*
இதுவரை தமிழ்மணம் சமயங்களைப் பற்றி மட்டும் மிக ’வேகமாக’ எழுதிய பதிவர்களின் பதிவுகளைத் தமிழமணத்திலிருந்து நீக்கியுள்ளீர்கள். நன்று.
இளவரசனின் மரணம் ஒழுங்கான மனித மனங்களைப் பெரிதும் அசைத்து விடுகிறது. அவனுக்காக இரங்குவதா, கவலைப்படுவதா, அவனை வாழ்வின் எல்லை வரை விரட்டி அடித்து நாசகாரக் கும்பலை மனம் வெறுத்து தூற்றுவதா -- எதைச் செய்வது? இப்பையனின் மரணம் கூட அந்த நாசகாரக் கும்பலை தங்கள் கருத்துக்களை தன்னாய்வு செய்யக் கூட வைக்க முடியவில்லை. இன்னும் தங்கள் கொப்புகளை விட்டு இறங்காத குரங்குகளாக இன்னும் இருந்த இடத்திலேயே தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் வாயிலிருந்தும் இன்னும் விஷம் தான் கசிகிறது. மனித உயிர்களை விட அவர்களின் சாதி வெறிதான் மேலோங்கி நிற்கிறது. இது போன்ற சாதி வெறியால் கண்களை மூடியலையும் மடையர்களுக்குத் தமிழ்மணத்தில் இடம் வேண்டுமா என்பது தமிழ்மணத்திற்கான என் கேள்வி.
ஏன் அவர்களைத் தூக்கி வெளியே எறியக் கூடாது???
விஷம் கக்க வேறிடம் பார்த்துக் கொள்ளட்டும்.
மதுரைக்கு சாதி வெறி பிடித்த பா.ம.க. கட்சியின் தலைவன் நுழையக்கூடாது என்று சட்டம் போட்ட எங்கள் கலெக்டரைப் பார்த்துப் பெருமைப் பட்டோம். அந்தப் பெருமையை ஏன் தமிழ்மண பதிவர்களுக்கு தமிழ்மணம் கொடுக்கக் கூடாது?
விரட்டுங்கள் ....
*
23 comments:
வேண்டுகோள் நடக்கட்டும்...
வரவேற்கின்றேன்.
மதம் பிடித்த வாத்திக்கு ஏன் ஜாதீ பிடிக்க மாட்டிங்குது. அது ஒரு விடாது கருப்பு
//மதம் பிடித்த வாத்திக்கு ஏன் ஜாதீ பிடிக்க மாட்டிங்குது.//
பாண்டி,
வாத்திக்கு மதமும் பிடிக்கலைன்னு இன்னும் உனக்குத் தெரியலைன்னா அதுக்கு உன்னைப் பிடிச்சி வச்சிருக்கிற கருப்பு காரணமாக இருக்கலாம்.
மிகவும் அருமை ஐயா ! வழிமொழிகின்றேன்.
மிக அவசியமான வேண்டுகோள். அருள் போன்ற ஜாதி வெறி பதிவுகளை இது வரை தமிழ்மணம் அனுமதித்ததே தமிழ்மணத்திற்கு மிக பெரிய அவமானம்.
நல்லது நடந்தால் சரி...
ஆலோசிக்க வேண்டிய ஓன்று பாப்போம்
ஆலோசிக்க வேண்டிய ஓன்று பாப்போம்
தமிழ்மணத்திலிருந்து மட்டுமா
தமிழ்நாட்டிலிருந்தே என்றால் நல்லது
இதுவ்ரை இப்பதிவை 296 பேர் வாசித்திருக்கிறீர்கள். அதில் - திண்டுக்கல் தனபாலன்
ஜோதிஜி திருப்பூர்
நிரஞ்சன் தம்பி
வேகநரி
இரவின் புன்னகை
Vel Murugan - என்ற தைரியமான ஆறு பேர்களுக்கும் என் பாராட்டுகள்.
என் கருத்தோடு ஒன்றி நின்றதற்கு அந்த ஆறு பேருக்கும் என் நன்றி.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன். அருளே இல்லாத ஒருவனுக்குப் பெயர் அருள்.
தமிழ் மணத்தில் இருந்து தூக்கி எறியப் படவேண்டுமென்றால் பதிவுகளுக்கு censor வரும். பதிவுலகில் பலர் எழுதுவதே தணிக்கை இல்லை என்பதால்தானே. எழுதுபவருக்கு சுயக் கட்டுப்பாடு வேண்டும்.இல்லாதபதிவுகளை யாரும் படித்துக் கருத்துக் கூறக்கூடாது. Just ignore them.
G.M.B.,
// ... பதிவுகளுக்கு censor வரும்//
இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்மணத்தில் இந்த வழக்கம் உண்டு.
கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமே தவிர எதற்காக தடை செய்ய வேண்டும். நான் அவரது பதிவுகளில் சிலவற்றுக்கு எழுதிய பதில்களை அவர் வெளியிடவே இல்லை. இருந்தாலும் அவரைப் போன்றவர்களைத் தடைசெய்யாமல் இருந்தால் தான் அவர் பக்க கருத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
//அவர் பக்க கருத்தையும் அறிந்து கொள்ள முடியும்.//
ஆமாம் .. அந்தக் கருத்துக் கருவூலம் நமக்கு நிச்சயம் தேவைதான் !!!!
****viyasan said...
கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமே தவிர எதற்காக தடை செய்ய வேண்டும். நான் அவரது பதிவுகளில் சிலவற்றுக்கு எழுதிய பதில்களை அவர் வெளியிடவே இல்லை. இருந்தாலும் அவரைப் போன்றவர்களைத் தடைசெய்யாமல் இருந்தால் தான் அவர் பக்க கருத்தையும் அறிந்து கொள்ள முடியும்.***
வியாசன்: எந்த ஒரு பிரச்சினையிலும் "அவர்" கருத்தை அவர் சொல்லாமலே அறிந்து கொள்வது மிகவும் எளிதான ஒண்ணுதான். வன்னியர் எல்லாம் யோக்கியன் அப்பாவி என்பதைத் தவிர அவர் வேறென்ன கருத்தை முன்வைத்துள்ளார்??
அவர் வெறும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைதான். பல அரசியல்வாதிகளும், அவர் சாதித்தலைவர்களும் அவருக்கு சாவி கொடுக்கிறார்கள் என்பதை சமீபத்தில்தான் நான் உணருகிறேன். எப்போதுமே வன்னியத் தலைவர்களின் "தற்காப்பு"க்கருத்தைத்தான் அவர் இங்கே முன்வைக்கிறார்.
வன்னியர்கள் செய்த எந்த ஒரு அடாவடித்தனத்தை அவர் கண்டித்து எழுதிய பதிவை நீங்க காட்ட முடியாது!
சாதிப்பற்றில் மூளை மழுங்கிவிட்டது இவர்களுக்கு! மூளை மழுங்கிய நிலையில் இவர் எழுதும் பதிவுகளெல்லாம் குப்பைகள்தான். தமிழ்மணத்தில் ஒரு பகுதியில் குப்பைக் கூடைகளும் இருக்கிறது. அதில் அவைகளை கிடத்த வேண்டியதுதான்.
தடை செய்து அவரை பெரிய "வீர்ராக்குவது" என்பது தேவையற்றது. மனசாட்சியே இல்லாமல், அடாவடி செய்யும் வன்னியர்களும் யோக்கியர்கள் என்று சொல்லும் இவர், வன்னியர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்பதுபோல்தான் கருத்தை வைக்கிறார். இதனால் யாருக்கு ஈனம்? வன்னியர்களுக்குத்தான். மற்றவருக்கல்ல!

என் அறைக்குள் ஏதோ செத்து நாற்றம். தேடிக்கண்டு பிடித்து வெளியே எறிய வேண்டும்...........
//கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமே தவிர எதற்காக தடை செய்ய வேண்டும்.//
சகோ வியாசன், மரங்களை வெட்டி பசுமை ஏற்படுத்தும் கருத்துக்களை தானே அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஜாதி என்ற உருவாக்கபட்ட போலிக்கு பில்டப் கொடுத்து பெருமை பேசி அதை பேரினம் என்று வேறு சொல்லி(தமிழர் என்பது சிறுமை இனமோ:( )இவர்களுக்கு தடை அவசியம்.
வாத்தியாரே,
நீங்க சொல்ற ஆள்/ஆட்கள் யார்னே என்னை மாதிரி "அப்பப்போ" படிக்கிற ஆளுங்களுக்கு தெரியாது. எதுக்கு அவங்களை பெரியாளக்கி விடனும்?
ஆனாலும் ஒன்னு சொல்லனும்னு நினைக்கிறேன். எவ்ளோ மோசமான கருத்தாக இருந்தாலும் எங்கும் தடை செய்ய கூடாதுன்னு இருக்கணும். நாளைக்கு தருமியின் கருத்துக்களை விரும்பாதோர் என்ன செய்யனும்னு கேட்டா என்ன சொல்ல போறோம்? என்னை கேட்டா இதே பதில்தான். உங்கள் கருத்தை தடுக்க எவருக்கும் உரிமை இருக்க கூடாது. அவர் கருத்தையும் தான். அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும்.
இணையம் = சுதந்திரம்.
அப்படியே இருக்க வேண்டும். சில வலிகளும் இழப்புகளும் இருப்பினும்.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் உங்கள் மனம் புரிகிறது. ஆனாலும் யாரும் பெரியண்ணன் வேலை செய்யறது நீண்ட கால நோக்கில் தவறாகிவிடும். என்ன சொல்லறீங்க?
வாத்தியாரே,
நீங்க சொல்ற ஆள்/ஆட்கள் யார்னே என்னை மாதிரி " அப்பப்போ" படிக்கிற ஆளுங்களுக்கு தெரியாது. எதுக்கு அவங்களை பெரியாளக்கி விடனும்?
ஆனாலும் ஒன்னு சொல்லனும்னு நினைக்கிறேன். எவ்ளோ மோசமான கருத்தாக இருந்தாலும் எங்கும் தடை செய்ய கூடாதுன்னு இருக்கணும். நாளைக்கு தருமியின் கருத்துக்களை விரும்பாதோர் என்ன செய்யனும்னு கேட்டா என்ன சொல்ல போறோம்? என்னை கேட்டா இதே பதில்தான். உங்கள் கருத்தை தடுக்க எவருக்கும் உரிமை இருக்க கூடாது. அவர் கருத்தையும் தான். அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும்.
இணையம் = சுதந்திரம்.
அப்படியே இருக்க வேண்டும். சில வலிகளும் இழப்புகளும் இருப்பினும்.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் உங்கள் மனம் புரிகிறது. ஆனாலும் யாரும் பெரியண்ணன் வேலை செய்யறது நீண்ட கால நோக்கில் தவறாகிவிடும். என்ன சொல்லறீங்க?
தங்கள் கருத்தை வரவேற்கின்றோம்.
Post a Comment