Monday, July 22, 2013

670. மரியான்







*


மரியான் என்ற பெயருக்கு ஒரு புதிய பொருள் தந்துள்ளார்கள் - மரணம் இல்லாதவன் - படத்திற்கு ஒரு செக்யூலர் கலர் வரணும்னு சொல்லியிருப்பாங்க போலும்! நானோ மரிய ராஜ் மாதிரி ஒரு கிறித்துவப் பெயரை சுருக்கி மரியான் அப்டின்னு கூப்பிடுறாங்கன்னு நினச்சுக்கிட்டேன். பாலா /ஜேடி குரூஸ் யாருடைய கருத்தோ இது!

பாலாவின் விளம்பரப் படங்கள் பார்த்து வியந்து, அதன்பின் மரியானின் டீசர் பார்த்து விட்டு படம் பின்னுடும்னு நினச்சு போனேன். ரொம்ப ஏமாற்றம். முதல் பாதி வழக்கமான தமிழ் சினிமாக் கதை. எம்.ஜி.ஆர். காலத்துக் கதை. கதாநாயகி நினைத்து நினைத்து மருக, தன் போக்கில் போகும் கதாநாயகன் ஒரு நாள் சட்டுப் புட்டுன்னு விழுந்துடுவார். இதை எந்த டைரடக்கர் எடுத்தாலும் அதே மசாலா வாசனைதான். இதில் என்னத்த மாத்திக் காண்பிக்க.

முதல் பாதி இப்படிப் போச்சு ... இரண்டாவது பாதி ஒரு adventure பகுதி. ஆனால் சரக்கு ரொம்ப கம்மி. வேலை செய்ய வந்த ஆளுங்களைப் பிடிச்சிட்டு அந்தக் கம்பெனிக்காரங்க கிட்ட காசு வாங்கணும் அப்டின்ற நிலமை புரட்சிக்காரர்களுக்கு. அதை ஒழுங்காகவும் காண்பிக்கவில்லை. ஒரே ஒரு போன் காலோடு அதை முடிச்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு காசும் வரலை .. கதையில் அழுத்தமும் இல்லாமல் போய் விடுகிறது. காசு இல்லாத அந்தப் போராளிகள் தீபாவளி வேட்டு விடுவதுபோல் ஆகாயத்தைப் பார்த்து சுட்டுக்கிட்டேடேடேடே இருக்காங்க. அட ..அதுகூட பரவாயில்லை; ராத்திரி ஒரு குத்துப்பாட்டு போட்டு ஒரு ஆட்டம் ஆடுறாங்க பாருங்க ... எனக்குப் புல்லரிச்சிப் போயிரிச்சி! வேற ஒண்ணும் இல்லை .. சேர்க்கையில் வந்த பழக்கம். எப்படியோ பெரிய டைரடக்கர் அப்டின்னு பெயர் வாங்கிட்ட மணிரத்தினம் தன் படத்தில் அனேகமா ஒரு குத்துப் பாட்டு போடுவாரே .. அதைப் பார்த்து இவரும் சூடு போட்டுக் கொண்டார் போலும். அந்த ‘ஆப்ரிக்கக் குத்துப் பாட்டோடு’  நம்ம தமிழ்ப்பாட்டை synch வேறு பண்ணியிருக்கார் டைரடக்கர்.

படத்தில் நிறைய hallucination வருது. ஒண்ணு மாத்தி ஒண்ணு நிறைய வருதா ... அதுனால் எது hallucination எது உண்மைன்னு நமக்கு சரியா புலப்பட மாட்டேங்குது. hallucination சாப்பாடு சரி ..புலியும் hallucination தானா? கடைசியில் முழங்கால் ஆழத்தில் நின்னு சண்டை போடுறாங்க. ஆனால் வில்லன் செத்ததும் ஆழமான கடலுக்குள் மூழ்கிறார். கதாநாயகன் முதலை மாதிரி. தண்ணிக்குள்ள போனதும் இல்லாத வீரமும், சக்தியும் வந்திருது. சாப்பிடாம நாள் கணக்கில இருக்கிற ஆளு வில்லனைப் போட்டுத் தள்றது ...ஓ! இது ஒரு தமிழ்ப்படமோ? இப்படியெல்லாம் கேள்விக் கேட்கப்படாதுல்லா!
வில்லன் தனியா வரணும் அப்டின்றதுக்காக ஒரு காரணமுமில்லாமல் கூட்டாளியைச் சுட்டுக் கொன்னுடுறாங்க.

கதாநாயகி அழகு. அழகு என்பதோடல்லாமல் நிறைய rich looks or modern looks உள்ள பொண்ணு. இந்தப் பொண்ணுதான் பூ படத்தில் வந்த பெண்ணான்னு ஆச்சரியாக இருந்தது. ஆனால் பூ படத்தில் அந்தப் பெண் கதையோடு மிகவும் ஒன்றியிருந்தது. அழகாக அங்கே தெரியவில்லை; ஆனால் கதாபாத்திரமாக ஒன்றி இணைந்திருந்தார். இங்கே அந்தப் பெண் நன்றாக நடித்திருந்தாலும் படத்தோடு ஒட்டாமல் கதாநாயகி தனித்து நிற்கிறாள். அவளை ஒரு கடற்கரைப் பெண்ணாகப் பார்க்க முடியவேயில்லை. அதோடு எல்லாப் பெண்களும் சேலையில் வர இந்தப் பெண் மட்டும் பாவாடை சட்டையில் வருவது அந்தப் பெண்ணைச் சூழலிலிருந்து ரொம்பவே தனிமைப்படுத்துகிறது.

அடுத்து சொல்றதைப் பார்த்து நிறைய பேருக்கு என் மேல் கோபம் வரலாம். ஆனால் மனசில பட்டதைச் சொல்லிடுவோம். படத்தில் நான்கு பாட்டுகள் என்று நினைக்கிறேன். முதல் மூன்று பாடல்கள் எனக்கு ஒட்டவில்லை. நாலாவது பாடலான நெஞ்சே எழு பாடல் முதலிலேயே கேட்டு பிடித்தது. மூன்றாவது பாட்டு படத்தில் வந்ததும் யார் இசைன்னு நானே கேட்டுக்கிட்டேன். ரஹ்மான் அப்டின்னு ஞாபகத்திற்கு வந்தது. அப்போ மனசில ஓடுனது இது: - எல்லோரும் சொல்ற அளவு ரஹ்மான் இல்லையோ? ஏத்தி விட்டு ரொம்ப ரசிக்கிறாங்களோன்னு தோன்றியது. அதோடில்லாமல், கடைசியில் கடல் சண்டை ஒண்ணு நடக்குது. சீன் ஆரம்பிச்சதும் கோவில் மணி ஒசை கேக்குது BGM-ல. வேணும் வேண்டாம்னு இல்லை ... இளையராஜா நினைவுக்கு வந்தார். rerecording அப்டின்னா அது அவர் மட்டும் தானா? ..... இப்படியெல்லாம் மனசுக்குள்ள நினப்பு வந்துட்டுப் போச்சு ..!

காமிரா யாரோ வெளிநாட்டுக்காரராம். நம்ம உள்ளூர்ல நல்ல ஆளாகப் பிடித்திருக்கலாம். கடலுக்குள் எடுத்த சில காட்சிகள் நன்றாக இருக்கு. ஆனால் பாலைவனத்தை எடுத்ததில் பாலைவனத்தின் grandeur எதுவும் தெரியவில்லை. ஏதோ background-க்கு screen போட்டு எடுத்த மாதிரி தெரியுது. vast space இருக்கிறமாதிரியே படம் எடுக்கவில்லை. நம்ம ஆளுக கிட்ட விட்டிருந்தா நல்லா எடுத்திருப்பாங்க.

 பயங்கரமான பாலைவனம்.முதலில் தரையெல்லாம் பிளந்து கிடக்கு. அதன் பிறகு ஒரே மணல் மேடு. ஆனால் ஒரு மணல் மேடுதாண்டியதும் அங்கே ஒரு கடல்! எங்க  கடலும், பாலையும் இப்படி இணைந்து இருக்குன்னு யோசிச்சேன்.  ஒண்ணும் தெரியலை!

சுருக்கமா சொல்லணும்னா ...

தனுஷ் மேல ஆடுகளம், மயக்கம் என்ன? படங்களிலிருந்து ஒரு தனி மரியாதை. கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஆனால் இந்த ஆடுகளம் சரியாக அமையவில்லை. முதல் பாதி .. காதல் கதைன்னு சொன்னேனா.. பழைய அவியலை மிகப் பழைய பாத்திரத்தில் தர்ராங்க. 

இடைவேளையில் மனதில் தோன்றியது: இந்த மாதிரி படத்தில் நடிக்கிறதுக்கு தனுஷ் எதுக்கு? நம்ம விஜய் பத்தாதா?
இரண்டாம் பாகம்: அழுத்தமான பகுதி. நன்றாக எடுத்திருக்க வேண்டும். ஆழமில்லாமல் பாலா தவற விட்டுட்டார்.



*


8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பத்து நாள் சாப்பிடவில்லை என்றாலும் நாம நாயகனுக்கு அசுர பலம் வரும்... ஹிஹி... // பழைய அவியலை மிகப் பழைய பாத்திரத்தில் தர்ராங்க...// நல்ல விமர்சனம்...!

டிபிஆர்.ஜோசப் said...

நானும் நேத்துதான் பார்த்தேன். மனைவி, மகளோட பாத்ததால எதுவும் கமென்ட் அடிக்காம பாக்க வேண்டியதாயிருச்சி.

என் மனைவிக்கு பயந்து இல்ல. என் மகளுக்கு பயந்து!

மனசுக்கு தோனுத அப்புறமா ப்ளாகுல எழுதிக்கலாம்னு படம் முடியற வரைக்கும் பொறுமையா பார்த்தேன்.

ஒங்கள மாதிரிதான் எனக்கும் தோனிச்சி.. குறிப்பா இந்த படத்துக்கு இளையராஜா ம்யூசிக் போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும்னு நானும் யோசிச்சேன்.

ஒருவேளை நமக்கு வயசாயிருச்சோ....

தருமி said...

//நானும் நேத்துதான் பார்த்தேன் ...ஒருவேளை நமக்கு வயசாயிருச்சோ....//

இருக்கும் .. இருக்கும். நானே சனிக்கிழமை தியேட்டரில் வெள்ளைமுடியோடு படம் பார்த்த ஒரே ஆள் என்று என்னைப் பற்றி நினைத்தேன். நீங்களும் அந்த ‘லிஸ்ட்டில்’ இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

முதல் மூன்று பாட்டுகள், பாட்டுகளின் இசை, பாட்டு வைக்கப்பட்ட situations எதுவும் பிடிக்கவில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

I've invited you for a chain post. Pl.visit my blog. Thanks.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல விமர்சனம்

ஜோதிஜி said...

யூத்தாக மாறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

Anonymous said...

உங்களின் அத்தனை கருத்தையும் ஏற்கின்றேன். படத்தில் கதை என்ன? வெளிநாட்டுக்காரன் எடுத்திருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் விறு விறு என எடுத்திருப்பாங்கள். முதல் பாதி மிகவும் நீளம், சலிப்பு. தேவையற்ற காட்சிகள் மிகுதி, இரண்டாம் பகுதி அழுத்தம் இல்லை, தீவிரவாதிகள், கம்பனி, பின்புலம் எதுவும் விளக்கப்படவில்லை. நல்ல வேளை கறுப்பன் எவனும் தமிழ் பேசவில்லை, கிளைமாக்ஸ் செம மொக்கை. யதார்த்தம் மீறிய காட்சிப்படுத்தல்கள். சூடானில் கடல் உண்டா?! ம்ம்ம். இரு பாடல், பார்வதியின் அழகு மட்டுமே பிளஸ்.. மற்றவை ம்ம்ம் ஊம்..

வேகநரி said...

ஐயா, நான் இந்த பட பாடல்கள் இதுவரை கேட்கவும் இல்ல. படத்தை பார்க்கவுமில்லை. விமர்சனத்துக்கு நன்றி. நல்ல படத்தை பார்க்காம விட்டுட்டுமோ என்ற கவலையில் இருந்து காப்பாற்றியதற்காக.

Post a Comment