத் தேவைகள் கணக்கில் இல்லை. இஸ்லாமியக் குரு ஒருவர், திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்புக்கள் மேல் முழு ஆதிக்கம் ஒரு ஆண் செலுத்த முடியும் என்கிறார்.  ஆனால், அவனது உறுப்புகள் அதுபோல் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் உரித்தானதல்ல. சுரா 4:3-ல் ஆணுக்குப் பல பெண்களை குரான் அளிக்கிறது. 


4 : 129 -- ”மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது.”  இப்படி உண்மையைச் சொன்னாலும் ஏன் குரான் பலதார மணத்தை ஒத்துக் கொள்கிறது?


‘திருமணம்’ என்ற சொல்லுக்கான அரபி வார்த்தை ‘நிக்காஹ்’.  ‘புணர்ச்சி’ (coition) என்பதற்கும் இதுவே வார்த்தை. இன்றைய பிரஞ்சு சொல் ‘niquer' என்ற சொல்லுக்கு ‘புணர்தல்’ (to fuck) என்பதே பொருள். 


Bousquet என்பவர் இஸ்லாமியத் திருமணத்தைப் பற்றிக் கூறுவது:
இஸ்லாமியத் திருமணத்தில் பெண் தன் பாலினத் தேவைகள் அனைத்தையும் தன் கணவனுக்கு முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி, இன்னும் அதிகப்படியான மூன்று மனைவியர்களையும், பல வைப்பாட்டிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதிலும் முகமதுவிற்கு அதிகப்படியான வசதிகள் இறைவனால் கொடுக்கப்படுகின்றன. அவர் நான்கு மனைவியருக்கு மேல் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு நடுவே அவருடைய இரவுகளைச் சமமாகப் பங்கு கொள்ளத் தேவையில்லை என்பதும் அந்த “வசதி”.  
குரானில் இப்படி சொல்லப்பட்டுள்ளது:
3 :50 --- “நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத் செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் ம்கள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள்  ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கிறோம். ( அம்மாடி .. ! முகமதுவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு liberalization ..!) .... இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை. (அப்படியானால் இதுபோன்று யாரையும் திருமணம் செய்வது முகமதுவிற்கு மட்டும்தானா?)

3:51 --- உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை  உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் ழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உம் மீது எத்தகைய தவறுமில்லை. 


(அடிக்கடி நம் இஸ்லாமியப் பதிவர்கள் ’நீங்கள் குரானை முழுமையாக வாசித்துப் பலன் பெற வேண்டுமென்று' வேண்டுகோள் வைப்பதுண்டு. வாசிக்கும் சில பகுதிகளே இவ்வளவு மோசமான லாஜிக்கோடும். தவறான தத்துவத்தோடும் இருக்கிறதே ....முழுமையாக வாசித்தால் நிலைமை எப்படியிருக்குமென்றே தெரியவில்லையே!  இதுபோன்ற பகுதிகளை அவர்கள் வாசித்த பின்னும் இப்பகுதிகள்  எல்லாம் கடவுளின் சரியான கட்டளைகள்  என்ற எண்ணம் எப்படி ஏற்படுகிறது?  Simple brain washing ...?


முகமது ‘இஷ்டத்திற்கு’ எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அல்லா சொன்னதாக முகமதுவே சொல்லிக் கொள்கிறாரென்றால் அது ஒரு குற்றவாளியே (தனக்கெதிரான வழக்கில்) கொடுக்கும் ஒரு (ஒப்புதல்) வாக்குமூலம் போலுள்ளது என்று ஏற்கெனவே நான் முன்பு எழுதியுள்ளேன்  12- வது பாய்ண்டாக நான் எழுதியுள்ள பகுதி இங்கு .....) Is it not strange to accept that God himself would have come to give excuses to the excess of his dear and last disciple?


இதோடு, ஆயிஷா என்ற முகமதுவின் மனைவி முகமதிவிடமே ‘உமக்குத் தேவையான கேள்விகளுக்கு வசதியான பதில் சொல்ல கடவுளே உம் உதவிக்கு ஓடோடி வருகிறார் என்று சொல்லியுள்ளார். (A GOOD JOKE ! ஆயிஷா சொன்னது எனக்குப் புரிகிறது; உங்களுக்கு ...? )


al-Ghazali முகமது பற்றிச் சொல்கிறார்:
ஒவ்வொரு காலையிலும் முகமது தன் ஒன்பது மனைவிமார்களோடும் உறவு கொள்ள முடிந்தது என்கிறார்.


பெண்கள் ஆண்களின் தேவைக்காகவே படைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.  மேலும் al-Ghazali ஒரு மனைவி போதவில்லையென்றால் இன்னும் மூன்று மனைவிகளைச் சேர்த்துக் கொள்; அதுவும் உனக்குப் பற்றவில்லையெனில் அந்த மனைவிகளை மாற்றி விடு. What could be simpler!
(303)


ஆண்களின் உரிமைகளைக் காப்பது பற்றி மட்டுமே இஸ்லாம் பேசுகிறது.முகமதுவின் காலத்தில் சில ஆண்களிடம் பெண்ணை முன்னிருந்தும், பின்னிருந்தும் பாலின்பம் அனுபவிக்கும் பழக்கமிருந்திருக்கிறது. இதனால் சில பெண்கள் முகமதிவின் பார்வைக்கு இதனைக் கொண்டு வருகிறார்கள். (நல்ல வழக்குகளை முகமதுவிடம் கொண்டு வருகிறார்கள்! ம்ம் .. ம்.. ஆனால் அல்லாவே நேரடித் தீர்ப்பு தருகிறார் !!) “சரியாக” அல்லா தன் தூதரிடம் இதற்கான பதிலை இறக்குகிறார். 2 : 223-ல் ‘உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்.’ (304)  
(ஆஹா! மிக நல்ல கடவுள்!)


விருத்த சேதனம் செய்வது ஒரு சிபார்சுதான்; ஆனால் கட்டாயமல்ல. குரானில் இது சொல்லப்படவும் இல்லை. ஒமார் என்ற பக்தி நிறைந்த ஓமர், ‘முகம்து உலகை இஸ்லாமிய மயமாக்கவே வந்தார்;  உலகை விருத்த சேதனம் செய்வதற்காக வரவில்லை.’

இஸ்லாமியம் ஆணின் பாலுறவு இன்பங்களுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன. முகமதுவே மிக அதிகமான பாலுறவு இன்பங்களைச் சுவித்தவர் என்பதும், அதை கிறித்துவம் மிகவும் அருவருப்போடு பார்த்ததும் வரலாற்றில் உண்டு.

குரானின் சுவனம் பாலின்பம் மிக்கது. அதுவும் ஆண்களின் பாலினச் சுகம் மட்டுமே. இதனைக் குறிக்கும் சில அல்லாவின் வசனங்கள்:

78 : 31 - 33 -- 32-ல் ‘தோட்டங்களும் திராட்சைகளும் (fermented ...?) 33 சம வயதுடைய கன்னிப் பெண்களும், 34 நிறைந்த கிண்ணமும் (then ... definitely fermented !) உள்ளன.

55 :  54 - 58 -- 56-ல் இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நானும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள். இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். (so fresh!)

56 : 35 - 38 -- ‘வலப்பக்கத்தில் இருப்போருக்காக ஹவுரிகளைக் கன்னிகைகளாகப் படைத்து துணைகளாக வைத்திருப்போம்.

52 : 19 - 20 -- ‘அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.’

37 : 45 - 49 -- ’மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும். ஒளிரக்கூடிய மது - அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்.  .. மேலும், தாழ்த்திய பார்வையுடைய அழகியக் கண்களைக் கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர். அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாக இருப்பார்கள்.

44 : 51 - 55 -- 54-ல் ‘நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.’

38 : 49 - 54 -- 52-ல் ‘அவர்களின் அருகில் நாணமுடைய சம வயதுடைய மனைவியர் இருப்பர். (சம வயது என்றால் சுவனத்திற்குச் செல்வோரின் சம வயதா ... இல்லை... அந்தப் பெண்கள் எல்லோரும் சம வயதினரா ...?? தெரிஞ்சி வச்சிருக்கணும்ல ...!)

2 : 25 --’அந்தத் தோட்டத்தில் அவர்களுக்கான அழகான மனைவியர்கள் இருப்பார்கள்; அவர்கள் அனைவரும் எப்போதும் உயிரோடு இருப்பார்கள். 

இதனால்தான் முகமது சுவனத்தில் திருமணம் ஆகாதவர்களே இருக்க மாட்டார்கள் என்கிறார். (அறிவியலுக்கும், நடப்புக்கும் இது சரியான, பொருத்தமான வசனமாகத் தெரியவில்லையே!  ஏனெனில்,  சிறு வயதிலேயே இறந்த இளம் ஆண் பிள்ளைகள் என்னவாவார்கள்? அவர்களுக்கும் அல்லா கல்யாணம் செய்து வைத்து விடுவாரா? 

சுவனத்தில் பெண்களைப் பற்றிய கவலையே அல்லாவிற்கும், முகமதுவிற்கும் கிடையாது போலும்!)

சுவனத்தைப் பற்றியவை எல்லாமே அறிவற்ற, பாலியல தொடர்பான கற்பனைகளாகவே உள்ளன. அங்கும் பெண்கள் ஆண்களுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்படுகின்றனர். அந்தப் பெண்களுக்கென்று கறுப்புக் கண் கொண்ட - gigolo (A man who has sex with and is supported by a woman)-க்கள் - ஆண்கள் இல்லை.

இந்த சுவனக்காட்சிகளை வர்ணிப்பதில் பல இஸ்லாமியர் பெரும் பெருமையடைவதுண்டு. (307)

Suyuti என்பவர் எழுதியது : -- ஒவ்வொரு முறையும் அந்த ஹவுரிகளிடம் கூடிய பிறகும் அவர்கள் மீண்டும் கன்னிகைகளாக ஆகி விடுகிறார்கள்; ஆண்களின் பாலியல் குறி எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். அவர்களின் விறைப்பு எப்போதும் குறைவதில்லை.   அங்கு நடக்கும் புணர்ச்சி போல் இந்த உலகில் நடந்தால் ஆண்கள் மயக்கமாகி விடுவார்கள். ஒவ்வொருவரும் 70 ஹவுரிக்களை மணமுடிப்பார்கள்; அதோடு அவர்களின் மனைவிமார்களும் சேர்ந்து இருப்பார்கள். இவர்களின் யோனிகள் எப்போதும் தயார் நிலையிலேயே எப்போதும் இருக்கும்.

(இந்த வசனங்களைப் படித்த பின்னும் இவையெல்லாம எல்லாம் வல்ல ஒரு கடவுளால் கொடுக்கப்பட்ட வசனங்கள் என்ற எண்ணம் எப்படி ஒரு மனதில் தோன்ற முடியும்? இவைகளை மட்டும் வாசித்தாலே இந்த மதத்தையும், குரானின் மேலுள்ள மரியாதையையும் எளிதாகப் புறக்கணிக்கலாம்.

இந்த வசனங்களை மட்டும் வாசித்தாலே, இவையெல்லாம் ஒரு மனிதனின் கீழான கற்பனைகளே என்று மட்டும் தான் மனதில் தோன்ற வேண்டும். இந்த வசனங்களை மட்டும் வாசித்து உணர்பவன் இந்த மதத்தின் “தன்மையை & உண்மையை” மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

The "Donkey- Carrot philosophy is the only possible explanation for this low-level, absurd and senseless but sensual (sic!) motivation.

இதுபோன்ற சில கேள்விகளிலிருந்து பதிவர்கள் விவாதங்களில் வழக்கமாக ஒதுங்கிப் போவதும்  ஒரு ‘எஸ்கேப் - பாலிசி’ தான்!)

55 comments:

Gujaal said...

//(அடிக்கடி நம் இஸ்லாமியப் பதிவர்கள் ’நீங்கள் குரானை முழுமையாக வாசித்துப் பலன் பெற வேண்டுமென்று' வேண்டுகோள் வைப்பதுண்டு. வாசிக்கும் சில பகுதிகளே இவ்வளவு மோசமான லாஜிக்கோடும். தவறான தத்துவத்தோடும் இருக்கிறதே ....முழுமையாக வாசித்தால் நிலைமை எப்படியிருக்குமென்றே தெரியவில்லையே! இதுபோன்ற பகுதிகளை அவர்கள் வாசித்த பின்னும் இப்பகுதிகள் எல்லாம் கடவுளின் சரியான கட்டளைகள் என்ற எண்ணம் எப்படி ஏற்படுகிறது?//

"நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க. தெளிவான அரபி வெர்ஷனில் இவ்வாறெல்லாம் சொல்லப்படவேயில்லை. இதெல்லாம் இஸ்லாமை ஒழிக்க கிறித்தவ, யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்த பித்தலாட்டம். உண்மையத் தெரிஞ்சுக்கணும்னா அரபி மொழில குர் ஆனைப் படிங்க" என்று பதில் வரலாம். இதுக்காக நீங்க போயி அரபி மொழியா கத்துக்கப் போறீங்க?

அல்லா குர் ஆனின் அரபி பதிப்புடன் கூடவே ஆங்கில, ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரின் பதிப்புகளையும் வெளியிட்டிருக்கலாம். ஆனால் முட்டாள்தனங்களை சப்பைக்கட்டு கட்ட முடியாதே. அதனால்தான் குர் ஆனை வெவரமா அரபிக்குள் ஒளித்து வைத்தார் போலிருக்கு.

Tamilan said...

தருமி அய்யா, சற்று பொறுங்கள் உங்களுக்கு சௌதியில் இருந்து பதிவரும். (அது இந்திய/மேற்கத்திய சமுகத்தை தாக்குவதாக இருக்கும்)

saarvaakan said...

வணக்கம்
இது எல்லாமே நீங்கள் ஏறெகெனவே கூறிய விஷயங்கள்தான்.பெண்களின் நிலை மதங்களால் கட்டுப்படுத்தப் பட்டே வந்திருக்கிறது.ஆதிக் கால பெண் வழிபாடு தவறாகவே சித்தரிக்கப் படுகிறது.கடவுள் ஆணாக்வே உருவகப் படுத்தப் படுகிறது.
இதில் பல மதங்களும் ஒன்றுதான்.
இதில் இப்போதைய இஸ்லாமிய பிரச்சாரகர்கள் அளிக்கும் விளக்கம்தான் மிகவும் நகைச்சுவையாக அப்ப்போது கூறிய அனைத்துமே இப்ப்போதும் சரி என்பார்கள்.கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நேரடியாக தடை செய்யப்படும்.ஆனால் அதற்கு இன்னொரு வழியில் அனுமதி இருக்கும்.
1. வட்டி தடை(ஹராம்) என்பார்கள்.இலாபத்தில் பங்கு என்று அனுமதி(ஹலால்) அளிக்கப்படும்.

2.விபச்சாரம் தடை என்பார்கள்.தற்காலிகத் திருமணங்கள்(ஷியா:முட்டா,சுன்னி:மிஸ்யார்) அனுமதி தருவார்கள்.சமீபத்தில் செய்தியில் ஹைதராபாத்தில் வேலை,படிப்பு விஷயமாக் வரும் ஆட்கள் இங்கிருக்கும் வரை இம்மாதிரி ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.பல அரபிகள் சுற்றுலா இந்தியா வருவதே இதற்குத்தான்

http://www.deccanherald.com/content/172275/fake-contract-marriages-resurface-hyderabad.html
http://www.youtube.com/watch?v=DsmRpLaX1tc

இன்னும் நிறைய இருக்கிறது.இந்த தற்காலிகத் திருமனம் பற்றி மட்டும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
நன்றி

naren said...

சுவனத்திற்கு இப்பவே நான் செல்லவேண்டும்....ஐயோ..ஐயோ.....என்னை யாராவது அனுப்புங்களேன்......ஜாகிர் நாயக் சொல்வதைப் போல் இன்னும் 500 கோடி ஆண்டுகள் செத்து மண்ணில் உறங்கி செல்ல என்னால் முடியாது.....நான் இப்பவே போகனும்.

யாராவது வந்து இந்த பதிவில் சொல்லப்பட்டவையெல்லாம் பொய் பித்தலாட்டம், குரான் அதீஸில் அவ்வாறு இல்லை, தப்பாக புரிந்துகொண்டீர்கள், முழுமையாக படிக்கவேண்டும், எந்த காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்பதை அறிய வேண்டும், அஆஇஈ தலைவர் இவ்வாறு பதில் சொல்லியிருக்கிறார் அவரிடமே கேளுங்கள், தருமி இஸ்லாம் வெறி எதிர்ப்பாளன், சரியான மொழியாக்கம் இல்லை, அரபி தெரியுமா, பைபிளில் மற்றும் புராணங்களில் இதை விட மோசம், முகமதுவை அவதூறு செய்துவிட்டீர்கள், கிருத்துவன் சதி, யூதர்களின்!!!! சதி, ஆர்.ஸ்.ஸ். பார்பன சதி, தினமலம், குரானில் அதீஸில் இந்த வசனம் இப்படி கூறுகின்றது.............என்று பின்னூட்டம் இட்டு, பதில் கூறி என் மனதை மாற்றுவதற்கு முன்னால்...என்னை யாராவது சுவனதிற்கு அனுப்புங்கள்...ப்ளீஸ்...ப்ளீஸ்... தயவு செய்து அனுப்புங்கள்.
(JUST JOKING).

இஸ்லாம் ஒரு practical மதம், அதனால் பெண்கள் எல்லாம் practical ஆக எப்படி இருக்க, நடக்க வைக்க வேண்டுமோ அப்படி இஸ்லாம் வைக்கின்றது. இதைப் புரியாமல் தப்பாக பதிவு உள்ளது!!!!!!!

naren said...

பெண்களின் நிலமை, எல்லா சமூகத்திலும் மதத்திலும் நாடுகளிலும், சமீப காலம் வரை, ஒரு கீழ்மையான நிலைமையில் தான் வைத்திருந்தன. ஆனால் அது தவறு அவர்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை உணர்ந்து ஒவ்வொரு சமூகமும், மதமும், நாடும் அதை மாற்றி வருகின்றன. மாற்றம் முழுமை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் பெண்களை இழிவுபடுத்துவதை எல்லா மதத்தினரும் எதிர்க்கின்றனர்.

இஸ்லாத்தில் பிரச்சனை என்னவென்றால் அது இறைவன் வாயில் இருந்து நேரிடியாக வந்ததால் பெண்கள் பற்றி முகமது காலக்கட்டதில் கூறியதை தவறு என்று கூறி அதை மாற்ற முடியாது நிலையில் உள்ளனர். தவறு என்றால் அவர்களின் ஆணிவேறே ஆட்டம் கண்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

தருமி said...

//இந்த தற்காலிகத் திருமணம் பற்றி மட்டும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.//

முட்டாஹ் பற்றி கேட்கிறீர்களோ?
அது இஸ்லாமிற்கு முன்பே அரேபிய வழக்கமாக இருந்து இஸ்லாமிலும் சேர்க்கப்பட்டுள்ளது போலும் ..

saarvaakan said...

What is Mut'ah?
http://www.answering-ansar.org/answers/mutah/en/chap2.php
**************
The necessity of Mut'ah
In the Islamic Republic of Pakistan:
Masturbation is a widespread problem
There are thousands of video centers supplying pornographic movies.
Pakistani cinemas show porn movies.
There are 'red light areas' in almost every city

Why does the the Islamic Republic of Pakistan possess such evils in its society? Let us give you a simple answer. Just read the following tradition:

Narrated 'Abdullah Ibn Masud: We used to participate in the holy battles led by Allah's Apostle and we had nothing (no wives) with us. So we said, "Shall we get ourselves castrated (for fear of making sin)?" He forbade us (to castrate ourselves) and then allowed us to marry women with a temporary contract (Mut'ah) and recited to us: 'O you who believe! Make not unlawful the good things, which Allah has made lawful for you, but commit no transgression.' (5.87)
Sahih al Bukhari Volume 7 tradition 13a
http://www.answering-ansar.org/answers/mutah/en/chap3.php
******************

Chapter 9: Was Mut'ah abrogated by the Sunnah?
http://www.answering-ansar.org/answers/mutah/en/chap9.php

suvanappiriyan said...

17 பதிவுகளை சோர்வடையாது எழுதியும் ஒரு இஸ்லாமியரும் நாத்திகத்தின் பக்கம் வரவில்லையே! மாறாக பெரியார்தாசன் போன்ற கடைந்தெடுத்த நாத்திகர்களெல்லாம் இஸ்லாத்தில் ஐக்கியமாகிறார்களே என்று தருமி ஐயாவுக்கு இருப்பு கொள்ளாமல் மேலும் மேலும் பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். பரிதாபம்தான் பட முடியும்.

நீங்கள் பெண்கள் சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத்தான் காட்ட முடியும். ஏனெனில் அவை எல்லாம் யூதர்களால் பரப்பப்பட்டவை. அறிவிப்பாளர் வரிசையை நீங்கள் பார்த்தாலே அதில் எத்தனை பொய்யர்கள் வருகிறார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். குர்ஆனுக்கு மாற்றமாக வரும் அனைத்து நபிமொழிகளும் இட்டுக்கட்டப் பட்டவையே! ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே இவற்றை எல்லாம் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒதுக்கி விட்டோம். அதை தேடிப்பிடிக்கு பதிவிடுவதால் எந்த பலனும் விளையப் போவதில்லை தருமி. சாரி..... வேறு ஏதாவது முயற்சி பண்ணவும்.

ரொம்பவும் போரடித்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நித்தியானந்தா குரூப்புகள் ஆடும் ஆட்டத்தை சன் டிவியில் பார்த்து மகிழவும். :-)

3:51 --- உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் ழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உம் மீது எத்தகைய தவறுமில்லை.

இது தருமி பதிவில் குர்ஆனில் உள்ளதாக பொய்யுரைத்து எழுதியது.

குர்ஆனின் உண்மையான வசனம்:

3:51- 'அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்.'

குர்ஆன் இவ்வளவு அழகாக கூறியிருக்க பொய்களை பரப்புவது வாத்தியாருக்கு அழகாகுமா!

மேலும் இந்த பதிவில் தருமி ஐயா கேட்ட கேள்விகளுக்கு அனைத்திற்கும் பழைய பதிவுகளிலேயே பதில்கள் கொடுத்தாகி விட்டதால் சார்வாகனின் புதுக் கேள்விக்கு வருவோம்.

//இன்னும் நிறைய இருக்கிறது.இந்த தற்காலிகத் திருமனம் பற்றி மட்டும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
நன்றி//

முத்ஆ என்ற தற்காலிக திருமணம் குர்ஆன் சொன்ன சட்டம் கிடையாது. முகமது நபி கொண்டு வந்த சட்டமும் கிடையாது. குர்ஆன் இறங்குவதற்கு முன்பே இத்தகைய சட்டம் அமுலில் அரபுலகம் முழுக்க இருந்தது. நாடோடிகளாக கூட்டமாக செல்லும் அரபிகள் சில இடங்களில் கூடாரம் அடித்து தங்கும் போது சில நாட்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வார்கள். அதே போல் போருக்காக செல்லும் பலரும் ஆறு மாதம் வரை கூட வீட்டிற்கு திரும்ப மாட்டார்கள். இத்தகைய சூழலில்தான் தற்காலிக திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுவையும் இஸ்லாம் உடனே தடை செய்யவில்லை. படிப்படியாகத்தான் தடை செய்தது. அது போல் இஸ்லாமிய அரசு ஸ்திரத் தன்மையை அடைந்தவுடன் கைபர் போரில் முகமது நபி தற்காலிகத் திருமணத்துக்கு தடை விதிக்கிறார்.

புஹாரி- 889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

ஆனால் ஷியாக்களில் ஒரு பிரிவினர் இந்த செயலை இன்றும் செய்து வருகின்றனர். ஷியாக்கள் செய்வதெல்லாம் இஸ்லாமாகாது.

suvanappiriyan said...

24:26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.

60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'
-குர்ஆன் 4:32

பெண்ணிலிருந்தே மனித உற்பத்தி!
உதாரணமாக மனித உற்பத்தியையே எடுத்துக் கொள்வோம். ஆண் அவனது விந்தை பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்துவ தோடு ஒரு சில நிமிடங்களில் அவனது வேலை முடிந்து விடுகிறது. ஆனால் பெண்ணோ அந்தக் கருவை 10 மாதங்கள் பல சிரமங்களுக்கிடையே சுமந்து பின் பெரும் வேதனைக்கிடையே பெற்றெடுக்கிறாள். அதோடு அவளது வேலை முடிந்து விடுவதில்லை. குறைந்தது 2 வருடங்களுக்கு அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்கும் நிலையிலும் அவள் சிரமப்படுகிறாள். அதற்காகப் பல தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆணுக்குப் பெண் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகள், இது என்ன நியாயம்? பெறக்கூடிய குழந்தைகள் அத்தனையையும் பெண்கள் தான் பெற்றுத் தர வேண்டுமா? பிரசவ வேதனையைப் பெண்கள் மட்டுந்தான் அனுபவிக்க வேண்டுமா?ஒரு பிள்ளையைப் பெண் பெற்றெடுத்தால், அடுத்த பிள்ளையை ஆண் பெற்றெடுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பெண் பெற்றெடுத்தால், ஆண்கள் அக்குழந்தையைப் பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று முழக்க மிட வேண்டும். இவ்வாறெல்லாம் அவர்கள் முழக்கமிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது பற்றி வாயே திறக்கமாட்டார்கள். காரணம் இது பற்றிய அவர்களது கையாலாகத்தனம் அவர்கள் அறிந்ததே. இங்கே மட்டும் இறை நியதிக்கு அவர்கள் அறியாமலேயே அடிபணிந்து போவார்கள். ஆம்! இறைவன் ஆணை ஒரு நிலையிலும், பெண்ணை ஒரு நிலையிலும் படைத்தது மட்டுமல்ல, பெண்ணை இயற்கையிலேயே பலவீனமானவளாகவும் படைத்துள்ளான். இந்த நிலையை மாற்றி அமைக்க மனித வர்க்கம் முழுமையாக ஒன்று சேர்ந்து கொண்டு பாடுபட்டாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை.

ஆண் -பெண் கற்பு :
பெண்ணின் பலகீனத்தை இன்னும் விரிவாகவே பார்ப்போம். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு. இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஆக இரு சாராரையும் கற்பைக் காத்துக் கொள்ள கட்டளை இடுகிறது (24:31). ஆனால் இன்று நடை முறையில் கற்பு பற்றி பெண்ணினத்திற்கு மட்டுமே பேசப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகளும் இங்கு வாயடைத்துப் போய் விடுவார்கள். ஒரு ஆண் தன் மனைவி அல்லாத ஆயிரம் பெண்களிடம் போனாலும் அவன் கற்பை இழந்தவனாக மேற்படி அறிவு ஜீவிகளால் கருதப்படாது. ஆனால் ஒரு பெண் தன் கணவனல்லாத ஒரு ஆணிடம் போனாலும் அவள் கற்பிழந்தவளாக கூக்குரலிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள். இதற்குக் காரணம் என்ன? இறைவன் படைத்த இயற்கை நிலைக்கு அவர்கள் அறியாமல் அடிமைப்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பே இது. ஆண் -பெண் கற்பு :
பெண்ணின் பலகீனத்தை இன்னும் விரிவாகவே பார்ப்போம். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு. இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஆக இரு சாராரையும் கற்பைக் காத்துக் கொள்ள கட்டளை இடுகிறது (24:31). ஆனால் இன்று நடை முறையில் கற்பு பற்றி பெண்ணினத்திற்கு மட்டுமே பேசப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகளும் இங்கு வாயடைத்துப் போய் விடுவார்கள். ஒரு ஆண் தன் மனைவி அல்லாத ஆயிரம் பெண்களிடம் போனாலும் அவன் கற்பை இழந்தவனாக மேற்படி அறிவு ஜீவிகளால் கருதப்படாது. ஆனால் ஒரு பெண் தன் கணவனல்லாத ஒரு ஆணிடம் போனாலும் அவள் கற்பிழந்தவளாக கூக்குரலிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள். இதற்குக் காரணம் என்ன? இறைவன் படைத்த இயற்கை நிலைக்கு அவர்கள் அறியாமல் அடிமைப்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பே இது.

தருமி said...

//என்னை யாராவது சுவனதிற்கு அனுப்புங்கள்...ப்ளீஸ்...ப்ளீஸ்... தயவு செய்து அனுப்புங்கள்.//

உங்களைப் போன்ற தீவிரமான, ஆர்வமுள்ள இளைஞர்களை வலை போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்களே! யாராவது வந்து உங்களை விரைவில் ‘கொத்திக் கொண்டு’ போகலாம்!!

wish you a happy suvanam!!!

தருமி said...

//மேலும் இந்த பதிவில் தருமி ஐயா கேட்ட கேள்விகளுக்கு அனைத்திற்கும் பழைய பதிவுகளிலேயே பதில்கள் கொடுத்தாகி விட்டதால் ..//

ஒரே பொய்யைத் திருப்பி திருப்பி சொல்வதால் அது உண்மையாகி விடுமா?

Tamilan said...

//இது தருமி பதிவில் குர்ஆனில் உள்ளதாக பொய்யுரைத்து எழுதியது.

குர்ஆனின் உண்மையான வசனம்:

3:51- 'அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்.'//

சுவனப்ரியன். அது 3:51 அல்ல 33:51

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

Tamilan said...

//ஆண் -பெண் கற்பு ://

24:30 -- http://www.qtafsir.com
(Tell the believing men to lower their gaze, and protect their private parts.) Sometimes protecting the private parts may involve keeping them from committing Zina, as Allah says:

(And those who guard their chastity) ﴿23:5﴾. Sometimes it may involve not looking at certain things, as in the Hadith in Musnad Ahmad and the Sunan:

(Guard your private parts except from your wife and those whom your right hands possess.)

அதாவது அல்லா சொல்வது முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம் பெண்களிடம் போகக்கூடாது. ஆனால் முஸ்லிம்கள் அடிமைப்பெண்களிடம் போகலாம் அது தப்பில்லை.
எனது தளத்தில் குவைத்தி முஸ்லிமாவும் இதையே சொல்கிறார்.

suvanappiriyan said...

இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா

http://onlyoneummah.blogspot.com/2011/07/blog-post_19.html

அடடா...தருமி சார் இத்தனை மெனக்கெட்டு பல பதிவுகள் போட்டும் இஸ்லாம் வளர்ந்த வண்ணமாக அல்லவா இருக்கிறது. உடனே திரு சண்முகத்தை தொடர்பு கொண்டு இஸ்லாத்தில் உள்ள தீமைகளை (சொர்க்கத்து கன்னிகளை) விளக்கி அவரை பழைய மதத்தில் தங்க வைக்க முயற்ச்சிக்கவும்! :-( இல்லை என்றால் இன்னும் இரண்டொரு நாளில் அவரது குடும்பமும் இஸ்லாத்தை தழுவிய செய்தி வரும். தருமி சார்.... தாமதம் வேண்டாம்.

வால்பையன் said...

சுவனப்பிரியனுக்கு ஏன் சுவனத்தின் மேல் இவ்வளவு பிரியம் என்று இப்பொழுது தானே தெரிகிறது.

நீங்கள் குறிப்பிட்டவற்றில் ஒன்றீரண்டு வசனத்தை மட்டும் எடுத்து மறுப்பு சொல்லிவிட்டு ஓடிவிடலாம் என நினைக்கிறாரே!, உண்மையில் அவருக்கு மனசாட்சி என்பதே கிடையாதா!?

இப்படி கெட்டியாக பிடித்து தொங்கும் இஸ்லாம் என்னும் கயிறு அவரை சுவனத்திற்கு தூக்கி செல்லும் என கண்மூடிதனமாக நம்பும் பொழுது உண்மையில் பாவமாக இருக்கிறது!

இறந்தபின் உமக்கு ஒன்றுமே தெரியாது அய்யா, உண்மையில் சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது என அவருக்கு எப்படி புரியவைப்பது!

அதுசரி, சிந்திக்கும் தெரிந்த மனிதன் புரிந்து கொள்வான், சொன்னதே திரும்ப சொல்லும் டேப்ரிக்கார்டர் எப்படி புரிந்து கொள்ளும்.

ஆனாலும் உங்களது பணி எங்களுக்கு மேலும் பல விசயங்களை கற்று தருகிறது, சுவனபிரியன் போல் மதவெறிபிடிக்காத எத்தனையோ நண்பர்கள் மனிதம் பேசி வருகிறார்கள், நம்பிக்கை அளிக்கிறது!

சிந்திக்க உண்மைகள். said...

பெண்ணடிமையா? பெண்ணுரிமையா ?


சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?


>> 1. இந்தியாவில் வளர்வது பெண் அடிமைத்தனத்தனமா? பெண் உரிமையா? இந்தியாவில் 2009ல் நடந்த பெண் (வன்)கொடுமைகள்.

>> 2 .
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


>> 3. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் .

>> 4. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?

>> 5. “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லை யென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும். --குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.

>> 6. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.

>> 7. . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்


>> 8. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

>> 9. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..


.

suvanappiriyan said...

வால்பையன்!
//நீங்கள் குறிப்பிட்டவற்றில் ஒன்றீரண்டு வசனத்தை மட்டும் எடுத்து மறுப்பு சொல்லிவிட்டு ஓடிவிடலாம் என நினைக்கிறாரே!, உண்மையில் அவருக்கு மனசாட்சி என்பதே கிடையாதா!?//

தருமி கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கும் பல பதிவர்களும் நானும் கொடுத்திருக்கிருக்கும் பல பதிவுகளே சாட்சி. என் மனசாட்சி இருக்கட்டும். ஊர் முழுக்க நாத்திக பிரசாரம் செய்து விட்டு ராஜனின் கல்யாணத்தை வைதீக முறைப்படி குமபலாக நடத்தும்போது உங்கள் மனசாட்சி எங்கு போனது? டோண்டு ராகவன் கேட்கும் பல கேள்விகளுக்கும் இது வரை பதில் இல்லையே! அப்பொழுது உங்கள் மனசாட்சியை எங்கு அடகு வைத்தீர்கள்? டாஸ்மார்க் கடையிலா!

//இப்படி கெட்டியாக பிடித்து தொங்கும் இஸ்லாம் என்னும் கயிறு அவரை சுவனத்திற்கு தூக்கி செல்லும் என கண்மூடிதனமாக நம்பும் பொழுது உண்மையில் பாவமாக இருக்கிறது!//

எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும் உங்களைப் பார்த்தல்லவா நான் பரிதாபப்பட வேண்டும்?
//இறந்தபின் உமக்கு ஒன்றுமே தெரியாது அய்யா, உண்மையில் சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது என அவருக்கு எப்படி புரியவைப்பது!//

அடடே...இறந்த பிறகு மனிதனின் நிலை என்னவாகும் என்பதுவரை தெரிந்திருக்கிறதே! அப்படீன்னா நம் உடலில் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது. இறந்த பிறகு அது எங்கு செல்கிறது என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

//அதுசரி, சிந்திக்கும் தெரிந்த மனிதன் புரிந்து கொள்வான், சொன்னதே திரும்ப சொல்லும் டேப்ரிக்கார்டர் எப்படி புரிந்து கொள்ளும்.//

அதானே...ராமசாமி நாயக்க ரும் டார்வினும் சொன்னதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்டு அதற்கு மேல் சிந்திக்க தெரியாமல் சொன்னதையே திருப்பி சொல்லும் நாத்திகர்களுக்கு விளங்காதுதான்.

//சுவனபிரியன் போல் மதவெறிபிடிக்காத எத்தனையோ நண்பர்கள் மனிதம் பேசி வருகிறார்கள், நம்பிக்கை அளிக்கிறது!//

முடிவில் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி! :-)

தருமி said...

//இது தருமி பதிவில் குர்ஆனில் உள்ளதாக பொய்யுரைத்து எழுதியது.! //


சுவனப்பிரியன்,
உங்கள் மனசாட்சிக்கு ஒரு சின்ன கேள்வி:
33:49-51 என்பதற்குப் பதிலாக 3:49-51 என்று தப்பாக தட்டச்சி எழுதியுள்ளேன். தவறுக்கு மன்னிக்க.

ஆனால் குரானைத் தலைகீழாக படித்திருக்கும் நீங்கள் இந்த தவறைச் சுட்டிக் காட்டியிருந்தால் அது உங்களது நல்ல மனதைக் காட்டியிருக்கும்.

ஆனால் நீங்கள் நான் தவறாக எண்ணிட்ட வசனத்தை இங்கே மேற்கோளிட்டு நான் //பொய்யுரைத்து எழுதியது // என்று சொல்லிவிட்டுப் போய் விட்டீர்கள்.

இப்படித்தான் மனசாட்சி இன்றி, பொய் சொல்லி (உண்மையைச் சொல்லாவிட்டால் அது பொய்தானே?!) உங்கள் மதத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமா? உங்கள் மேல் இருந்த மரியாதையை மிகவும் தாழ்த்திக் கொண்டீர்கள்.

என்னைப் பொய்யன் என்று கூறி நீங்கள் யாரென அறிவித்துக் கொண்டு விட்டீர்கள். நன்றி.

a very low trick!

தருமி said...

//சுவனப்ரியன். அது 3:51 அல்ல 33:51
//

நன்றி, தமிழன்

saarvaakan said...

முட்டா என்பது என்ன என்பத் பற்றிய சிறு விளக்கம்.முட்டாவும் சாதாரன திருமன்ம் போன்றதுதான் என்ன வித்தியாசம் எனில் திருமண‌த்தின் போதே திருமணத்தின் கால அளவு குறிப்பிடப் படுகின்றது.ஆகவே அக்காலம் முடிந்ததும் விவாக இரத்து தேவையில்லை,சும்மா பிரிந்து சென்று விடலாம்.அவர்களுக்கிடையே எந்த உறவும் கிடையாது.அந்த உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட ரீதியான் எல்லா உரிமைகளும் உண்டு.
___________
இதன் மாறுபட்ட வடிவமாக் மிஸ்யார் என்னும் திருமண‌த்தை சவுதி சுன்னி இஸ்லாமியர்கள் செய்கின்றனர்.இது பற்றி நண்பர் சுவனப் பிரியனே விளக்குமாறு வேண்டுகிறேன்.அவர் கூறவில்லையென்றால் நான் விளக்குகிறேன்.
********************
இப்போது நாம் இந்த முட்ட என்ற திருமணம் இன்னும் ஷியக்களால் சவுதி,இரான் உட்பட பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.அவர்கள் இது குரான்,சுன்னா அனுமதி அளிப்பதாக்வே கூறுகின்றனர்.அதனி மட்டும் சரி பார்க்கிறேன்.

****************************
இத்னை கொஞ்சம் பார்ப்போம்?
ஷியாக்கள் குரான் 4.24 முட்டா என்ற தற்காலிகத் திருமனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக்வே கூறுகின்றன்ர்.முட்டாவின் மூல வார்த்தை istimta'tum,குரான் 4.24ல் குறிப்பிடப் பட்டதை கூறுகின்றன்ர்.குரானில் தற்காலிக திருமந்த்தை தடை செய்யும் வசனம் இல்லை.

quran 4.24:[Forbidden to you] are married woman, except what your right hand possesses. This Allah has written for you, and all other women besides these are permitted to you, so that you may seek them out with your wealth, seeking chastity and not fornication. So when you have contracted temporary marriage [istimt'atum] with them, then give them their words. There is no sin on you for whatever you agree to after this. Indeed, Allah is Knowing, Wise.
Al-Qur'an, Surah An-Nisa, Ayah 24

Allah (swt) has used the word istimta'tum, which is the verbal form of the word Mut'ah. While the word has many other numerous meanings (as will be discussed below), we see that in the same way that the terms Zakat, Saum, and hajj carry a specific Islamic definition, so does the word istimta'. The specific, Islamic meaning which the word refers to is the performance of a temporary marriage, and nobody has denied this.

http://www.mutah.com/
*****************
(contd)

saarvaakan said...

(contd)
*****************
புஹாரியில் மட்டும் இது குறித்து கண்டது..இது அனைத்துமே வலிமையான் ,உண்மையான் ஹதித்கள் ஆகும்.சந்தேகமில்லை.
அனுமதி உண்டு'

5116. அபூ ஜம்ரா நஸ்ர் இப்னு இம்ரான்(ரஹ்) அறிவித்தார்
'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், 'அதற்கு அனுமதி உண்டு' என்றார்கள். அப்போது அவர்களின் முன்னாள் அடிமை ஒருவர் '(பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில் தான் இத்திருமணத்திற்க அனுமதியுண்டாமே!'' என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'ஆம்!'' என்று பதிலளித்தார்கள்.
Volume :5 Book :67

5117. & 5118. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களும் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்
நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம். 59 அப்போது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தூதர் ஒருவர் வந்து, 'அல்முத்ஆ' (தவணைமுறை)த் திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 'அல்முத்ஆ' திருமணம் செய்துகொள்ளலாம்' என்று அறிவித்தார்.
Volume :5 Book :67

___________
அனுமதி இல்லை

5115. முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு அலீ(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்
(எம் தந்தை) அலீ(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள். 58
Volume :5 Book :67

5523. அலீ(ரலி) கூறினார்
கைபர் போர் நடந்த ஆண்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனி(த் தவணை முறைத் திருமணமான) 'முத்ஆ' செய்யக்கூடாது என்றும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.
Volume :6 Book :72
______________
ஆமாம் ஆனால் இல்லை

6960. உபைதுல்லாஹ் அல்உமரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாஃபிஉ(ரஹ்) அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என்று என்னிடம் தெரிவித்தார்கள். உடனே நான் நாஃபிஉ அவர்களிடம், 'ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?' என்று கேட்டேன். அவர்கள், 'ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும்' என்று பதிலளித்தார்கள்.13
சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் தந்திரம் செய்து 'ஷிஃகார்' முறைப்படித் திருமணம் செய்துகொண்டால் அத்திருமணம் செல்லும்; ஆனால், (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது. அதே நேரத்தில், தவணை முறைத் திருமணம் (அல்முத்ஆ) செல்லாது; (அதில் விதிக்கப்படும்) முன் நிபந்தனையும் செல்லாது.
வேறு சிலரோ, 'தவணை முறைத் திருமணமும் 'ஷிஃகார்' முறைத் திருமணமும் செல்லும்; ஆனால், (அவற்றில் விதிக்கப்படும்) முன்நிபந்தனை செல்லாது' என்று கூறுகின்றனர்.
Volume :7 Book :90
6961. முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
தவணை முறைத் திருமணம் (நிகாஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணை முறைத் திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடைவிதித்தார்கள்' என்று கூறினார்கள்.14
'ஒருவர் தந்திரமாகத் தவணை முறைத்திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லாது' என்று சிலர் கூறினர்.
வேறு சிலரோ, 'அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது' என்று கூறினர்.
Volume :7 Book :90

naren said...

//நீங்கள் பெண்கள் சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத்தான் காட்ட முடியும். ஏனெனில் அவை எல்லாம் யூதர்களால் பரப்பப்பட்டவை. அறிவிப்பாளர் வரிசையை நீங்கள் பார்த்தாலே அதில் எத்தனை பொய்யர்கள் வருகிறார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்//

//நித்தியானந்தா குரூப்புகள் ஆடும் ஆட்டத்தை சன் டிவியில் பார்த்து மகிழவும். :-)//

//இது தருமி பதிவில் குர்ஆனில் உள்ளதாக பொய்யுரைத்து எழுதியது//

//முத்ஆ என்ற தற்காலிக திருமணம் குர்ஆன் சொன்ன சட்டம் கிடையாது. முகமது நபி கொண்டு வந்த சட்டமும் கிடையாது.//

//ஷியாக்கள் செய்வதெல்லாம் இஸ்லாமாகாது.//

//ஒரு இஸ்லாமியரும் நாத்திகத்தின் பக்கம் வரவில்லையே!//

// கூக்குரலிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள். இதற்குக் காரணம் என்ன? இறைவன் படைத்த இயற்கை நிலைக்கு அவர்கள் அறியாமல் அடிமைப்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பே இது.//

thathachariyar.blogspot.com = faithfreedom.org
சரியான equation.

saarvaakan said...

6961. முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
தவணை முறைத் திருமணம் (நிகாஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணை முறைத் திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடைவிதித்தார்கள்' என்று கூறினார்கள்.14
'ஒருவர் தந்திரமாகத் தவணை முறைத்திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லாது' என்று சிலர் கூறினர்.
வேறு சிலரோ, 'அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது' என்று கூறினர்.
Volume :7 Book :90

_______
"ஆனால் (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது' "
________
இதுதான் மிஸ்யார் என்ற சுன்னி முஸ்லிம்களின் திருமணம் என்பது என் கருத்து.நண்பர் சுவனப் பிரியன் இத்னை மறுக்கலாம்.
http://i-cias.com/e.o/muta.htm

http://en.wikipedia.org/wiki/Nikah_Misyar
Nikah Misyar (Arabic: المسيار) is a Muslim Nikah (marriage) carried out via the normal contractual procedure, with the specificity that the husband and wife give up several rights by their own free will, such as living together, equal division of nights between wives in cases of polygamy, the wife's rights to housing, and maintenance money ("nafaqa"), and the husband's right of homekeeping, and access etc.[1]
Essentially the couple continue to live separately from each other, as before their contract, and see each other to fulfil their needs in a permissible (halaal) manner when they please.
Many traditional Muslims, too, reject 'misyar' marriage. Sheikh Ahmed al-Kubaissi from the United Arab Emirates thinks there is no formal problem with 'misyar' marriage. It fulfils all the demands of Islamic law. Nevertheless, he describes it as contrary to the norms of decent Islamic life. A respectable woman, in his view, will never enter into such a contract.
________
நான் சொல்ல வருவது என்ன வென்றால் நமது தமிழ் இஸ்லாமிய ச‌கோதரர்களிடம் இந்த வழக்கங்கள் கிடையாது என்றாலும் முட்டா (அரபு,பெரிஷிய)ஷியா பிரிவினரிடம் மிஸ்யார் சுன்னி பிரிவு அரபுகளிடம் நடைமுறையில் உள்ளது. இத்னை பற்றிய ஒரு தெளிவான புரிதல் வர வேண்டும்.நாளை ஒரு 'அஆஇஈ' பிரச்சார பீரங்கி தலைவர் இதை(முட்டா அல்லது மிஸ்யார்) நியாயப் படுத்தி பிரச்சாரம் செய்யலாம்.ஆக்வே மிஸ்யார் பற்றியும்,முட்டாவிற்கும் அதன் வித்தியாசம் பற்றியும் நண்பர் சுவனப் பிரியன் விளக்கமளிக்க் வேண்டுகிறேன்.
http://www.facebook.com/topic.php?uid=298296545155&topic=17302

Unknown said...

”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்டபோது, ‘நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830


நண்பர் தருமி கூறுவது போல இவ்வளவு கதையெல்லாம் வேண்டாம், மேற்கூறப்பட்ட சில வரிகள் போதும், பெண்களை இஸ்லாம் எந்த அளவிற்கு நடத்துகிறது என்று.

மிகவும் சிரமம் எடுத்து கதை எழுதி உள்ளார், ஆனாலும் அதனால் பயனில்லை. இவர்களின் நோக்கம் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, எப்படி இஸ்லாத்தை தரம் தாழ்த்த வேண்டும் என்ற எண்ணமே.

நூறு கேள்விகள் கேட்பார்கள், அனைத்திற்கும் பதிலளித்த பிறகு மீண்டும் முதல் கேள்வியிலிருந்து துவங்குவார்கள், எதற்குமே பதிலளிக்க வில்லை என்பதுபோல் காண்பிப்பார்கள், தான் கூறுவது தவறு என்று தெரிந்தும் அதை ஒப்புகொள்ளாமல் திசை திருப்பி விடுவார்கள். எந்த உபயோகம் இல்லை, இவர்களை போன்றவர்களுக்கு பலர் பதிலளித்து ஓய்ந்து சென்று விட்டார்கள், பதிலளிக்க முடியாமல் இல்லை, பதில் கூறி ஏறாது என்பதற்காக, எல்லாம் ஒரு சித்து விளையாட்டு.

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு நாம் கொடுத்த சில பத்திகள் போதும். உங்கள் பதிவில் கொடுத்த அனைத்து பொய் புரைட்டையும் தூக்கி சாப்பிட்டுவிடும்.

வாழ்த்துக்கள்.

தருமி said...

கார்பன் கூட்டாளி உங்களுக்குப் பதில் பின்னூட்டமிடாமல் இருப்பது எனக்கு மரியாதை.

தருமி said...

//ஏனெனில் அவை எல்லாம் யூதர்களால் பரப்பப்பட்டவை.’

இதைத்தான் நரேன் ஏற்கெனவே சொல்லிட்டாரே, சரியாக!!

//நீங்கள் பெண்கள் சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத்தான் காட்ட முடியும்.//

அப்டியா?
பெண்மையை, பெண்களைக் குறை சொல்லும் சில குரான் வசனங்கள் இவை:
பெண்களை வெறுக்கும் இன்னும் சில குரான் வசனங்கள்:
-- இப்படி இரு வகையாகக் கொடுத்திருப்பதைக் கண் கொண்டு பாருங்களேன்.

தருமி said...

Saarvaahan,

Hats off to you!
எப்டிங்க இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க? நானெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ..... நீங்க எங்கேயோ...!

தருமி said...

//குரானின் சுவனம் பாலின்பம் மிக்கது. அதுவும் ஆண்களின் பாலினச் சுகம் மட்டுமே. இதனைக் குறிக்கும் சில அல்லாவின் வசனங்கள்://

இதைப் பற்றிய “விளக்கங்கள்” எதையும் காணோமே ... நரேன், நானும் இதை அதிகமாகவே எதிர்பார்த்திருக்கிறேன். நீங்களும்தானே??

Gujaal said...

//சாரி..... வேறு ஏதாவது முயற்சி பண்ணவும்.//

எது? நீங்க
இந்த இடுகையில் செஞ்சதையா?

Gujaal said...

//தருமி கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கும் பல பதிவர்களும் நானும் கொடுத்திருக்கிருக்கும் பல பதிவுகளே சாட்சி. //

எங்க, எப்ப தல?

Gujaal said...

//இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
//

அவரு இந்த இடுகைய படிச்சு மனசு மாறியிருப்பாரோ?

saarvaakan said...

/எப்டிங்க இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க? நானெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ..... நீங்க எங்கேயோ...!/
*************
நன்றி அய்யா!!!!!!!!.என் பதிவில் நானும் நண்பர் நரேனும் விவாதித்த சில பின்னூட்டங்கள்.
naren said...
ந்ண்பரே, எப்படியும் என்னை படைபுக் கொள்கையில் expert ஆக தேர்ச்சி பெற வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது. பார்த்தும், படித்தும் கொண்டிருக்கிறேன். நன்றி.
July 19, 2011 7:44 AM
***********
சார்வாகன் said...
நண்பர் நரேன்,
இந்த விஷயத்தில் பல அறிதல்,புரிதல் ஏற்படுகிறது நரேன்.பிடித்திருக்கிறது.கல்வியை ஒரு தேடலற்று பணம் மட்டும் சம்பாதிக்கும் ஒரு வழியாக் மாற்றிய அரசியலமைப்பு மீது கோபம் வருகிறது.
பரிணாமம் & படைப்புக் கொள்கையில் ஒரு பட்டம் அளிக்கும் பல்கலைகழகம் பலரும் இணைந்து ஆரம்பிப்போம்.தருமி அய்யாதான் முதல்வர்.நம்ம எல்லாரும்(நம் அன்பு சகோதரர்கள் உட்பட) அங்கு பணியாற்றலாம்.எப்படி இருக்கும்?!!!!!!!!.ஹா ஹா ஹா!!!!!!!
July 19, 2011 8:01 AM
************
நாம் அனைவரும் இதை செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள்.ஏதோ தேடல்,கேள்விகள் அவ்வளவுதான்.நன்றி.

saarvaakan said...

இந்த யூதர்கள் மகா கெட்டிக் காரர்கள் எப்படிஎனில் சவுதி அரச குடும்பமே யூதர்கள் என்று ஒரு பரப்புரை இணைய தளத்தில் உண்டு.சவுதியில் இருந்து வஹாபி பிரச்சாரம் நடைபெறுவதால் இதுவும் யூதர்களின் சதியே!!!!!!
***********
The Arab Conspiracy Theorists: The Saudi Royal Family Is Jewish And Al Qaeda Is A Jewish Organization
http://sigmundcarlandalfred.wordpress.com/2008/07/24/the-arab-conspiracy-theorists-the-saudi-royal-family-are-really-jews-and-al-qaeda-is-a-jewish-organization/
*****************
Are The Saudi “Royal Family Jewish?
http://www.daily.pk/are-the-saudi-royal-family-jewish-11725/
************
Is the Saudi Royal Family Jewish?
http://www.davidicke.com/articles/history-rewritten-mainmenu-59/27106-is-the-saudi-royal-family-jewish
************
Israel & Saudi Arabia are Sisters!
http://www.youtube.com/watch?v=xo0NapCJdRU
*****************
Saudi Arabia Approves Israeli Jets To Use Saudi Airspace To Bomb Iran!
http://www.youtube.com/watch?v=Uw9nFSd2u8M&feature=related
*************

suvanappiriyan said...

//ஆனால் குரானைத் தலைகீழாக படித்திருக்கும் நீங்கள் இந்த தவறைச் சுட்டிக் காட்டியிருந்தால் அது உங்களது நல்ல மனதைக் காட்டியிருக்கும்.//

அது யாருக்கு? உண்மையிலேயே ஒரு மதத்தை ஆராய்ந்து அதில் நல்லவைகளையும் எடுத்தெழுதி தீயவைகளையும் ஏன் இப்படி? என்று கேள்வி கேட்பவர்களிடம் நானும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியும். ஆனால் நீங்களோ யாரெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக இணையத்தில் எழுதுகிறார்களோ அவை எல்லாம் எடுத்துப் போட்டு அது சரியா தவறா என்று கூட ஆராயாமல் சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கின்றீர்கள்.

கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றே! எனவே அதன் மீது எப்படியாவது களங்கத்தை உண்டு பண்ணி ஒரு வழி பண்ணி விடுவது என்று முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து கொள்வது?

//(உண்மையைச் சொல்லாவிட்டால் அது பொய்தானே?!)//

அது எப்படி பொய்யாகும். உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய குர்ஆனை திட்டம் போட்டு குறை சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எழுதுபவருக்கு அல்லவா இந்த அக்கறை இருக்க வேண்டும்? குறை சொல்லி அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நான் எப்படி உதவ முடியும்?

//என்னைப் பொய்யன் என்று கூறி நீங்கள் யாரென அறிவித்துக் கொண்டு விட்டீர்கள். நன்றி.//

யார் பொய்யன் என்பதை இறைவன் அறிவான். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகாவது பெரியார் தாசனைப்போல் நாத்திகத்திலிருந்து விலகி ஆன்மீகப் பணி செய்ய வருவீர்கள் என்ற நம்பிக்கையில் ......
-சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//ஆக்வே மிஸ்யார் பற்றியும்,முட்டாவிற்கும் அதன் வித்தியாசம் பற்றியும் நண்பர் சுவனப் பிரியன் விளக்கமளிக்க் வேண்டுகிறேன்.//

முத்ஆ மற்றும் மிஸ்யார் போன்ற தற்காலிக திருமண முறைகள் இஸ்லாத்திற்கு முன்பு அரபுகளிடத்தில் பழக்கத்தில் இருந்தது. நம் ஊர்களில் சில மிராசுகள் ஒரு மனைவிக்கு சட்டபூர்வ அந்தஸ்து கொடுத்து மற்ற பெண்களை வைப்பாட்டியாக வைத்திருப்பார்கள். இந்த வழக்கம் அன்றைய அரபுகளிடத்திலும் இருந்தது. சட்டபூர்வ மனைவி இறந்தவுடன் முதல் வைப்பாட்டி இறந்த மனைவியின் இடத்துக்கு வருவார். இதைத்தான் மிஸ்யார் என்று அரபுகள் சொல்கின்றனர். இவை எல்லாம் அரபுகள் மத்தியிலும் வழக்கொழிந்து வெகு நாட்களாகிறது. எங்காவது குக்கிராமங்களில் ஒரு சில இடங்களில் இந்தப் பழக்கம் இன்றும் இருக்கலாம். ஆனால் அது இஸ்லாமிய நடைமுறைக்கு விரோதமானது. ஏனெனில் கைபர் போரில் இது போன்ற திருமணங்களை செய்ய வேண்டாம் என்று முகமது நபி தடுத்ததையும் முன்பு நாம் பார்த்தோம்.

இஸ்லாத்துக்கு முந்திய இது போன்ற சட்டங்களை ஷியாக்கள்தான் அதிகம் கடைபிடிக்கிறார்கள். அவர்களிலும் தற்போது பல சீர்திருத்தவாதிகள் தோன்றி தவறுகளை களைந்து வருகின்றனர்.

எந்த அறிஞர் புதிதாக விளக்கமளித்தாலும் முகமது நபி தடுத்த ஒரு காரியத்தை செயல்படுத்த மார்க்கத்தில் எவருக்கும் அனுமதி இல்லை.

தருமி said...

//நான் எப்படி உதவ முடியும்?//

எனக்கு உதவச் சொல்லவில்லை; உண்மையை சொல்லச் சொன்னேன்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//யார் பொய்யன் என்பதை இறைவன் அறிவான். //

நம்மிருவரில் யார் பொய்யன் என்பதை இப்போது பதிவர்கள் அறிவார்கள்; எனக்கு அது போதுமய்யா!

தருமி said...

//சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கின்றீர்கள்.//

குரானிலிருந்து மேற்கோள்கள் கொடுத்துக் கேள்விகள் கேட்கின்றேன். அதற்கு ஏனிப்படி உங்களுக்குக் கோபம்?
நான் இறைத்தது சேறு அல்ல; உங்கள் குரானின் வாசகங்கள். சுவனத்தில் என்ன கிடைக்கும் என்று ‘கடவுள்’ சொன்ன வசனங்களும், அதன் அருமையான பொருளும் தான். வழக்கமாக இது போன்ற கேள்விகளுக்கு மெளனம் சாதித்து விடுவீர்களே அதே போல் இப்போதும் இருக்க முடியவில்லை ... இல்லையா?

நல்லது.

தருமி said...

//முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து கொள்வது? //

அழகான மனவியல்! அதற்காக இப்படி பொய் சொல்லி விடுவீர்கள். நல்ல தந்திரம்! எப்படியும் உங்கள் ‘குணம்’ வெளிவந்து விடுமே; வந்து விட்டது.

தருமி said...

//முகமது நபி தடுத்த ஒரு காரியத்தை செயல்படுத்த மார்க்கத்தில் எவருக்கும் அனுமதி இல்லை.//

நல்லது.
ஆனால் அரேபிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்து ஹைதராபாத்தில் இளம் பெண்களை இத்தகையத் திருமணம் செய்து, பின் ‘அத்து விட்டுட்டு போகும்’ இஸ்லாமியரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சில இஸ்லாமியர் செய்வதால் அது இஸ்லாத்தின் தவறு என்று சொல்ல முடியாது என்று வெந்து போன பதில் வேண்டாம். ஒரு ‘இயக்கத்தில்’ - அது அரசியல், சமூக, சமய இயக்கமாக இருக்கலாம் - இருப்பவர்கள் ஒரு தவறைத் தொடர்ந்து செய்தால் அதற்கு அந்த இயக்கமே ஒரு காரணம். தவறு செய்தவர்களைத் திருத்தணும்; அதோடு இயக்கத்தையும் தான்! கொள்கை வேறு என்று சொல்லலாம். ஆனால் இயக்கத்தின் கொள்கைகள் இயக்கத்தினரை என்ன செய்ய வைக்கிறது என்பது மிக முக்கியம்.

naren said...

பதிவை படித்தால் highly judgmental, opinionated ஆக ஒன்றுமே இல்லை. எல்லாமே வசனமும் அதீசும் தான். அதனால் கடைசி ஆயுதமான சேற்றை அடிக்கிறார்கள் என்ற கூற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.

//கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றே//

அதனால் Mr.perfect ஆன இஸ்லாம் perfectஆ இல்லையா என்று பார்க்கவேண்டாமா. perfect என்றால் ஜோதியில் ஐக்கியமாகி விடுவோம் அல்லவா.

உலகத்தில் முழுமையானதும், பூர்த்தியானதுமான (perfection) எதிலும் இல்லை. அவ்வாறு இருக்கும் என்ற utopian dream க்கு கடவுளும் கடவுளால் அவ்வாறு படைக்க பட்டாதாக இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.

அதனால் அல்லாவால் அருளப்பட்ட குரான் perfect ஆக இருக்கவேண்டும். எவ்விதமான முறையிலும், எவ்விதத்திலும் குறை கண்டுப்பிடிக்க முடியாமலும் குறை கூற முடியாமலும் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை, ஒரு வசனம் தப்பான அர்த்தம் வர கூடாது. விளக்கங்களே இருக்கக் கூடாது. தானாக புரிய வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றவுடன் கோபங்கள் கொப்பளிக்கின்றன்..தாழ்வுமனப்பான்மையாலோ.....கடவுளின் வார்த்தைக்கு தீயவனின்?????? கேள்விக்கு ஒரு லட்சம் தடவை பதில் சொன்னால் தான் என்ன அல்லது லிங்க் ஆவது தரலாம். அதனால் மூமினிக்கு நன்மைகள் பெருகும், கியாமத் நாளில் சுவனதிற்கு செல்ல அதிக weightage கிடைக்கும்.

கோவம் வேண்டாம், அது போர்க்காலத்தில் தான் காஃபீர்களிடம் காட்ட வேண்டும் என்று குரான் சொல்கிறது. இது அமைதி காலம். சாந்தி உண்டாகட்டும்.

வால்பையன் said...

//என் மனசாட்சி இருக்கட்டும். ஊர் முழுக்க நாத்திக பிரசாரம் செய்து விட்டு ராஜனின் கல்யாணத்தை வைதீக முறைப்படி குமபலாக நடத்தும்போது உங்கள் மனசாட்சி எங்கு போனது? டோண்டு ராகவன் கேட்கும் பல கேள்விகளுக்கும் இது வரை பதில் இல்லையே! அப்பொழுது உங்கள் மனசாட்சியை எங்கு அடகு வைத்தீர்கள்? டாஸ்மார்க் கடையிலா!//

பதில் பலமுறை சொல்லியாச்சு, ரெண்டாவது அது என் கல்யாணம் அல்ல, இங்கே என்னை பற்றி மட்டுமே பேச உங்களுக்கு உரிமை இருக்கிறது!

//எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும் உங்களைப் பார்த்தல்லவா நான் பரிதாபப்பட வேண்டும்? //

சுவனத்தில் கொடுக்கும் கோப்பையில் அல்லா மூத்திரமா இருக்கும், நான் டாஸ்மாக் போனா உங்கள் சோத்தில் மண்ணு விழுந்ததா?, இல்ல யாராவது வந்து அதுனால நான் நாசமா போயிட்டேன்னு சொன்னாங்களா, ஏன்யா பெண்களை அடிமையா பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களது பதில் இதுதானா!?

வால்பையன் said...

//நம் உடலில் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது. இறந்த பிறகு அது எங்கு செல்கிறது என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.//

உயிர் என்று தனியாக ஒன்று உள்ளது என நம்பும் நீங்கள் உயிர் எங்கே உள்ளது என சொன்னால் நான் நிரூபிக்கிறேன் அதிபுத்திசாலி அவர்களே!

வால்பையன் said...

//.ராமசாமி நாயக்க ரும் டார்வினும் சொன்னதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்டு அதற்கு மேல் சிந்திக்க தெரியாமல் சொன்னதையே திருப்பி சொல்லும் நாத்திகர்களுக்கு விளங்காதுதான்.//

நான் எங்கேயாவது பெரியாருக்கோ, டார்வீனுக்கோ சொம்பு தூக்கி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நான் பெரியாரை மடையன் என்கிறேன், உங்களால் அல்லாவை மடையன் என்று சொல்ல முடியுமா?

தருமி said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//சுவனபிரியன் போல் மதவெறிபிடிக்காத எத்தனையோ நண்பர்கள் மனிதம் பேசி வருகிறார்கள், நம்பிக்கை அளிக்கிறது!//

முடிவில் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி! :-) //

உங்களை மதவெறி பிடித்தவர் என்றும், மதவெறி பிடிக்காத நண்பர்கள் மனிதம் பேசுகிறார்கள் என்றும் சொல்லியிருந்தேன், அந்த உண்மையை சொன்னதற்கு நன்றி வேற சொல்றிங்க!

வால்பையன் said...

நான் டாஸ்மாக் கடையே கதி என்று கிடப்பதை இவர் எங்கிருந்து பார்த்தாராம்?

தருமி said...

//எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும்..//

இரண்டு கேள்விகள்:
1. விவாதங்களில் இதுபோன்ற தனிமனிதத் தாக்குதல்கள் தேவையா?

2. டாஸ்மாக் கடையில் இருப்பது என்பது தனி மனித கட்டுப்பாடு இல்லாமல், ஒரு கோட்பாடும் இல்லாமல் இருப்பது போலுள்ளது என்கிறீர்களே .. அப்படிப்பட்ட மது வகைகளை சுவனத்தில் ஆறாக ஓட விட்டு உங்க அல்லா குடிக்கக் கொடுப்பார் என்பது எப்படி நியாயம்?

37 : 45 - 49 -- ’மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும். ஒளிரக்கூடிய மது - அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்
78 : 31 - 33 -- 32-ல் ‘தோட்டங்களும் திராட்சைகளும் (fermented ...?) 33 சம வயதுடைய கன்னிப் பெண்களும், 34 நிறைந்த கிண்ணமும் (then ... definitely fermented !) உள்ளன.

ஐயா, மேலே கொடுத்திருக்கும் இரு மேற்கோள்களும் ஹதீதுகள் இல்லை; அல்லாவிடமிருந்து ஜிப்ரேலுக்கு வந்து, முகமது மூலமாக நமக்கு வந்த குரானின் வசனங்கள் தான். இதுவும் ஹதீது என்று சொல்லிவிடுவீர்களோ என்றொரு பயம் தான்!

In what way this heavenly Tasmac is better than our tasmac??!!

saarvaakan said...

முட்டா இன்ன்றும் நடைமுரையில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களிடம் இருக்கும் நடைமுறைமுகமதுவின் காலத்தில் நடைமுறையில் இருந்தது..சுன்னி பிரிவு இத்னை இப்போஹ்டு ஏற்றுக் கொல்ளவில்லை.தடை செய்யப் பட்டதாக் இவர்கள் கூறுவதில் இருந்து
முட்டா என்பது ஒரு தவறான செயல்.விபசாரத்தின் மறு வடிவம்.இத்னை கொஞ்ச நாட்களுக்கு அல்லா& முகமது அனுமதித்து இருக்கிறார்கள் என்பது இருவர் மீதும் நல்ல அபிப்ராயம் கொள்ள செய்யாது.
*************************
இந்த சுன்னி பிரிவினரின் மிஸ்யர்ரும் அது போல்தான் .இதன் விளக்கம் பாருங்கள்.
A proposal Saudis can't refuse
It may be the world's most puritanical kingdom but there are still legal ways to have sex on the side
_http://www.guardian.co.uk/commentisfree/belief/2009/aug/16/saudi-arabia-marriage
_______________
Misyar is a form of marriage that allows couples to live separately but come together for sexual relations. For the women who accept it – spinsters, divorcees and widows – it's a something-is-better-than-nothing option, though they waive almost all the rights that a normal Muslim marriage entitles them to. For men it offers an opportunity for a bit of fun on the side, in secret, and at a huge discount.

Reasons for popularity of misyar include the high cost of marriage – the dowry, several dinners, parties, decoration of a flat or a villa and the honeymoon. All this may set back the groom by several hundred thousand riyals. Misyar for cash-strapped men is a boon.
___________

http://islamicterrorism.wordpress.com/2009/09/30/misyar-marriage-legalized-prostitution-in-islam/
இது குறித்த பாகிஸ்தான் தொலைக்காட்சியின் விவாதம்

http://www.youtube.com/watch?v=xAuWjnIaK1o
http://www.youtube.com/watch?v=Az05TBARiP0&feature=related
________________
http://www.answering-islam.org/Index/M/misyar.html
Misyar marriage has been practiced in Saudi Arabia and Egypt for many years. It was legalized in Saudi Arabia by a fatwa issued by Sheikh Abdel Aziz bin Baz and was officially legalized in Egypt by the Egyptian Sunni Imam Sheikh Mohammed Sayyed Tantawi in 1999. The Mufti of Egypt is a staunch defender of Misyar marriage.
மிஸ்யார் குறித்த சவுதி அரசின் நிலைபாடு என்ன?.சட்டப் படி அனுமதி இருக்கிறது என்றே கூறலாம்.இல்லை என்று கூறுவதால் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.
______________
மிஸ்யார் குறித்த சவுதி அரசின் நிலைபாடு என்ன?.சட்டப் படி அனுமதி இருக்கிறது என்றே கூறலாம்.அனுமதி இல்லை என்று கூறுவதால் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.
_______
1. குரானின் 4.24 முட்டாவிற்கு ஆதரவாக கூறப்படுகிறது.தடை செய்யும் வசனம் இல்லை.சிறிது நாட்கள் முட்டா நடை பெற்றது என்று ஒத்துக் கொள்கிறார்கள்.
2.மிஸ்யார் என்பது சவுதியில் பரவலாக நடைமுறையில் உள்ளது.சவுதி சட்டப் படியும் அனுமதுக்கப் பட்டது.இதனை எதிர்த்து வெளியிடப் பட்ட ஃபத்வா ஏதாவது உண்டா?

NO said...

// கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றே! // அப்படின்னு நாங்களே சொல்லிக்குவோம். அதாவது எனக்கு நானே டிகிரி, என்னுக்கு நானே பட்டம்!!!

// ஆராயாமல் சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கின்றீர்கள்.// அதாவது இந்துமதம், கிருத்துவம் பற்றி இவரு எத்த வேணுமுன்னாலும் சொல்லலாம் ஆனால் இவங்க மதத்த பத்தி சொன்னா அது சேற்று வாரி ஏறக்கிறது!!

//அது எப்படி பொய்யாகும். உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய குர்ஆனை திட்டம் போட்டு குறை சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். // கோடான கோடி இந்துக்கள் மதிக்கும் இந்துமதத்தையும் கிருத்துவர்கள் மதிக்கும் கிருத்துவமதத்தையும் திட்டம் போட்டு நீங்களும் உங்கள் கும்பல்களும் செய்வதைப்போல!!!!

// குறை சொல்லி அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருக்கும் ........................// ஐயா சாமி (மன்னிக்கவும் - ஐயா முல்லா, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா????

//முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து கொள்வது? //
நண்பர் திரு சுவனத்தின் ஆசை புரிகிறது! இது மட்டும் எங்க மத நாடாக இருந்திருந்தால் (அதாவது அரேபியா, பாகிஸ்தான் அல்லது இதை போலபகுத்தறிவு மிக்க உள்ள ஏதாவது ஒன்று) தருமி, வால்பையன் போன்றவர்களை ...................................... ஒரு வழி செய்திருப்போம். அதுக்கு உடனே ஒரு பதில் சொல்லுவார் - கைபர் கணவாய் வழியே வந்தவர்கள்தான் வேற்று நாடு மக்கள், நாங்கள் இந்நாட்டு மக்கள் என்று!!! நீங்க அடிக்கிற கூத்துக்கு கைபர் கணவாய் எவ்வளவோ பராவில்லை!!! அவனாவது இந்தயாவில் உள்ள கங்கையைதான் புனிதம் கணிதம் என்கிறான். ஆனால் உங்களைப்போன்றவர்களோ, எங்கேயோ உள்ள பாலைவனத்துல வெயிலும் குளிரும் பாதிக்காமல் இருக்க போடுற டெண்ட்டு கொட்டா உடைய புனிதம்முன்னு தொடங்கி, ஒரு விவஸ்த்தையே இல்லாமல் எத எடுத்தாலும் அரேபியாவில எங்க புனிதரு சொல்லிட்டாரு என்று ஆடுவது இருக்கே, யப்பா தாங்கலடா சாமி!!

அது என்னவோ திரு வால்பையனை திட்டுவதில் உங்களுக்கு நிறைய சுகம்!! அதலால் அவர்சார்பாக நான் கொஞ்சம்!!

// எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும் உங்களைப் பார்த்தல்லவா நான் பரிதாபப்பட வேண்டும்? // எந்த தனிமனிதனையும் நேர்மையாக சிந்திக்கவிடாமல், மாற்று கருத்து சொன்னால் அவனை ஒழித்துவிட்டு, உங்களின் பாலைவன கோட்பாடு மட்டுமே உண்மை மற்ற எந்த கோட்ப்பாடுக்கும் நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று கத்தி எடுத்து இதுவே எங்கள் கதி என்று கிடக்கும் உங்களை பார்த்தல்லவா நாங்கள் பரிதாபப்படவேண்டும்!!!

//டார்வினும் சொன்னதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்டு //
டார்வின் சுமார் முப்பது வருடங்கள் உழைத்து பல கண்டங்களுக்கு சென்று அங்கே உள்ள உயிரினங்களை பார்த்து படித்து ஆராய்ந்து தன்னின் கோட்ட்பாடுகளை இயற்றினார்! சும்மா ஒரு மலை குகையில் புகுந்து கண்ணை மூடிக்கொண்டு நின்றதால் அவர் காதில் விழுந்த உருவான கோட்பாடுகள் அவை என்று அவர் சொன்னதாக தெரியவில்லை!!! அதவிட டார்வின் உயிரியல் பற்றி சொன்னதைதான் நாங்க படிக்கிறோம், உண்மையிஇன்னு ஆராய்ச்சிகள் சொன்னதை ஒப்புக்கொள்கிறோம்!! ஆனால் அவர் அறிவியல்
இல்லாது எழுதிய விடயங்கள் ஏதாவது இருந்தால் அதை யாரும் உண்மையான சாசனம் என்று நம்புவதில்லை, அதை கடவுள் வாக்காக ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை!!

naren said...

//ரொம்பவும் போரடித்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நித்தியானந்தா குரூப்புகள் ஆடும் ஆட்டத்தை சன் டிவியில் பார்த்து மகிழவும். :-)//

இந்து மதத்தால் பிறரக்கு சந்தோசததையும் ஆனந்ததையும் தருகின்றது என்பதை பார்த்தால் சிலிர்ப்பாக இருக்கின்றது.

இந்து மதம் பல நவரசதின் கலவை..

@கோப உணர்ச்சிக்கு சாதி கொடுமை.
@பாசதிற்கு சாதி அங்கத்தினர்களிடையே இருப்பது.
@வீரதிற்கு தரும தரிசனத்தில் சாமியை பார்பது.
@பொருமைக்கு எல்லா பழியும் சுமப்பது.
@விடாமுயற்சிக்கு என்ன ஆனாலும் சாமியை பார்பது.
@மனித நேயதிற்கு இன்னு சிறுபான்மையினர் இருப்பது.
......................................................................
போன்ற இன்னும் பல உணர்ச்சிகளில்
@சிரிப்புக்கு நித்யானந்தா போன்றவர்கள்.

அதனால் இந்து மதம் எல்லாவற்றையும் வெறும் மணல், பாலைவனம் என்று கூறுவதில்லை. அதனால் அதனை கல்லடிப்பட்டு சாவாமல் கொஞசமாவது திருட்டுதனமாக அனுபவியுங்கள்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

உங்கள் கட்டுரைக்கான மறுப்பிற்கு போவதற்கு முன் ஒரு சில விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசும்போது முஸ்லிம்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசக்கூடாது,இது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல அணைத்து மதத்திற்கும் பொதுவானது,மதத்தினுடைய கோட்பாடு என்பது வேறு மனிதர்களின் புரிதல்,செயல்பாடுகள் என்பது வேறு.நீங்கள் ஒரு மதத்தை பற்றி விமர்சிக்கும் போது அந்த மத நூல்களிலே குறிப்பிட்டுள்ள அறிவுக்கு ஒப்பாத சட்டங்களை விமர்சனம் செய்யலாம் ஆனால் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை குறைக்கூறி பிரயோஜனம் இல்லை ஏனென்றால் அது அவர்களின் புரிதலிலே ஏற்பட்டுள்ள குறைப்பாடு.அவர் அவர்களுக்கு புரிந்த அளவுக்கு அந்த மதத்தினுடைய கோட்பாடுகளைப் பின்பற்றுவார்கள் அது சரியாகவும் இருக்கலாம்,தவறாகவும் இருக்கலாம்.நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,நீங்கள் முஸ்லிம்களை விமர்சிப்பது கட்டுரைக்கு வேண்டும் என்றால் சுவாரஸ்யத்தைக் கூட்டும்,அறிவுக்கு பொருந்தாது.அடுத்தது நீங்கள் நபிமொழிகளை(ஹதீஸ்) விமர்சிக்கும் போது ஆதாரமான நபிமொழிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,அதற்கு ஹதீஸ் என்று இன்று நாங்கள் சொல்வது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும்.அது என்ன ஆதாரமான நபிமொழி,ஆதாரம் இல்லாத நபிமொழி என்று நீங்கள் நினைக்கலாம், ஆதாரமில்லாத ஹதீஸ்களை ஒதிக்கிவிட வேண்டியதுதானே அதை ஏன் இன்றும் வைத்துள்ளீர்கள் என்று நீங்கள் கேட்டக் கேள்வி நியாயமானது தான்..எங்களது மார்கத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை உள்ளத்தாலும்,செயலாலும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை.இன்று வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நாம் நபி(ஸல்) அவர்களுடைய போதனைகளை பின் பற்ற வேண்டும் என்றால் அதில் உண்மை எது பொய் எது என்பது தெரிந்து இருக்க வேண்டும்,ஆனால் நாமோ காலத்தால் அவர்களை(நபி (ஸல்)) விட சுமார் 1400 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம்.அவர்களுடைய போதனைகளில் பொய் கலந்து இருந்தால் அது தெரியாமல் அந்த பொய்யையும் பின்பற்றிவிடுவோம்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 1400 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஹதீஸ்களை தொகுத்த அறிஞர்களின் மூலயமாக பல நபர்களின் வரலாறு பதியப்பட்டுள்ளது அப்படி பதியபட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து லட்சம்.இந்த ஐந்து லட்சம் நபர்களின் முழு வாழ்வையும் அலசி ஆராய்ந்து இவர்கள் நம்பகமானவர்கள்,பொய் சொல்லமாட்டார்கள்,நியாபக சக்தி உள்ளவர்கள், தனது அண்டை வீட்டாருடன் சுமுகமாக நடப்பவர்கள்,என்று எல்லா சோதனைகளிலும் வெற்றிப்பெற்றவர்கள்.இந்த சோதனைமுறை அவர்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்து உளவு பார்த்து,அக்கம் பக்கத்தில் விசாரித்து அறிந்துக் கொண்டது.அந்த ஐந்து லட்சம் நபர்களின் வரலாறு அனைத்தும் இன்றும் இஸ்லாமிய உலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.இது தவிர அந்த சோதனை முறைகளில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும்.அது சரி நபிமொழிகளில் பொய் எப்படி கலந்தது என்கிறீர்களா?இஸ்லாத்தை அதன் உண்மை பாதையிலிருந்து திருப்பி அதை அழிக்கவேண்டும் என்பதற்காகவே யூதர்களும்,கிறிஸ்தவர்களும் நிறைய சிரமப்பட்டு இஸ்லாமியர்கள் போல தங்கள் உருவ அமைப்புகளை மாற்றிக்கொண்டு பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு(அது ஒரு சில தலைமுறைகளை தாண்டும்,இஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும்) பொய்யான நபிமொழிகளை பரப்பினர்,அவர்களுடைய தோற்றத்தை பார்த்து இஸ்லாமியர்களும் ஏமாந்து போய் பொய்யான நபிமொழிகளை பின்பற்றி தன சந்ததிகளையும் பின்பற்ற வைத்தனர்,இப்படிதான் பொய் கலந்தது,ஆனால் எங்களிடத்திலே பாதுகாக்கப்பட்டுவரும் ஹதீஸ் அறிவிப்பாளர்களை(ஐந்து லட்சம் நபர்கள்) வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் அந்த பொய்யை பிரித்துவிடலாம்.இந்த உண்மையை சமீபகாலமாக அறிந்த இஸ்லாமியர்கள் பொய்யான ஹதீஸை இனம்கண்டு புறம் தள்ளி,உண்மையான ஹதீஸை பின்பற்றிவருகிறார்கள்,இனி பொய்யான ஹதீஸை வைத்து இஸ்லாமியர்களிடம் வாலாட்ட முடியாது.அது சரி இந்த விஷயம் கூடவா இத்தனை நாள் தெரியாமல் அவர்களின் கூற்று,இவர்களின் கூற்று என்று முகவரி தெரியாதவர்கள் வைத்து இஸ்லாத்தை குறை கூரவந்தீங்க வாத்தியாரே.
நீங்கள் கேட்ட அத்தனை கேள்விக்கும் http://tvpmuslim.blogspot.com ல் ஒன்று விடாமல் பதில் உள்ளது.

Unknown said...

😸😸😸😸😸😸😸😸😸😸😄😄😄😄😄😄😄😄

தருமி said...

Zakeerf Zakeer
😸😸😄😄.......இப்டின்னா என்ன?

Post a Comment