Sunday, July 24, 2011

514. WHY I AM NOT A MUSLIM ... 20

*

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு: 19


Image and video hosting by TinyPic

CHAPTER  15

TABOOS:
WINE, PIGS, AND HOMOSEXUALITY


”பாகிஸ்தானில் விஸ்கி ஒன்றும் கிடைக்காத பொருளில்லை. விஸ்கி ஒரு வேளை உலோகத் தம்ளர்களிலோ, அல்லது தேநீர் குவளையிலிருந்து தேநீர் கப்புக்கோ ஊற்றப்படலாம்.  விலையும் இரு மடங்கு இருக்கும். ஆனாலும் அங்கே சாப்பிடுவது பாவம் என்பதால் சுவையும் இரட்டிப்பாகவே இருக்கிறது.”
 .....குஷ்வந்த் சிங்.

குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தின் போது முதல் நாள் தொலைக்காட்சியில் ஒரு அமைச்சர் மூன்று முல்லாக்களோடு விவாதித்ததைப் பார்த்தார்.  அடுத்த நாள் அதே அமைச்சர் குஷ்வந்தை ஒரு கூட்டத்தில் வரவேற்றுப் பேசினார்; அடுத்து பேசிய குஷ்வந்த் தான் நேற்று பார்த்த தொலைக்காட்சியைப் பற்றிக் கூறிவிட்டு, அந்த அமைச்சரிடம் அடுத்த முறை முல்லாக்களோடு விவாதம் செய்யும் போது இந்தக் கவிதையை வாசியுங்கள் என்றிருக்கிறார். 

                     முல்லா, உங்கள் தொழுகைக்கு சக்தி உண்டென்றால்
                     அந்த மசூதியை சிறிது அசையுங்கள் பார்ப்போம்.
                     முடியாவிட்டால், இரண்டு ’லார்ஜ்’ எடுத்துக் கொள்ளுங்கள்;
                     இப்போது மசூதியே ஆடுவதைப் பார்ப்பீர்கள்!


கூட்டத்தினரின் பலத்த சிரிப்புக்கிடையே அமைச்சர் குஷ்வந்த் சிங்கின் காதில் மெல்ல,  'இந்த முல்லாக்களை கொஞ்சம் விட்டால் போதும்; பெண்களுக்கு முழு பர்க்கா போட்டு ஹாக்கி விளையாட வைத்து விடுவார்கள்’, என்றாராம்.

முகமது  முதலில் மதுவைப் பற்றி கடும் எதிர்ப்பு இல்லாதிருந்திருக்கிறார்.  ஆனால் அவரைத் தொடர்ந்தவர்கள் பலரிடமும் மதுவின் வேட்கை இருந்ததால் தன்னுடைய எதிர்ப்பை முதலில் சாதாரணமாகவும் (2 : 216;  4 : 46;) அதன் பிறகு உறுதியாகவும் (5 : 90) வெளிப்படுத்தினார்.

KHAMRIYYA - WINE POEMS :இஸ்லாமின் வரவிற்கு முன்பே அராபிய மொழிக் கவிஞர்கள் பல ‘நீராடும்’ கவிதைகள் பாடியுள்ளனர். இக்கவிதைகள் அரபு மொழியில் KHAMRIYYA என்றழைக்கப்படுகின்றன. இஸ்லாம் வேரூன்றிய பின்னும் இவ்வகைக் கவிதைகள் வருவதை அரசியலாளர்களால் - உம்மயாதுகளால் - தவிர்க்க முடியாது போயிற்று. அபு நுவாஸ் (Abu Nuwas - 762-814) என்ற கவிஞரின் கவிதைகள் குரானை எதிர்ப்பதுபோன்ற தொனியுடனேயே எழுதப்பட்டன. 

அவரின் கவிதை ஒன்று: 

                         எவ்வளவு பாவம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்து விடு.
                         கடவுள் நிச்சயம் உன்னை மன்னித்து விடுவார்.
                         அந்தி நாள் வரும்போது மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்
                         இல்லையெனில் நரகத்தின் பயத்தில் நீ செய்யாமல் 
                        விட்டுப் போன ’பாவங்களுக்காக’  மிகவும் வருந்துவாய்.
------------------------


பன்றி இஸ்லாமில் மிகவும் ’அருவருக்கதக்க’ விலங்கு என்று கருதப்படுகிறது. காரணம் ஏதும் இதற்காகக் கொடுக்கப்படவில்லை. இஸ்லாமியரிடம் கேட்டால் ’குரானில் சொல்லப்பட்டு விட்டது; அது போதும்’ என்ற பதிலே வரும். உடலுக்குத் தீங்கு தரும் ஒட்டுண்ணிகள் விலக்கப்பட்ட பன்றிகளில் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் ஆடு, மாடு, கோழிகளிலும் உண்டு. இஸ்லாமிற்கு முன் பன்றிகள் அராபிய நாட்டில் இருந்ததில்லை. இருப்பினும் ஏன் முகமது அவைகளை விலக்கினார். யூதர்கள், சமாரியர்களின் வழக்கத்தைக் கடைப்பிடித்தல் ஒரு காரணமாக இருக்கலாம். (335) 

சைனாவில் உள்ள இஸ்லாமியர் பன்றிக் கறி உண்ணுவதுண்டு. அவர்கள் pork என்று அதனைச் சொல்லாமல் mutton என்று சொல்வது வழக்கம்.
 --------------------------------ஓரினச் சேர்ககைக்கு இஸ்லாம் பெருந்தடை ஏதும் விதிப்பதில்லை. பாபர் (1483-1530) ஒரு பையன் மீது கொண்ட காதலைத் தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். (340) 

குரானிலும் 52:24, 56:17, 76:19 - சுவனத்தில் பையன்களால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் என்பதற்கான பொருள், அவர்கள் உங்களுக்கு ஏவல் செய்ய என்பதுவா, பாலின இன்பத்திற்காகவா என்பது ஒரு கேள்வியே. ((342)

 

13 comments:

ஜோதிஜி said...

நான் பார்த்தவரைக்கும் பெரும்பாலான தலைப்புகள் ஏன் முழுக்க முழுக்க பிரயோஜனமான விசயங்களையே எழுதுக்கிட்டு வர்றீங்க. அதுக்கே என் வணக்கம். உங்கள் இடுகையில்இதுவரைக்கும் பாதி தான் படித்து இருக்கின்றேன்.

மதம் சார்ந்த விசயங்களில் நான் கருத்தே சொல்ல விரும்பவதில்லை. காரணம் நம் நாட்டில் படித்த பைத்தியங்கள் வெறித்தனமான சைக்கோக்கள் மிக அதிகம்.

தருமி said...

//மதம் சார்ந்த விசயங்களில் நான் கருத்தே சொல்ல விரும்பவதில்லை. //

என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது. எல்லாமே மதத்தைப் பற்றி எழுதுற .. அதனால கருத்தே சொல்லப் போவதில்லை .. என்றுதானே.

சீக்கிரம் முடிச்சிடணும்னு தான் நினைக்கிறேன். பழைய (பின்னூட்ட)நண்பர்கள் இந்தப் பக்கமே இப்பல்லாம் வர்ரதில்லை.

:(

Naran said...

கலக்குறீங்க சார்,!!தொடரட்டும் உங்கள் பனி.ரொம்ப ரசிக்கிறேன் உங்கள் எழுத்தை குறிப்பா இந்த கட்டுரை தொகுப்பு!!

naren said...

//மதம் சார்ந்த விசயங்களில் நான் கருத்தே சொல்ல விரும்பவதில்லை. காரணம் நம் நாட்டில் படித்த பைத்தியங்கள் வெறித்தனமான சைக்கோக்கள் மிக அதிகம்.//

//சீக்கிரம் முடிச்சிடணும்னு தான் நினைக்கிறேன். பழைய (பின்னூட்ட)நண்பர்கள் இந்தப் பக்கமே இப்பல்லாம் வர்ரதில்லை.:(//

மதத்தின் ஆதிக்கம் அதன் இருப்பிடத்தை விட்டு வெவ்வேறு துறைகளில் ஆதிக்கச் செலுத்த ஆரம்பித்துள்ளது. தவறியதால் நாம் பார்த்தவைகளில் சில...

1. மடாதிபதி ஒரு கொலைக்குற்றவாளி
2. இன்னொருவர் பறக்க முயற்சிக்கிறார்.
3. குஜராத் கலவரங்கள்.
4. தொடரும் குண்டுவெடிப்புகள்.
5. பரலோக மத வியாபார சாம்ராஜ்யங்கள்.
6. இலங்கை பிரச்சனையின் ஆணிவேரை தேடினால் மதம் தான் வந்து நிற்கிறது. அதுவும் புத்த மதம்.
7. மூடநம்பிக்கைகள்.
8. சவுதி கலாச்சாராம்.

நாட்டில் படித்த பைத்தியங்கள் வெறித்தனமான சைக்கோக்கள் மிக அதிகம், என்று பயந்து கேள்விகள் கேட்காமல் விட்டால்......ஆப்காணிஸ்தானில், பஞாப்பில், பிரிவினை நேரத்தில், லெபானானில் நடந்துப் போல் ஆகிவிடும்.

அதனால் கேள்விகள் கேட்பதை நிறுத்தாதீர்கள், சிறு துளி பெரும் வெள்ளம்.

naren said...

//முல்லா, உங்கள் தொழுகைக்கு சக்தி உண்டென்றால் அந்த மசூதியை சிறிது அசையுங்கள் பார்ப்போம். முடியாவிட்டால், இரண்டு ’லார்ஜ்’ எடுத்துக் கொள்ளுங்கள்; இப்போது மசூதியே ஆடுவதைப் பார்ப்பீர்கள்!//

அவருக்கு தெரிந்திருக்கிறது உண்மையான கடவுள் C2H5OH!!!

அது homosexual இல்லை pedophile.

தருமி said...

//அது homosexual இல்லை pedophile. //

i think it is only homosexual.

naren said...

இதில் பையன்கள் என்ற வார்த்தை வருவதினால் ஒரினச்சேர்க்கையாக இருந்தாலும் வேறு வகையில் வரும் என்று தோன்றுகிறது.

விக்கிப்பீடீயாவிலிருந்து
PEDOPILIA
As a medical diagnosis, pedophilia (or paedophilia) is defined as a psychiatric disorder in adults or late adolescents (persons age 16 or older) typically characterized by a primary or exclusive sexual interest in prepubescent children (generally age 13 years or younger, though onset of puberty may vary). The child must be at least five years younger in the case of adolescent pedophiles (16 or older) to be termed pedophilia

HEBEPHILIA
Hebephilia refers to the sexual preference for individuals in the early years of puberty (generally ages 11–14, though onset of puberty may vary). Girls typically begin the process of puberty at age 10 or 11; boys at age 11 or 12. Hebephilia differs from ephebophilia, which refers to the sexual preference for individuals in later adolescence,[1] and from pedophilia, which refers to the sexual preference for prepubescent children.[2] While individuals with a sexual preference for adults (i.e., teleiophiles) may have some sexual interest in pubescent-aged individuals,[3] the term hebephilia is reserved for those who prefer pubescent-aged individuals over adults. The term was introduced by Glueck (1955),[4] who later credited it, without citation, to Paul Benedict.

EPHEBOPHILIA
Ephebophilia is the sexual preference of adults for mid-to-late adolescents, generally ages 15 to 19

குரான் வசனங்கள் பணிவிடைப் பற்றியும் முத்துக்கள் போன்று முகம் உள்ள சிறுவர்கள் என்பது பற்றி வரும். இதற்கு ஆலிம்கள் என்ன விளக்கம் தந்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

தருமி said...

வேறொன்றுமில்லை நரேன். pedophile என்றால் அது இரு பால் குழந்தைகளையும் சேருமே; இல்லையா?

naren said...

தற்பொழுது இருக்கும் பெரும்பாலான உலக சட்டமுறைகளில், வயதுக்கு (puberty) எந்த வயதில் வந்தாலும், சம்மதம் தெறிவிக்கும் வயதுக்கு(major) கீழிருக்கும் இருபாலர்களில் யாராவது ஒருவரை பெரியவரான(adult) ஒருவர் sex related activities க்கு ஈடுப்படுத்தினால், அது sexual offences against minor என்று வந்துவிடும். minor களிடம் செக்ஸ் சம்பந்தமாக விஷயங்களை வைத்து கொள்ளும் பெரியவர்களை குறிக்கும் pedophile இப்பொழுது ஒரு generic term ஆக மாறிவிட்டது.

இந்த major வயது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.

சில நாடுகளில் சிறுவர்களின் செக்ஸ்யை வலையத்தில் பார்ப்பதே குற்றம்.

அதிர்ச்சியான விஷயம், தாய்லாந்து இலங்கை போன்ற நாடுகளில் sex tourism வளர இந்த மாதிரி PEDOPHILE SEX விஷயத்தில் lax ஆக இருப்பார்கள்.

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

தருமி said...

அதிரைக்காரன்,

//இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக...//

இது ஒரு பக்கம் செல்லட்டும். ஆனாலும் உடனடி உதவியாக அம்மாணவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தேவையானவைகளுக்காக நாமும் ஒரு முயற்சி எடுக்கலாமே.

ஏற்கெனவே ‘என்றென்றும் அன்புடன் பாலா’ மூலமாகச் சில மாணவர்களுக்குச் சில உதவிகளை செய்திருக்கிறோம். இதையும் அதுபோல் யாராவது முன்னெடுத்து உடனடி தேவைகளுக்கு உதவுவோமா?

வால்பையன் said...

i am always with u sir!

Srikandarajah கங்கைமகன் Gangaimagan said...

அருமையான பதிவு!

Post a Comment