Wednesday, March 12, 2014

726. கிறித்துவர்களின் கண்களுக்கு .... 2அதிசயங்கள் / புதுமைகள் என்ற பெயரில் பல கதைகள் கிறித்துவத்தில் அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது. நற்செய்திகளிலும். பழைய, புதிய ஏற்பாடுகள் இரண்டிலும் அதிசயங்கள் பற்றிய செய்திகள் பல உண்டு. மூன்று நாள் மீன் வயிற்றுக்குள் இருந்து வெளிவருவதும், செங்கடல் பிளந்து யூதர்கள் தப்பியதும் பழைய ஏற்பாட்டுக் கதைகள். மண்ணைப் பிசைந்து குருடனின் கண்ணில் தேய்த்து கண் தெரிய வைத்ததுவும், ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததும், செத்து அடக்கம் செய்யப்பட்ட லாசரை உயிரோடு எழுப்பியதும், நீர் மேல் நடந்ததுவும்  ஏசுவின் திருவிளையாடல்களாக புதிய ஏற்பாட்டில் வருகின்றன. 

இப்படி தங்கள் வேத நூலில் பல புதுமைகளைப் பார்த்துப் பழகியதால் கிறித்துவர்கள் இன்னும் தொடர்ந்து பல அதிசயங்களைக் கண்டு கொண்டிருக்கிறார்கள் போலும். பல வரலாற்று நிகழ்வுகள், பல அதிசயங்கள் என்று தொடர்ந்து பல செய்திகள் கிறித்துவ வரலாற்றில் உண்டு. ஆனால் ஊன்றிப்  பார்த்தால் அதன் பின்னால் கிடைக்கும் செய்திகள் பல அதிசயங்களைப் பொய்யாக்குகின்றன. நம்புவோருக்கு அதிசயங்களாகவும், ஆய்வோர்களுக்கு அவை வெறும் பொய்களாகவும் போய் விடுகின்றன. இன்றும் பல கோவில்கள், பல புனிதர்கள் பல புதுமைகளைச் செய்வதாக அவர்களைப் பின்பற்றுவோர்களுக்குத் தெரிகிறது. இப்போதும் கண்ணில் ரத்தம் வருகிறது என்று சின்னாள் ஏதாவது ஒரு கோவிலில் கூட்டம் கூடுகிறது. பின் அதில் காற்றில் கரைந்து விடுகிறது! Instantaneous miracles !! இதில் நம்பிக்கை மட்டுமே முக்கியமானது. அறிவுக்கு அங்கு சுத்தமாக வேலை இல்லை.  கிறித்துவ வரலாற்றில் இப்படித் தொடரும் சில புதுமைகளைப் பற்றி இங்கு சில விளக்கங்கள். 


Shroud of Turin

சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதனை தலை முதல் கால்வரை உடலின் இரு பக்கமும் மூடிய ஒரு நீளத் துணியில் கிறித்துவின் உருவம் எதிர் மறையாக negative image – இருப்பதாக ஒரு செய்தி பல நூற்றாண்டுகளாக கிறித்துவத்தில் வலம் வருகிறது. இத்துணி இன்னும் இத்தாலியில் உள்ள டூரின் என்ற இடத்தில் உள்ள Cathedral of Saint John the Baptist என்ற கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

14- ம் நூற்றாண்டு வரை இந்த துணியைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை; ஆனால் அதன் பிறகு அவை பல ஆய்வுகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.  ஆயினும் உறுதியாக எந்த நிலையையும் எடுக்க முடியாத படி பல முடிவுகள்; பல குழப்பங்கள். 

Pierre d'Arcis என்ற பிஷப் Antipope Clement VII என்ற போப்பிற்கு 1390-ம் ஆண்டு இத்துணி ஒரு போலி என்றும் அதை உருவாக்கிய கலைஞன் இதனை ஒப்புக்கொண்டு விட்டான் என்றும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

1543-ல் John Calvin, தனது நூலான  Treatise on Relics-ல், “கிறித்துவின் மரணத்தை விவரித்த யோவான் தன் நற்செய்தியில் ஏசுவின் உடல் நீளத் துணிகளால் - strips of linen – மூடப்பட்டதாகவும், தலைக்கு மட்டும் தனியாக ஒரு துணி வைத்து மூடியதாகவும் கூறியிருக்கிறாரே, அது பொய்யா?’ என்று கேட்கிறார்.

ஆனால் 1981-ல் மூன்றாண்டுகள் ஆய்வு செய்த  The Shroud of Turin Research Project (STURP) இந்த துணி சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் உருவத்தைக் கொண்டிருக்கிறது. துணியில் இருக்கும் கறை ரத்தக் கறைதான் என்று சொல்லியுள்ளது.

மாற்றாக, Swiss Federal Institute of Technology, University of Arizona, University of Oxford போன்ற ஆய்வுக் கூடங்கள் இத்துணியின் காலம் 1260 -1390 (Carbon dating method) என்று உறுதியாகச் சொல்கின்றன.
முடிவில்லாமல் இந்தக் கதை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  Argument continues ….

------------------------------------------------------------------------------

DONATIO CONSTANTINI

ரோமப் பேரரசர் கான்ஸ்டான்டின் என்பவர் தனக்கிருந்த தொழு நோயை சில்வஸ்டர் - Pope Sylvester I (reigned 314–335) -  என்ற போப் குணமாக்கியதால் நன்றிக் கடனாக தன் ராஜ்யத்தில் பெரும் பகுதியை திருச்சபைக்கு எழுதி கொடுத்ததாக ஒரு ஆவணத்தின் மூலம் தெரிவித்ததாக ஒரு கதை உண்டு. அந்த ஆவணத்தின் மூலம் போப்பின் ஆட்சிக்கு பல இடங்களும் நன்கொடைகளும் வந்தன. இந்த நிகழ்வால் அரசனும் மனம் மாறி கிறித்துவன் ஆனதாகவும் அந்தக் கதை தொடர்கிறது. 

ஆனால் இந்த ஆவணம் ஒரு போலி ஆவணம் என்பது Lorenzo Valla என்ற அறிஞரால் 1451-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டதல்ல; 1440-ம் ஆண்டு தான் எழுதப்பட்டது என்பதை மிகுந்த ஆணித்தரமாக இவர் நிரூபித்து விட்டார். 

இந்தப் போலி ஆவணத்தின் மூலம் அரசன் சில்வஸ்டர் என்ற போப்பிற்கும், அவருக்குப் பின் வரும் போப்புகளுக்கும் கொடுத்த பெரும் அன்பளிப்புகள்: 

Supremacy of the four principal sees, Alexandria, Antioch, Jerusalem, and Constantinople, as also over all the churches of God in the whole earth". For the upkeep of the church of Saint Peter and that of Saint Paul, he gave landed estates "in Judea, Greece, Asia, Thrace, Africa, Italy and the various islands".The emperor  also granted imperial insignia, the tiara, and "the city of Rome, and all the provinces, places and cities of Italy and the western regions.

இது மட்டுமல்லாது, இந்த அன்பளிப்புகளால் பேரரசன் ரோமை விட்டுக் கொடுத்து விட்டு தன் நாட்டின் கீழ் திசையில் தனக்கு ஒரு புதிய தலைநகரைத் தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லப்பட்டு இருந்தது. 

தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலை நாட்ட மதநம்பிக்கைகளை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு இது ஓரு உதாரணம்.

http://en.wikipedia.org/wiki/Donation_of_Constantine

 *****

மூன்று ரகசியங்கள் சொன்ன பாத்திமா மாதா

1917-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதியிலிருந்து அக்டோபர் வரை போர்ச்சுகலில் லூசியா என்ற ஆடுமேய்க்கும் ஒருபெண்ணுக்கும் அவளது உறவினரான இன்னும் இருவருக்கும் பாத்திமா என்னும் இடத்தில் மேரி மாதா காட்சியளித்ததாக ஊரும் உலகமும் பேசியது. அந்த இடத்திலிருந்து பாத்திமா மாதாவின் சிலை ஒன்று செய்து உலகெங்கும் அதனைக் கொண்டு சென்றார்கள். என் பள்ளிப் பருவத்தில் மதுரைக்கு வந்த இந்த சொரூபத்தைக் கொண்டு வந்து ஆராதித்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போதே மாதா மூன்று ரகசியங்களைக் கொடுத்ததாகவும், அவைகளைப் படித்தால் பல விஷயங்கள் தெரியும் என்றும் கூறினார்கள்.  

கிறித்துவத்தில் உலகம் விரைவில் முடியப் போகிறது என்று பல நூற்றாண்டுகளாகச் சொல்லி வருவது வழக்கம். இதோ முடிவு வந்து விட்டது என்றெல்லாம் போஸ்டர் போட்டு தங்கள் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பார்கள். ஆகவே இந்த ரகசியங்கள் பற்றி அறுபதுகளில் அடிக்கடி பேசுவார்கள். அப்போதெல்லாம் எப்போது உலகம் முடியப் போகிறது என்று மாதா சொல்லி விட்டார்கள் என்று கோவிலில் சொல்லுவார்கள். நானும் ஆர்வமாக அதைக் கேட்டு, ரகசியம் தெரிந்து கொள்ள பெரும் ஆவலோடு இருந்தேன். 

முதல் இரு ரகசியங்கள் உடனே வெளியிடப்பட்டன. ஆனால் மூன்றாவது ரகசியம் வெளியிடப்படவில்லை. ஆனால் லூசியா நோய்ப்படுக்கையில் இருக்கும் போது பிஷப்  Silva கட்டளையிட்டதால், மாதாவின் கட்டளையை மீறி லூசியா மூன்றாவது ரகசியத்தை 15 செப்டம்பர்,1943  -ல் எழுதிக் கொடுத்து, அதனை 1960-ல் திறந்து படிக்க வேண்டுமென்பது மாதாவின் விருப்பம் என்றார்.1960 ஆண்டு என்ன ஆனதோ ... பல காலம் இந்த ரகசியம் சிதம்பர ரகசியமாகவே  இருந்தது. பின் 2000-ம் ஆண்டு ஜூன் 26-ல் வெளியிடப்பட்டது. 

ஆனால் வெளியிடப்பட்ட பின்பும் இந்த ரகசியம் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியதிருந்தது. இது உண்மையான ரகசியம் இல்லை என்றனர் பலர். லூசியா எழுதிக் கொடுத்த ரகசியம் இது அல்ல என்றனர். அது நீளமாக இருந்தது என்றனர். எப்படியோ காலப் போக்கில் எல்லாம் மறந்து விட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டன. 

முதல் ரகசியம்:  உலகத்தின் கீழே பேய்களும், எரியும் நெருப்பும் நிறைந்த ஒரு பெரும் நெருப்புக் கடல்; அழுகைக் குரல்; அச்சம் நிறைந்த சூழல். பேய்கள் பல உருவத்தில் இருந்தன. மிகவும் பயங்கரமான இதை ஒரு சில வினாடிகளே பார்த்தோம்; அதற்குள் மாதா எங்களைக் காத்து, மோட்சத்திற்கு அழைத்து விடுவதாகச் சொன்னார். நாங்களும் அச்சத்திலிருந்து வெளி வந்தோம்.

இரண்டாம் ரகசியம்: முதல் உலகப்போர் முடிகிறது. ஆனால் மனிதர்கள் மாறா விட்டால், ரஷ்ய நாடு மனம் மாறா விட்டால் இன்னொரு யுத்தம் விரைவில்  Pope Pius XIஎன்பவர் போப்பாக வரும் போது (இவர்  6 February 1922 to his death in 1939-ல் போப்பாக இருந்தார்.) மீண்டும் யுத்தம் வரும். //அப்போது வானத்தில் மிகவும் பிரகாச ஒளி தெரியும். அதனைத் தொடர்ந்து பஞ்சமும் பட்டினியும் வரும். கிறித்துவர்களும் போப்பும் அழிவைச் சந்திப்பார்கள். ஆனாலும் இறுதியில் கடவுளின் தூய இதயம் வெற்றி பெறும். கடவுள் ரஷ்ய நாட்டை உய்வித்து என்னிடம் தருவார். அப்போது உலகில் அமைதி நிலவும்.

இதை ஒட்டி நான் பார்த்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. என் சிறு வயதில் எங்கள் கோவில்களில் இரண்டு ஜெபம் அடிக்கடி செய்வார்கள். ஒன்று: ரஷ்ய நாடு மனம் திரும்பி, அவர்கள் கிறித்துவ மதத்திற்குள் வரவேண்டும். இரண்டு: அப்போதைய பிரதமர் நேரு மனம் திரும்பி கிறித்துவராக வேண்டும். அவர் கிறித்துவரானால் இந்தியா முழுவதும் கிறித்துவ நாடாகி விடுமே! ஆனாலும் ... நாங்கள் எல்லோரும் பாவம்! அன்று நாங்கள் ஜெபம் செய்தும், எங்களது அந்த இரண்டு ஜெபங்களும்  இன்று வரை கேட்கப்படவே இல்லை! :(     

மூன்றாவது ரகசியம்: தேவதூதர் உலகத்தை அழிப்பது போல் வாளேந்தி வர, அதனை மாதா வலது கையால் தடுக்கிறார். தேவதூதர் மனம் திருந்துங்கள் என்று கத்துகிறார். வெள்ளையுடையில் ஒருவர் அவர் போப்பாக இருக்கலாம் அவருடன் பிஷப், சாமியார்கள் என்று பலர் ஒரு மலையில் ஏறுகிறார்கள். வழியில் ஒரு நகரம். பல துன்பங்களும், செத்த உடல்களும் கிடக்கின்றன. இறுதியில் மலை மீது ஏறி ஒரு சிலுவையைப் பார்க்கிறார்கள். அப்போது போப் துப்பாக்கியாலும், அம்புகளாலும் துளைக்கப்படுகிறார். எல்லோரும் மடிகிறார்கள். நின்றுகொண்டிருந்த சிலுவையின் இரு பக்கமும் இரு தேவதூதர்கள். அவர்கள் இறந்த வேத சாட்சிகளின் இரத்தத்தை ஒரு தீர்த்த செம்பில் பிடித்து கடவுளிடம் செல்லும் ஆன்மாக்கள் மேல் தெளிக்கிறார்கள்.
 
http://www.marianland.com/thirdsec.html http://en.wikipedia.org/wiki/Three_Secrets_of_F%C3%A1tima#First_secret


இப்பதிவு  இன்னும் கொஞ்சூண்டு வளரும் ....


  *

10 comments:

வவ்வால் said...

தருமிய்யா,

எல்லா மதத்திலும் அற்புதங்களுக்கு மட்டும் குறைவேயில்லை, அதுவும் கிருத்துவ மதத்தில அடிக்கடி அற்புத சுகமளிக்கும் ஆவிப்பெருங்கூட்டமெல்லாம் வேற நடத்தி அற்புதம் செய்கிறார்கள் :-))

# மற்ற மதத்தில எல்லாம் கடவுளே நேரா வரதா சொன்னதில்லை, ஆனால் இந்து வைதீக மதத்தில எல்லாம் கடவுளே நேரா வந்து அற்புதம் செய்திருக்காரே,

முடியில(அது தலை முடியானு எனக்கு ஒரு டவுட்டு?) வாசனை இருக்கா இல்லையானு முத்துராமனுக்கு டவுட்டு வந்தாக்கூட சிவபெருமான் சிவாஜி வந்து "பொங்கு தேர் வாழ்க்கை அஞ்சரைத்தும்பி , என பாட்டுலாம் எழுதிக்கொடுப்பாரு :-))

உங்களுக்கே மறந்துடுச்சா?

பிட்டுக்கு மண் சுமந்து "100 நாள் வேலை திட்டமெல்லாம் "செய்திருக்கார் சிவன்.

நரி பரியானது எல்லாம் அங்கே தானே.

சுண்ணாம்புக்காளவாயில் கூட குளுகுளூனு ஏசிபஓட்டு திருநாவுக்கரசரை காப்பாத்தினது, கல்லு உலக்கையை மிதக்க வச்சதுனு ஏகப்பட்ட அற்புதங்கள் உண்டே,

தருமி said...

அப்பாடா ...!
ஒரு சின்ன சந்தோஷம், வவ்ஸ்!

நீங்க வழக்கமா பின்னூட்டத்தில் புதுசா ஏதாவது சொல்லும் போதெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட்டு விடுவேன். ஆனால் இந்த தடவை நீங்க சொன்ன விஷயங்களை நான் ஏற்கெனவே சொல்லிட்டேனேன்னு பெரிய சந்தோஷம் தான்!

இப்பதிவில் 6 வது பாய்ண்டைப் பாருங்களேன் ..... !

வவ்வால் said...

தருமிய்யா,

ஆகா உங்களுக்கு இதுல இப்படி ஒரு சிற்றின்பமா(சின்ன சந்தோஷம்),இப்படினு தெரிஞ்சிருந்தா அடக்கி வாசிச்சு ,நெறைய சிற்றின்பம் பெற செய்திருப்பேனே அவ்வ்!

இன்னும் கொஞ்சம் விரிவா அலசலாம்னு தான் பார்த்தேன் ,அதுக்குள்ள யாராவது பின்னூட்டம் போட்டுருவாங்க, ஹி...ஹி முதல் வடைய கவ்விடலாம்னு தான் கணக்கை ஆரம்பிச்சேன்!

# மதம்னு வந்துட்டால் அற்புதங்களை நிகழ்த்தித்தான் கூட்டம் கூட்டுவார்கள், வரலாற்று ரீதியாக (புராணமா)அப்படி அற்புதங்களை நிகழ்த்தி மக்களை சேர்க்க கூடாது சொன்ன மார்க்க தரிசி புத்தர் மட்டுமே.

அவரோட சீடர் பிண்டோலா பரத்வாஜ் என்பவர் எந்த உருவம் வேண்டுமானாலும் எடுப்பாராம், அப்படி குருவியா மாறி மக்களை கவர்ந்ததைக்கேள்விப்பட்டு இனிமே அப்படிலாம் செய்யக்கூடாதுனு கண்டிச்சும் இருக்காராம், அதே போல புத்த பிக்குகள் "அதிசயம்" செய்து மக்களை கவரவும் தடைப்போட்டிருக்காரு.

http://www.buddhanet.net/e-learning/buddhism/lifebuddha/2_26lbud.htm

# உங்களோட அந்தப்பதிவைப்படிச்சேன் ,முன்னாடியே அலசிட்டிங்களே.

அப்பதிவில் இறுதியாக இப்படி முடிச்சிருக்கீங்க,

//செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?//

இதைத்தான் புத்தர் அப்பவே சொன்னது, வாழும் போது பக்தி என்றப்பெயரால் அதிகமா துன்புறுத்திக்கொள்வதும் தவறு, அதிகமா சந்தோஷத்தில் மிதப்பதும் தவறு, இரண்டுக்கும் இடையே "நடு வழியில்" செல்ல வேண்டும் என்று சொல்லி அதையே தம்மா(தர்மா) என்கிறார்.

இறந்த பின் சொர்க்கம்,நரகம்லாம் இல்லை, அவரவர் கர்மா படி மீண்டும் சுழற்சியில் பிறப்பார்கள் என்கிறார். அவரே அப்படி "வந்தவர் அல்லது சென்றவராம்" அதை "தத்த கதா "என்கிறார்.

அந்த வெளிச்சம் வந்ததை தான் "நிர்வாணா" என்கிறார், ,அப்போ உங்களுக்கு வெளிச்சம் வந்து ரொம்ப நாளாச்சு!!!

# அரேபிய இறைத்தூதர் , நிலாவை இரண்டாக பிளக்க வச்சு , ரெண்டு நிலா உருவாக்கி அற்புதம்லாம் நிகழ்த்தியிருக்காரு,அதை வேற கேரளாவில இருந்த கொடுங்காலூர் சேர மன்னன் பார்த்துட்டு ,அரேபியாவுக்கு கப்பலேறிப்போய் மதம் மாறினதா சொல்லுறாங்க,ஆனால் அரேபியா போன மன்னன் அங்கேயே செத்துட்டாராம், சாகும் முன்னர் அவர் அனுப்பிய ஒருத்தர் கேரளாவுக்கு வந்து,மன்னர் பேர சொல்லி கொடுங்காலூரில் ஒரு மசூதிக்கட்டியிருக்காராம், அதான் இந்தியாவிலே பழமையான மசூதினு சொல்லுறாங்க.

இறைத்தூதர்கள் எப்படிலாம் "அற்புதம் செய்து" மதம் வளர்த்திருக்காங்க அவ்வ்!

#//You talk to God, you're religious.
God talks to you, you're psychotic.” //

இப்படிலாம் சொல்லுவாங்கனு தெரிஞ்சு தான் அரேபிய இறைத்தூதர்க்கிட்டே ,ஜிப்ரீல் என்ற தேவதையை அனுப்பி பேசினார் அல்லா அவ்வ்!

வவ்வால் said...

கிருத்துவத்தில் "அற்புதம் நிகழ்த்தும்" வல்லமைக்கு தனியிடம் எப்பவும் உண்டு, எதாவது அற்புதம் செய்துக்காட்டினாத்தான் "புனிதர் பட்டம்" என ரூல்ஸ் எல்லாம் வச்சிருக்காங்களே அவ்வ்!

மினிமம் ரெண்டு அற்புதம் செய்துக்காட்டி ஆவணப்படுத்தியிருக்கணுமாம், அன்னை தெராசா ஒன்னு தான் செய்தாங்கனு இன்னும் வாட்டிகன் "புனிதர் பட்டம்" தர மாட்டேங்குது!

பி.சி சர்க்கார் மட்டும் கிருத்துவராக மாறினால் உடனே புனிதர் பட்டம் கிடைச்சிடும் :-))

காரிகன் said...

தருமி சார்,
'The Shroud Of Turin" பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெரியாதா உங்களுக்கு? மற்றபடி மாதா காட்சிகள் போலி என்பதை பல கேதலிக் நம்பிக்கையாளர்களே ஒத்துக்கொள்வார்கள். அற்புத சுகமளிக்கும் கோமாளிக் கூட்டம் வெள்ளை அங்கி உடுத்தும் பெண்டகாஸ்ட் சபையினரின் சர்கஸ். மதம் என்று வந்துவிட்டாலே பல கேள்விகளை மூளைக்கு அனுப்ப முடியாது. கிருஸ்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய கிருஸ்துவர்கள் விமர்சனங்களை மூரக்தனமாக எதிர்கொள்வதில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்.

தருமி said...

//'The Shroud Of Turin" பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெரியாதா உங்களுக்கு? //

முடிவில்லாமல் இந்தக் கதை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. Argument continues …. - இப்படி சொல்லி விட்டேனே...!

Ant said...

அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கட்டுபாட்டில் குடிமக்களை வைத்திருக்க வேண்டிய தேவை அன்றுமுதல் இன்றுவரை உள்ளது. அதிகாரத்தை எதிர்க்காதவரை ஆன்மீன்கவாதிகளுக்கு அது ஆதரவாக இருக்கும் இல்லாத நிலையில் குற்றவாளிகளுக்கான நிலைதான் அந்தகாலத்தில் அதற்கு பெயர் கடவுள் நிந்தனை இந்த காலத்தில் அது இறையான்மையாகவும் பரிணமித்துள்ளது.

DEVAPRIYA said...

ஐயா,
லூர்டஸ் மேரி மாதா அதிசயங்கள் செய்ததானதை; கத்தோலிக்க கமிட்டி முந்தைய 10 ஆண்டுகளில் நடந்ததானதை 3 நிலைகளில் ஆய்வு செய்து 10- 15 அதிசய்ங்கள் ஏற்கத்தக்கன என 50களில் வெளியிட, அதை அறிஞர்கள் - டாக்டர்கள் பார்க்க ஒரு நிகழ்வு கதையில் கூட சாட்சியின் மருத்துவ நிலை- முன்பு - பின்பு தரப்படவில்லை என புத்தகம் எழுதியதை ஆப்ரகாம் கோவுர் புத்தகத்தில் படித்துள்ளேன்.

நீங்கள் பைபிள் அதிசய்ங்களையே முறையாக விமர்சனம் செய்யாமல் பின்னர் கதைக்கு சென்றுவிட்டீர்.

ஒத்த கதை சுவிகளில் எல்லா வியாதிகளிலும் - தோல், உட்பட அனைத்துமே பேய் ஓட்ட நோய் நீங்கியது, ஆனால் யோவான் சுவியில் ஒரு பேய் ஓட்டுதல் கூட கிடையாது.
முதலில் புனையப்பட்ட மாற்கு சுவியின் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய ஏடுக்ளில் ஏசு உயிர்த்து எழுந்தது கதை சொல்லு 16ம் அத்தியாயம் 8ம் வசனத்தோடு முடிகிறது. மாற்கு 70 ல் வரையப்பட்டது. சர்ச்படி மாற்கு பேதுரு சீடர். உயிர்த்து எழுந்த கதை அத்தனையும் கட்டுக்கதையே.
http://pagadhu.blogspot.in/2012/07/1.html
http://devapriyaji.wordpress.com/2012/04/02/jesus-resurrection-myth/

DEVAPRIYA said...

சர்ச் கட்டுப்பாட்டில் தான் ஐரோப்பா இருந்தது.அதன் அராஜகம் தாங்காது மக்கள் எழ் எழுந்ததே செக்யுலரிசம் எழுந்தது. கத்தோலிக்கம் உடைய ப்ரோட்டஸ்டண்ட் வந்தது. இன்றைக்கு 50000 வெவ்வேறு பிரிவுகள் வந்துள்ளது.

Ant said...

எந்த நூற்றந்துகளிலும் இல்லாத காரியம் இந்த 19 , 20ம் நூற்றாண்டுகளில் நடந்தேறி 21ம் நூற்றாண்டிலும் இது தொடர்கிறது.
http://www.zionpuram.com/?q=node/336

Post a Comment