Friday, July 12, 2013

667. புத்தரைக் காண ....





*


பெங்களூரு - கூர்க் பயணத்தடத்தில் இன்னொரு இடம் - குஷால் நகர். திபேத்தியர்களுக்கென்று கொடுக்கப்பட்ட இடமாம். எங்கும் சிகப்பாடை அணிந்த புத்த பிக்குகள். எல்லா வயதிலும் நடமாடிக்கொண்டு  இருந்தார்கள். சின்னப் பையன்களாக பலரும் இருந்தனர்.



அது சரி ... சின்ன வயதிலேயே ‘ஆணி’ அடித்தால் தானே ‘மதம்’ உள்ளே இறங்கும்.  ஒரு சின்ன சந்தேகம். பெண் பிக்குணிகளும் இருப்பார்களோ?
பெண் பிக்குணிகள் ..???
ஏனெனில் பல ஆண்களுக்கு நடுவில் சில பெண்கள் பிக்குணிகள் மாதிரி தோன்றினார்கள். மிக அழகான இளம் வயதுப் பெண்கள் சிலரை அப்படிப் பார்த்தேன்.  அவர்களின் கைகளிலும் -அதற்கு என்ன பெயர் என்று தெரியாது; எனக்குத் தெரிந்த பெயரைச் சொல்கிறேன். - ஜெபமாலை, ஆண்கள் போலவே வைத்திருந்தார்கள். இதென்ன இந்த ஜெபமாலை எல்லா மதத்தினரும் வைத்து உருட்டுகிறார்கள். ஜெபமாலையின் பரிணாமம் படிக்க யாராவது முயற்சிய்ங்களேன்!


 
முன் வாசலில் இடது பக்க படத்தில் இருப்பது போன்ற ஒரு தோரண வாயில். அதில் ஒருவரது படம் பெரியதாக இருந்தது. அவர் யார்? லாமா இல்லை அவர் என்பது மட்டும் தெரிந்தது.









அவர்கள் கோவில். உள்ளே பெரிய டமாரம் ஒன்று இருந்தது. நாங்கள் போகும்போது சின்ன புத்த பிக்குகள் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள். அதிலிருந்த சின்னப் பையன்களைப் பார்க்கும் போது எனக்குப் பாவமாக இருந்தது.



பீடங்களில்  பல புத்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். யார் கெளதம புத்தர், மற்றவர்களெல்லாம் யார் யார் என்று தெரியவில்லை.




*





பல புத்தர்களின் கைகளில் தொலைப்பேசி இருந்தன.

அழகான கட்டிடங்கள். திபேத்திய கலாச்சாரத்தில் கட்டப்பட்டு நன்கு பேணப்பட்டு வருகின்றன.





இக்கட்டிடங்களுக்கு வெளியே நிறைய நிலங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டு நன்கு விவசாயம் நடக்கிறது. எப்படி நடக்கும் என்றேன். வங்கிகள் நன்கு கடன் கொடுப்பதாகக் கூறினார்கள். நிலங்களில் கூலிக்காக வேலை செய்வது நமது மக்கள் தான். அவர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது போல் தோன்றியது.


*
இடம் பார்த்து முடிந்ததும் பல கேள்விகள்:

*  திபேத்தியர்களுக்கும் சீனாவிற்கும் நடுவே  நிறைய குழப்பங்கள்.  அரசியல் நிலையில் இவர்களுக்கு தங்கும் இடம், நிலம், பண உதவி, வங்கிகளின் உதவி அளிப்பது எதற்காக?

*  இந்த உதவிகள் யாரைத் திருப்தி படுத்த? ஏன்? அரசியல் காரணங்கள் உண்டா?

*  திபேத் இருப்பதோ வடக்கே எங்கேயோ? அவர்களுக்கு கர்னாடகாவில் ஏன் இந்த இடம் கொடுக்கப்பட்டது?

*  பாவம் .. சின்னப் பசங்க. அதாவது இளம் வயது பிக்குகள். பெற்றோரை விட்டு இவ்வளவு தொலைவில் ...

*  இந்த உதவிகளுக்கு சீனாவின் எதிர்வினை ஏதும் உண்டா இல்லையா? (இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்.)

இன்னொரு முக்கிய கேள்வி. இங்கு இருக்கும் திபேத்தியர்கள் இந்தியாவின் அகதிகள் தானே? இவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் கர்நாடக அரசு கொடுப்பதா .. இல்லை மத்திய அரசு கொடுப்பதா?

இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் செய்யும் அரசு ஏன் தமிழ்நாட்டில்  இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை உபச்சாரம், உதவி செய்வதில்லை? அவர்களைப் பேணுவதில்லை. தீண்டத்தகாதவர்கள் போல் ஏன் அவர்களை வைத்திருக்கிறோம்?

*
இன்னும் சில படங்களைக் காண .. இங்கே வாருங்கள் ....


*


 

17 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் செய்யும் அரசு ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை உபச்சாரம், உதவி செய்வதில்லை? அவர்களைப் பேணுவதில்லை. தீண்டத்தகாதவர்கள் போல் ஏன் அவர்களை வைத்திருக்கிறோம்?,,,,அதுதான் புரியவில்லை அய்யா

Unknown said...

அருமையான பதிவு அய்யா ,வெகு நாட்களக்கு பிறகு மீண்டும் உங்கள் விஜய்...இலங்கை அகதிகளக்கு வசதிகள் செஞ்சு குடுத்தா சிங்களவன் கோச்சுக்குவான்.அப்புறம் சீனாகாரன் இலங்கைல விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூட கட்டிடுவான்.அப்புறம் இந்தியாவுக்கு இருக்குற பிசாத்து பிராந்திய வல்லரசு என்கிற திருநாமம் இல்லாம போய்டுமே...இதனால் இலங்கை அகதி பட்டினி கிடந்தது செத்தாலும் பரவாயில்லை ...பிராந்தியம் முக்கியம் !!!!!!!!!!!!!!!!!!

//கட்டிடங்கள். திபேத்திய கலாச்சாரத்தில் கட்டப்பட்டு நன்கு பேணப்பட்டு வருகின்றன

இலங்கை தமிழ் உறவுகளக்கு கல் வீடு கட்டி தராமல் இந்தியாவில் திபெத்திய கட்டிட கலையை வளர்த்து சோனியா காந்தி (!!) ஆட்சி என்ன செய்கிறதோ ????

தருமி said...

//வெகு நாட்களக்கு பிறகு மீண்டும் உங்கள் விஜய்...//

adikkadi vanthu poi irunga ...

வேகநரி said...

பெண் பிக்குணிகளை இலங்கையிலேயே நான் கண்டதில்லை. அது ஏன் தலையிலே துண்டு போட்டிருக்காங்க தலிபான்களின் உத்தரவல்லவா அது!!!
இலங்கை அகதிகளை ஏன் தீண்டத்தகாதவர்கள் போல் வைத்திருக்கிறோம்? என்ற கேள்வியை தமிழ் அம்மாவின் ஆட்சி மட்டுமல்ல ஈழ நாடகமாடும் அரசியல்கட்சிகள் மற்றும் முதலை கண்ணீர் வடிவடித்து கொண்டு திரிவோரும் பதில் சொல்ல வேண்டும்.
இதலிலே வேற இலங்கை மேலே ஒரு பொருளாதார தடை இந்தியாவை கொண்டு வர பண்ணி அங்கே பஞ்சத்தை உண்டாக்கி மேலும் அகதிகளை தமிழகத்தை நோக்கி வரபண்ணலாம் என்று ஒரு ஆசை கனவிலே இருக்காங்க.

வேகநரி said...

எங்கே ஐயா உங்க இலங்கை ரசிகர் மன்றத்தின் தலைவர் விஜய்? நீண்ட நாட்களா காணல. நிறைய தகவல்கள் தருவார்.

தருமி said...

வேகநரி,

இரண்டாவது பின்னூட்டம் விஜயின் பின்னூட்டம் தானே!

வேகநரி said...

நான் நினைக்கிறேன் ஐயா விஜே ஸ்ரீலங்கன் வேறு. இரண்டாவது பின்னூட்டமிட்டவர் வேறு என்று?

தருமி said...

வேகநரி,

ஆமா இல்ல ...!

Unknown said...

திரு வேகநரி மற்றும் தருமி அய்யா

விஜய் லங்கன் நான் தான்...அலுவலக வேலை மண்டையை பதம் பார்ப்பதால் அலுவலக வேளையில் இணையம் வர முடியவில்லை...என்னை இவ்வளவு தூரம் நியாபகம் வைத்துள்ளமைக்கு நன்றிகள் ...பழைய கூகிள் ஐடி மறந்து போச்சு ..அதான் உண்மையான பெயரோட வந்துட்டேன்..அப்பா பெயர் முத்தையா...

நிறைய விடயங்கள் பகிர வேண்டி உள்ளது .......வேலைகளை முடித்து விரைவில் வருகிறேன்

Unknown said...

தருமி அய்யா

நீங்க பார்த்த பெங்களுர்ல சாதுவான சாதுக்கள் மாதிரியான ஆட்கள் எல்லாம் இலங்கையில் இருந்து எப்போவோ போய்ட்டாங்க...இப்போ தொட்டதுக்கெல்லாம் வீராவேசமா வந்து நிக்குறது நம்ம இலங்கை சாதுக்கள் தான்..அதுவும் தமிழ்(!!) இஸ்லாமிய மத மாற்றங்களில் இருந்து சிங்கள மக்களை காப்பாற்ற அரும் பாடுபடுகிறார்கள்.முதலில் ஹலால் சான்றிதழை தடை செய்ய பண்ணினார்கள்..முன்னாள் மாநகர மேயரை தலிபான் தொடர்பாளி என கைது செய்தனர்.. சிறபான்மையினரின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன..வழிபாட்டு தளங்கள் பன்றி இறைச்சி வீசி மோசமாக தாக்கப்பட்டது.இன்னும் பல.....

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களே என்பது மகாவம்சம் தொட்டு நிலவி வரும் உண்மை ஆகும்.அனால் இவர்கள் கருத்து படி சிங்கள மக்கள் இராவணன் வழி. தோன்றல்கள் எனவும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதே ஆகும்..( இராவணன் தமிழன் னு இவிங்க கிட்ட சொன்னா மட்டும் கேக்கவா போறாங்க ???)...அதனால் இலங்கை மூவின மக்களக்கு எல்லாம் சொந்தம் இல்ல ..அவங்களக்கு மட்டும் தான் சொந்தமாம்...

தருமி said...

விஜய்

உங்களை ஒரு சங்கிலிப் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வாருங்கள்

http://dharumi.blogspot.in/2013/07/672.html

Anonymous said...

நல்ல கேள்வி தான் !
ஆனால் விடை தெரிந்தும் நாம் மௌனமாக இருக்கின்றோம் .
1. திபத்தியர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபடவில்லை.
2. தங்கள் இனத்துக்குலேயே சகோதர யுத்தம் செய்து அழித்து கொள்ளவில்லை.
3. உலகமெங்கும் பரவி அகதி என்று சொல்லி அந்த நாடுகளை சுரண்ட வில்லை.
4. அவர்களுக்கு சப்போர்ட் பண்ண வேறு எங்கும் அரசியல் வியாதிகள் இல்லை , அவர்களும் இந்திய நாட்டின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதில்லை
5. அவர்களுக்குள்ளே மீண்டும் நாடு கிடைக்கும் என்று யாரும் பணவசூல் நடத்துவதில்லை, அவர்கள் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கவில்லை

Anonymous said...

நல்ல கேள்வி தான் !
ஆனால் விடை தெரிந்தும் நாம் மௌனமாக இருக்கின்றோம் .
1. திபத்தியர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபடவில்லை.
2. தங்கள் இனத்துக்குலேயே சகோதர யுத்தம் செய்து அழித்து கொள்ளவில்லை.
3. உலகமெங்கும் பரவி அகதி என்று சொல்லி அந்த நாடுகளை சுரண்ட வில்லை.
4. அவர்களுக்கு சப்போர்ட் பண்ண வேறு எங்கும் அரசியல் வியாதிகள் இல்லை , அவர்களும் இந்திய நாட்டின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதில்லை
5. அவர்களுக்குள்ளே மீண்டும் நாடு கிடைக்கும் என்று யாரும் பணவசூல் நடத்துவதில்லை, அவர்கள் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கவில்லை

ஜோதிஜி said...

3. உலகமெங்கும் பரவி அகதி என்று சொல்லி அந்த நாடுகளை சுரண்ட வில்லை.

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க? அடேங்கப்பா?

வேகநரி said...

தமிழகத்திலே இலங்கை அகதிகள் எப்படி நடத்தபடுகிறார்கள்,தமிழகத்திலே சுயநலங்களுக்காக எப்படியெல்லாம் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை பாவிக்கிறாங்க ஒரு இலங்கை தமிழர் சொல்கிறார்.அவர் சொல்வது அவ்வளவும் உண்மை.
வியாசன் பதிவில் இருந்து இந்த இந்த தகவலை பெற்றேன் ஐயா.
http://tiny.cc/83pq2w

Anonymous said...

திபெத் அகதிகள், இலங்கை அகதிகள் உட்பட பாகிஸ்தானிய இந்துக்கள், வங்கதேச இந்துக்கள், வங்கதேச முஸ்லிம்கள், ஆப்கானியர் என பல அகதிகள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை திபெத் பிரச்சனையை சீனாவுக்கு எதிராக பயன்படுத்தக் கிடைத்த ஆயுதம். இலங்கைத் தமிழர் பிரச்சனை இலங்கையை அடி பணிய கிடைத்த ஆயுதம். திபெத்தியர்கள் துப்பாக்கி ஏந்துவதில்லை என்பதால் திபெத்தியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்காமல் தருமசால முதல் இந்தியாவின் பல இடங்களில் அகதி தளங்கள் அமைக்கப்பட்டன, அனைத்து நிலங்கள் சொந்தமாக்க முடியாது, வாடகையில்லா குத்தகை. திபெத்தியர் மலைவாழ் மக்கள் என்பதால் குன்று தோறும் குடியேற அனுமதிக்கப் பட்டனர். சரி இலங்கை விடயம் என்னவென்றால் ஈழத் தமிழ் போராளிகள் ஆயுதம் ஏந்தினர், அவர்கள் இந்தியாவில் நிலங்கள் கோரவில்லை, முகாம்கள் கோரவில்லை. இந்தியாவிடம் ஆயுதமும், பயிற்சியும் கோரினர், அதனால் அது கொடுக்கப்பட்டது. தமிழ் புலிகள் உட்பட அனைத்து இயக்கத்துக்கும் பயிற்சி, பணம், ஆயுதம் தமிழகத்தில் கொடுக்கப்பட்டது, சில குழுக்கள் டேராடூன், ஒரிசாவில் கூட பயிற்சி எடுத்தனர். இந்தியாவின் திட்டம் இலங்கையில் தனித் தமிழ் மாநிலம் அமைத்து அதன் மூலம் இலங்கையை கடிவாளம் இடுவது. இது திம்பு திட்டம் வரை சென்றது, அதன்படி 13 சட்டதிருத்தம், இந்திய ராணுவ வருகை, மாகாண அரசு அமைந்தது. இத்திட்டத்தை பிரபாகரன் எதிர்த்தார் பின்னாட்களில் தான், அமெரிக்காவின் தூண்டுகோலால். பிரபாவின் கோரிக்கை தமிழர்க்கு தானே தலைவர், தனித்தமிழீழமே தீர்வு. இந்திய அரசு இலங்கை அகதிகளை இந்தியாவில் வைத்திருக்க விரும்பவில்லை. திருப்பி அனுப்ப எண்ணியே 60,70 களில் தாயகம் திரும்பியோருக்கு உருவாக்கப்பட்ட முகாம்களில் ஈழத் தமிழர் தங்க வைக்கப்பட்டனர். புலிகள் - இந்தியா சண்டையிட முன்னர். முகாமில் கட்டாயமாய் இருக்க வேண்டும், பதிவு முறைகள் ஏதும் இருந்ததில்லை, சுதந்திரமாய் ஈழத்தமிழர் இருந்தனர். புலிகளின் சகோதர யுத்தம், சுயாட்சி மறுப்பு, சிங்கள அரசோடு இணைந்து இந்தியாவை தாக்கியது என தொடங்கி ராஜிவ் கொலையில் முடிந்தது வரை இந்திய விரோத கொள்கை எல்லாவற்றையும் தலைகீழாக்கியது. அதன் பின் தமிழ் புலி சார்ந்த ஏஜன்சிகள் அகதிகளை மேற்கு நாடுகளுக்கு கொண்டு சென்றது, மேற்கு நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்களையும் மக்களுக்கு அகதி அந்தஸ்துகளையும் கொடுத்தது. 2001 வரை இது தொடர்ந்தது, பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் மேற்கின் கொள்கைகள் புலிகள் அழிய வழி வகுத்தன. சீனா இலங்கைக்கு உதவியது, இந்தியா மவுனம் சாதித்தது. புலிகளின் கனவு கலைந்தது. இந்தியாவில் இருந்த ஏழை ஈழ அகதிகளை இந்தியாவும், புலிகளும், யாழ் மேட்டுக்குடி புலம்பெயர் சமூகமும், ஏன் தமிழ்நாட்டு தமிழர்களும் மறந்தே போயினர். :((

வேகநரி said...

//இக்பால் செல்வன் said...
இந்தியாவில் இருந்த ஏழை ஈழ அகதிகளை இந்தியாவும் புலிகளும் யாழ் மேட்டுக்குடி புலம்பெயர் சமூகமும் ஏன் தமிழ்நாட்டு தமிழர்களும் மறந்தே போயினர். :(( //

சகோ சொன்னது ஒரு துயராமான உண்மை.புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். இலங்கையில் இருந்த தமிழர்களையே கொன்றவர்கள் புலிகள்.ஆனா தமிழ் தமிழ் என்று சொல்லும் தமிழ்நாட்டு தமிழர்களும் மற்றும் யாழ் மேட்டுக்குடி புலம்பெயர் சமூகத்தின் புறக்கணிப்புமே மிகவும் கொடுமையானது.

Post a Comment