Thursday, July 07, 2016

895. DOWN .. DOWN … FACEBOOK



*

என்ன ஆச்சு எனக்கு?

ரொம்ப நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது. திடீர்னு எப்படி ப்ரேக் விழுந்திச்சு. ஏதோ வாரத்துக்கு ஒண்ணோபத்து நாளைக்கு ஒண்ணோன்னு ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ நாலஞ்சு பேர் பார்த்துட்டு, எப்பவாவது யாரோ ஒருத்தர் ஒரு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்க  … நாளும்  கிழமையும் நல்லாதான் போய்க்கிட்டு இருந்திச்சு. இன்னைக்கா நேத்திக்காபதினோரு வருஷமா ஒரு மாதிரி இப்படி தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.

முதலில் கொஞ்சம் சுய புராணம். அடுத்து கொஞ்சம் மதுரை .. கொஞ்சம் சமூகம் அப்டின்னு போச்சு. அடுத்து மதங்களைப்பற்றி, இறைமறுப்பாளர்களின் புத்தகங்கள் என்று சூடாக் கொஞ்ச காலம் ஓடியது

புதியதாகத் தெரிந்த விஷயங்களை எழுதி முடித்ததும் இனி அடுத்தது எதை எழுதலாம்னு யோசிச்சிவேகம் குறைந்து போச்சு.

பெருமாள் முருகன் புத்தகம் வாசித்து எழுத குறிப்பெல்லாம் எடுத்து வைத்தேன். விட்டுப் போச்சு. அப்போ விழுந்த ப்ரேக் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்

தேர்தல் வந்தது. நிறைய எழுத நினைத்துஒன்றுமே எழுதாது விட்டு விட்டேன். தேர்தல் முடிந்த பின் ஒரே  சோகம்! அதையாவது எழுதலாமான்னு நினச்சேன். சோகத்தில் அப்படி இருந்தாச்சு.

நடுவில் வந்த விளையாட்டு பந்தயங்கள் – கால்பந்து & டென்னிஸ் – பற்றியெல்லாம் எழுத ஆசை தான். ஆனால் எழுதவேயில்லை.

நாடல் தோற்றது, வீனஸ் வில்லியம்ஸ் இன்னும் Steffi Graf recordயை முறியடிக்க முடியாமல் போகும் வருத்தம் பற்றியெல்லாம் எழுத ஆசை. எழுத நினைத்தேன். எழுதவேயில்லை.


அட… நேற்று இரவு இரண்டரை மணி வரை நடந்த அரையிறுதி ஈரோ கோப்பை கால்பந்து போட்டி – Portugal X Wales – பற்றி எழுதிடணும்னு நேற்று நினச்சேன். ஆனால் எழுதவில்லை. 

ஜிகாத் பத்தி தொடர்ந்து எழுதி வந்தேன் பல பாகங்களாக.  அது நிற்பது போல் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.   அதுவும் விட்டுப் போச்சு

மதங்களைப் பற்றி புதிதாக எழுத இன்னும் எந்த சமய நூலும் புதியதாக வாசிக்கவில்லை

சென்ற சென்னைப் புத்தக விழாவில் ஏசு பற்றி இரு புத்தகங்கள் வாங்கினேன், வாசித்து ஏதாவது எழுத முடிந்தால் எழுதணும்னு ஆசையை மனசுக்குள்ள வச்சிருக்கேன். எப்போ வாசித்து முடித்து …. எப்ப எழுதப் போகிறேனோ தெரியவில்லை.


என்ன தான் ஆச்சுன்னு யோசிச்சிப் பார்த்தேன்.

என்ன ஆச்சு …? சின்னத் தடைகள். அதில் சில ப்ரேக்குகள். எனக்கு ஒருவியாதிஉண்டு – procrastination. ஒரு வேலை செய்ய நினைப்பேன். ஆனால் வழக்கமாக அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பேன். எப்போ அதை நிஜமாகச் செய்வேனோ .. எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!!

இந்த லட்சணத்தில் எழுதாமல் விட்டதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டு விட்டது. அது ஒரு சைட் எபக்ட்!  

கணினியைத் திறந்தாமல் ஏதாவது எழுதலாமேவென தோன்றும் முன்பு. இப்போ இந்த சனியன் பிடித்த முகநூல்னு ஒண்ணு இருக்கேஅந்தப் பேய் ஆளை முழுசா இழுத்திருச்சு. கணினி திறந்தாச்சாமெயில் பார்த்தாச்சாஅடுத்து முகநூல் அப்டின்னு ஆகிப் போச்சு. ஒரு காலத்தில் கணினி திறந்ததும் அடுத்ததாகதமிழ்மணம்திறப்பது  வாடிக்கையாக இருந்ததுஇப்போ கணினி …மெயில்அடுத்து முகநூல். அடஅதப்பார்க்க ஆரம்பிச்சுநம்ம ப்ரேக் பிரச்சனை வந்ததும்  வெறுமனே முகநூலில் முங்கி முத்தெடுக்கஅட .. ஒரு பேச்சுக்கு சொன்னேன்முத்தெடுக்க முகநூலா வேணும்னு இப்ப நினச்சிப் பார்க்கிறேன். ஆக டைமெல்லாம் முகநூலிலேயே போயிருச்சி. நொண்டிக்கு ஒரு குச்சி கிடச்ச மாதிரி முகநூல் ஆகிப் போச்சு.

ஆனாலும் ஒரு சந்தேகம். நான் நொண்டியானதால் குச்சியே கதின்னு முகநூல் பக்கம் போய்ட்டேனாஇல்லகுச்சி கிடச்சதால நொண்டியாகி விட்டேனா?

தெரியலை.

இதைக் கண்டு பிடிக்க ஒண்ணு பண்ணப் போறேன். முகநூலுக்கு சில நிமிசம் மட்டும். அதன் பின் எப்போதும் திறப்பது போல் blogger.com போயிர்ரதுன்னும் முடிவு பண்ணியிருக்கிறேன்.

ஆயிரம் சொல்லுங்க … blog எழுதி காலா காலத்துக்கும் நாமளாவது அதைப் பார்த்துகிட்டு இருக்கிறதில்ல உள்ள சுகம், சந்தோஷம்,  மகிழ்ச்சி முகநூலைப் பார்க்கிறதில கிடைக்கிறதில்லை. அதுனால் முகநூலை கொஞ்சம் ஓரத்தில் தள்ளி வைத்து விட்டு …. blogger.comக்குப் போயிர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

என்ன ஆகுதுன்னு பார்ப்போம் ….

பக்கத்து வீட்டு பாய் ரம்ஜானுக்குக் கொடுத்தனுப்பிய  பிரியாணி & தாள்ஸா சாப்பிட்ட ஜோர்ல சொல்றேன் – இன்னும் முன்பு மாதிரி எழுதுறேனான்னு பார்க்கணும்.

ஈத் முபாரக்.










*




16 comments:

வெங்கட் நாகராஜ் said...

Blog-ல இருந்த பலரும் இப்போதெல்லாம் Facebook-ல மூழ்கிப் போய்ட்டாங்க... அங்க வரதே இல்லை. உங்களுக்காவது திரும்பி வரணும்னு தோணுச்சே..... பாராட்டுகள்.

வாங்க.... பதிவுகளைத் தொடருங்க!

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல முடிவு அய்யா. ப்ளாக்கரில் எழுதுவதிலும் படிப்பதிலும் உள்ள ஆத்ம திருப்தி ஃபேஸ்புக்கில் கிடைக்காது.

ராமலக்ஷ்மி said...

/ காலா காலத்துக்கும் நாமளாவது அதைப் பார்த்துகிட்டு இருக்கிறதில்ல உள்ள சுகம், சந்தோஷம், மகிழ்ச்சி/ ................ அதென்னவோ உண்மைதான்.

கரந்தை ஜெயக்குமார் said...

வலைப் பூவில் கிடைக்கும் திருப்தியும் நிறைவும் முகநூலில் கிடைக்குமா என்ன?
வலைப் பூவிற்கு வாருங்கள் வாருங்கள் என வரவேற்கின்றேன்

மலரின் நினைவுகள் said...

blog , facebook , ரெண்டையும் அப்படியே balance பண்ணி ஓட்டிட்டு இருக்கேன்... அப்பப்போ இல்லாம அடிக்கடி வாங்க

koilpillai said...

ஐயாவிற்கு வணக்கம்.

வாருங்கள் (புதிய) வேகத்துடன்.

பிரியாணி எப்படி இருந்தது?

உங்களுக்கும் ஈத் முபாரக்.

கோ

சந்திரசேகர்.ஜே.கே said...

'எனக்கே தெரியாது...கடவுளுக்குத்தான் வெளிச்சம்..'
பழகிய வார்த்தைகள் தவிர்க்க முடிவதிலையோ...

தருமி said...

Koil Pillai
ரெண்டு பிரியாணி வந்தது. ரெண்டுமே சூப்பர். அதில அந்த தாள்ஸா ... அடடா ...

தருமி said...

chandrasekar jk

நகை முரணுக்காக எழுதியது

G.M Balasubramaniam said...

நானும் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் பக்கம் போவேன் ஆனால் அதில் எழுதுவதில் நிறைவு இல்லைபழைய பதிவுகளை வேண்டுமானால் ஃபேஸ் புக்கில் பகிரலாம் ஃபேஸ்புக்கில் பிரபலம் அடைய எல்லோரையும் நண்பர்களாக்கிக்க வேண்டுமா?

வேகநரி said...

ஈத் முபாரக்
போர்ச்சுக்கல் X வேல்ஸ் பற்றி நீங்க எழுதியிருந்தா ஆவலாக படித்திருந்திருப்பேன். உலக சாம்பியன் X பிரான்ஸ்சுடன் முடிவு எனக்கு அதிர்ச்சி. ஜிகாதிகளின் தாக்குதல்களுக்குள்ளான பிரான்ஸ்சின் எழுச்சி உந்து சக்தி தான் அந்த வெற்றி என்கிறார்கள்.
திங்கட்கிழமை ஆரம்பிக்கும் போது ( 00.30 )பிரான்ஸ் X போர்ச்சுக்கல் போட்டியை பாருங்கோ, வசதி கிடைத்தா அதைபற்றி எழுதுங்க.
ஜிகாத் தொடர்ந்து நடக்கும் வேகத்தில், மனித தலைகள் சீவபடும் வேகத்தில் உங்களால் பதிவு எழுதுவதெல்லாம் இயலாததே. ஆனாலும் முடிந்த வரை எழுதுங்க.

சார்லஸ் said...

நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு பதிவு என்ற வேகத்தில் எழுதி வந்த நீங்கள் சமீபத்தில் கொஞ்சம் நீண்ட இடைவெளி விட்டு வந்தீர்கள். ' வவ்வால் ' போல நீங்களும் நிறுத்தி விட்டீர்களோ என்று ஆதங்கப்பட்டேன். எழுதிய கைகள் சும்மா இருக்குமா ? விட்டு விடாதீர்கள். எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள். உங்கள் பாணி எப்போதும் தனி பாணிதான்! ரசிக்கலாம்.

தருமி said...

// பிரான்ஸ்சுடன் முடிவு எனக்கு அதிர்ச்சி//
முதல் பத்து நிமிஷம் பார்த்ததும் பிரான்ஸ் ரெண்டு மூணு வாங்கும்னு நினச்சேன். முடிவு மாறிப்போச்சு. ஆனால் உங்களை மாதிரி எனக்கு அதிர்ச்சி இல்லை.
ஆனா ஜிகாதிக்கும் ப்ரான்ஸின் வெற்றிக்கும் அப்டி ஒர் தொடர்பு இருக்கும்னு நினைக்கிறீங்க? அப்டின்னா ...இன்னைக்கி என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.

வேகநரி said...

90வது நிடம்கள் பிரான்ஸ் வீரர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள், சரிவரவில்லையே!

வேகநரி said...

போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என்று என்னுடன் போட்டி பார்த்த ஜரோப்பிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்(குற்றம்சாட்டினார்கள்). நானும் அதை ஏற்று கொள்கிறேன்.
அதை பற்றி நீங்க என்ன நினைச்சீங்க என்பதை தெரிஞ்சு கொள்வதில் எனக்கு ஆவல். வசதிபடும் போடு தெரிவியுங்கோ.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நானும் மறுபடி ப்ளாக் எழுதணும்னுதான் நினைக்கிறேன். ஆனா தள்ளிப்போயிட்டே இருக்கு சார். உங்களைப்போல யாராவது இங்கே வர லிங்க் கொடுத்தா எட்டிப்பாக்கறதோட சரி.

Post a Comment